1004,பாடவா தேனென கம்பனின்
படம் - வெற்றி
பாடியவர்கள் - பாலு
இசை - ஹரிஸ் ஜெய்ராஜ்
பாடவா தேனென கம்பனின் ஒரு பாடல்
உங்களை வீணையாய் மீட்டிடும் ஒரு பாடல்
நேசிப்பதே நெஞ்சின் மழையாய் நினைக்கின்றேன்
ஆனாலும் ஏன் நஞ்சின் நதியில் குளிக்கின்றேன்
என் பாடலால் உலகில் இன்று மூழ்கத்தான் போகிறது
பாடவா தேனென கம்பனின் ஒரு பாடல்
உங்களை வீணையாய் மீட்டிடும் ஒரு பாடல்
நெஞ்சுக்குள் மேகங்கள்
நெஞ்சுக்குள் மேகங்கள் நகர்கின்ற நேரங்கள்
விழியோரம் வருகின்றாய் உயிரெல்லாம் நிறைகின்றாய்
பல ஜென்மம் பழகியதால் உடலெங்கும் ஒரு மின்னல்
ஒரு பூஞ்சோலை சூழ்க ஒரு தீவினில் மழையோடு
தினம் வாழ்கின்றதாக ஞாபகம் இழையோடும்
ஒரு மனிதனை முழுதாய் மாற்றும் காதல்தான்
ஒரு மனிதனை முழுதாய் மாற்றும் காதல்தான்
பாடவா தேனென கம்பனின் ஒரு பாடல்
உங்களை வீணையாய் மீட்டிடும் ஒரு பாடல்
ஆகாயம் தீண்டவே ஓ..ஓ..
ஆகாயம் தீண்டவே ஆவேசம் வந்ததே
இளம் தென்றல் இசை கொடுக்க இளமங்கை கை கொடுக்க
கனவெல்லாம் நிஜமாக கண்ணெதிரெ தொலைந்தாலே
நிலவுக்குள் மலர்களும் தூரம் ஓர் நேரம்
மலர்ந்திட கைகளை நீட்டும் ஆனாலும்
என் வெற்றியில் முதுகாய் உள்ளவள் நீதானே
என் வெற்றியில் முதுகாய் உள்ளவள் நீதானே
ஓ பிரேமா ஓ பிரேமா ஓ பிரேமா
ஓ பிரேமா ஓ பிரேமா ஓ பிரேமா
ஓ பிரேமா ஓ பிரேமா ஓ பிரேமா
ஓ பிரேமா ஓ பிரேமா ஓ பிரேமா
ஆ...ஆ...
பிரேமா.... ஆ..ஆ....
Get Your Own Hindi Songs Player at Music Plugin

3 comments:
Superb Song. Thanks a lot for posting this!
Ravee Sir,
Aam. Avar paadalaal indru ulagae moozhgaththaan pogiradhu! Nam kangalil vazhiyum aanandhakkanneeraal !. Enna oru urukkam ! Indha paadal padhivaal 'Vettri' ungalukku dhaan.
Anban,
V. Gopalakrishnan.
கோவை கோபால் சார்..
இந்த பதிவு சாகா அவர்கள் பதிந்தது. சுந்தர் சார் சொல்லியது போல் இனிமையான பாடல். வாழ்த்துக்கள்.
Post a Comment