Friday, August 27, 2010

1085 இது கிட்டப்பாவின் தொண்டை



//குதிரை வாலு கொண்டை.. இது கிட்டப்பாவின் தொண்டை.. நீங்க வெச்சுக்காதே சண்டை
அடி வீங்கிப் போகும் மண்டை.. கூவாதே வெறும் கூச்சல் வேணாம் இப்போது..
தாவாதே எதிர் நீச்சல் போடு என்னோடு.. ஆத்தாடி அப்படி போடு வீராப்பைக் காட்டி..அடி கூத்தாடி குப்புற சாய்ஞ்சி போடாதே போட்டி//

சபாஷ் சரியான போட்டி இந்த பாடலும் போட்டி பாட்டுதான் என்ன ஸ்டேஜ் மட்டும் இல்ல. ஜாமாய்ங்கோ.. சாரே...

படம்: நடிகன்
நடிகர்: சத்யராஜ், குஷ்பு, கவுண்டமணி, மனோரமா
பாடியவர்: எஸ்.பி.பி, சித்ரா
இசை:இளையராஜா
இயக்குநர்: பி.வாசு
வருடம்: 1990

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: நடிகன்

வாத்தியாரு பாட்டு வாத்தியாரு
சூட்டு போட்டு மட்டும் வாட்டுவாரு
சரிகம போய் படிப்போமா
சங்கதியில் போய் குளீப்போமா
ஐய்யய்யா ஐய்யாய்யாஆஆஆஆ

அடி வெளுத்துப் போச்சு தாடி
ஆமா உளூத்துப் போச்சு பாடி
இவர் தொங்கிப்போச்சு நாடி
இவர் ஜெயிக்கப் போறார் பாடி
பார்ப்போமா இவர் எட்டுக் கட்டை சாரீரம்
கேட்போமா உங்க கட்டுக்கேத்த?? சங்கீதம்
ஆத்தாடி அப்படி போடு வீராப்பு காட்டி
இந்த தாத்தா தான் பொண்னுகளோடு கூத்தாடும் போட்டி

அடி வெளுத்துப் போச்சு தாடி
ஆமா உளூத்துப் போச்சு பாடி
இவர் தொங்கிப்போச்சு நாடி
இவர் ஜெயிக்கப் போறார் பாடி

வீரம் தன் வீரம் என் பாட்டன் சொத்து
நாளும் முன் ஆகும் என் மீசை சொத்து

போதும் உன் பாட்டு நிப்பாட்டு இப்போ
ஆசையில் செம்மாங்குயில் ஆனது எப்போ

பைரவி, ரஞ்சனி, செஞ்ருட்டி
என்னிடம் நின்னுடும் கையக்கட்டி

வெச்சுக்கோ வெச்சுக்கோ மூட்டைக்கட்டி
உன்னிடம் உள்ளது ஓட்டசசட்டி

பணக்காரன் பெத்துப் போட்ட.. சீமாட்டியேஏஏ
வரலாமே நம்மகிட்ட வாலாட்டியே
அடி ஏண்டி கேட்டுப் பாரு ஆலாபனை
கழுதைக்கு தெரியாதம்மா பூ வாசனை

குதிரை வாலு கொண்டை
இது கிட்டப்பாவின் தொண்டை
நீங்க வெச்சுக்காதே சண்டை
அடி வீங்கிப் போகும் மண்டை
கூவாதே வெறும் கூச்சல் வேணாம் இப்போது
தாவாதே எதிர் நீச்சல் போடு என்னோடு
ஆத்தாடி அப்படி போடு வீராப்பைக் காட்டி
அடி கூத்தாடி குப்புற சாய்ஞ்சி போடாதே போட்டி

மூக்கும் புல்லாக்கும் ஏன் மோதுதடி
மோகம் உண்டாகும் என் பாட்டு படி

மாட்டுப் புண்ணாக்கு உன் பாட்டுகள் தான்
போடும் உன் வாய்ப்பு நீ கூத்துகள் தான்

முட்டையை விட்டுடும் கோழிகளா??
வெட்டிட என்னிடம் வாரீற்களா

பட்டதும் சுட்டதும் பக்க நிலா
பொத்தியும் நின்னது முத்து நிலா??

