Friday, January 29, 2010

902 நாயகியே வருக வருக வருக

படம்:வாடகை வீடு
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இயக்குனர்: தூயவன்
தயாரிப்பாளர்: எம். முரளி
முரளி கார்த்திகேயன் பிக்சர்ஸ்
நடிப்பு: விஜயன், சத்யகலா
இசையமைப்பு: சங்கர் கணேஷ்

Get this widget | Track details | eSnips Social DNA


நாடிய பொருள் கைக்கூடும்
ஞானமும் புகழும் சேரும்
உன் ஆலயம் தேடி வந்து
அன்புடன் வேண்டுவோர்க்கே

நாயகியே வருக வருக வருக
வருக வருக வருக வருக
நாயகியே வருக..
இங்கே நண்மையெல்லாம் தருக வருக
நாயகியே வருக...
பாவங்கள் யாவும் தூளாக வேண்டும்
பயனுள்ள வாழ்வை நான் பெற வேண்டும்
பேரிண்ப உலகம் நீ தந்த விஜயம்
தேகம் தொடாமல் நான் காக்க வேண்டும்
நாயகியே வருக...
இங்கே நண்மையெல்லாம் தருக வருக
நாயகியே வருக...

பூமாலையோடு பாமாலை சூடி
புனிதங்கள் சேரும் பகிதங்கள் கோடி
பூமாலையோடு பாமாலை சூடி
புனிதங்கள் சேரும் பகிதங்கள் கோடி

பால் வண்ண முகத்தில்
தேன் முல்லை சிரிப்பில்
பார்க்கின்ற கோலம் - நாள்தோறும் வேண்டும்
நாயகியே வருக..
இங்கே நண்மையெல்லாம் தருக வருக
நாயகியே வருக...
வருக வருக வருக வருக வருக வருக
நாயகியே வருக...வருக

ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும்
அனைத்திலும் நீயே துணையாக வேண்டும்
ஆயிரம் ஜென்மம் நான் எடுத்தாலும்
அனைத்திலும் நீயே துணையாக வேண்டும்

ஆறுதல் வழங்கும் பேர் எழில் துலங்கும்
ஆனந்த கீதம் நீ பாட வேண்டும்
நாயகியே வருக... வருக வருக
வருக வருக வருக... வருக
வருக வருக வருக... வருக
வருக வருக வருக... வருக
வருக வருக வருக... வருக

Wednesday, January 27, 2010

901 வாடா மன்னாரு சோடா பன்னீரு

Image and video hosting by TinyPic

//குளு குளுங்குது ஜிலு ஜிலுங்குது.. குத்தாலத்துல மனங்க்குளிக்குது.. குத்தாலத்துல மனங்க்குளிக்குது// இந்த பாடலில் இந்த வரிகள் பாலுஜி பாடிய வேறுஒரு பாடலை நினைவுபடுத்துகிறது. அது மட்டுமல்லாமல் ரொம்ப நாள் கழித்து குடிகாரப்பாட்டு கேட்க கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ந்னு ஏறுதப்பா அதுவும் எனக்கு பிடித்த சுருளிராஜன் குரலில் வெளுத்து வாங்குகிறார். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

படம்:வாடகை வீடு
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இயக்குனர்: தூயவன்
தயாரிப்பாளர்: எம். முரளி
முரளி கார்த்திகேயன் பிக்சர்ஸ்
நடிப்பு: விஜயன், சத்யகலா
இசையமைப்பு: சங்கர் கணேஷ்

Get this widget | Track details | eSnips Social DNA


வாடா மன்னாரு சோடா பன்னீரு
சேர்த்துக்கிட்டா ஐசாலக்கடி ஜோரு
வாடா மன்னாரு சோடா பன்னீரு
சேர்த்துக்கிட்டா ஐசாலக்கடி ஜோரு
சாயங்கால நேரம் ஜாம் பஜார் ஓரம்
சாயங்கால நேரம் ஜாம் பஜார் ஓரம்
சைடு வாங்கி போனா
கொஞ்சம் சைச பார்த்து புடிச்சேன்
வாடா மன்னாரு சோடா பன்னீரு
சேர்த்துக்கிட்டா ஐசாலக்கடி ஜோரு.. ஜோரு..

தூக்கத்துக்கு மருந்து தர ஆளிருக்கனும்.. இங்கே
துக்கத்துக்கு மருந்து தர யாருமில்லேடா
டேய் வெள்ளி பணம் தானே தெய்வம்
அது விளையாடும் வரைதாண்டா சொந்தம்
டேய் வெள்ளி பணம் தானே தெய்வம்
அது விளையாடும் வரைதாண்டா சொந்தம்

மனுசனுக்கு தாகம் வந்தா தண்னி குடிக்கிறான்
அந்த தண்ணீருக்கே தாகம் வந்தா உயிரா குடிக்கிறான்
குளு குளுங்குது ஜிலு ஜிலுங்குது
குத்தாலத்துல மனங்க்குளிக்குது
குத்தாலத்துல மனங்க்குளிக்குது
குளு குளுங்குது ஜிலு ஜிலுங்குது
வாடா மன்னாரு சோடா பன்னீரு
சேர்த்துக்கிட்டா ஐசாலக்கடி ஜோரு

க்லையரசிக்கு கவலை மறக்க சொன்னாரு
வெளியே சொன்னாரு
சுதிய விட்டு பாதியில் வந்து நின்னாரு??
என்னடா சொன்னாரு சொல்றேன் கேளு ஐய
கவலை தீர்ப்பது நாட்டிய கலையே
எப்படி எப்படி, இப்டி இப்டி கேளு
கவலை தீர்ப்பது நாட்டிய கலையே
குலுக்கல் முறுக்கல் கலந்தது கலையே
கவலை தீர்ப்பது நாட்டிய கலையே

எப்படிடா... இவன் யார்ரா இவன்
சுந்தேகம் புடிச்சா ஆளா இருக்கானே கேளு
இது குலுக்கலு, பார்த்தியா..
இது முறுக்கலு....
இது உலுக்கலு.. இது உதறலு....

ஆதியிலே மனுசனெல்லாம் குறங்குதானடா
உங்க ஆணவத்தை உட்டுபுட்டு இறங்கி வாங்கடா
ஆசை வெள்ளோட்டம் தாண்டா
அதில் ஆளே தள்ளாடுறாண்டா ஆஆஆ
ஆசை வெள்ளோட்டம் தாண்டா
அதில் ஆளே தள்ளாடுறாண்டா

சின்னவனும் பெரியவனும் ஒன்னுதாணடா
மூச்சு நின்ன பின்னே இந்த உடல் மண்ணுதாண்டா

குளு குளுங்குது ஜிலு ஜிலுங்குது
குத்தாலத்துல மனங்க்குளிக்குது
குளு குளுங்குது ஜிலு ஜிலுங்குது
குத்தாலத்துல மனங்க்குளிக்குது

வாடா மன்னாரு சோடா பன்னீரு இங்க பாரு
சேர்த்துக்கிட்டா ஐசாலக்கடி ஜோரு ஜோரு
சாயங்கால நேரம் பஜாம் பஜார் ஓரம்
சாயங்கால நேரம் பஜாம் பஜார் ஓரம்
சைடு வாங்கி போனா சைசா பார்த்து புடிச்சேன்
வாடா மன்னாரு சோடா பன்னீரு
சேர்த்துக்கிட்டா ஐசாலக்கடி ஜோரு....

