975,மெளனமே பார்வையால்

படம் - அன்பே சிவம்
பாடியவர்கள் - சந்திராயி,பாலு
இசை - வித்யாசாகர்
மெளனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்
நானமே வண்ணம்மாய் பூசிக் கொண்டோம்
புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்
என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்
இரு உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்
சில எண்ணங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா
மெளனமே பார்வையாய் பேசிக்கொண்டோம் ம்ம்ம்ம்
நானமே வண்ணம்மாய் பூசிக் கொண்டோம் கண்ணம்மா
ம்ம்ம்..ஆ..ஆஆஅ..
ஜனனம் தந்தாய் சலனம் தந்தாய்
காதல் மொழியில்
மரணம் கொஞ்சம் மயக்கம் கொஞ்சம்
உந்தன் கருவில்
இங்கு வாழ்க வாழ்க இந்த நேரங்கள்
சுகம் சேர்க சேர்க வரும்காலங்கள்
வளம் சூழ்க சூழ்க இவர் பாதைகள்
தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள்
ஒரு சேதி அடி நீ என்பதன் பாதி
இனி நான் என்பதென் மீதி தேதி சொல்லம்மா
மெளனமே பார்வையாய்
மெளனமே பார்வையாய்பேசிக்கொண்டோம்
நானமே வண்ணம்மாய் பூசிக் கொண்டோம் கண்ணம்மா
இலக்கணம் உடைத்ததும் கவிதை வரும்
இரவினை துடைத்ததும் கனவு வரும்
ஸ்வரங்களை திறந்ததும் இசை மலரும்
உடம்பினில் கறைந்ததும் கலைவரையும்
மொழி தோன்றாத காலத்தில் நுழைந்தால் என்ன
விழி ஜாடைகள் பேசியே நடந்தால் என்ன
இங்கு வாழ்க வாழ்க இந்த நேரங்கள்
சுகம் சேர்க சேர்க வரும்காலங்கள்
வளம் சூழ்க சூழ்க இவர் பாதைகள்
தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள்
ஒரு மெல்லினத்தை வல்லினமும் கை சேர
ஒரு காப்பியத்தை தோழி உந்தன் கண்ணாலே பேச
மெளனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்
நானமே வண்ணம்மாய் பூசிக் கொண்டோம்
புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்
என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்
இரு உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்
சில எண்ணங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா
Get Your Own Hindi Songs Player at Music Plugin

1 comments:
ஓஹோ.. இந்த பாடலைத்தான் படத்தில் இருந்து தூக்கிட்டாங்களா எனக்கு சுத்தமாக நினைவில்லை.... அழகான வரிகள் இனிமையான குரல்கள். பதிவுக்கு நன்றி சாகா.
Post a Comment