பியூசி, பிஎஸ்சி தான் என்னாச்சுடி
ஏபிசி தெரியாமதான் நின்னாச்சுடி அடி
மரவட்டை வெயிலப் போல ஓடாதடி..ஹ்ஹூ
கொசுவெல்லாம் குயிலப் போல பாடாதடி

குதிரை வாலு கொண்டை
இது கிட்டப்பாவின் தொண்டை
இங்க வெச்சுக்காதே சண்டை
அடி வீங்கிப் போகும் மண்டை
கூவாதே வெறும் கூச்சல் வேணாம் இப்போது
தாவாதே எதிர் நீச்சல் போடு என்னோடு
ஆத்தாடி அப்படி போடு வீராப்பைக் காட்டி
அடி கூத்தாடி குப்புற சாய்ஞ்சி போடாதே போட்டி

குதிரை வாலு கொண்டை
இது கிட்டப்பாவின் தொண்டை
இங்க வெச்சுக்காதே சண்டை
அடி வீங்கிப் போகும் மண்டை

Thursday, August 26, 2010

1084 கூடை மேல கூடை வெச்சு



//கூடை மேல கூடை வெச்சு.. கூடலூரு போற புள்ளே.. கூட வரவா நான் உன் பின்னாலே
நான் பொறக்கவேணும் நீ பிடிக்கும் ஆத்து மீனாக..//

பல்லவியே அமர்க்களமாக இருக்குதுங்க...

படம்:கண்ணன் வருவான்
பாடகர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி,சித்ரா
நடிகர்கள்:கார்த்திக்,கவுண்டமணி,மந்த்ரா,திவ்யா உன்னி,ரஞ்சித், செந்தில், மனோரமா
இயக்குநர்: சுந்தர்.சி
இசை: சிற்பி

Get this widget | Track details | eSnips Social DNA


கூடை மேல கூடை வெச்சு
கூடலூரு போற புள்ளே
கூட வரவா நான் உன் பின்னாலே
நான் பொறக்கவேணும் நீ
பிடிக்கும் ஆத்து மீனாக

கூட்டு வண்டி கூட்டிக்கிட்டு
என்னை விட்டு போற மாமா
ஊர விட்டு போறேன் முன்னாலே
உன்னைப்பார்த்தா இடுப்பு சேல நழுவும் தன்னாலே

சண்டைச் சேவல் இரண்டு வாங்கி
போட்டி போட்டு பார்க்க வாடி
தோத்து போனா என்ன நீ தருவ

நானும் இங்கே தோத்துப்போனா
உங்க சேவல் ஜெய்ச்சு போனா
அப்ப நானும் என்னை நான் தருவேன்

ஆத்து மேட்டில் சாயங்காலம்
கூத்து பார்க்க போவோம் வா வா

நான் வரமாட்டேன் வந்தா என்ன தருவே

கூடை மேல கூடை வெச்சு
கூடலூரு போற புள்ளே
கூட வரவா நான் உன் பின்னாலே
நான் பொறக்கவேணும் நீ
பிடிக்கும் ஆத்து மீனாக

வெள்ளை மாமா உங்க பேர
செல்லமாக சொல்லிப்பார்த்து
மூக்கு சிவந்த நியாயம் நீ பாரு

சின்னப்பொன்னே உன் கையால
சோழக்கூழே கரைச்சு தந்தா
சூடுப் பொங்க ஆனது என்னாடி

ஒத்த மரத்து பாவக்காய
ஒடித்து பார்த்து இனிச்சதென்ன

அப்படி உன்னை கட்டி கட்டி புடிப்பேன்

கூடை மேல கூடை வெச்சு
கூடலூரு போற புள்ளே
கூட வரவா நான் உன் பின்னாலே
நான் பொறக்கவேணும் நீ
பிடிக்கும் ஆத்து மீனாக

