1085 இது கிட்டப்பாவின் தொண்டை
//குதிரை வாலு கொண்டை.. இது கிட்டப்பாவின் தொண்டை.. நீங்க வெச்சுக்காதே சண்டை
அடி வீங்கிப் போகும் மண்டை.. கூவாதே வெறும் கூச்சல் வேணாம் இப்போது..
தாவாதே எதிர் நீச்சல் போடு என்னோடு..
1084 கூடை மேல கூடை வெச்சு
//கூடை மேல கூடை வெச்சு.. கூடலூரு போற புள்ளே.. கூட வரவா நான் உன் பின்னாலே
நான் பொறக்கவேணும் நீ பிடிக்கும் ஆத்து மீனாக..//
பல்லவியே அமர்க்களமாக இருக்குதுங்க...
1082 மஹாராணி மஹாராணி மாளிகை
//காலம் நேரம் கூடிவரும் நம் கவிஞர் சொன்னபடி.. வானும் மண்ணும் நம்மைக் கண்டு வணக்கம் சொன்னபடி.. மஹாராணி மஹாராணி மாளிகை மஹாராணி..
1081 இதோ இந்த நெஞ்சோடு
//ஒவ்வொன்று முடியும் என்று விஞ்ஞானம் சொல்லும்..
1080. ஏ வெண்ணிலா என் நெஞ்சமே
இது ஒரு தொடர்கதை (1987) என்றொரு படம். மோகன், ரேகா அப்புறம் என் செல்லம் நடித்தது. தமிழ்த்திரையுலக விதிபடி ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதே மாதிரி படங்களை எடுத்து அந்த ஹீரோவையோ ஹீரோயினையோ ஒழித்துக்கட்டாமல் விடமாட்டார்கள்.
81079. முத்தாடுதே முத்தாடுதே ராகம்
நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாடல் - ஜானகியும் பாலுவும் அசத்தலாகப் பாடியிருக்கிறார்கள் - இசைஞானியின் துள்ளும் இசை.
61078. ஒரு ஆணும் பெண்ணும்
முந்தைய பாடலின் இசையைவிட இது கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் பாடல் வரிகளின் இம்சைதான் தாங்கமுடியவில்லை. அதிலும் சிலவற்றில் தொனிக்கும் அர்த்தத்தைப் பார்த்தால் சின்னகுழந்தைகள் இரவில் வீறிட்டு அழும் என்று பயமாக இருக்கிறது. என்னவோ போங்கள்.
1077. கிளிகளே ராகம் கேளுங்களேன்
பருவராகம் படத்திலிருந்து ஏற்கெனவே ஒரு அருமையான பாடலைப் பதிவு செய்திருக்கிறோம். அந்தப் படத்தில் இன்னும் சில அருமையான பாடல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை இங்கு பார்ப்போம்.
இந்தப் பாடல் வரிகளைப் படித்தாலேயே புரிந்து போகும்.
1076 ஹே தன்னானானே தாமரைப்பூ மாமா
//கொட்டுற பனியிலே நானும் உனக்கு... குடையா மாறட்டுமா.. உன் வெட்டுற விழியிலே ஊத்துற நெருப்புல..
1075. வருது வருது விலகு விலகு
கமல் தவிர யாருக்காவது பாலு கரகரவென்று சிம்மம் கர்ஜிப்பது மாதிரி பாடலின் நடுவே குரல் கொடுத்துப் பாடியிருக்கிறாரா என்று தெரியவில்லை. இந்தப் பாடலிலும் குரலால் வித்தை காட்டியிருப்பார் பாலு.. கமல்.. இல்லை பாலு... நோ..கமல்... அட பாலுதான் பாடியிருக்கிறார். என்னய்யா இவங்களோட வம்பாப் போச்சு.
31074- அன்பிருக்கும் உள்ளங்களே... என்னருமைச் செல்வங்களே
படம் : வாழ்க்கை ( Vaazhkai )
பாடல் : அன்பிருக்கும் உள்ளங்களே..... ( Anbirukkum ullangale )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , S.P.ஷைலஜா
இசை : இசைஞானி இளையராஜா
வருடம் : 1984
இயக்குநர் : C.V.
1073 ஆகாய கங்கை இன்று மண்ணில்
//ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது.. ஆனந்த தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
உள்ளம் ரெண்டும் ஆடட்டும்.. ஒன்றில் ஒன்று கூடட்டும்//
இனிமையான பழைய பாடல் எப்படி இவ்வளவு நாள் என் கண்களுக்கு கிடைக்காமல் போயிற்று என்று தெரியவில்லை? கேட்டு மகிழுங்கள்.
