1117 ஊர் ஊரா போகிற மேகக் கூட்டமே
,
,
//ஊர் ஊரா போகிற மேகக் கூட்டமே.. என் பங்கிளி போக கண்டீரோ.. ஊருக்கே விளக்கேற்றும் சூரியரே. என் தாமரைப் பூவை கண்டீரோ.. போன திசைப் புரியலையே
பொசுங்குதடி என் மனசு.. புங்கமர கிளைத் தொங்க.. தூண்டுதடி என் உசிரு.. நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயே நீ// இனிமையான இதமான இதயத்தையே அதிரவைக்கும் சீரான தாளத்துடன் அடெங்கப்பா என்னவொரு சோகம் என்னவொரு சோகம். கேளூங்கள் இந்த பாட்டை நம் மனதில் இந்த வருடத்தில் மண்டிகிடந்த எல்லா சோகங்களும் தோண்டி எடுத்துக்கொண்டு போய்விடும். இனி வரும் புத்தாண்டில் மகிழ்ச்சியாக வாழ்வோம் என்று மனதார புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
படம்:சொக்கத்தங்கம்
பாடியவர்ள் டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்கள்: விஜயகாந்த்,சவுந்தர்யா
இசை:தேவா
|
ஊர் ஊரா போகிற மேகக் கூட்டமே
என் பங்கிளி போக கண்டீரோ
ஊருக்கே விளக்கேற்றும் சூரியரே
என் தாமரைப் பூவை கண்டீரோ
போன திசைப் புரியலையே
பொசுங்குதடி என் மனசு
புங்கமர கிளைத் தொங்க
தூண்டுதடி என் உசிரு
நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயே நீ
ஊர் ஊரா போகிற மேகக் கூட்டமே
என் பங்கிளி போக கண்டீரோ
பட்டாப் போட்டு என்னைத் தானே
பதிவாக்கி வெச்சாலே
பாதியிலே வீதி நிறுத்தவா
சிக்கி முக்கி கண்ணால் தானே
தீயைப் பத்த வெச்சாலே
தீயில் என்னை வாட்டி எடுக்கவா ...ஆஆ..ஆஆஆ
அவ நாகப்பாம்பா பாய்ஞ்சிருஞ்சா
நினைவு தப்பி சாய்ஞ்சிருப்பேன்
அவ காதல் பாம்பா பாய்ஞ்சதினால்
சிறுக சிறுக சாகிறேனே
கண்ணம்மா மனம் கல்லாமா
பதில் நீ கூறமா
செக்கு இழுக்கும் மாட்டைப் போலே
என்னைச் சுத்தி வந்தாயே
செக்கில் என்னை ஆட்டிப்பார்ப்பதேன்
ஈ எறும்ப கொன்னாக்கூட பாவம் என்று சொன்னாயே
என்னைக் கொன்னு மண்ணில் புதைப்பதேன்..ஏஏஏஏ
என் நெஞ்சினில் வாளை வீசியிருந்தால்
வீர மரணம் கிடைச்சிருக்கும்.. நீ
முதுகில வாளை வீசியதால்
மானம் இழந்து சாகிறனே
நியாயமா இந்த காயம் தான்.. ஆஆஆறாதமா
ஊர் ஊரா போகிற மேகக் கூட்டமே
என் பங்கிளி போக கண்டீரோ
ஊருக்கே விளக்கேற்றும் சூரியரே
என் தாமரைப் பூவை கண்டீரோ
போன திசைப் புரியலையே
பொசுங்குதடி என் மனசு
புங்கமர கிளைத் தொங்க
தூண்டுதடி என் உசிரு
நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயே நீ

1 comments:
நல்ல பாடல் ... விரும்பி கேட்கும் ... பாடல்களில் இதுவும் ஒன்று ...
அரசன்
தமிழ்த்தோட்டம்
Post a Comment