977 விழிகள் மீனோ மொழிகள் தேனோ

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் நடித்த "ராகங்கள் மாறுவதில்லை'' வெளிவந்த சமயம். ரஜினி, அந்தப் படத்தை மிகவும் ரசித்துப் பார்த்திருக்க வேண்டும். "பிரபு, நீங்கள் நல்லா `பைட்' பண்றீங்க. உங்க டான்ஸ் மூவ்மெண்ட் கூட அழகா இருக்கிறது'' என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார்.
எத்தனை நடிகர்களிடம் இந்த விரிந்த மனப்பான்மை - சக நடிகர்களை தட்டிக் கொடுக்கும் தாராள மனம் இருக்கிறது?
நன்றி:ரஜினி ரசிகர்கள் தளம்
படம்:ராகங்கள் மாறுவதில்லை
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி
இசை;இளையராஜா
|
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ
பூக்களின் மேலெ தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓஓஓஓஒ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ
குழலில் மேகம் குடியிருந்தாலும்
விழியில் ஏதோ புதிவித தாகம்
பௌர்னமி பார்வை புரிகிறதே
மனந்தனில் இன்பம் வழிகிறதே
பெண்மையின் பாகம் தாமரையாகும்
பெண்மையின் பாகம் தாமரையாகும்
இடையின் பாகம் நூலாகும்
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ
பூக்களின் மேலெ தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓஓஓஓஒ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ
அடடா கால்கள் அழகிய வாழை
நினைத்தாள் மனக்கு ரகசிய சோலை
நகங்கள் யாவும் பிறை நிலவு
நாயகி பாதம் நாயகன் வேதம்
நாயகி பாதம் நாயகன் வேதம்
நீயே காதல் தேவாரம்
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ
பூக்களின் மேலெ தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓஓஓஓஒ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ

0 comments:
Post a Comment