1072 டாக்டர்.பாலுஜி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் அமைப்பாளர்கள் விருப்பப்பாடல்கள்.
டாக்டர்.பாலுஜி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் அமைப்பாளர்கள் விருப்பப்பாடல்கள்.
டாக்டர் பாலுஜி ரசிகர்கள் எஸ்.பி.பி சாரிட்டி பவுண்டேசன் என்ற ஒரு நல அமைப்பை சென்னையில் தலைமை இடமாக கொண்டு பாலுஜி ரசிகர்கள் நடத்தி வருகிறார்கள்.
1071 மல்லி மல்லி இது ஜாதி மல்லி
//வசந்தங்கள் உன்னைக் கண்டு வணக்கங்கள் போடாதா.. முளைக்காத பூக்கள் எல்லாம் மழைக்காக வாடாதா.. தேவியே தேடிவா தேனிசை பாடிவா.. மல்லி மல்லி இது ஜாதி மல்லி
பூத்திருக்கும் என்னைக் கிள்ளச் சொல்லி..//
அமர்க்களமான டப்பிங் பாட்டுப்பா... கேட்டு மகிழுங்கள்.
படம்: ராட்சசன்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, கே.எஸ்.
1070. பேசும் மணி மொட்டு ரோஜாக்கள்
1979-இல் வந்த 'நீல மலர்கள்' படம் நினைவிருக்கிறதா? கமல், ஸ்ரீதேவி, நாகேஷ் நடித்து, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வந்த படம். மெல்லிசை மன்னர் இசையமைத்திருக்கிறார். பார்வையற்றவராக நடித்திருப்பார் ஸ்ரீதேவி. அருமையான மெல்லிசைப் பாடல்கள் இந்தப் படத்தில்.
11069. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
பிறந்ததிலிருந்தே சுதந்திரத்தைச் சுவாசித்திக்கொண்டிருக்கும் நாம் அதை வாங்கிக்கொடுத்தவர்கள் அனுபவித்த வலியையோ, சிந்திய வியர்வையோ சிறிதும் உணர்வதில்லை. காலில்லாதவனுக்குத்தான் தெரியும் அதன் அருமை.
21068. நந்தவனத்தில் வந்த மயிலே
Nathiyoram
யானைக்குட்டி என்றாலே குஷி பிறக்காத சிறுவர்கள் உண்டா? நானும் குஷியாகிவிடுவேன். வத்திராயிருப்பிலெல்லாம் யானை அபூர்வம். எப்போதாவது ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து நடத்திக் கூட்டிக்கொண்டு வருவார்கள்.
1067. நாலு பக்கம் வேடருண்டு
இதெல்லாம் ஏற்கெனவே ரவீ போன ஜென்மத்துலயே இந்தப் பதிவுல பதிஞ்சிருப்பாருன்னு தெரியும் - எதாச்சும் பாமாலைத் தொகுப்பு அது இதுன்னு ஒரே பதிவுல பத்திருவது பாட்டைப் பதிஞ்சா நான் எங்கிட்டுப் போறது ரவீ? இந்தப் பாட்டை பதிஞ்சிருந்தாலும் இதைப்பத்தி எழுதியிருக்க மாட்டீங்கங்கற ஒரு அவநம்பிக்கைல இந்தப் பதிவு.
11066- பாலுவின் பழைய நினைவுகள்.....
நேயர்கள் அணைவருக்கும் பாடும் நிலா பாலு தளத்தின் சார்பாக இந்திய தேசத்தின் 63வது சுதந்திர தின வாழ்த்துக்கள்.
பாலுஜியும் நம் இசைஞானியும் தழுவிக்கொண்டது இந்த படத்தில் மட்டும் அல்ல.. இவர்கள் இணைந்த பாடல்களிலும் நாம் உணரலாம்..
1065. தேவி தேவி தேனில் குளித்தேன்
நான் அடிமை இல்லை படம் துவாரகேஷ் இயக்கியது. ரஜினி ஸ்ரீதேவி நடித்திருப்பார்கள். ஏற்கெனவே “ஒரு ஜீவன் தான்” பாடலைப் பதிவு செய்திருக்கிறோம். இந்தப் பதிவில் இன்னொரு இனிமையான பாடல். அருமையான இந்த டூயட் பாடலை பாலுவும் ரஜினியும் பாடியிருக்கிறார்கள்.
1064. முத்தமிழே முத்தமிழே
ராமன் அப்துல்லா படத்தில் விக்னேஷ் ஈஸ்வரிராவ் நடித்திருக்கிறார்கள். பாலுவும் சித்ராவும் பாடிய இந்த இனிமையான பாடலைக் கேட்போம் - இசைஞானி இசையில்.
