,
பல்லவியை பார்த்தால் பக்தி பாடல் போன்று தோன்றும், இந்த பாடல் போட்டி பாடலாகும் "அசோகன்" இந்த படத்தை நான் பார்க்கவில்லை. இருந்தாலும் இரு கதாபாத்திரங்களூக்காக பாலுஜி பாடியிருக்கிறார் என்று மட்டும் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. இந்த பாடலை எழுதியவற்க்கு ஒரு சபாஷ். அந்த வரிகளை இருவருக்கும் ஒரே குரலில் பாடினாலும் சிறு வித்தியாசத்தில் மிகவும் சிறப்பாக பாடிய பாலுஜிக்கு ஒரு ஜே.. அடெங்கப்பா என்னா ஸ்பீடு.. என்னா ஒரு எனர்ஜி.. இசை நம் மனம் கவர்ந்த ஏ.ஆர்.ஆர் ஆயிற்றே மெட்டிலேயே தெரிகிறது. இந்த பாடலுக்காகவே படத்தை பார்த்து விடனும். எப்பவோ ஒரு தடவை கேட்டது அப்போது இருந்தே படத்தை பார்க்க வாய்ப்பில்லாமலே போய் விட்டது. இந்த பாடலை கோவை கோபாலகிருஷ்னன் சார் அனுப்பி கேளுங்கள் சார் என்று சொல்லி பல மாதங்கள் ஆயிற்று இப்போதுதான் இந்த பாடலுக்கு பதிய விடிவுகாலம் வந்தது. பாடல் மெட்டுக்கு பாடலாசிரியர் எப்படி தான் எழுதினாரோ? ஆச்சரியம் தான். மேலோட்டமா பாடல் கேட்காமல் ஆழ்ந்து கேளூங்கள் பல விசயங்கள் உங்களூக்கு புரியும்...
படம்: அசோகன்
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி
இசை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
ஓம்காரி நீலி சங்கரி ஈஸ்வரி பார்வதி பகவதி
போட்டியில் என்நாளும் இவனே வெல்லணுமே..ஹே..ஹே
புது மேளம் தண்டை சதங்கை பானைகள் மத்தளம் ஜால்ரா கிங்கிணி
பல தாளம் தக்கிட தகனக தா
கவிதையினால் ஒரு சடுகுடு நடைபெறவே
ஹோய் அம்மா ஹோய்....ஹோய்
சட சட சடவென தமிழ் மழை பொழியணும்
தினம் ஒரு புது வரம் அருளணும் நீ
ஒதுங்கி பதுங்கி அறிவு மயங்கி... சச்சசச்ச
குலுங்கி தடுக்கும் கோடங்கி
அழுகப்போற அறிவு கலங்கி...ஐயே
பாரம மடையா நீ என்னை எதிர்பதுவா
ஒன்றின்மேல் ரெண்டானை கட்டுப்புரளுது...புரளுது
மிரளுது மிரளுது...என்னைப்போல் நீ சொல்லடா
ஹா..அப்பப்பா என் காட்டில் ஒரு துளி இருதுளி
பல துளி பெரு மழை.... என்னைப்போல் நீ சொல்லடா
இருவது குருவியில் அழகியதொரு குருவி நீ ஹம்மா ஹோய் ஹோய்
இருவது வயதினில் கிழவிகள் ஆனவர் எழுபது வயதிலும் குமரிகளோ
இறுக்கி புழிஞ்சு அடிச்சு தொவைக்க வா வா
உனக்கு திறமை இருக்கா
வளச்சு துரத்தி இழுத்து ஒதைக்க வா வா
மறுபடி அடி அடி கெடுபிடி முடிஞ்சு விடும்
தன்னா தன்னனா தனனன்னனா தன்னனனன நா
தன்னா தன்னனா தனனன்னனா தன்னனனன நா
அடி பட்டுப்போகாதே..ஹையோ நீ சாகாதே
மன்னாதி மன்னன் நான்..... மண் தின்னாதே
பேச்செல்லாம் பேசாதே
பொன் சேவல் கோழியைப் பின்னாலே துரத்தும்
கதை சொல்லாட்டா...யேய்
ஹே...யானை வென்றிடு.... சிங்கம் வென்றிடு
என்னை வெல்வது எளிதல்ல
எவனோ ஒருவன் வென்றே ஆகணும்
என்றும் தோத்தவன் இவனல்ல
தலை இருக்க வாலை ஆட்டாதடா... டேய்
தலை கீழாய் நீ நடப்பது முறையல்லடா..... டேய்
ஒரு கை பாப்பேன்........ இரு கை பாப்பேன்
நீயா.... நானா... மோதிப் பாப்பேன்
தடியா.. தடியா... வாடா.... டேய்... அடிமடயா..
ஹ் ஹஹஹ் ஒ....ஹொ...ஹொ...ஹொ
ஓம்காரி நீலி சங்கரி ஈஸ்வரி பார்வதி பகவதி
போட்டியில் என்நாளும் இவனே வெல்லணுமே..ஹே..ஹே
புது மேளம் தண்டை சதங்கை பானைகள் மத்தளம் ஜால்ரா கிங்கிணி
பல தாளம் தக்கிட தகனக தா
கவிதையினால் ஒரு சடுகுடு நடைபெறவே
ஹோய் அம்மா ஹோய்....ஹோய்
சட சட சடவென தமிழ் மழை பொழியணும்
தினம் ஒரு புது வரம் அருளணும் நீ
ஒதுங்கி பதுங்கி அறிவு மயங்கி... சச்சசச்ச
குலுங்கி தடுக்கும் கோடங்கி
அழுகப்போற அறிவு கலங்கி...ஐயே
பாரம மடையா நீ என்னை எதிர்பதுவா..அட.. போ
பூமியை தோண்டி நீ அப்பக்கம் போனாலும்
அவதாரம் எடுத்து நான் நிப்பேன் அங்கே
அவதாரம் எடுத்து நீ அப்பக்கம் வந்தாலும்
வானத்தை துளைத்து நான் மேலே செல்வேன்
கூரை ஏறி கோழி பிடிக்க.... ஏறாதவனும் நீதானே
வானம் கீறி வைகுந்தம்தான் போவேன்... என்பது பொய்தானே
போடா என்னோடு போட்டி இடாதே போ போ போ
வாழ்வா சாவா பார்த்திட வேண்டும் வா வா வா
கடைசி ஆசை எதுவோ சொல்லிப்போடா
காலில் விழுந்து மனிப்பு கேள் மூடா
கலைமகளும் திருமகளும் அருள் புரிவாளே என் பக்கம்
சிவனும் அவன் மகனும் தமிழ் தருவாரே என் பக்கம்
மடமகனே மடமகனே தடிமகனே தடிமகனே
மடையா தடியா மடையா தடியா
தானை தலைவனை தண்ணிலவழகனை
சிறு சிறு பூனைகள் வெல்வது எவ்விதம்
நிலவும் கடலும் உலவும் வரையில்
மன்னன் தலைதான் மகுடம் சூடுமடா
ஓம்காரி நீலி சங்கரி ஈஸ்வரி பார்வதி பகவதி
போட்டியில் என்நாளும் இவனே வெல்லணுமே
ஓம்காரி நீலி சங்கரி ஈஸ்வரி பார்வதி பகவதி
போட்டியில் என்நாளும் இவனே வெல்லணுமே
பாடல் வரிகள் உபயம்: நன்றிங்க ஸ்ரீ, தூள் டாட் காம்