976 ஈர நிலா விழிகளை

Get Your Own Hindi Songs Player at Music Plugin
படம் - அரவிந்தன்
பாடியவர்கள் - ஷோபனா,பாலு
இசை - யுவன்சங்கர்ராஜா
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்
முள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே போதும் இன்பம் போதும்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
தாயான பூமாது தோள் மீது சாய்ந்திடும் போது
என் நெஞ்சில் பாலூரும் அன்புத் தவிப்பு
தலைமுறை கண்டாலும் காணாது உந்தன் அன்பு
எப்போதும் வேண்டும் உன் இன்ப அணைப்பு
சேரும் நதி ரெண்டுதான் பாதை இனி ஒன்று தான்
வெள்ளை மழை மண்ணிலே கூடும் வண்ணம் சூடும்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே

1 comments:
பல்லவிகளை மட்டும் அருமையாக மெட்டு போட்டுடுறாங்கப்பா..யுவனின் நல்ல முயற்சி.
Post a Comment