Saturday, July 31, 2010

1049. ஒரே நாள் உனை நான்


என்னுடைய சிறுவயதில் வந்தபடம் இளமை ஊஞ்சலாடுகிறது. மிகப்பெரிய வெற்றிப்படமான அது எல்லா நகரங்களிலும் ஓடிமுடிந்து வற்றாயிருப்பு ராமகிருஷ்ணா டூரிங் தியேட்டருக்கு வந்தபோது கமல், ரஜினி இருவரும் இருந்ததால் ஊரே ஓடிப்போய் பார்த்தது. ஸ்ரீதர் இயக்கிய படம். பாடல்களுக்காகவே பட்டிதொட்டியெல்லாம் ஓடியது. ராமகிருஷ்ணாவில் நாலைந்து தினங்கள் ஓட்டிவிட்டு “இன்றே இப்படம் கடைசி” ஒட்டி எடுத்துவிட்டாலும் பிறகு காட்சிகளுக்கு இடையே கூம்பு ஒலிபெருக்கியில் ஒலிபரப்பப்படும் பாடல்களில் இளமைஊஞ்சலாடுகிறது பாடல்களும் பல வருடங்களுக்கு ஒலித்துக்கொண்டே இருந்தன. இந்தப் பாடலைக் கேட்காத நாளே இல்லை எனலாம். வாணிஜெயராமும் பாலுவும் சேர்ந்து வாலியின் வரிகளை அழகாகப் பாடியிருப்பார்கள். இசை இளையராஜா. கமலும் ஸ்ரீப்ரியாவும் நடித்திருப்பார்கள்.  நாய்க்காலர் சட்டையின் மேல் பொத்தான்களைத் திறந்துவிட்டுக்கொண்டு பெல்பாட்டம் போட்டுக்கொண்டு ஸ்டைலான மைனர் மாதிரி வருவார் கமல்.

படம் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாவிட்டாலும் இன்னும் மனதில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் பாடல் இது.

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இதம் பெறும் சம்பவங்களில் நிதம் நிதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


நெஞ்சத்தில் பேரெழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேரெழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
கற்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் மயக்கமென்ன


ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது



லலலலலலலலலலலலலலலா
லலலலலலலலலலலலலலலா
லலலலலலலலலலலலலலலா
லலலலலலலலலலலலலலலா

பஞ்சணை பாடலுக்கு பல்லவி நீயிருக்க
பஞ்சணை பாடலுக்கு பல்லவி நீயிருக்க
கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசைமுழங்க


ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது


ஊஞ்சலாடுது ஊஞ்சலாடுது ஆஹஹாஹஹா..

Listen to Ilamai Oonjaladugirathu Audio Songs at MusicMazaa.com

1048. ஓரங்கா ஸ்ரீலங்கா


சிங்கார வேலனில் வரும் Eve Teasing வகைப் பாடல் இது. கோவிலுக்கு குட்டைப்பாவாடையணிந்து வரும் குஷ்புவைக் கமல் நண்பர் குழாமோடு துரத்தித் துரத்தி கிண்டலடித்துப்பாடும் பாடல் இது. பாலு குரலில் பல சாகசங்களைச் செய்வார். கமலும் பாலுவும் சேர்ந்து பட்டையைக் கிளப்பியிருக்கும் பாடல் இது.

அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பரைத் தேங்கா
இங்க பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா

அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பரைத் தேங்கா
இங்க பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா


துள்ளிப் பாயாதே வெட்கம்கெட்டு ராங்கா
நான் தாரேண்டி இப்போ டபுள் ஸ்ட்ராங்கா

துள்ளிப் பாயாதே வெட்கம்கெட்டு ராங்கா
நான் தாரேண்டி இப்போ டபுள் ஸ்ட்ராங்கா ஹஹா

அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பரைத் தேங்கா
இங்க பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா
அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பரைத் தேங்கா
இங்க பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா

துள்ளிப் பாயாதே வெட்கம்கெட்டு ராங்கா
நான் தாரேண்டி இப்போ டபுள் ஸ்ட்ராங்கா ஹா
துள்ளிப் பாயாதே வெட்கம்கெட்டு ராங்கா
நான் தாரேண்டி இப்போ டபுள் ஸ்ட்ராங்கா ஆ..


அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பரைத் தேங்கா
இங்க பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா

மூக்கி அரை மூக்கா ஹொய்ங்ஹொய்ங்ஹொய்ங்ஹொய்ங்
முட்டையுள்ள கேக்கா ஹைஹைஹைஹை
மூக்கி அரை மூக்கா முட்டையுள்ள கேக்கா
பாக்கியேதும் கேக்காமல் வந்துவிடு ஷோக்கா
கொண்டைமுடி காக்கா கண்ணுப்பட்டா பாக்கா
கண்டவுடன் ஆவானே கன்னிப்பையன் வீக்கா

இது மலையாளக் கப்பக் கிழங்கா ஓய்
இல்ல மயிலாப்பூர் வத்தக் குழம்பா
இது பம்பாயி பூரிக் கிழங்கா ஹா....
இல்ல பட்டிக்காட்டு கோழிக்குழம்பா
பரிக்காத பப்பாளிக்கா பெங்களூரு கத்திரிக்கா
கண்ணுல பட்டது நெஞ்சுல சுட்டது
கொண்ட்டலகொண்ட்டலக்கா

அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பரைத் தேங்கா
இங்க பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா

பொம்பளைக்கு வேணும் ஹாஹாஹாஹா
அச்சம் மடம் நாணம் ஹேஹேஹேஹே
பொம்பளைக்கு வேணும் அச்சம் மடம் நாணம் 
இல்லையென்று போனாலே வம்பிழுக்கத் தோணும்

ஹ தினதினா ஹ தினதினா

வெத்திலையப் போட்டு கொழப்புகிற ஆச்சி
நல்ல முடி(வு) சொல்லாம நாளும் வீணாப் போச்சு
ஒரு பொண்ணானா கட்டுப்படணும்
புத்தி சொன்னாக்க மட்டுப்படணும்
அப்படி இல்லேன்னா கஷ்டப்படணும்
இல்லே பின்னாடி நஷ்டப்படணும்

ஆணெல்லாம் ஆணும் இல்லே
பொண்ணெல்லாம் பெண்ணும் இல்லே
கலியுகத்துல தலைவலிக்குது
கொண்ட்டலகொண்ட்டலக்கா

அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பரைத் தேங்கா
இங்க பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா

அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பரைத் தேங்கா
இங்க பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா

துள்ளிப் பாயாதே வெட்கம்கெட்டு ராங்கா ஹா
நான் தாரேண்டி இப்போ டபுள் ஸ்ட்ராங்கா ஹூ
துள்ளிப் பாயாதே வெட்கம்கெட்டு ராங்கா
நான் தாரேண்டி இப்போ டபுள் ஸ்ட்ராங்கா 
துள்ளிப் பாயாதே வெட்கம்கெட்டு ராங்கா
நான் தாரேண்டி இப்போ டபுள் ஸ்ட்ராங்கா 

அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பரைத் தேங்கா
இங்க பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா
முத்தின மாங்கா.. ஹாஹாஹாஹா..