Monday, January 25, 2010

900 தொடங்கலாம்..ம்ஹ தொடரலாம்.. ம்ஹம்



ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கும் பாடல் இது வானொலியில் சமீபத்தில் அறிவிப்பாளின் திருமதி.தேவகி ஸ்ரீனிவாசன் அவர்கள் தேடி பிடித்து அறிய பாடல்களை எப்போதும் ஒலிப்பர்பபுவார்கள் அவர்களின் நிகழ்ச்சி தவறாமல் கேட்க முயற்சிப்பேன். ஏனென்றால் நமக்கு வேண்டிடிய பாடல்கள் வரும் போது பதிவு செய்யலாமே அந்த வகையில் தான் இந்த பாடலை பதிந்தேன் உங்களிடம் பகிர்ந்தேன். என்ன அன்பர்களே பாலுஜியின் மெலோடி குரல் கேளூங்கள் என்னவொரு கொஞ்சல் காதல் வராதவர்களூக்கும் வரவைத்து விடுவார் மனுசன்.

படம்: காலமடி காலம்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிப்பு:ஜெய்சங்கர்
இசை:விஜயபாஸ்கர்

Get this widget | Track details | eSnips Social DNA



தொடங்கலாம்..ம்ஹ தொடரலாம்.. ம்ஹம்
தொடங்கலாம்..ம்ஹ தொடரலாம்.. ம்ஹம்
தொடங்கலாம் இனிய கனி இதழ் கிடைத்தது
தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது
மயக்கம் தருவது மாலை நேரம்

தொடங்கலாம் இனிய கனி இதழ் கிடைத்தது
தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது
மயக்கம் தருவது மாலை நேரம்

காதல் தேவதை நேர் வரக் கண்டேன்
கொடியில் செங்கனியில் பெண் வடிவினில் கண்டேன்
ஆசை நாடகம் ஆடிட வந்தேன்
இடையும் செவ்விதழும் கைவசம் கொண்டேன்
கூடும் போதும் குலவும் போதும்
கூடும் போதும் குலவும் போதும்
ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள்

தொடங்கலாம் இனிய கனி இதழ் கிடைத்தது
தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது
மயக்கம் தருவது மாலை நேரம்

முல்லை பூக்களின் சரங்களில் ஒன்று
வரவை கை தொடவும் பாக்கியம் இன்று
எல்லையை மீறிய போதையில் இன்று
உருகும் என் இதயம் உன் தரிசனம் கண்டு
தேவன் தேவி லீலை காண
தேவன் தேவி லீலை காண
காலமும் நேரமும் சாதகமே ஹஹஹ

தொடங்கலாம் இனிய கனி இதழ் கிடைத்தது
தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது
மயக்கம் தருவது மாலை நேரம்

தொடங்கலாம்..ம்ஹ தொடரலாம்.. ம்ஹம்

Thursday, January 21, 2010

899 வென்னிலவு மண்ணில் வந்து பாலூட்டும்

Image and video hosting by TinyPic

//மாயவனே.. மாயவனே உன் மார்ப்பினிலே.. கைகள் சேர்த்தேன்.. ஓடையிலே ஓடையிலே விளையாடையிலே.. பூவாய் பூப்பேன்.. விளங்காத செடிகலெல்லாம் விடை தேடுவேன்.. விடிகின்ற நிறம் வந்தால் உடை தேடுவேன்//

இது போன்ற கலக்கல் வரிகள் கொண்ட அருமையான மெலோடி பாடல் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

படம்:மாமியார்கள் ஜாக்கிரதை
பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி,வாணிஜெயராம்

Get this widget | Track details | eSnips Social DNA


வென்னிலவு மண்ணில் வந்து பாலூட்டும்
தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும்
வென்னிலவு மண்ணில் வந்து பாலூட்டும்
தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும்

வென்னிலவு மண்ணில் வந்து பாலூட்டும்
தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும்
சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும்
நெஞ்சுகுள்ளே என்ன இன்று கோலாட்டம்
முத்தமிடும் நேரம் ஒரு சத்தம் இடும் இன்றே போராட்டம்

முத்தமிடும் நேரம் ஒரு சத்தம் இடும் இன்றே போராட்டம்
வென்னிலவு மண்ணில் வந்து பாலூட்டும்
தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும்
சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும்
நெஞ்சுகுள்ளே என்ன இன்று கோலாட்டம்

தோள்களிலே ஹெ ஹெ
தோள்களிலே விழும் மாங்கனியே
என்னை தூண்டு
தூயவனே, தூயவனே இளம் சூரியனே
என்னை தூண்டு
உறங்காது மொகம் வந்து
என்னை தீண்டுதே
அடங்காது ஆசை இன்று அலைபாயுமே

வென்னிலவு மண்ணில் வந்து பாலூட்டும்
தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும்
சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும்
நெஞ்சுகுள்ளே என்ன இன்று கோலாட்டம்

மாயவனே.. மாயவனே உன் மார்ப்பினிலே
கைகள் சேர்த்தேன்
ஓடையிலே ஓடையிலே விளையாடையிலே
பூவாய் பூப்பேன்
விளங்காத செடிகலெல்லாம் விடை தேடுவேன்
விடிகின்ற நிறம் வந்தால் உடை தேடுவேன்

வென்னிலவு மண்ணில் வந்து பாலூட்டும்
தென்றல் வந்து இன்று நம்மை பாராட்டும்
சின்ன சின்ன ஆசை வந்து வாலாட்டும்
நெஞ்சுகுள்ளே என்ன இன்ரு கோலாட்டம்
முத்தமிடும் நேரம் ஒரு சத்தம் இடும் இன்றே போராட்டம்

Wednesday, January 20, 2010

898 அருவி கூட ஜதி இல்லாமல்

Image and video hosting by TinyPic


ஸ்வரங்கள் பாடி தொடர்ந்து பாடல் வரிகள் பாடும் பாடல்கள் ஏகப்பட்டது திரையிசையில் வந்தது ரொம்ப வருடங்கள் கழித்து இந்த பாடல் கேட்கிறேன். அமர்க்களமான பாடல் தாஸண்ணாவும், பாலுஜியும் சேர்ந்து ஒரு இசை கச்சேரியே நடத்தி விட்ட உணர்வு இப்போதும் எனக்கு ஏற்படுகிறது பாடல் வரிகள் மிகவும் அருமையாக எழுதப்பட்டிருக்கும் அதற்கு அசத்தலான மெட்டைமைத்தது இனியவன். இந்த பாடலை விரும்பி கேட்டவர் பாலுஜியின் தீவிர ரசிகர் திரு.நவாஸ்,இலங்கை சமீபத்தில் சுத்தமாக மறந்தே போய்விட்ட பாடலை அனுப்பி இதை பதேவேற்றுங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டார். இதோ அவருக்காகவும் நம் பாலுஜி ரசிகர்களுக்காகவும் இந்த பாடல். கேட்டு மகிழுங்கள். இலங்கையில் இருந்து மின்னஞ்சல் மூலம் ஒலிக்கோப்பை அனுப்பிவைத்த திரு.நவாஸ் அவர்களூக்கு பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

படம்:கௌரி மனோகரி
பாடியவர்கள்: டாக்டர் கே.ஜே. யேசுதாஸ், டாக்டர்.எஸ்.பி.பி



ஆஆ..ஆஆ...ஆஆ..
ஆஆ..ஆஆ...ஆஆ..
ஆஆ..ஆஆ...ஆஆ..

அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா

இசை ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
லயம் ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..

அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது

பா மா பா நி
நி சா கா சா நி பா மா
மா பா நி பா மா கா சா
சா கா மா
கா மா பா
மா பா நி
பா பா மா கா சா நி பா நி
நி சா கா மா கா சாநி
கா சா நி பா சா நி பா மா

உயிர் பிறந்திடும் முன்னே ஒளியும் பிறந்தது
அந்த ஒலி பிறக்கின்ற போதே இசையும் பிறந்தது

சத்தங்கள் யாவும் இசை தானே துனிந்து பாடு ஹஹ மனிதா

சத்தங்கள் வேறு இசை வேறு பிரிப்பது என்ன எளிதா

எங்கும் இசை என்னும் மழை பொழியாதா
எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா
எங்கும் இசை என்னும் மழை பொழியாதா ஆஆஆ
எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா..ஆஆ

அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது

நி சா கா சா நி நி சா சா சா
நி சா கா சா நி நி சா சா சா
நி சா நி சா கா கா
சா கா சா கா மா மா
கா மா கா மா பா நி
பா பா பா

மொழியும் இசையும் அடங்காது
முதலும் முடிவும் அதற்கேது
சுதியில் விலகி லயத்தில் நழுவி
உலகில் எதுவும் கிடையாது

பா நி சா கா சா நி
பா நி சா கா சா நி
பா நி சா கா சா நி
சா சா சா
நி சா கா மா கா சா
நி சா கா மா கா சா
நி சா கா மா கா சா
சா சா
அலை அடிப்பதும் மழை அடிப்பதும்
அவன் அவன் சொல்லி ஒயாது
இடி இடிப்பதில் இல்லை துடிப்பதில்
இசை லயம் ஒன்றும் மாறாது

கா கா பா பா
மா மா நி நி
பா பா சா சா
நி நி கா கா

ஓசை இன்றி நாதம் இல்லை
நாதம் இன்றி ஏதும் இலை
கேள்வி இன்றி ஞானம் இல்லை
கீதம் இன்றி நானும் இல்லை

ஆஆஆஆ...ஆஆஆஆ..

அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது

அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
லயம் ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..

Tuesday, January 19, 2010

897 விழிகளே விழிகளே கவிதை ஒன்று



//பேசும் ஒரு தெய்வம் அந்த பிள்ளையல்லவா.. பிறக்கும் கொஞ்சு சிரிக்கும் கொடி முல்லையல்லவா.. மணிவிழி மரகத தீபம் அதில் ஒரு அபிநய பாவம்.. இரு உயிர் தழுவிய நேரம் இரவினில் எழுதிய கோலம்.. அந்த கஸ்தூரிமான் துள்ளி வாராதோ
வரும் காலங்கள் நூறாண்டு வாராதோ.. விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்..ள்..ள்..ள்.. என்னை எந்தன் பிள்ளை ஒரு தந்தையாக்கினான்
ஹஹ இதயம் அது முழுதும் இன்பத் தேனை தேக்கினான்.. மடியினில் மகன் விளையாட மனதினில் மதுரசம் கூட.. நிலவெனும் முகவொளி வீச இடியென ஒரு மொழி பேச
அந்த சந்திரன் நான் கேட்கும் நாளின்று.. அன்று சாய்ந்தாடும் பல்லாக்கு தோளின்று//

என்னவொரு மெலோடி அழகான வரிகள் இனிமையான குரல் சூப்பரப்பு... கேட்டு மகிழுங்கள். அப்படியே தெரிந்தவர்கள் இந்த படத்தின் பற்றிய தகவல்களூம் தந்துவிடுங்கள் அன்பர்களே.

படம்:மாமியார்கள் ஜாக்கிரதை
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA


விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்
இமைகளே இமைகளே ஆனந்த கண்ணீரில் நனையுங்கள்
இந்த பேரின்பம் ஏனின்று கேளுங்கள்
என் பேர் சொல்ல ஓர் பிள்ளை பாருஙகள்
விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்..ள்..ள்..ள்

பேசும் ஒரு தெய்வம் அந்த பிள்ளையல்லவா
பிறக்கும் கொஞ்சு சிரிக்கும் கொடி முல்லையல்லவா
மணிவிழி மரகத தீபம் அதில் ஒரு அபிநய பாவம்
இரு உயிர் தழுவிய நேரம் இரவினில் எழுதிய கோலம்
அந்த கஸ்தூரிமான் துள்ளி வாராதோ
வரும் காலங்கள் நூறாண்டு வாராதோ
விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்..ள்..ள்..ள்

என்னை எந்தன் பிள்ளை ஒரு தந்தையாக்கினான்
ஹஹ இதயம் அது முழுதும் இன்பத் தேனை தேக்கினான்
மடியினில் மகன் விளையாட மனதினில் மதுரசம் கூட
நிலவெனும் முகவொளி வீச இடியென ஒரு மொழி பேச
அந்த சந்திரன் நான் கேட்கும் நாளின்று
அன்று சாய்ந்தாடும் பல்லாக்கு தோளின்று

விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்
இமைகளே இமைகளே ஆனந்த கண்ணீரில் நனையுங்கள்
இந்த பேரின்பம் ஏனின்று கேளுங்கள்
என் பேர் சொல்ல ஓர் பிள்ளை பாருஙகள்
விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்..ள்..ள்..ள்

Thursday, January 14, 2010

896 நான் போகிறேன் மேலே மேலே






அட்டகாசமான மெலோடி பாடலை இந்த ஆண்டில் பாலுஜி ரசிகர்களூக்கு வழங்கிய கேப்பிடல் பிலிம்ஸ் வொர்க்ஸ் தயாரிப்பாளர் திரு.எஸ்.பி.பி சரணுக்கு படம் வெற்றியடைய பாலுஜி ரசிகர்கள் சார்ப்பாக வாழ்த்துக்கிறோம். மிகவும் அனுபவித்து பாடிய பாலுஜி அவர்களுக்கும் சித்ரா மேடத்திற்க்கும் நன்றி.