11063. நேரம் பெளர்ணமி நேரம்
மீனவ நண்பன் படத்தை - ஏன் எல்லா எம்ஜியார் படங்களையுமே - சிறுவயதில் வற்றாயிருப்பின் ராமகிருஷ்ணா டூரிங் திரையரங்குகளில் பார்த்திருக்கிறேன். தந்தக் கலரில் பளபளவென்று இருப்பார் எம்ஜியார். கருப்புக் கலர் பஞ்சு மிட்டாய் மாதிரி போலி சிகையை அணிந்திருப்பார். படம் பற்றி அவ்வளவாக ஞாபகம் இல்லை.
1062 சிங்கார பட்டனத்தில் ராணி ஒருத்தி
//ஜாதி முல்லைப்பூ பார்வை மத்தாப்பு.. அழகு பொண்மேனி அழகான தோப்பு.. எத்தனைப்பேர் வந்தாங்க மாப்பிள்ளையாக.. அவர்களிலே எவனும் இல்லை ஆண் பிள்ளையாக//
கோவை கோபலகிருஷ்னன் சார் அவர்களின் நீண்ட நாள் விருப்பமாக இந்த பாடல் நங்கூரம் என்ற படத்தில் வருகிறது.
1061 இன்ப தேன் முத்தம் சிந்தினானே ஓ..ஓ
//அன்று போவென்று தள்ளினாளே ஹோ..ஓ, இன்று வா என்று கெஞ்சினாளே ஹா..ஓ
இதழில் ஒரு காவியம் எழுதிட இளமை தேதி பார்க்குமோ.. அழகேதும் ஓர் விரல் தீண்டிட ஆயுள் கூடிடுமோ.. இடையில் இரு கைகள் சேர்ந்த்திட இளமை யாரை கூடுமோ..
1060 பழங்கள் ருசி என்பதாஆஆஆஆஆ
//பழங்கள் ருசி என்பதாஆஆஆஆஆ... திண்ணாமல் விட்டு வைப்பதாஆஆஆஆ//
ஆஹா ஆஹா ஒரு பழக்கூடையே ருசித்தது போல் உணர்வுப்பாஆஆஆஆஆ
படம்:கனவுக்கன்னி
டாக்டர் எஸ்.பி.பி.
1059 தாமரை பூவிதழ் தந்தியடிக்குமா
,,
//தொடும் உன்னையில் ஏதெம்மா விடுமுறை.. மணவறையில் காணலாம் விடுதலை.. தாமரை பூவிதழ் தந்தியடித்திடும்.. ஹஹஹஹ.. தந்தியடித்ததும் சேதி கிடைத்திடும்//
இனிமையான இந்த பாடல் கேட்டு எவ்ளோ நாளாயிற்று. இதோ உங்களூக்கும் தாமரைப்பூவிதழ்...
1058 மனம் போன போக்கில் போவேன்
//கடல் நீரில் தாகம் தீருமா... கதைகள் இங்கே வாழ்க்கையாகுமா.. மனம் போன போக்கில் போவேன் என் பாதையில்.. விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்.. யார் நம்மை சேர்த்து வைத்தது.. நம் கையில் என்ன உள்ளது..
31057 கட்டிக்கிடலாம் கட்டிகிடலாம்
பொதுவாகவே எல்லாபாடல்களிலும் ஏதோ ஒரு சிறப்பு இருக்கும் இசையமைப்பிலாகட்டும் பாடகர்களின் குரல்களாகட்டும், வரிகளாகட்டும் நான் கூர்ந்து கேட்டு ரசிப்பேன்.
1056. மேகம் முந்தானை
துடிக்கும் கரங்கள் படத்திலிருந்து பாலுவும் வாணிஜெயராமும் பாடியிருக்கும் இன்னொரு அழகான பாடல் இந்தப் பாடல். எழுதியது கங்கைஅமரனா புலமைப்பித்தனா என்று தெரியவில்லை. படம் பார்க்கவில்லையாதலால் இப்பாடலைப் பற்றி அதிகம் எழுதமுடியவில்லை.
11055. சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
துடிக்கும் கரங்கள் பாலு தமிழில் முதன்முதலாக இசையமைத்த படம். ரவீ ஏற்கெனவே இப்படத்திலிருந்து சில பாடல்களை பதிவு செய்திருக்கிறார். இப்பாடலை இன்னும் அவர் பதியவில்லை என்று நினைக்கிறேன்.