1047. வரச் சொல்லி இந்நேரம்


1992 இல் வெளிவந்த சிங்காரவேலன் படம் நெடுகச் சிரிக்க வைத்தாலும் சோகமான காட்சிகளும் சிங்காரவேலனில் உண்டு. புதுச்சேரி கச்சேரி என்று ஓராள்இசைக்கச்சேரி செய்து குஷ்புவின் மனதைக் கமல் கவர்ந்ததும் மறுநாள் வீட்டுக்கு அவரை அழைப்பார். அதற்குள் கமல் அத்தைமகன்தான் என்ற உண்மையை குஷ்புவிடம் மற்றவர்கள் போட்டு உடைத்துவிட தன்னை ஏமாற்றிவிட்டார் என்று கோபித்துக்கொண்டு வீட்டுக்கு வந்த கமலை அவமானப்படுத்தி நிச்சயதார்த்த வைபத்தை ரத்து செய்துவிடுவார் குஷ்பு. அத்தை மகளாகிய குஷ்புவைக் கண்டுபிடித்து, காதலித்து, கல்யாணம் செய்வதையே லட்சியமாகக் கொண்டு சென்னைக்கு வந்த சிங்காரவேலன் கமலுக்கு அது பலத்த அதிர்ச்சியாக, சோகமாக அதே பாடலை (ஆமாம். மழையில் நனைந்துகொண்டுதான்) பாடுவார். கமல் அணிந்திருக்கும் வாத்தியங்களில் கோபத்துடன் குஷ்பு பிடுங்கி உடைத்து எறிந்துவிட, மிச்சமிருக்கும் வாத்தியங்களில் ஒன்றான வயலினை வைத்து பாடலைத் துவக்கியிருப்பது அருமையான காட்சி உத்தி. இயக்குநர் ஆர்.வீ.உதயகுமாருப் பாராட்டுகள்.

இந்தப் பாடலின் ஆரம்பத்தில் இளையராஜா அமைத்திருக்கும் வயலினின் இசையே சோகத்தை நம் மனதில் கொண்டுவந்துவிடும். அதோடு பாலுவும் உணர்வுப் பூர்வமாகப் பாட, கமலின் அற்புதமான நடிப்பும் சேர்ந்துகொண்டு நம்மையும் உணர்ச்சிவசப்படச் செய்துவிடும் அருமையான பாடல் இது.

வரச்சொல்லி இந்நேரம் வனக்குயில் அழைத்தது வந்தேன்
குறை சொல்லி இப்போத விரட்டிடத் தெருவினில் நின்றேன்
அழுகையைக் கண்ணோட அடக்கிட நினைக்கையில் நானும்
எனக்கெனக் கண்ணீரை வடிக்குது வடிக்குது வானம்
உனை நினைத்து உயிர் துடித்து தினம்தினம் நான் இசை படித்தேன்
உனதழகை விழியிரண்டால் அழகழகாய்ச் சிலைவடித்தேன்
களங்கமில்லாத காதல் பிழைகளில்லாத பாடல்
இடையிலுண்டான ஊடல் நிஜங்களாகாது கானல்
வார்த்தை பொய்யாகும் வாழ்க்கை பொய்யாகும ் காதல் பொய்யாவதேது

புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்கப் பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்

புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்கப் பார்ட்டி ஒண்ணு புடிச்...ஹ..
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்..


1046. புதுச்சேரி கச்சேரி


சிங்காரவேலனில் எல்லாப் பாடல்களுமே அருமையான பாடல்கள். கமலே அட்டகாசமாக போட்டுவைத்தக் காதல் திட்டம் பாடலை - உச்ச ஸ்தாயியில் பாடியிருக்கிறார். ஆரம்ப சொன்னபடி கேளு பாடலும் அவர் பாடியதுதான். பாலு வழக்கம்போலச் சிலபாடல்களில் கலக்கியிருக்கிறார். போன பதிவில் அற்புதமான டூயட் பாடலைப் பார்த்தோம்.

குஷ்புவின் மனதில் எப்படியாவது இடம்பிடித்துவிடவேண்டும் என்று கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து படாதபாடு படுவார் கமல். அவருக்கு இசையில் நாட்டமிருப்பதை உணவு விடுதியில் புல்லாங்குழல் கச்சேரிக்கு கைதட்டுவதிலிருந்து உணர்ந்து மறுநாள் அவரைக் கவர்வதற்காக One Man Orchestra வாக உடல்முழுதும் இசைவாத்தியங்களைக் கட்டிக்கொண்டு வருவார். மற்ற பாடல்கள் போன்று வெறுமனே வாயசைத்து நடனமாடுவது மட்டுமல்லாது இசைக்கும் சேர்த்து வாத்தியங்களை வாசிப்பதுபோல நடிக்க வேண்டும். கேட்க எளிதாக இருந்தாலும் நடிப்பவதற்கு ரொம்பவும் சவால் தரும் பாடல் இது.  கமலைவிட்டால் வேறு யாரால் இந்தப் பாட்டுக்கு அவ்வளவு இயல்பாக நடிக்க முடியும். கலக்கியிருப்பார் மனுஷன். பாலுவின் கம்பீரமான குரல், பசுமையான பிரதேசக் காட்சிகள் (ஊட்டி!), குழந்தைகள், குஷ்பு, கமலின் இயல்பான நடிப்பு என்று அழகான பாடல் இது.

பம்சிக்கு பம்சிக்கு பம்சபம்பம்ப பம்சிக்கு பம்சிக்கு பம்சபம்
பம்சிக்கு பம்சிக்கு பம்சபம்பம்ப பம்சிக்கு பம்சிக்கு பம்சபம்

கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே
கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே
ம்..
கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே Very Good
கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே பாடுங்கோ
கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே
கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே

புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்

ஏ பாக்கும் பாப்பாக்கு முத்துப்போல் புல்லாக்கு
கேக்கும் மத்தாப்பு மேலாக்கு
புதுக்காத்துக்கும் பாட்டுக்கும் கூத்துக்கள் போடுது தகிடதத்தித்தோம்

புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்

ஏ ஏ.... பம்சிக்கு பம்சிக்கு பம்சபம்பம்ப பம்சிக்கு பம்சிக்கு பம்சபம்
பம்சிக்கு பம்சிக்கு பம்சபம்பம்ப பம்சிக்கு பம்சிக்கு பம்சபம்