படம்:நாணயம்
பாடகர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி,சித்ரா
இசை:ஜேம்ஸ்வசந்தன்
தயாரிப்பு:கேப்பிடல் பிலிம் வொர்க்ஸ்

Get this widget | Track details | eSnips Social DNA


நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என்மேலே பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
தடுமாறி போனேன் அன்பே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்தேன் உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும் ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம..
னனானன்னா னனானன்னாஆஆ னனானன்னாஆஆ
னனானன்னா னனானன்னாஆஆ னனானன்னாஆஆ

நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என்மேலே பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
தடுமாறி போனேன் அன்பே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்தேன் உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும் ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம..
னனானன்னா னனானன்னாஆஆ னனானன்னாஆஆ
னனானன்னா னனானன்னாஆஆ னனானன்னாஆஆ

கண்ணாடி முன்னே நின்றே தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டி பார்த்தால் அய்ய்யோஓஓ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும் அரையினுள் நீவந்தாள்
கை நீட்டி தொட்டுபார்த்தேன் காட்றே அய்ய்யோஓஓஒ

என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூமாலை செய்தேன் வாடுதே
என்னத்தை தேடும் போர்வையாவும் சேலையாகதே
வாராதோ அந்நாளூம் இன்றே ஹம்ம்ஹம்ம்மாஆஆ
னனானன்னா னனானன்னாஆஆ னனானன்னாஆஆ
னனானன்னா னனானன்னாஆஆ னனானன்னாஆஆ

என் தூக்கம் வேண்டுமென்றாய் தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்
வாரத்தைகள் தேடித்தேடி நான் பேசி பார்த்தேனே
கண்ணத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்

அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணமால் போனேன் பாடி
நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே
கால்நோக கால்நோக நின்றேனே ஏஏஏஏஏ

நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என்மேலே

ஹாஆஆ பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே

ஆஆஆஆ தடுமாறி போனேன் அன்பே உன்னை பார்த்த நேரம்

அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னை பார்தேன் உள்ளம் கேள்வி கேட்கும்

ஹஹ ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும் ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம..

னனானன்னா னனானன்னாஆஆ னனானன்னாஆஆ
னனானன்னா னனானன்னாஆஆ னனானன்னாஆஆ

Wednesday, January 13, 2010

895 குறுக்கு பாதையிலே மறிச்சு



கிராமத்து மண்ணிலோ பொங்கல் கொண்டாடுகிறார்களோ இல்லையோ இந்த பண்பலை வானொலிகளூம், தொலைக்காட்சி நிலையங்களும் அடெங்கப்பா என்னவொரு விதவிதமான நிகழ்ச்சிகள் எத பார்க்குறது எத விடறது திண்டாடித்தான் போவார்கள் மக்கள். அதுமட்டுமல்லாமல் வானொலியிலும் கோவையில் இருக்கிற ஐந்து பண்பலைகளூம் நாங்களும் விடுவோமா என்று அவங்க வேற. சரி சரி நாமமட்டும் என்ன விட்டு விடப்போகிறாமா பொங்கல் பண்டிகைக்காக இதோ பாலுஜி குரலில் ஒரு கலக்கல் கிராமத்து மண் வீசும் பாடல் இடம் பெற்ற படமோ ஐ லவ் இண்டியா. அமர்க்களம் போங்கள் நேற்று வேலை விட்டும் போகும் போது வானொலியில் கேட்ட பாடல் சரி இந்த பாடலை இன்று வழங்கிடுவோம் என்று நினைத்து தேட சோம்பேறிதனம் பட்டு கோவை கோபாலகிருஷ்னன் சாரிடம் இந்த பாடல் வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பினேன் உடனே அவர் இணையத்தில் தேடி பிடித்து எனக்கு அனுப்பி விட்டார். அது மட்டுமல்லாமல் இன்று அதிகாலை வாக்கிங் போகும் போது வானொலி நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கும் போது எனது நண்பர் அறிவிப்பாளர் திரு.ரவி வர்மா அவர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பினேன் உடனே ஒலிப்பரப்பினார் இருவருக்கும் பாலுஜி ரசிகர்கள் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்களூடன் நன்றியை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் கேட்டு மகிழுங்கள் குருவம்மா, மருதய்யா இருவரும் கலாய்ப்பதை. ஹோய்.. ஹோய் என்று நடு நடுவே தலையசைத்துக்கொண்டே ரசியுங்கள் அன்பர்களே.

படம்: ஐ லவ் இண்டியா
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி.மின்மினி குழுவினர்
இசை: இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA


குறுக்கு பாதையிலே மறிச்சு வழியில் நிக்க
உருத்தும் இளம் மனசின் அர்த்தம் தெரிஞ்சு நிக்க
கூறாம போனவளே குருவம்மா
பதில் கூறாம போனவளே குருவம்மா
அட வருத்தமென்ன வருததமென்ன பருவமா
நாம விலகி நிக்க ரெண்டும் ரெண்டு துருவமா

குறுக்கு பாதையிலே மறிச்சு வழியில் நின்னு
உருத்தும் இளம் மனசின் அர்த்தம் தெரிஞ்சு நின்னு
கேட்காம கேட்டு நிக்கும் மருதய்யா
மேளம் கொட்டாமெ கேட்குறியே உரிமையா
உன்னை பார்க்குறப்ப உள்ளாற ஒன்னு வருதய்யா
நீ பரிசம் போட்டு உரசி பார்க்க வருவியா

சுண்ணாம்பு வெத்தலை வெச்சு
சாயப் பாக்கு சந்தனம் வெச்சு
உன்னை பார்க்க வந்ததேன் என் மாமவே
கண்டாங்கி ஐயரை வெச்சு
பந்தலிலே நாளும் குறிச்சு
கல்யாணம் செஞ்ச என்ன மாமாவே

கண்ணாலம் கட்டும் முன்னே
கெட்டி மேளம் கொட்டும் முன்னே
கை விரலும் பட்டால் என்ன ஆகாதா
வண்ணாத்தி பூச்சி போலே
வண்ண மிகு பூவ போலே
உன் அழகை கண்டால் நெஞ்சும் வாடாதா

அடி மஞ்சக்கிழங்கு சிறு இன்பக்கிடங்கே

கட்டிக் கரும்பே கொடி முல்லை அரும்பே

அடி பார்க்கமே போனவளே குருவம்மா
ஒரு பென்னென வந்தது பொன்னுல பன்னிய உருவமா

குறுக்கு பாதையிலே மறிச்சு வழியில் நின்னு
கேட்காம கேட்டு நிக்கும் மருதய்யா
மேளம் கொட்டாமெ கேட்குறியே உரிமையா
உன்னை பார்க்குறப்ப உள்ளாற ஒன்னு வருதய்யா
நீ பரிசம் போட்டு உரசி பார்க்க வருவியா

பெண்ணாக பெண்ணும் உறங்க
பொன்னுமணி கன்ணும் உறங்க
பச்சப்புள்ளை போட்டு வைப்பேன் பாய் போட
முத்தான முத்தழகி
மஞ்சழக்கு முத்தழகி
மச்சம் ஒன்னு வெச்ச என்ன பூ போல