பாலுவும் ஜானகியும் சேர்ந்து மிக இனிமையாகப் பாடியிருக்கிறார்கள். உறுத்தாத இனிய இசை.
1054. பகலென்றும் இரவென்றும் பூமியிலே நடமாடும்
பாலுவும் சசிரேகாவும் சேர்ந்து பாடியிருக்கும் அருமையான டூயட் பாடல் இது - தங்கைக்கோர் கீதம் படத்திலிருந்து. கேட்டு மகிழுங்கள்.
11053. T.R. & Bala - தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்
தங்கைக்கோர் கீதம் படத்திலிருந்து இன்னொரு அருமையான பாடல். அழகான தாளகதியில் ஆரம்பிக்கும் பாடல் சூடுபிடித்து புல்லாங்குழலுக்குத் தாவி - ஏகமான வாத்தியங்களோடு அமர்களமாக ஒலிக்கும்.
11052- ராச லீலைக் காலம்..... காதல் யோகம் ஆகும்
படம் : அபூர்வ சக்தி 369 (Aboorva Sakthi 369)
பாடல் : ராச லீலைக் காலம்...
1051 ஏய்ய்ய் கனகம்.. நீ எங்கிட்ட
//நானும் பார்த்தேன் சினிமா.. அட விலைவாசி போல வருமா.. அதத்தான் ரொம்ம்ம்ம்ப ரசிச்சேன்.. அத பார்த்ததில் ஆசை வந்து குடிச்சேன்.. சும்மா சொல்லக்கூடாது...
நாகேஸ்வராவ் என்னமாறி குடிச்சிட்டு நடிச்சிருக்கார் தெரியுமா.. உலகே மாயம். உஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்...
1050 பெண்ணழகே ஐ யாம் சாரி
பாடலின் இடையே கதாநாயகி உரையாடல் உச்சரிப்புடன் வரும் பாடல்களை பாலுஜி அதிகம் பாடியிருப்பார் குறிப்பாக சிப்பி இருக்கு முத்தும் இருக்குது போன்ற பாடல்கள் பிரபலமானவை. இதுவும் அது போன்று அதிகம் கேட்க முடியாத பாடல் அமர்க்களமாக இருக்கும்.
21049. ஒரே நாள் உனை நான்
என்னுடைய சிறுவயதில் வந்தபடம் இளமை ஊஞ்சலாடுகிறது. மிகப்பெரிய வெற்றிப்படமான அது எல்லா நகரங்களிலும் ஓடிமுடிந்து வற்றாயிருப்பு ராமகிருஷ்ணா டூரிங் தியேட்டருக்கு வந்தபோது கமல், ரஜினி இருவரும் இருந்ததால் ஊரே ஓடிப்போய் பார்த்தது. ஸ்ரீதர் இயக்கிய படம். பாடல்களுக்காகவே பட்டிதொட்டியெல்லாம் ஓடியது.
11048. ஓரங்கா ஸ்ரீலங்கா
சிங்கார வேலனில் வரும் Eve Teasing வகைப் பாடல் இது. கோவிலுக்கு குட்டைப்பாவாடையணிந்து வரும் குஷ்புவைக் கமல் நண்பர் குழாமோடு துரத்தித் துரத்தி கிண்டலடித்துப்பாடும் பாடல் இது. பாலு குரலில் பல சாகசங்களைச் செய்வார். கமலும் பாலுவும் சேர்ந்து பட்டையைக் கிளப்பியிருக்கும் பாடல் இது.
11047. வரச் சொல்லி இந்நேரம்
1992 இல் வெளிவந்த சிங்காரவேலன் படம் நெடுகச் சிரிக்க வைத்தாலும் சோகமான காட்சிகளும் சிங்காரவேலனில் உண்டு. புதுச்சேரி கச்சேரி என்று ஓராள்இசைக்கச்சேரி செய்து குஷ்புவின் மனதைக் கமல் கவர்ந்ததும் மறுநாள் வீட்டுக்கு அவரை அழைப்பார்.
21046. புதுச்சேரி கச்சேரி
சிங்காரவேலனில் எல்லாப் பாடல்களுமே அருமையான பாடல்கள். கமலே அட்டகாசமாக போட்டுவைத்தக் காதல் திட்டம் பாடலை - உச்ச ஸ்தாயியில் பாடியிருக்கிறார். ஆரம்ப சொன்னபடி கேளு பாடலும் அவர் பாடியதுதான். பாலு வழக்கம்போலச் சிலபாடல்களில் கலக்கியிருக்கிறார். போன பதிவில் அற்புதமான டூயட் பாடலைப் பார்த்தோம்.