பொறக்கையில் என்னோடு பொறந்தது வளர்ந்தது பாட்டு
நடக்கையில் என்னோடு நடந்தது கலந்தது பீட்டு
இருக்குது கிட்டாரு ட்ரம்ஸூகள் ட்ரம்பெட்டு ஃப்ளூட்டு
இவைகளை ஒன்றாக இசைப்பவன் எவனென்று காட்டு

விதவிதமா வகைவகையா சுகம்சுகமா சுரம் படிப்பேன்
இமயம் முதல் குமரிவரை இதயங்களில் இடம் பிடிப்பேன்
குயிலின் சங்கீதம் கூக்கூ
கிளியின் சங்கீதம் கீக்கீ
எனது சங்கீதம் ஸா..பா..
இதுக்குக் கிடையாது தாப்பா
குமரியானாலும் கிழவியானாலும் நின்று காதாரக் கேப்பா

புதுச்சேரி கச்சேரி 
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்

கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே
கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே ஹஹ்ஹா

மிருதங்கம் சூடேற அடிக்கடி கொடுக்கணும் டேக்கா
தரிகிடதோம் ததாம் தகிட
மனுஷங்க முன்னேற அடிக்கடி புடிக்கணும் காக்கா
வெவரங்க சொல்லாம விஷயத்தை முடிக்கணும் நேக்கா
முடிஞ்சதும் எல்லாரும் புகழ்ந்திட நடக்கணும் சோக்கா


சரக்கிருக்கு முறுக்கிருக்கு எனக்கெதுக்கு மனக் கவலை
அறிஞ்சுக்கணும் புரிஞ்சுக்கணும் தெரிஞ்சுக்கணும் மழைத்தவளை
காலம் என்னோட காலம் நேரம் என்னோட நேரம்
கல்லும் காயாக மாறும் முள்ளும் பூவாக மலரும்
நாளும் பார்த்தாச்சு ஆளும் பார்த்தாச்சு
ஜோடி எப்போது சேரும்

புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்


ஏ பாக்கும் பாப்பாக்கு முத்துப்போல் புல்லாக்கு
கேக்கும் மத்தாப்பு மேலாக்கு
புதுக்காத்துக்கும் பாட்டுக்கும் கூத்துக்கள் போடுது தகிடதத்தித்தோம்

புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே

ஏ ஏ.... பம்சிக்கு பம்சிக்கு பம்சபம்பம்ப பம்சிக்கு பம்சிக்கு பம்சபம்
அ.... பம்சிக்கு பம்சிக்கு பம்சபம்பம்ப பம்சிக்கு பம்சிக்கு பம்சபம்


1045. இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்?



கமல்ஹாஸனின் படங்கள் மதுரையில் எப்போதும் A.A. ரோட்டிலிருக்கும் - மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரிலிருந்து திண்டுக்கல் போகும் ரோட்டிற்கு பக்கத்து ரோடு - ஆரப்பாளையம் அருகில் - மதி தியேட்டரில்தான் வெளியாகும். என் நண்பன் மால் (முழுப் பெயர்: சாலைச் சிவமால்) அதே ரோட்டில் பலசரக்குக் கடை பரம்பரையாக நடத்திக்கொண்டிருந்தார்கள். முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கி வைத்திருந்தாலும் திரையை மறைத்து விழும் பேப்பர் துண்டுகள், தீபாராதனை, ஓயாத விசில், இரைச்சல் இவற்றையெல்லாம் தாண்டி படம் பார்ப்பது இயலாது என்பதால் எப்போதாவதுதான் முதல்காட்சிக்குப் போவேன். பெரும்பாலும் படம் வெளியாகி ஒருமாதம் கழித்துத்தான் பார்ப்பது வழக்கம்.

சிங்காரவேலன் வந்து ஆரம்ப ஆரவாரங்கள் அடங்கியதும் ஒரு மாதம் கழித்துப் போனேன். நகைச்சுவைப் படங்கள் கமலுக்கு அல்வா சாப்பிடுவதுமாதிரி. சிங்காரவேலனும் விதிவிலக்கல்ல. கவுண்டமணி, மைக்கேல் ஜாக்ஸன் தங்கச்சி வடிவேலு, மனோ என்று கும்பல்சேர்ந்து அவர் அடிக்கும் அட்டகாசம் தியேட்டரையே ரெண்டு படுத்தியது. படம் ஆரம்பித்ததும் சிரிக்க ஆரம்பித்தவன் ஒரு கட்டத்தில் நிறுத்த முடியாமல் இருக்கையிலிருந்து எழுந்து வெளியே ஓடிவந்து சிரித்துமுடித்துவிட்டு உள்ளே சென்று அமர்ந்தேன். இப்படியே பலமுறை நடந்தது.

வெண்கலக்கடையில் யானை புகுந்த கதைமாதிரி பல காட்சிகள் வயிறுவலிக்கச் சிரிக்கவைப்பவை. நகைச்சுவை என்றால் வயதுவந்தவர்களுக்கான நகைச்சுவை. ஜட்டி மட்டும் போட்டிருக்கும் சிறுமியின் படத்தை கணிணியில் காட்டி பத்து வயசில் இப்படி... பதினைந்து வயதில் இப்படி என்று குடுமிவைத்த தாத்தா சொல்லிக்கொண்டே வர கூட்டாளிகளின் ஜொள்ளுப் பார்வையைக் கவனிக்கும் கமல் சட்டென்று “சார். கொஞ்சம் ட்ரெஸ்ஸூ போட்டு காமிங்க சார்” என்பார் பதட்டமாக. பிறகு குமரியாக புஷ்டியை.... ஸாரி.. குஷ்புவைக் காட்ட... குஷ்பு ஸீனில் எண்ட்ரி ஆவார். அந்தத் தாத்தாவை கவுண்டர் வழுக்கை மண்டையில் லொட் என்று குட்டி கலாய்ப்பார்.

கிராமத்திலிருந்து புறப்பட்டு கருவாட்டுக்கூடையோடு மனோவைத் தேடி சென்னைக்கு வந்திறங்கும் கமலை ஆட்டோக்காரர்கள் போட்டி போட்டு மொய்ப்பதும், கருவாட்டு நாற்றம் தாங்க முடியாமல் எல்லாரும் தலைதெறிக்க ஓடிவிட கடைசியாக ஒருவர் மட்டும் வேறு வழியில்லாமல் கமலையும் கருவாட்டுக்கூடைகளையும் ஏற்றிக்கொண்டு மூக்கை கர்ச்சீப்பால் மூடிக்கொண்டு ஓட்டும் காட்சிகள் மகா ரகளை. கவுண்டர் சொல்வது “மனோ யார் வந்திருக்கா பாரு. கருவாடு வந்திருக்கு”!!!