கூட்டு வண்டி கூட்டிக்கிட்டு
என்னை விட்டு போற மாமா
ஊர விட்டு போறேன் முன்னாலே
உன்னைப்பார்த்தா இடுப்பு சேல நழுவும் தன்னாலே

Wednesday, August 25, 2010

1083 மருமகளே மருமகளே எங்க வீட்டு




//தங்கத்திலே பொட்டு வெச்ச குத்து விளக்கே... தங்க வந்த வீட்டுக்கு நீ காவல் இருப்பாய்
வந்தாரை வாழ வைக்கும் எங்க மகராஜனுக்கு..//

படம்:எஙக முதலாளி
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, கே.எஸ்,சித்ரா
நடிகர்: விஜயகாந்த்
இசை:இளையராஜா
இயக்குநர்:லியாகத் அலிகான்
வருடம்:1993

Get this widget | Track details | eSnips Social DNA


மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழவந்த திருமகளே
மன்னாதி மன்னனுடன் நூறு ஆண்டு வாழ்க
பொன்னோடு பூவும் கொண்டு ஊரு போற்ற வாழ்க

எல்லோரும் போற்றுகின்ற ராஜாதி ராஜா
எப்போதும் அவர் மனசில் நீதான் ராணி

மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழவந்த திருமகளே
மன்னாதி மன்னனுடன் நூறு ஆண்டு வாழ்க
பொன்னோடு பூவும் கொண்டு ஊரு போற்ற வாழ்க

சொந்தமுள்ள மாமனுக்கு சொந்தமென நீ வளர்ந்தாய்
அன்பு கொண்டு ஆதரிக்க அடி எடுத்து வீடு வந்தாய்

தங்கத்திலே பொட்டு வெச்ச குத்து விளக்கே
தங்க வந்த வீட்டுக்கு நீ காவல் இருப்பாய்
தங்கத்திலே பொட்டு வெச்ச குத்து விளக்கே
தங்க வந்த வீட்டுக்கு நீ காவல் இருப்பாய்

வந்தாரை வாழ வைக்கும் எங்க மகராஜனுக்கு
வாழையடி வாழையென வாழ்வு தர வந்தவளே

போற்றிட வந்தவள் நீயே
எங்கள் வாழ்வினில் ஆனந்தம் கூட

மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழவந்த திருமகளே
மன்னாதி மன்னனுடன் நூறு ஆண்டு வாழ்க
பொன்னோடு பூவும் கொண்டு ஊரு போற்ற வாழ்க

எல்லோரும் போற்றுகின்ற ராஜாதி ராஜா
எப்போதும் அவர் மனசில் நீதான் ராணி

மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழவந்த திருமகளே

உரை எல்லாம் வாழ வைக்கும் எங்க முதலாளி
பேரை கேட்டா மழை பொழியும் தங்க முதலாளி
கருணையுடன் உதவி செய்யும் கருணை மகராஜா
கரும்பு போல மனசு கொண்ட தெய்வ மகனா
கருணையுடன் உதவி செய்யும் கருணை மகராஜா
கரும்பு போல மனசு கொண்ட தெய்வ மகனா

கண்ணால அன்பு கொண்டு

கையால அரவணைச்சு

பூவால மஞ்சமிட்டு

தாயாக வாழவைப்பாள்

போற்றிட வந்தவள் நீயே
எங்கள் வாழ்வினில் ஆனந்தம் கூட

மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழவந்த திருமகளே
மன்னாதி மன்னனுடன் நூறு ஆண்டு வாழ்க
பொன்னோடு பூவும் கொண்டு ஊரு போற்ற வாழ்க

எல்லோரும் போற்றுகின்ற ராஜாதி ராஜா
எப்போதும் அவர் மனசில் நீதான் ராணி

மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழவந்த திருமகளே.