வெட்டடாம வெட்டுது கண்ணு
பக்கம் ஒன்னு ஒட்டுது கண்ணு
என்ன வேணும் கண்டுபுடி மாமாவே
நையாண்டி மேளத்தை கொட்டு
கை இரண்டும் தாளத்தை தட்டு
உன்னாட்டம் நானும் ரெடி மாமாவே

அடி தொட்டு குவிக்க புது மெட்டு படிக்க

அள்ளி அணைக்க கனி கிள்ளி பறிக்க

ஆத்தோரம் இடம் இருக்கு வசதியா
ஒரு சப்பனம் கட்ட ஒத்திக பார்க்க வருவியா

குறுக்கு பாதையிலே மறிச்சு வழியில் நின்னு
உருத்தும் இளம் மனசின் அர்த்தம் தெரிஞ்சு நின்னு
கேட்காம கேட்டு நிக்கும் மருதய்யா
மேளம் கொட்டாமெ கேட்குறியே உரிமையா
உன்னை பார்க்குறப்ப உள்ளாற ஒன்னு வருதய்யா
நீ பரிசம் போட்டு உரசி பார்க்க வருவியா

அடடடடே
குறுக்கு பாதையிலே மறிச்சு வழியில் நிக்க
உருத்தும் இளம் மனசின் அர்த்தம் தெரிஞ்சு நிக்க
கூறாம போனவளே குருவம்மா
பதில் கூறாம போனவளே குருவம்மா
அட வருத்தமென்ன வருததமென்ன பருவமா
நாம விலகி நிக்க ரெண்டும் ரெண்டு துருவமா

Tuesday, January 12, 2010

894 யாரது.. மன்மதன்



படம்:மேகத்துக்கும் தாகமுண்டு
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி,வாணி ஜெயாராம்
இசை:மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

//என்னிக்கிடந்தது.. வெற்றிக்கு வந்தது.. என்னைக் கவர்ந்தது இன்பத்தை தந்தது
இரவினில் அதிசயம் நிகழ்ந்தது... மனதினில் உறவுடன் கலந்தது.. உலகினை ஒரு கனம் மறந்தது//

இது போன்ற இனிமையான பாடல் வரிகளூடன் இந்த பாடலும் ரொம்ப வருடங்கள் கழித்து கேட்ட பாடல். நீங்களும் அனுபவியுங்கள் அன்பர்களே.

Get this widget | Track details | eSnips Social DNA


யாரது....
மன்மதன் ...
ஏனிது..
மந்திரம்..

யாரது....
மன்மதன் ...
ஏனிது..
மந்திரம்..

அர்த்த ராத்திரியில் சரசமோ

ஆசை கொண்டதென்ன விரசமோ

அர்த்த ராத்திரியில் சரசமோ

ஆசை கொண்டதென்ன விரசமோ

அன்பு மன்னவனின் உருவமோ

அழகு தேவதையின் பருவமோ

யாரது....
மன்மதன் ...
ஏனிது..
மந்திரம்..

பின்னிப் பிறந்தது கல்வி கலந்தது??

பந்திக்கு வந்தது முந்திக்கொடுத்தது

பின்னிப் பிறந்தது கல்வி கலந்தது??

பந்திக்கு வந்தது முந்திக்கொடுத்தது

மீன் என கண்களைக் கொடுத்தது

மின்னலைப் போல் ஒன்று பிடித்தது

ஏன் என கேட்கவும் மறந்தது

காரணம் ஆனந்தம் தெரிந்தது

அர்த்த ராத்திரியில் சரசமோ

ஆசை கொண்டதென்ன விரசமோ

அன்பு மன்னவனின் உருவமோ

அழகு தேவதையின் பருவமோ

யாரது....ம்ம்..
மன்மதன் ...
ஏனிது..ஹ
மந்திரம்..

என்னிக்கிடந்தது.. வெற்றிக்கு வந்தது

என்னைக் கவர்ந்தது இன்பத்தை தந்தது

இரவினில் அதிசயம் நிகழ்ந்தது

மனதினில் உறவுடன் கலந்தது

உலகினை ஒரு கனம் மறந்தது

ஒளிமயமானது தெரிந்தது

அர்த்த ராத்திரியில் சரசமோ

ஆசை கொண்டதென்ன விரசமோ

அன்பு மன்னவனின் உருவமோ

அழகு தேவதையின் பருவமோ..ஓஓஓஓஓஓஓ

யாரது....ம்ஹஹ
மன்மதன் ... ம்ஹஹ
ஏனிது..
மந்திரம்..

Monday, January 11, 2010

893 வெள்ளம் போலே துள்ளும்



இந்த சூப்பர் மெலோடி பாடலை இணையத்தில் தேடி பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. வானொலியில் கேட்டு பெறப்பட்ட பாடல் இது எனது திருப்பூர் நண்பர் திரு.அகிலா விஜயகுமாரிடம் எப்போதோ கேட்டது அவர் அதை நினைவு வைத்துக்கொண்டு அவருடைய நணபர் ஆஸ்தான வானொலி நேயர் திரு.மோகன சுந்தரம் அவர்களிடம் கேட்டு அவர் தன் சகோதரி அபிராமியுடன் கொடுத்து வானொலியில் பேசவைத்திருக்கிறார். அறிவிப்பாளர் கடவுள் உங்கள் முன்னால் தோன்றினால் என்ன கேட்பீர்கள் என்று கேள்வி கேட்டார் அதற்கு அபிராமி அவர்கள் சூப்பரான பதில் தந்து அவரின் விருப்பப் பாடலாக நான் விரும்பி கேட்ட பாடலை ஒலிப்பரப்ப வைத்து விட்டார்கள் இதோ அவரின் அசத்தலான பதிலுக்கு அறிவிப்பாளரின் ரியாக்சனையும் கேட்டு பாடலுடன் அனுபவியுங்கள். என் விருப்பமாக கேட்ட அபிராமியின் சகோதரர் திரு.மோகன சுந்தரம் அவர்களூக்கும், அவரின் நண்பர் திரு.அகிலா விஜயகுமார் அவர்களூக்கும் பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றி.

பாடல்:வெள்ளம் போலே துள்ளூம் உள்ளங்களே
படம்: கனவுகள் கற்பனைகள்
பாடியவரக்ள்:டாக்டர்.எஸ்.பி.பி, பூர்னிமா
இசை: கங்கை அமரன்

Get this widget | Track details | eSnips Social DNA


வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களே
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களே
சின்ன வயதினிலே... பொங்கும் நினைவுகளே
வெறும் கனவுகள்.... கற்பனைகள்
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே

ஆ ஆஅ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
லலல்லலல்லா லா லா லா லா

கள்ளம் இல்லா உண்மைக் காதல் என்றால்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கள்ளம் இல்லா உண்மைக் காதல் என்றால்
கண்களில் ஆரம்பமா
கண்கொள்ளா காட்சியில் ஆரம்பமா
வெள்ளமும் வெள்ளமும் சேர்வதுபோல்
உள்ளம் பிணைந்திடுமா
அன்பினால் ஒன்று கலந்திடுமா
பெண் மனதிலே வீண் சலனமா
பொன் ஒளியிலே கண் திறக்குமா
நல் வாழ்வு மலர்ந்திடுமா...ஹா

வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களே
சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே
வெறும் கனவுகள்... கற்பனைகள்

ந ந ந ந ந ந ந நா...... ந ந ந ந நா
ந ந ந ந ந ந ந நா...... ந ந ந ந நா

காலை இளம் வெய்யில் தீண்டும் முன்னே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காலை இளம் வெய்யில் தீண்டும் முன்னே
சோலை மலர்ந்ததம்மா
வண்டுக்கோர் ஓலை வரைந்ததம்மா
வேளை தெரியாமல் காளை மனம்
வேடிக்கை பார்குதம்மா
நெஞ்சத்தில் வேதனை சேர்குதம்மா..ஆ ஆ
துணை கிடைக்குமா சுகம் பிறக்குமா
அன்பு நிலைக்குமா எண்ணம் பலிக்குமா
மன ஏக்கம் தணிந்திடுமா.... ஹா

வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களே
சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே
வெறும் கனவுகள்... கற்பனைகள்
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே...............

Saturday, January 09, 2010

892 உலகில் இரண்டு கிளிகள்



//கோடை கானல் தோற்றம்.. இன்று கொஞ்சும் பறவை கூட்டம்.. ஆடி கலக்கும் ஆட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்.. //

இந்த பாடலே கலக்கலாக இருக்கும் ஓவ்வொரு வரிகளும் பாடகர்களால் இரண்டு இரண்டு தடவை பாடப்பட்டிருக்கும் ஓகோ அதான் உலகில் இரண்டு கிளிகள் என்று பல்லவி வைத்தார்களோ என்னவோ? அமர்க்களமான பாடல் ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கிறேன். சில வருடங்களூக்கு முன் ஒரு பாலுஜி தீவிர ரசிகர் முகுந்தன் என்று நினைக்கிறேன் விரும்பி கேட்ட பாடல் இது இப்போது தான் பதிய வாய்ப்பு கிடைத்தது. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

படம்:குலமா குணமா
பாடியவர்கள்:எஸ்.பி.பி,டி.எம்.எஸ்,பி.சுசீலா,டாக்டர்: எஸ்.ஜானகி
இயக்குனர் K. S. கோபாலகிருஷ்ணன்
தயாரிப்பு M. அசாம்
இசை K V மஹாதேவன்
நடிப்பு சிவாஜி கணேசன்

Get this widget | Track details | eSnips Social DNA


உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்

இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்

உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்

இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்

உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்

இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்

உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்

இயற்கை பெண்ணின் நிலைமை
அவள் இதழில் ஊரும் பசுமை
இயற்கை பெண்ணின் நிலைமை
அவள் இதழில் ஊரும் பசுமை

விளக்கம் கூற தனிமை
இடம் வேறு கண்டால் இனிமை
விளக்கம் கூற தனிமை
இடம் வேறு கண்டால் இனிமை

கோடை கானல் தோற்றம்
இன்று கொஞ்சும் பறவை கூட்டம்
கோடை கானல் தோற்றம்
இன்று கொஞ்சும் பறவை கூட்டம்

ஆடி கலக்கும் ஆட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்
ஆடி கலக்கும் ஆட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்

உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்

கண்ணம் என்னும் ஒன்று
அது கனிந்ததென்ன இன்று
கண்ணம் என்னும் ஒன்று
அது கனிந்ததென்ன இன்று

மன்னன் மார்பில் நின்று
அது மலர்ந்து போனது இன்று
மன்னன் மார்பில் நின்று
அது மலர்ந்து போனது இன்று

பள்ளியறையில் பதுமை
அவள் பனிவில் தெய்வ புதுமை
பள்ளியறையில் பதுமை
அவள் பனிவில் தெய்வ புதுமை

இல்லம் காக்கும் மகிமை
அதில் என்றும் இல்லை முதுமை
இல்லம் காக்கும் மகிமை
அதில் என்றும் இல்லை முதுமை

உலகில் இரண்டு கிளிகள்

அவை உரிமை பேசும் விழிகள்

இன்ப வலையில் விழுந்த மீன்கள்

தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்

உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்

Thursday, January 07, 2010

891 ஏய் மாமனாரே, மாமியரே கேட்டுக்கோங்க



//காதலிக்க வீரம் வேணும் நெஞ்சிலே.. அதுகாய்த்திடும் முன்னே வாடுது ஏன் பிஞ்சிலே
போட்டாலே துளிர் விட்ட வெத்தல.. கொழுந்து வெத்தல.. அத போட்ட தாண்ட வ்வராம் இன்னும் பத்தல.. ஆமா அது பத்தல.. மதுர வீரன் போல ஒரு பிகரை கொண்டு வரட்டா
மாடி மேல ஏறி ஒன்னு மால ஒன்னு தரட்டா//

இது போன்ற கலக்கல் வரிகளில் பாலுஜியின் குரலில் கேட்க கேட்க அபாரம் போங்கள். இது புதுவருட ஸ்பெஷல் பாடல் உங்களூக்காக.

பாடல்: நான் எப்பொழுதும் பொம்பள கட்சி
படம்: தூது போ செல்லக்கிளியே
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி,
இசை: தேவா
பாடலாசிரியர்:காளிதாசன்

Get this widget | Track details | eSnips Social DNA


ஏய் மாமனாரே, மாமியரே கேட்டுக்கோங்க
ஏய் மாமனாரே, மாமியரே கேட்டுக்கோங்க
உங்க மானத்த நான் வாங்கப்போறேன் பார்த்துக்கோங்க
பெத்த பொண்னு நல்லபடி வாழனும்னா
இந்த உத்தமன் தேடி வந்து சேரனுங்க

நான் எப்பொழுதும் பொம்பள கட்சி
அடிஉன்னை தவிர எல்லோருமே அக்கா தங்கச்சி
நான் எப்பொழுதும் பொம்பள கட்சி
அடிஉன்னை தவிர எல்லோருமே அக்கா தங்கச்சி

ஒரு தப்பான ஆளு இல்லேடி
இல்லன்ன தற்கொலைதான் செய்யப்போறேண்டி
அடி தங்க நிறக்கிளியே நீ தாவி வாடி வெளியே
நான் திங்க பழுத்த கனியே தவிக்கிறேண்டி தனியே
நான் எப்பொழுதும் பொம்பள கட்சி
அடிஉன்னை தவிர எல்லோருமே அக்கா தங்கச்சி

காதலிக்க வீரம் வேணும் நெஞ்சிலே
அதுகாய்த்திடும் முன்னே வாடுது ஏன் பிஞ்சிலே
போட்டாலே துளிர் விட்ட வெத்தல
கொழுந்து வெத்தல
அத போட்ட தாண்ட வ்வராம் இன்னும் பத்தல
ஆமா அது பத்தல
மதுர வீரன் போல ஒரு பிகரை கொண்டு வரட்டா
மாடி மேல ஏறி ஒன்னு மால ஒன்னு தரட்டா