கமல் குஷ்புவை Eve Teasing செய்துகொண்டே இருப்பார். அப்புறம் காதலாகி கசிந்துருகி எல்லாம் நிகழ்ந்தாலும் பிரதானமாக படம் நெடுகிலும் விரவியிருப்பது நகைச்சுவையே.

உடம்பு முழுவதும் கட்டுகள் போட்டு மருத்துவ மனையில் கமல் படுத்திருக்க அதைச் சாக்காக வைத்து மருத்துவர் வெண்ணிற ஆடை மூர்த்தி குஷ்புவிடம் பண வசூல் வேட்டையாடுவதைப் பார்த்து “என்ன இப்படி கற கறன்னு கறக்கிறாரே” என்று கமல் பொருமுவார். முகமூடியை கழட்டி வைத்து பேசிக்கொண்டிருக்கையில் குஷ்பு வருவது தெரிய வர நர்ஸ்ஸிடம் “சீக்கிரம் மூடுங்க” என அவர் நெஞ்சின் குறுக்காகக் கைகளை வைத்துக்கொள்ள “அட. மொகத்தை மூடுங்க” என்பார். நர்ஸ் இப்போது முகத்தையே மூடிக்கொள்ள “அய்யோ என் மொகத்த மூடுங்க. என்ன ஆஸ்பத்திரிடா இது” என்று நொந்து போவார் கமல். சிரித்துச் சிரித்து வயிற்றுவலியே வந்துவிடும்.

அக்காட்சியின் இறுதியில் கமலை முத்தமழையால் குஷ்பு நனைத்துக்கொண்டேயிருக்க - அப்படியே ஸ்ரெட்சர் ஓடி பாடலுக்கான செட்டில் நுழைய பிரம்மாண்ட சிலந்தி வலையில் சிலந்தி மனிதன் போல ஆடையணிந்து கமல் பறந்து சென்று ஒட்டிக்கொள்வார். பாலுவும் ஜானகியும் மகா இனிமையாக இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள். கமலின் காதல் சேஷ்டைகள் எல்லாமே எதற்கு அவரைக் காதல் இளவரசன் என்று சொல்கிறோம் என்பதை நிரூபிப்பன. காதல் காட்சிகளில் இயல்பாக நடிப்பதில் அவரை அடித்துக்கொள்ள இன்றுவரை ஆளில்லை என்பதுதான் நிஜம். (சூர்யா, விஜய், அஜீத் இவர்களெல்லாம்  கதாநாயகிகளை கன்னத்தில் முகர்ந்து விட்டு விலகிவிடுவார்கள்.)

பாலுவும் கமலும் எந்த அளவு ஈருடல் ஓருயிராக இருப்பவர்கள் என்பதற்கு இப்பாடலும் அத்தாட்சி. பாடலின் ஆரம்ப பல்லவியே சாட்சி.  “சிங்கார வேலாஆஆஆஆ” என்று பாலு முடிப்பதை கமல் எப்படி நடித்திருக்கிறார் என்று பார்த்தால் புரியும. காதல் இளவரசன் அல்ல - காதல் ராட்சஸன்!

இளையராஜாவின் இனிமையான இசை, மெட்டு, காதில் தேனாகப் பாயும் குரல்கள், கண்களுக்குக் குளிர்ச்சியான படமாக்கம் என - நம்மைக் கனவுலகில் சஞ்சரிக்கச் செய்யும் பாட்டு இது. இனி பாடல்.

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் 
முன்பே... முன்பே... 
கைகள் தானாய் கோர்த்தாய் 
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய் 
இன்பம் இன்பம் சிங்கார லீலா...

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் 
முன்பே... முன்பே... 

பாடி வரும் வான் மதியே 
பார்வைகளின் பூம்பனியே
தேவ சுக தேன் கனியே 
மோக பரிபூரணியே
பூவோடு தான் சேர இளங் காற்று போராடும் போது
சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு...
புதுப்புது விடுகதை தொடத் தொட தொடர்கிறதே....
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் 
அன்பே... அன்பே...
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் 
முன்பே... முன்பே...
உன்னை சேர்த்தாள் பாவை இன்னும் இங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்கார வேலா....
தேன்கள் இதை தூதுவிடும் 
நாயகனே மாயவனே
நூலிடையை ஏங்க விடும் 
வானமுத சாதனனே
நீ தானே நான் பாடும் சுகமான ஆகாச வாணி
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்காரத் தேனி
தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திடவா

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் 
முன்பே... முன்பே... 
கைகள் தானாய் கோர்த்தாய் 
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய் 
இன்பம் இன்பம் சிங்கார லீலா...
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் 
முன்பே... முன்பே... அன்பே... 

1044- இள வாலிபனே வர வேனுமென....

S.P.Sailaja










படம் :   அபூர்வ சக்தி 369 (Aboorva Sakthi 369)
பாடல் :   இள வாலிபனே வர வேனுமென ( Ila Valibane )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம், S.P.சைலஜா , ஜிக்கி
இசை :   இளையராஜா
வருடம் : 1991
இயக்குநர் : சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
நடிகர்கள் : Bala krishna, Mohini


பாடலின் வரிகளுக்கேற்ப நம் பாலுஜியும் இன்னும் இள வாலிபனாகத்தான் இருக்கிறார்..
அபூர்வ சக்தி 369 என்ற படத்தில் நம் பாலு ஐந்து பாடல்கள் பாடி இருக்கிறார்..
இந்த பாடலை ஜிக்கி மற்றும் S.P.சைலஜாவுடன் இணைந்து என்ன அழகாக பாடி இருக்கிறார் என்று கேட்கும் போது புரியும்.


// இன்பத்தின் ராணி சுவைத்திடும் சேனி..மோகினியே..
ஒரு முத்தம் தந்தால் ஓடி விடும்... உந்தன் கோபமே... //

என்ற வரிகளை  பாடுவதற்கு பாலு மட்டுமே நிகர்.



இது என்னுடைய பாடும் நிலா பாலு தளத்திற்கான முதல் பதிவு ....
நம் பாலுஜியை   இள வாலிபனாக குறிப்பிட்டதற்கு மிகுந்த பெருமை அடைகிறேன்...
இந்த வாய்ப்பை அளித்த சுந்தர் சார் அவர்களுக்கும் ஆதரித்த கோவை ரவி அண்ணாவிற்கும் மிக்க நன்றி..  




Ila_Valibane.mp3 | Musicians Available


ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ......
இள வாலிபனே வர வேனுமென
கிளி கொஞ்சி பாடுதே...அ அ ஆஆ
வாலிபனே புது பானியிலே...
மது தந்த மயக்கமோ...
கண்னளவோ..சரசத்தின் வெண்ணிலவோ...
சந்திரனோ..சாகச இந்திரனோ...
பூவிதழின் புன்னகையில் மோகமூட்டம் முடியுமோ...
வாலிபனே வர வேனுமென
கிளி கொஞ்சி பாடுதே...அ அ ஆஆ
வாலிபனே புது பானியிலே...
மது தந்த மயக்கமோ...