Tuesday, August 24, 2010

1082 மஹாராணி மஹாராணி மாளிகை



//காலம் நேரம் கூடிவரும் நம் கவிஞர் சொன்னபடி.. வானும் மண்ணும் நம்மைக் கண்டு வணக்கம் சொன்னபடி.. மஹாராணி மஹாராணி மாளிகை மஹாராணி.. மண் குடிசை தேடிவந்த மன்மத ரததேனீ//

படம்:ராஜபாண்டி
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, கே.எஸ்.சித்ரா
நடிகர்கள்: சரத்குமார், சுகன்யா,வடிவேலு, கஸ்தூரி
இயக்குநர்:மனோஜ் குமார்

Get this widget | Track details | eSnips Social DNA



மஹாராணி மஹாராணி மாளிகை மஹாராணி
மண் குடிசை தேடிவந்த மன்மத ரததேனீ

மஹாராணி மஹாராணி மாளிகை மஹாராணி
மஹாராணி மஹாராணி மாளிகை மஹாராணி
மண் குடிசை தேடிவந்த மன்மத ரததேனீ

மன்னவனின் மண் குடிசை மாளிகையாகாதோ
சங்கமதன் காலடியே சன்னிதியாகாதோ

காலம் நேரம் கூடிவரும் நம் கவிஞர் சொன்னபடி
வானும் மண்ணும் நம்மைக் கண்டு வணக்கம் சொன்னபடி

மஹாராணி மஹாராணி மாளிகை மஹாராணி
மண் குடிசை தேடிவந்த மன்மத ரததேனீ

சிக்கிச்சான் சிக்கிச்சான் சின்னக்குருவி சிக்கிச்சான்
விக்கிக்கிச்சான் விக்கிக்கிச்சான் நெனெச்சே விக்கிக்கிச்சான்

அரண்மணை தான் உன் வீடு
என் வீடோ சிறு கூடு

அரண்மனையோ பெரும் பாடு
உன் கூடு என் வீடு

ஏழையை காதலித்தேன் நீ
இழந்தது எத்தனை கோடி

உத்தமனின் சொலை விட
உயர்ந்தது அல்ல கோடி

மஹாராணி மஹாராணி மாளிகை மஹாராணி
மண் குடிசை தேடிவந்த மன்மத ரததேனீ

லக்குபிக்குச்சான் புடிச்சான் புடிச்சான்
லவ் பன்ன இவன் புடிச்சான் அழைச்சான்
டிக்கி டிக்கிச்சான் டிக்கிச்சான் டிக்கிச்சான்
இவ தாவணி மாட்டிக்கிச்சான்

ஊர் வேண்டாம் பேர் வேண்டாம்
உத்தமனே நீ வேண்டும்

பொன் வேண்டாம் பொருள் வேண்டாம்
புன்னகையின் சீர் வேண்டும்

உன் மொழி தான் என் வேதம்
நீ ஒரு மொழம் பூ கொடு போதும்

முடியும்வரை வாசிப்போம்
முத்தமிழ் எனும் கீதம்

மஹாராணி மஹாராணி மாளிகை மஹாராணி
மண் குடிசை தேடிவந்த மன்மத ரததேனீ

மன்னவனின் மண் குடிசை மாளிகையாகாதோ
சங்கமதன் காலடியே சன்னிதியாகாதோ

காலம் நேரம் கூடிவரும் நம் கவிஞர் சொன்னபடி
வானும் மண்ணும் நம்மைக் கண்டு வணக்கம் சொன்னபடி

காலம் நேரம் கூடிவரும் நம் கவிஞர் சொன்னபடி
வானும் மண்ணும் நம்மைக் கண்டு வணக்கம் சொன்னபடி

Sunday, August 22, 2010

1081 இதோ இந்த நெஞ்சோடு



//ஒவ்வொன்று முடியும் என்று விஞ்ஞானம் சொல்லும்.. நம் காதல் முடியாதென்று மெய்ஞானம் சொல்லும்//

படம்: குட்லக்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, கே.எஸ்.சித்ரா

இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்
ஒரே வீடு உள்ளதெல்லாம் உயிர் வாழத்தான்
உயிர் தீயில் தீபம் ஏற்றினேன்
எனக்காக என்னை ஊற்றினேன்

இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்
ஒரே வீடு உள்ளதெல்லாம் உயிர் வாழத்தான்
உயிர் தீயில் தீபம் ஏற்றினேன்
என்னைக் கொண்டு என்னை ஊற்றினேன்

உயிரை பிரித்து இருபாதி செய்தேன்
உனக்கு அதிலே சரிபாதி தந்தேன்

உனது உயிரில் சரிபாதி கொண்டேன்
எனது உயிரில் முழுமையும் தந்தேன்

ஒவ்வொன்று முடியும் என்று விஞ்ஞானம் சொல்லும்
நம் காதல் முடியாதென்று மெய்ஞானம் சொல்லும்

காலங்கள் வாழும் காலமே
நம் காதல் எல்லை வாழுமே

என் கைகள் உன்னில் உள்ளது
இமைக்காமல் உன்னை நாடுவேன்

இதயம் திறந்து பூந்தோட்டம் செய்தாய்
என்னுள் எனக்குள் என்னென்ன செய்தாய்

நிலவை பறித்து உன்னிடம் கொடுத்தேன்
என்னை அழித்து மணியாரம் தொடுத்தேன்

வேறு ஏதும் வேண்டாம் வேண்டாம் உன் மார்ப்பு போதும்
உயிர் போகும் காலம் கூட ஒரு பார்வை போதும்

உன் சொல்லில் வேதம் கேட்கிறேன்

உன் தன்னில் என்னைப் பார்க்கிறேன்

உன்னோடு என்னைச் சேர்க்கிறேன்
உன் மார்ப்பில் தன்னைச் சேர்க்கிறேன்

இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்

ஒரே வீடு உள்ளதெல்லாம் உயிர் வாழத்தான்

உயிர் தீயில் தீபம் ஏற்றினேன்

என்னைக் கொண்டு என்னை ஊற்றினேன்

Saturday, August 21, 2010

1080. ஏ வெண்ணிலா என் நெஞ்சமே





இது ஒரு தொடர்கதை (1987) என்றொரு படம். மோகன், ரேகா அப்புறம் என் செல்லம் நடித்தது. தமிழ்த்திரையுலக விதிபடி ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதே மாதிரி படங்களை எடுத்து அந்த ஹீரோவையோ ஹீரோயினையோ ஒழித்துக்கட்டாமல் விடமாட்டார்கள். அவர்களும் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று கிடைத்த மட்டும் அட்வான்ஸை வாங்கிப் போட்டு குப்பைப் படங்களில் நடித்து ரிடையர்டாகி நிம்மதியாக இருப்பார்கள். 


கங்கை அமரன் அவ்வப்போது அபாரமான பாடல்களைக் கொடுத்து ஆச்சரியப் படுத்துவார். காஃபி வித் அனுவில் பாலுவும் கங்கைஅமரனும் சரணும் பிரபுவும் கலந்துகொண்டது நினைவிலிருக்கிறது. பசங்கள் ரெண்டுபேரும் பேந்தப் பேந்த விழிக்க இரண்டு அப்பாக்களும் அநியாயத்திற்கு லூட்டியடித்திருப்பார்கள். இளையராஜாவின் சகோதரர் என்ற ஒரே காரணத்திற்காக கங்கை அமரனின் படைப்புகளுக்கு ரசிகர்கள் சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை - அவர் அண்ணனிடமிருந்து மெட்டுகளை வாங்கிக்கொண்டிருந்திருப்பார் என்ற மனோபாவத்துடனே - கங்கை அமரனை அணுகினோம் (நானும் அப்படித்தான் சில சமயங்களில் நினைத்திருக்கிறேன்) என்று சொல்லி வருத்தப்பட்டார். உண்மைதான். 