அடிமானே .......... பச்சக்கிளி
அண்னே எப்போதும் பொம்பளகட்சி
அடி உன்னை தவிர எல்லோரும் அக்கா தங்கட்ச்சி
டிங்கிரி டிங்கிரி பாமா என் சந்ததி கேட்கலாமா
கமல்ஹாசன் இங்கே அந்த ஸ்ரீதேவிதான் எங்கே
பொன்ன பெத்த மாமனாரே கேளூங்க சித்த கேளூங்க
ஒரு புடிவாதம் கல்யாணம் ஏனுங்க அட ஏனுங்க'
கன் நிறைஞ்ச புருசனத்தான் பாருங்க
இவரு தானுங்க
உங்க கால த்லைய தாங்கனுமா குகுறுங்க
ஆமா கூறுங்க
காதல்த்தான் பிரிக்கிறது தப்பு தானுங்க
அவ ஓடிப்போனதா உங்க மனச் கொஞ்சம் மாத்திக்குங்க

ஏய் மாமனாரே, மாமியரே கேட்டுக்கோங்க
உங்க மானத்தநான் வாங்கப்போறேன் பார்த்துக்கோங்க
நான் எப்பொழுதும் பொம்பள கட்சி
அடிஉன்னை தவிர எல்லோருமே அக்கா தங்கச்சி

ஒரு தப்பான ஆளு இல்லேடி
இல்லன்ன தற்கொலைதான் செய்யப்போறேண்டி
அடி தங்க நிறக்கிளியே நீ தாவி வாடி வெளியே
நான் திங்க பழுத்த கனியே தவிக்கிறேண்டி தனியே
நான் எப்பொழுதும் பொம்பள கட்சி
அடிஉன்னை தவிர எல்லோருமே அக்கா தங்கச்சி

ஏய் மாமனாரே, மாமியரே கேட்டுக்கோங்க
உங்க மானத்தநான் வாங்கப்போறேன் பார்த்துக்கோங்க

ஏய் மாமனாரே, மாமியரே கேட்டுக்கோங்க
உங்க மானத்தநான் வாங்கப்போறேன் பார்த்துக்கோங்க

Tuesday, January 05, 2010

890 துள்ளிக் குதிக்கும் தென்றல் காற்று



//ஆகாயமே ஒரு கூறையாய் ... இந்த வீட்டினை தாங்குதே..ஓஓஓஒ.. தாயாக வந்து தாலாட்டுமே என்றும்.. சங்கீதமாய் இங்கே ஏஏஏஏ... சின்னச் சின்ன புன்னகையாலே
வார்த்தை இன்று அர்த்தம் ஆனதே... வானவில்லும் ஊஞ்சல் ஆனதே..வானவில்லும் ஊஞ்சல் ஆஆஆனதே..//

இது போன்ற அழகான வரிகள் நிறைய நிறைய இருக்கின்றன இந்த பாடலில் படத்தை நான் பார்க்கவில்லை அதனால் என்னங்க காட்சிகள் எப்படி இருக்கும் என்று கண்முன் நிழலாடுதே. இந்த பாடலை விரும்பி கேட்ட திரு.கோவை கோபாலக்ருஷ்னன சாருடன் சேர்ந்து நாமும் கேட்டு மகிழ்வோம்.

படம்:வெட்டாட்டம்
நடிகர்கள்:அஜெய்,ரம்யா நம்பீசன்,மதுலிகா, முமைத்கான்
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி
இசை:ஸ்ரிசாய்.வி
பாடலாசிரியர்:நா.முத்துகுமார், நா.அண்ணாமலை
இயக்குனர்:டி.எஸ்.கண்ணன்
தயாரிப்பு விஸ்வேஸ்வரா குரூப்

Get this widget | Track details | eSnips Social DNA


துள்ளிக் குதிக்கும் தென்றல் காற்று
வந்தது இன்று வீட்டைக்கேட்டு
மண்ணில் சொர்க்கம் இங்கே உள்ளது
இறைவன் இன்பம் தேடும் வீடு இது

துள்ளிக் குதிக்கும் தென்றல் காற்று
வந்தது இன்று வீட்டைக்கேட்டு
மண்ணில் சொர்க்கம் இங்கே உள்ளது
இறைவன் இன்பம் தேடும் வீடு இது

என் பாதையில் ஒரு பூவனம்
இளைப்பாறுவே இது தோள் தரும்
இது ஆனந்தம் பேரானந்தம்
இந்த சொந்தமே ஏஏஏஏ

மண்ணில் சொர்க்கம் இங்கே உள்ளது
இறைவன் இன்பம் தேடும் வீடு இது

துள்ளிக் குதிக்கும் தென்றல் காற்று
வந்தது இன்று வீட்டைக்கேட்டு
மண்ணில் சொர்க்கம் இங்கே உள்ளது
இறைவன் இன்பம் தேடும் வீடு இது

புதிதான மழைமேகம் தரை மீது அலை மோதும்
சந்தோச தூறல் நெஞ்சிலே..ஏஏஏஏ....ஆஆஆஆ

அழகான ஒரு நேசம் அன்பென்னும் புது வேஷம்
ஆனந்த கண்ணீர் கண்ணீலே

ஆகாயமே ஒரு கூறையாய்
இந்த வீட்டினை தாங்குதே..ஓஓஓஒ..

தாயாக வந்து தாலாட்டுமே என்றும்
சங்கீதமாய் இங்கே ஏஏஏஏ...
சின்னச் சின்ன புன்னகையாலே
வார்த்தை இன்று அர்த்தம் ஆனதே
வானவில்லும் ஊஞ்சல் ஆனதே..
வானவில்லும் ஊஞ்சல் ஆஆஆனதே..

துள்ளிக் குதிக்கும் தென்றல் காற்று
வந்தது இன்று வீட்டைக்கேட்டு
மண்ணில் சொர்க்கம் இங்கே உள்ளது
இறைவன் இன்பம் தேடும் வீடு இது

ஒரு கோடி தெய்வங்கள் ஒன்றாகி வந்தாலும்
தாயன்பு முன்னே தோற்குமே..ஏஏஏஏ....
குரலாக கம்பீரம் குளமான மழை ஈரம்
ஒன்றாக தந்தை ஆகுமே..ஏஏஏஏ...

தாயன்பு ஒரு தோழியாய்
வரும் அழகிய மனைவியே
ஓஓஓஒ கை தூணாகவே
தினம் தாங்குவாய் கணவன்
ஒன்னாகவே காப்பாய்
வண்ண வண்ண குறும்புகளாலே
வார்த்தை இன்று அர்த்தம் ஆகவே
கொஞ்சி கொஞ்சி குழந்தை வந்ததே
கொஞ்சி கொஞ்சி குழந்தை வந்ததே

துள்ளிக் குதிக்கும் தென்றல் காற்று
வந்தது இன்று வீட்டைக்கேட்டு
மண்ணில் சொர்க்கம் இங்கே உள்ளது
இறைவன் இன்பம் தேடும் வீடு இது

Saturday, January 02, 2010

889 வெற்றி நிச்சயம் - புதுவருட எனது பேட்டி



வெற்றி நிச்சயம் >> புலிக்கு பிறந்தவனே >> தமிழா தமிழா நாளை நம் நாடே.