சரணம் 1

ஆவலினாலே அழைத்திடும் சென்னை
அழைத்திடுவார்...அ அ ஆஆ..ஒ ஒ ஓஒ...
கோகுல கண்ணன் குழலிசை போல..இசைத்திடுவார்...
இரு கனிகளையே சுவைத்திடவே... வாராய் கண்ணாலா..
கொடி இடையினிலே முகம் பதித்தே...வாராய் மணாளா..
இசையோடு இனிதான இன்ப தாகம் தீர்க்க வா... வா...
வாலிபனே வர வேனுமென
கிளி கொஞ்சி பாடுதே...அ அ ஆஆ
வாலிபனே புது பானியிலே...
மது தந்த மயக்கமோ...
கண்னளவோ..சரசத்தின் வெண்ணிலவோ...
சந்திரனோ..சாகச இந்திரனோ...
பூவிதழின் புன்னகையில் மோகமூட்டம் முடியுமோ...
வாலிபனே வர வேனுமென
கிளி கொஞ்சி பாடுதே...அ அ ஆஆ
வாலிபனே புது பானியிலே...
மது தந்த மயக்கமோ...


சரணம் 2

பகலின் கோபம் இரவுக்கு லாபம்...
செல்லக் கிளியே..அ அ ஆஆ..ஒ ஒ ஓஒ...
இன்பத்தின் ராணி சுவைத்திடும் சேனி..மோகினியே..
ஒரு முத்தம் தந்தால் ஓடி விடும்... உந்தன் கோபமே...
இந்த சோகத்திலும் உன்னழகை...நான் ரசித்தேனே...
உறவாடிட வர வேண்டும் நீஇன்பம் தேடும் நேரம் வா..வா..
வாலிபனே வர வேனுமென
கிளி கொஞ்சி பாடுதே...அ அ ஆஆ
தேனிசையே வன தேவதையே..
மலர் மஞ்சம் தேடுதோ...
கண்னளவோ..சரசத்தின் வெண்ணிலவோ...
சந்திரன் நான்..சாகச இந்திரன் நான்...
பூவிதழின் புன்னகையில் மோகமூட்டம் முடியுமே...
தேனிசையே வர வேனுமென
மலர் மஞ்சம் தேடுதோ...அ அ ஆஆ
தேனிசையே வர வேனுமென
மலர் மஞ்சம் தேடுதோ


Friday, July 30, 2010

1043 என்ன டப்பா பார்ட்டின்னு



//ஏய் ஓசி பீசா டான்ஸ் தான்.. நான் போட்டுக்கவேன் ஜீன்ஸ் தான்.. ஏய் ஓசி பீசா டான்ஸ் தான்.. நான் போட்டுக்கவேன் ஜீன்ஸ் தான்.. வேண்டா காத்தாடி தான்.. நான் பறந்தடிக்கும் கூத்தாடி தான்.. ஓய் வேணாம் காத்தாடி.. பறந்தடிக்கும் கூத்தாடி.. பம்பு சிக்கான் பம்பு சிக்கான்.. பம்பு அடிக்கும் ஜின்கு சிக்கான்.. டொய்யா டொக்கா டொய்யா ஒய்//

படம்: நம்ம அண்ணாச்சி
பாடகர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா
நடிகர்கள்:சரத்குமார், ராதிகா
இசை:தேவா
வருடம்:1999

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: நம்ம அண்ணாச்சி

என்ன டப்பா பார்ட்டின்னு
தப்பா நினைக்காதே குறத்தி
நான் தாம்பரத்தில் படுத்தேன்
சிதம்பரத்தில் சமைஞ்சா ஒருத்தி

என்ன கில்பா பார்ட்டின்னு
கல்பா அடிக்காதே குறவா
நான் சூளமேட்டில் நடந்தா
காசி மேடு மணக்கும் பொதுவா

ஏய் ஓசி பீசா டான்ஸ் தான்
நான் போட்டுக்கவேன் ஜீன்ஸ் தான்
ஏய் ஓசி பீசா டான்ஸ் தான்
நான் போட்டுக்கவேன் ஜீன்ஸ் தான்
வேண்டா காத்தாடி தான்
நான் பறந்தடிக்கும் கூத்தாடி தான்
ஓய் வேணாம் காத்தாடி
பறந்தடிக்கும் கூத்தாடி
பம்பு சிக்கான் பம்பு சிக்கான்
பம்பு அடிக்கும் ஜின்கு சிக்கான்
டொய்யா டொக்கா டொய்யா ஒய்

என்ன டப்பா பார்ட்டின்னு
தப்பா நினைக்காதே குறத்தி

என்ன கில்பா பார்ட்டின்னு
கல்பா அடிக்காதே குறவா

மாயவரம் சந்தையிலே டெண்ட் போட்டேன்
மாசி மாச குளிருல உன்னப் பார்த்தேன்

ஜிம்ப் ஜிம்பா ஜிம்ப் ஜிம்பா
ஜிம்ப் ஜிம்பா ஜிம்ப் ஜிம்பா

தேவக்கோட்டை ரோட்டு மேல பாயப்போட்டேன்
அட வேட்டி கொஞ்சம் ஈரமாச்சு காயப்போட்டேன்

ஜிம்ப் ஜிம்பா ஜிம்ப் ஜிம்பா
ஜிம்ப் ஜிம்பா ஜிம்ப் ஜிம்பா

தொடவா ஆஆஆஆஆஆஆ..
அட தூத்துக்டி சாத்துகுடி தொப்புளூல
நான் பொம்பரமும் விடவா ஓஓய் ஹேய்

அட படவா நான் பட்டுக்கோட்டை குத்துவிட்டா
பட்டுன்னு புட்டுகிடும் கடவா
நீ வீணா வெடைக்காதே
அது தானா கிடைக்காதே
அட தொட்டப்பெட்டா சந்தையில
தொட்டுக் கொள்ள குட்டி உண்டு
போ போ அங்கே நீ போ

என்ன டப்பா பார்ட்டின்னு
தப்பா நினைக்காதே குறத்தி ஏய்.. ஹஹ

என்ன கில்பா பார்ட்டின்னு
கல்பா அடிக்காதே குறவா ஹொய் ஹொய்

டியாலோ டியால டியாலோ
டியாலோ டியால டியாலோ
டியாலடி டியாலோ
டியாலடி டியாலோ
டியாலக்கடி லங்கடிலங்கடி லோ

