973, இதுதான் சந்தோஷமோ

படம் - அன்பேஅன்பே
பாடியவர்கள் - பாலு
இசை - பரத்வாஜ்
Get Your Own Hindi Songs Player at Music Plugin
இதுதான் சந்தோஷமா இனிக்கும் சங்கீதமா
நிதமே நம் வீட்டிலே சுகமே அலை மோதுமே
ஒருவரின் விழியும் கலங்கிடும் சமயம்
அனைவரின் இதயம் கைகுட்டையாகும்
முன்காலம் நிகழ்காலம் எதிர்காலமும்
நம் சொந்தம் இது போலே தினம் வாழ்ந்திடும்
இதுதான் சந்தோஷமா இனிக்கும் சங்கீதமா
இதுதான் சந்தோஷமா இனிக்கும் சங்கீதமா
அழகாய் ஓர் கூட்டிலே கிளிகள் குடி இருந்ததே
கல்லடி பட்டு கலைந்தே போச்சு
கண்ணடி பட்டு பிரிந்தே போச்சு
பறந்தோட புது வானம் கிடைத்தாலுமே
உறவோடு இருக்கின்ற சுகம் தோணுமா
லாலாலலா......
இதுதான் சந்தோஷமா இனிக்கும் சங்கீதமா
இதுதான் மறு ஜென்மமா
இறைவன் தரும் பாடமா
இலையுதிர் காலம் முடிந்தே போச்சோ
மரங்களின் இலைகள் பசுமை ஆச்சோ
குற்றாலம் பனிச்சாரல் நம் சொந்தமே
வற்றாத ஊற்றாகும் நம் பாசமே
இதுதான் சந்தோஷமே இனிக்கும் சங்கீதமே...
இதுதான் சந்தோஷமே இனிக்கும் சங்கீதமே

0 comments:
Post a Comment