அன்பு உள்ளங்களே, பாலுஜியின் தீவிர ரசிகர்களே இதோ நம் பாலுஜியின் பார்வையால் வானொலியில் என்னிடம் சிறு பேட்டி கேட்டு வாய்ப்பு வந்தது. எனக்கு ஆச்சரியம் எங்கிட்ட.. எங்கிட்ட போய் என்னங்க தமாஷ் பன்றீங்களா என்று எனது திருப்பூர் நண்பர் திரு.அகிலா விஜயாகுமாரிடம் கேட்டேன். நம்புங்க வானொலி அறிவிப்பாளர் ஒருவர் உங்களை இணையத்தில் தேடி பிடித்து உங்கள் தகவல் கேட்டார் உங்களிடம் பேட்டி கேட்பார் உதறாமல் பதறாமல் வழங்குங்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொளுங்கள் என்றார். முதல் முறை வந்துள்ளது என்னதான் கேட்கிறார்கள் என்று சிறு மன உதறலுடன் பதிவிற்க்கு சென்றால் அறிவிப்பாளினி திருமதி. தேவகி சீனிவாசன் பேட்டி எடுக்குமுன் மிகவும் இயல்பாக பேசி பதிவில் மிகவும் சாமர்த்தியமாக அவர்களூக்கு தேவையான பதிலை வாங்கிக்கொண்டார்கள். அதுவும் பேட்டி நம் பாலுஜி இணையத்தில் பதிவதைப் பற்றி இருந்ததால் எனக்கு அதிகம் சிரமம் தெரியவில்லை. இருந்தாலும் மனதில் சின்ன நடுக்கம் இருந்து கொண்டுதான் இருந்தது. ஏதோ பேசி எப்படியோ சமாளித்தேன். இது ஒரு புதுவருட நிகழ்ச்சியாக இருதாலும் 5 பேர் பேட்டியில் நானும் ஒருவன். ஆகவே நமது தளத்தில் பாலுஜியை பற்றிய தகவல்கள் மட்டும் வருவதால் அவரைப்பற்றி பேசிய எனது பகுதி மட்டும் வெட்டி சேர்த்துள்ளேன். அனைவரின் பேட்டியும் கேட்கவேண்டுமென்றால்இதோ இந்த சுட்டியைஅழுத்தி கேளூங்கள் தேன் கிண்ணத்தில் வந்துள்ளது. என் பேட்டியை கேட்டு பேய் அறைந்தவர்கள் போல் இருப்பீர்கள் ஆகையால் இங்கே நான் உங்களை அதிகம் சோதிக்க விரும்பவில்லை. பேட்டியுடன் அருமையான பாலுஜியின் பாடல்கள் 3ம் கேட்டு மகிழ்வுடன் இருங்கள். இந்த புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் புத்துணர்ச்சியை தரட்டும்.

பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, January 01, 2010

888 அர்ப்பனம் உனக்கே அர்ப்பனம்..ஓ. ப்ரியா


படம்:பொக்கிஷம்
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி
இசை: சத்யம்
வருடம்:1985

இந்த தளத்தில் சென்ற மாதம் "கண்ணே அழகு ராணி ராதா" என்ற பாடலை பழைய பொக்கிஷம் படத்தின் பாடலை கேட்டிருப்பீர்கள். இதோ அதே படத்தில் இனிமையான அர்ப்பனம் உனக்கே அர்ப்பனம்.. ஓ.. ப்ரியா என்ற இனிமையான பாடலை இந்த வருட 2010ன் துவக்க பாடலாக வழங்குவதில் மிக்க மகிழ்கின்றேன். இந்த பாடலை விரும்பி விரும்பி கேட்டவர் கோவை கோபல்கிருஷ்னன் சார். அவருக்கும் உங்களூக்கும் புது வருட புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் நானும் இந்த தளத்தின் சொந்தக்காரர் சுந்தர் சாரும் மகிழ்ச்சியடைகிறோம்.



அர்ப்பனம் உனக்கே அர்ப்பனம்
அர்ப்பனம் உனக்கே அர்ப்பனம்
என் உடலாகி பொருள் யாவுமே
அர்ப்பனம் உனக்கே அர்ப்பனம்..ஓ. ப்ரியா
ஓ... ப்ரியா... ஓ.... ப்ரியா

ஏடில்லாமல் ஒரு எழுத்தில்லாமல்
விழி பாடல் ஆயிரம் பாட
ஒரு கிளையில்லாமல் பசும் இலையில்லாமல்
வண்ண பூ மலர்ந்ததோ ஆட
இடையில் பாதி நடையில் பாதி கொஞ்ச
இதழில் ஓரம் மதுவின் சாரம் மிஞ்ச

கடலும் கதிரும் உறவு கொண்டால்
மழை மேகம் உருவாகும்
ஒருவர் நினைவே ஒருவர் கொண்டால்
மனம் மோகம் உண்டாகும்
கடலும் கதிரும் உறவு கொண்டால்
மழை மேகம் உருவாகும்
ஒருவர் நினைவே ஒருவர் கொண்டால்
மனம் மோகம் உண்டாகும்

இந்த மனமே தான் ஒரு ஆலயம் ஆனால்
அந்த ஆலயம் வாழ்ந்திடும் அம்பிகை நீ
அந்த ஆலயம் வாழ்ந்திடும் அம்பிகை நீ
தீபம் தூபம் வேதம் விரதம் சர்வம் சமர்ப்பனம்
அர்ப்பனம் உனக்கே அர்ப்பனம்

வாழும் காலம் எனும் நூறு ஆண்டுகள் ஏழை காதலர் நெஞ்சம்
ஒரு சீத கமலம் என சிரித்து நடக்கும் இவள்
பாத கமலங்களில் தஞ்சம்
உனது பாதை எனது பார்வை செல்ல
உருகும் மேகம் விரகம் என்ன சொல்ல
வின்னும் மண்ணும் சங்கமித்தால்
ஒரு ப்ரளயம் உண்டாகும்
கண்ணும் கண்ணும் கலந்து கொண்டால்
அன்பு காவியம் உருவாகும்

வின்னும் மண்ணும் சங்கமித்தால்
ஒரு ப்ரளயம் உண்டாகும்
கண்ணும் கண்ணும் கலந்து கொண்டால்
அன்பு காவியம் உருவாகும்

அந்த காவியமே எழில் கோபுரமானால்
அந்த கோபுரம் தாங்கிடும் கலசம் நீ
அந்த கோபுரம் தாங்கிடும் கலசம் நீ
கலசம் சரசம் சலனம் சபலம் சர்வம் சமர்ப்பனம்

அர்ப்பனம் உனக்கே அர்ப்பனம்
என் உடலாகி பொருள் யாவுமே
அர்ப்பனம் உனக்கே அர்ப்பனம்..ஓ. ப்ரியா
ஓ... ப்ரியா... ஓ.... ப்ரியா

Followers

பகிர்க