திண்டிவனம் ஜங்சனிலே நின்னு சிரிச்சா
உன்னை தேடி வரும் கொத்து கறி முட்டை புரோட்டா

ஜிம்ப்க்சிம்ப ஜிம்க்சிம்பா
ஜிம்ப்க்சிம்ப ஜிம்க்சிம்பா

செங்கல் பட்டு பஸ்டேண்ட் வேர்த்து இருக்கும்
என்னை சைட்டு அடிக்க கோடி சனம் காத்து கிடக்கும்

ஜிம்ப்க்சிம்ப ஜிம்க்சிம்பா
ஜிம்ப்க்சிம்ப ஜிம்க்சிம்பா

ஏய் குறவா.....
நான் கொட்டப்பாக்கு
வெட்டுவதில். கெட்டிக்காரி தொலைவா

அடி குறத்தி....ஏஏஏஏஏஏய்
நான் கொண்டையில முள்ளு வெச்சு
ரெண்டு பக்கம் குத்தும்ன்னா கெளுத்தி

அடி லாலா பெருங்காயம்
ஒடைச்சா தானா வரும் சாயம்
அட கொம்பில தேனிருக்கு
கொஞ்சுக்கத் தான் நீ எனக்கு
வா.. வா,,, நீ இங்கே வா...

நீ டப்பா பார்ட்டி இல்ல
இப்ப நான் புரிஞ்சிகிட்டேன் குறவா

ஒரு அச்சாரம் வெச்சுக்கிறேன்
மச்சானும் புரிச்சிக்கிட்டு மெதுவா

ஏய் ஓசி பீசா டான்ஸ் தான்
நம்ம போட்டுக்குவோம் ஜீன்ஸ் தான்
ஏய் ஓசி பீசா டான்ஸ் தான்
நம்ம போட்டுக்குவோம் ஜீன்ஸ் தான்
வேண்டா காத்தாடி தான்
நாம பறந்தடிக்கும் கூத்தாடி தான்
ஓய் வேணாம் காத்தாடி
பறந்தடிக்கும் கூத்தாடி
பம்பு சிக்கான் பம்பு சிக்கான்
பம்பு அடிக்கும் ஜின்யா சிக்கான்
டோலடக்கா டொய்யடக்காடோஓஓ

Thursday, July 29, 2010

1042 நீலகிரி மலை ஓரத்திலே



//நீ மச்சமுள்ள ஆளு... நான் கண்டு புடிச்சேன்.. நீ உச்சி மலைத் தேனு.. ஆ ஊத்திக் குடிச்சேன்.. அசத்துற என்னை ரொம்ப உசுப்புற... உலுக்குற என் மனச குலுக்குற//

படம்: நம்ம அண்ணாச்சி
பாடகர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா
நடிகர்கள்:சரத்குமார், ராதிகா
இசை:தேவா
வருடம்:1999

Get this widget | Track details | eSnips Social DNA


நீலகிரி மலை ஓரத்திலே
ஒரு செவ்வந்தி மொட்டு
துடிக்குது சிக்குன்னு கட்டு

ஏலகிரி மலை சாரலிலே
சின்ன முத்திரையிட்டு
அடிச்சிடும் மன்மதன் மெட்டு

நீ மச்சமுள்ள் ஆளு
நான் கண்டு புடிச்சேன்
நீ உச்சி மலைத் தேனு
ஆ ஊத்திக் குடிச்சேன்

அசத்துற என்னை ரொம்ப உசுப்புற

உலுக்குற என் மனச குலுக்குற

நீலகிரி மலை ஓரத்திலே
ஒரு செவ்வந்தி மொட்டு
துடிக்குது சிக்குன்னு கட்டு

நீதான் கைய வெச்சா கிளூ கிளூப்பு கூட
நானும் கண்ணால் இங்கே கரகம் போல ஆட

நீதான் கிட்ட வந்தா சுறுசுறுப்பு ஏற
ஆசை குத்தாலத்து அருவி போல ஓட

ஓயாமே பேசிப் பேசி மாமா - நீ
உணர்ச்சிகளை தூண்டிப்பாக்கலாமா

வாயாடி லாபமென்ன வாம்மா - நீ
விசயங்களை ஆறப்போடலாமா

வெச்சது யாரு சொக்குப்பொடி
என்னவோ பன்னுதடி

சொன்னதை கேளூ கண்ணுமணி
சொந்தமும் பந்தமும் வந்ததடி

சொல்லிக்கொடு சொல்லச் சொல்ல கத்துக்கறேன்

விட்டுக்கொடு மிச்சம் மீதி தொட்டுக்கறேன்

நீலகிரி மலை ஓரத்திலே
ஒரு செவ்வந்தி மொட்டு
துடிக்குது சிக்குன்னு கட்டு

மேலே கொண்டையில செருகி வெச்சப் பூவு
மாமன க என்னைக்கண்டு அடிக்குதடி டாவு

ஓஒ கீழே கட்டி வெச்ச?? கொலுசு சத்தம் கேளு
கேட்டா கிக்கு வரும் கிளப்பிடு நீ தூளூ

வாடாத வாழைத்தாரு பார்த்து - நான்
வளைக்கட்டுமா மேலும் கீழும் சேர்த்து

நீதானா ஈரவாடைக் காத்து - நீ
நெருங்கி விடத்தான் ஏங்குது இந்த நாத்து

என்னடி வேணும் சின்னக்குட்டி எங்கிட்ட வாங்கிக்கடி

என்னத்த நானும் சொல்லுறது எப்பவும் இப்படி கட்டுப்பிடி

முக்கனியாய் கொட்டி வெச்ச சக்கரையே

கொட்டியது அள்ளிக்காமல் நிக்குறயே

நீலகிரி மலை ஓரத்திலே
ஒரு செவ்வந்தி மொட்டு
துடிக்குது சிக்குன்னு கட்டு

ஏலகிரி மலை சாரலிலே
சின்ன முத்திரையிட்டு
அடிச்சிடும் மன்மதன் மெட்டு

நீ மச்சமுள்ள ஆளு
நான் கண்டு புடிச்சேன்

நீ உச்சி மலைத் தேனு
ஆ ஊத்திக் குடிச்சேன்

அசத்துற என்னை ரொம்ப உசுப்புற

உலுக்குற என் மனச குலுக்குற

நீலகிரி மலை ஓரத்திலே
ஒரு செவ்வந்தி மொட்டு
துடிக்குது சிக்குன்னு கட்டு

Wednesday, July 28, 2010

1041. வானம் தொட்டுப் போனா


அருமையான தனிப் பாடலை பாலு அற்புதமாகப் பாடியிருக்கிறார். தேவர் மகனில். போற்றிப் பாடடி பெண்ணே என்ற உற்சாகப் பாடலே சோகமயமாக ஒலிக்கிறது.

