887 குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
//காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க.. கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க
இடையில் வந்து தடைகள் சொல்ல.. எவரும் இல்லையே பிறர் அறியாமல்...பிறர் அறியாமல் .. பழகும் போது பயம் அறியாத இதயம் ஏது//
இது போன்ற அபாரமான வரிகள் உள்ள இனிமையான பாட்டை ஏன் இத்தனை போடாமல் விட்டோம் என்று வருத்தப்பட்டேன் ஏனென்றால் பாலுஜி தீவிர ரசிகை பதிவில் அடிக்கடி வருபவர் தேடி பார்த்து கிடைக்காமல் ஏன் இந்த பாட்டை போடாமல் இருக்கிறீர்கள் என்று சண்டைக்கு வராத குறையாக மின்னஞ்சல் அனுப்பினார். சித்ரா மேடம் இது போன்ற அதிகம் கேட்கப்படும் பாடல்கள் மலைப்போல் குமிஞ்சு உள்ளன. இந்த பதிவின் நோக்கமே அதிகம் கேட்கப்படாத பாடல்கள் பதிவதை முன்னுரிமையாக வைத்திருக்கிறோம். பிரபலமான பாடல்கள் அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்றார் போல் வரும் எதையும் நாங்க விடமாட்டோம். சுந்தர் சாருக்கு இது நல்லாவே தெரியும். அவரும் உதவுவார் என்ட்று நம்புகிறேன். இது போன்ற பாடல்கள் பதிய தாமதமாகும் அவ்வளவே. இருந்தாலும் நீங்கள் நேரம் ஒதுக்கி மின்னஞ்சல் செய்ததற்க்கு நன்றி. இந்த பாடலையே இந்த வருடத்தின் கடைசி பாடலாக உங்களூக்கும் நம் பாலுஜி ரசிகர்களூக்கும் வழங்குகிறேன். போனஸாக ஒளிக்காட்சியுடன். அனவருக்கும் இனிமையான வருட கடைசி வாழ்த்துக்கள் (புதுவருட வாழ்த்துக்கள் எத்தனை தடவை தான் சொல்றது சார்) நாளை புத்தாண்டில் புதிய பதிவுடன் பார்ப்போம்.
பாடல்: குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
படம்:அழகே உன்னை ஆராதிக்கிறேன்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, வாணிஜெயராம்
பாடலாசிரியர்:வாலி
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
வேளை பிறந்தாலும்
அந்தி மாலை பொழுதில்
லீலை புரியும் ஆசை பிறக்காதோ
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன
மேளதாளம் முழங்கும் முதல்நாள் இரவு
மேனிமீது எழுதும் மணல்தான் உறவு
தலையிலிருந்து பாதம் வரையில்
தழுவி கொள்ளலாம்
அதுவரையில் நான்...அதுவரையில் நான்
அனலில் மெழுகோ
அலைகடலில்தான் அலையும் படகோ
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
வாடியதென்ன பூவிதழ் தேடியதென்ன
என்னிடம் நாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
வேளை பிறக்காதோ
அந்த வேளைவரையில் காளை உனது
உள்ளம் பொறுக்காதோ
காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க
கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க
இடையில் வந்து தடைகள் சொல்ல
எவரும் இல்லையே
பிறர் அறியாமல்...பிறர் அறியாமல்
பழகும் போது
பயம் அறியாத இதயம் ஏது
வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம்
ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம்
உனது ராகம் உதயமாகும் இனிய வீணை நான்
ஸ்ருதி விலகாமல் இணையும் நேரம்
சுவை குறையாமல் இருக்கும் கீதம்
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு
இரண்டும் வாடியதென்ன
பூவிதழ் மூடியதென்ன
என்னிடம் நாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
வேளை பிறந்தாலும்
அந்த வேளைவரையில் காளை உனது
உள்ளம் பொறுக்காதோ



