வானம் தொட்டுப் போனா
மானமுள்ள சாமி


வானம் தொட்டுப் போனா
மானமுள்ள சாமி 


தேம்புதய்யா பாவம்
தேவர்களின் பூமி
பட்டத்திற்கு வேறு
சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு
மாற்று உண்டா கூறு

திருந்தாமப் போச்சே
ஊரு சனந்தான்
தத்தளிச்சு வாழுதய்யா
ஏழை இனம்தான்

போற்றிப் பாடடி பெண்ணே
தேவர் காலடி மண்ணே

வெட்டருவா தாங்கி
வீசுகிற ஊரில்


வெட்டருவா தாங்கி
வீசுகிற ஊரில்


வெள்ளைக் கொடி தூக்கி
வந்தவனும் நீயே
நல்ல வழி நீதான்
சொல்லி என்ன லாபம்
சொன்னவனைத் தானே
சூழ்ந்ததின்று பாவம்

கலங்காதே ராசா
காலம் வரட்டும்
நள்ளிரவு போனபின்னே
வெள்ளி மொளைக்கும்


போற்றிப் பாடடி பெண்ணே
தேவர் காலடி மண்ணே


தெக்கு திசை ஆண்ட
மன்னரினம் தான்
முக்குலத்தைச் சேந்த
தேவர் மகன்தான் ஹோய்


போற்றிப் பாடடி பெண்ணே
தேவர் காலடி மண்ணே



Get Your Own Hindi Songs Player at Music Plugin

1040. சாந்துப் பொட்டு

“அடப்பாவி - இந்தப் படத்தோட பாட்டுங்கள இன்னும் பதியவே இல்லையா? இது கொஞ்சமாவது அடுக்குமா” என்று என்னை நானே தலையில் குட்டிக்கொண்டது தேவர் மகன் பாடல்களை இதுவரை (எப்படியோ) பதியாமல் போனதற்காக.


என்ன மாதிரியான படம்!

ஷங்கருக்கு “சிவாஜி” என்று பிரம்மாண்டமாகப் படம் எடுக்க கோடிகோடியாய் செலவழிக்க வேண்டியிருந்தது. (அது சரி - அந்தப் படத்தில் பிரம்மாண்டம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து). ஆனால் கோடிகள் தேவையில்லாத தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்டம் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி அவர்கள். முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டமாதிரி - சிவாஜி நடித்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த படங்கள் முதல் மரியாதையும் தேவர் மகனும். இரண்டையும் ஒப்பிட்டால் தேவர் மகனில் அவரது நடிப்பை முதல் மரியாதை என்ன வேறு எந்தப் படத்தோடும் ஒப்பிடவே முடியாது.

கமல், சிவாஜி என்ற நிகரற்ற இரு பெரும் கலைஞர்களை வெள்ளித்திரையில் பார்த்த அந்த அனுபவத்தை எவ்வளவு எழுதினாலும் விவரித்துவிடவே முடியாது. உடல் மொழி, வசனம், நடிப்பு என்று எல்லா விஷயங்களிலும் காட்சிக்குக் காட்சி இருவரும் ஒரு ஒத்திசைவுடன் அவரவர் பாத்திரங்களை வாழ்ந்து காட்டியிருந்தார்கள் தேவர் மகனில்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லி சிலாகிக்க எத்தனையோ காட்சிகள். சொல்லி மாளாதுதான். இருந்தாலும் குறிப்பாக ஓரிரு காட்சிகளைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.

ஷக்தியாகிய கமல் வெளிநாட்டில் போய் படித்துவிட்டு ஊருக்கு வர, தாரை தப்பட்டை பட்டாசுடன் வரவேற்பு. பெரிய தேவர் சிவாஜி அந்த பிரம்மாண்ட வீட்டின் வாசலில் மிடுக்குடன் காத்திருப்பார். கண்கள் லேசாக இடுங்கியிருக்க சலனமற்ற முகத்துடன் பார்த்துக்கொண்டிருப்பார். கார் வந்து நின்றதும் “பட்டணத்திற்குப் போய் பெரிய படிப்பு படித்த” கமல் கதவை திறந்து இறங்குவதையும் ஆரத்தி எடுத்து வரவேற்கப்படுவதையும் காட்டி சிவாஜியின் முகத்தைக் காட்டுவார்கள். முகம் சலனமற்றிருக்க - மகன் சான்றோனாக வந்திருக்கிறானே என்ற பெருமிதத்தில் ஈன்ற பொழுதினும் பெரிதுவந்து - அந்த உவகையை பெரிதாக வெளிக்காட்டாமல் - ஒரு கீற்றுப் புன்னகையை மட்டும் நெற்றியிலும் உதடுகளிலும் ஓரே ஒரு வினாடி நெளிய விடுவார். பிறகு கமலைத் தொடர்ந்து “மாடர்ன்” கௌதமியும் இறங்க, அந்தக் கீற்றுப் புன்னகை சட்டென மறைந்து ஒரு கேள்விக்குறி முகத்தில் வெளிப்படும். இரண்டே வினாடிகள் காட்டப்படும் அம்முகத்தில் இரண்டு பாவங்களையும் எவ்வளவு அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் தெரியுமா நடிகர் திலகம்? அதை நடிப்பு என்றே சொல்லமுடியாது - நான் பிரமித்துப் போனேன்.

பஞ்சாயத்தில் நாசரால் அவமானப்படுத்தப்பட்டதும் கோபமாக வெளியேறி வீட்டுக்கு நடந்தே வர கூட இருப்பவர்கள் அவரைச் சமாதானப் படுத்த முயற்சிப்பார்கள். அப்போது ஏற்கெனவே ஒரு கையை இழந்திருக்கும் வடிவேலு “ஒரு வார்த்தை சொல்லுங்கய்யா ஒரு வார்த்தை. எத்தனை பேர் தலையெ வேணா கொண்டாந்து ஒங்க காலடில போடுறேன்யா” என்று சொல்வார். அப்போது சிவாஜியின் நடிப்பைப் பாருங்கள். துண்டை உதறி கையை ஓங்கி வடிவேலுவை அதட்டுவார். என்ன அற்புதமான காட்சி அது! வடிவேல் இன்று வரை மிகவும் சிலாகித்துப் பேசும் படம் தேவர் மகன். கமலும் சிவாஜியும் இணைந்து வரும் காட்சிகள் எல்லாமே நம்மை பேச்சற்றுப் போகச் செய்துவிடும் காட்சிகள். அதே மாதிரி கமலும் நாசரும் நேருக்கு நேர் மோதும் காட்சிகளும்!

காக்கா ராதாகிருஷ்ணன், நாசர், ரேவதி, கௌதமி, ஏன் மதன் பாப் கூட அவரவர்  பாத்திரங்களை கச்சிதமாகச் செய்திருப்பார்கள். கமல் நாசர் காம்பினேஷனில் நாசருக்கு மிகப் பெரிய பாத்திரங்களாகக் கிடைத்த படமாக இரண்டைச் சொல்லலாம். தேவர் மகன் ஒன்று. இரண்டாவது குருதிப் புனல். மனிதர் பட்டையைக் கிளப்பியிருப்பார். ரேவதியின் தந்தையாகச் சில காட்சிகளே வந்தாலும் அசத்தியிருப்பார் இன்னொரு பழம்பெரும் நடிகர் கள்ளபார்ட் நடராஜன். இன்னொரு ஆச்சரியம் சங்கிலி முருகன் - அவரது இயல்பான நடிப்பு. மொத்தத்தில் இந்தப் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிற்பம் போல செதுக்கி அதில் கலைஞர்கள் - மிகச் சிறிய ஒரே காட்சியில் வருபவர்கள்கூட - வாழ்ந்திருப்பார்கள். ஜாதிகள் ரீதியாகப் பிளந்து கிடக்கும் சமுதாயத்தின் செயல்பாடுகள், அதிலிருக்கும் வன்முறை, விசுவாசம், நட்பு, காதல், பாசம், அரவணைப்பு என்று எல்லா அங்கங்களையும் படத்தின் ஒவ்வொரு காட்சியும் தொட்டுச் செல்லும். என் சொந்தஊர் வத்திராயிருப்பில் மேலப்பாளையம் என்ற பகுதியில் தேவர் இனத்தவர் வாழ்ந்தனர். பஞ்சாயத்தும் இருந்தது. ஒரு இந்திய கிராமத்தின் அனைத்து இலக்கணங்களோடு அன்று இருந்தது. இம்மாதிரியான ஜாதி ரீதியான கலவரங்கள், பகை, தீண்டாமை என்று அனைத்தையும் பார்த்திருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன். அவ்விதத்தில் தேவர் மகனின் காட்சிகள் ஒவ்வொன்றையும் பழைய நினைவுகளோடு தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. படத்தைப் பார்த்த ஒவ்வொரு கிராமத்துக்காரருக்கும் தன் கிராமத்தில் நிகழும் சம்பவங்களைப் பார்த்த உணர்வு கட்டாயம் எழுந்திருக்கும் என்பதை ஒரு கிராமத்தானாக என்னால் சொல்ல முடியும். வன்முறை வேண்டாம் என்ற பாடத்தை நிறைய வன்முறைகளைக் காட்டிப் பொட்டிலடித்தாற்போல சொன்ன படம். இறுதியில் கமல் சொல்லும் “போய் புள்ளக் குட்டிங்களைப் படிக்க வைங்கய்யா” என்பதில்தான் எத்தனை ஆழம்!

பி.ஸி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு! பரதன் இயக்கம்! இசைஞானியின் இசை ராஜ்ஜியம். இஞ்சி இடுப்பழகாவை ஜானகி பாடும் அழகும் அதற்கு நடித்திருக்கும் கமலும் ரேவதியும் - ரசனையான பாடல் (பச்சைப் பசேல் வயல்வெளியில் ரேவதி இருக்க - மேகத்தின் நிழல் கடந்து போக, காற்று புற்களின் மீது அலையலையாய் அடிக்கும்!).

இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்குச் சென்ற படம் இது (1992).

படத்திலிருந்து சந்தன பொட்டாக ஒரு பாடல். விக்ரமின் வனிதாமணி போல கமல் “பாட்டுப் படிக்க” பாலு “பாடியிருப்பார்” இந்தப் பாட்டிலும்! வம்புச்சண்டைக்கு இழுப்பவரிடம் சகலகலாவல்லவனின் சிலம்பாட்டத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்! பாலுவின் குரலில் கம்பீரம், எள்ளல், நக்கல், நளினம் என்று எல்லாவித பாவங்களும் புகுந்து விளையாடும் இந்தப் பாட்டில். கேட்டு.... அட பார்த்தே ரசியுங்கள்!

வம்புச்சண்டை இங்கே! இறுதியில் இசைஞானியின் பின்னணி இசை அப்படியே நம்மை புல்லரிக்கச் செய்யும் ஜாலத்தையும் கேட்டு மகிழுங்கள்.




துள்ளிச் செல்லும் பாடல் இங்கே!


சாந்து பொட்டு...சந்தன பொட்டு...
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா
கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன் ஹொய்
ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன்
ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன் ஹொய்
ஒங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன்


சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா ஹஹஹஹா

சுத்தத் தமிழ் வீரம் ரத்தத்துல ஊறும்
சிங்கத் தமிழன் சங்கத் தமிழன்
எத்தனயோ நாடு சுத்தி வந்த ஆளு
புத்தி இருக்கு சக்தி இருக்கு

ஊராரும் அண்ணனா தம்பியா பார்க்கும்
அன்பான உள்ளம்தான் உள்ளவரு
யாராச்சும் முட்டின மோதினா போச்சு
அஞ்சாமக் குட்டுவார் தட்டுவாரு

ஒரு வாய்க் கொழுப்பெடுத்தா அடுத்தவன் வரட்டிழுப்பிழுத்தா
அவன் தோலுரிப்பவண்டா தமிழச்சி பால் குடிச்சவண்டா
அட விஷயங்கள் பல அறிஞ்சவன் நான் வெவரங்கள் பல புரிஞ்சவன் நான்
சண்டைக்கு வந்தா சவால் விட்டா
தடியத்தான் புடிச்சித்தான்
கை விரலில சுத்துற சுத்துல 
அண்ணாச்சி உன்ன நான் புண்ணாக்கு தின்ன வப்பேன்

சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா ஹா




எங்கிட்ட தான் போட்டி போடுறவன் வேட்டி
காத்தில் பறக்கும் ஊரு சிரிக்கும்
எட்டடி நீ பாஞ்சா பத்தடி நான் பாஞ்சு
பல்ல ஒடப்பேன் சில்லை ஒடப்பேன்

சூராதி சூரரும் தீரரும் யாரு
கோதாவில் ஒத்தையா நிக்கிறவரு
வந்தாக்க நெத்தியின் மத்தியில் ஜோரா
சுண்ணாம்பு பொட்டதான் வக்கிறவரு

கம்பு சாத்திரம் தெரியும்
அதில் உள்ள சூட்சமம் தெரியும்
ஒரு ஆத்திரம் பொறந்தா
அப்போ இவன் யாருன்னு புரியும் அட
படபடவென அடிக்கட்டுமா
பொடிபட ஒன்ன நொறுக்கட்டுமா
அத்திரி பச்சா கத்திரி பச்சா
ஒதுங்கிக்க ஒளிஞ்சிக்க
ஒன் இடுப்புல போடுற போடுல
ஒக்காத்தி உன்ன நான் முக்காடு போட வப்பேன்


சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா






கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன் ஹொய்
ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன் ஹோய்
ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன் ஹொய்
ஒங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன் ஹோய் ஹோய் ஹோய்

சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா ஹஹஹஹா


Followers

பகிர்க