அண்ணனுக்குச் சளைக்காது சோடைபோகாது பல சிறந்த பாடல்களை அமரன் கொடுத்திருக்கிறார். வாழ்வே மாயம் இன்றும் காதுகளில் ரீங்கரிக்கிறது. இருந்தாலும் வா வெண்ணிலா பாடலைக் கேட்பது போலிருப்பதைத் தடுக்க முடியவில்லை. நிற்க.

இது ஒரு தொடர்கதை படத்தை நான் பார்க்கவில்லை (ஆச்சரியமாக இல்லை?). ஆதலால் அதைப் பற்றிக் கருத்துகூற இயலவில்லை. படம் ஓடிய மாதிரி நினைவில்லை.

ஆனால் மைக் மோகன் இருப்பதால் பாலு பாடல் இல்லாதிருக்காது இல்லையா? இந்தப் பாடலை எத்தனையோ முறை அலுக்காது கேட்டிருக்கிறேன். பாலுவும் ஜானகியும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். மிகவும் இனிமையான பாடல். அழகாகத் துள்ளிச் செல்லும் இசை - தாளம். தென்றல் தழுவுவது போன்றிருக்கிறது கேட்பதற்கு. கேட்டு மகிழுங்கள். 

ஏ வெண்ணிலா...ஏ வெண்ணிலா 
என் நெஞ்சமே உன் வானம்தானே 
உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே 
உனை நான் தொடருவேன் தொடர்கதையாய் 
நிலவே இன்று நீ விழி திறவாய் 
உனை நான் தொடருவேன் தொடர்கதையாய் 
நிலவே இன்று நீ விழி திறவாய் 
ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானம்தானே 
உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே 

வெண்நீல மேகம் எங்கோ தேரில் காதல் ஊர்கோலம் 
இன்பங்கள் காணும் நேரம் எல்லாம் அந்த கார்காலம் 
பூமலர் மஞ்சம் உந்தன் நெஞ்சம் போதும் என்றேனே 
நாணமோ கெஞ்ச ஆசை கொஞ்ச நானும் நின்றேனே 
என் தேவனே... 


ஏ...ஏ...என் தேவி உன்னோடு வாழும் 
நன்நாளை நான் காண வேண்டும் 

ஏ வெண்ணிலா...ஏ வெண்ணிலா 
என் நெஞ்சமே உன் வானம்தானே 
உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே 
உனை நான் தொடருவேன் தொடர்கதையாய் 
நிலவே இன்று நீ விழி திறவாய் 

கண்ணென்ற வாசல்தேடி நெஞ்சில் வந்த பெண்மானே 
கல்யாண ராகம் பாடி காதல் செய்ய வந்தேனே 
இன்னிசை பாடும் ராகம் நூறு நீயே ஆதாரம் 
என்னுடன் சேரும் அன்புக் கண்ணே நீதான் என் தாரம் 
என் வாழ்விலே... 


ஆ...ஆ...என் வாழ்வு உன்னோடு சேரும் 
என் ஜீவன் உன்னோடு போகும் 

ஏ வெண்ணிலா...ஏ வெண்ணிலா 
என் நெஞ்சமே உன் வானம்தானே 
உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே 


உனை நான் தொடருவேன் தொடர்கதையாய் 
நிலவே இன்று நீ விழி திறவாய் 
உனை நான் தொடருவேன் தொடர்கதையாய் 
நிலவே இன்று நீ விழி திறவாய் 

ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானம்தானே 
உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே


Get this widget | Track details | eSnips Social DNA

1079. முத்தாடுதே முத்தாடுதே ராகம்



நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாடல் - ஜானகியும் பாலுவும் அசத்தலாகப் பாடியிருக்கிறார்கள் - இசைஞானியின் துள்ளும் இசை. இந்தக் கூட்டணி கொடுத்ததற்கும் முந்தைய இரு பதிவுகளில் நமக்குக் கிடைத்தவற்றுக்கும் எவ்வளவு வித்தியாசம்! இப்பாடலைக் கேட்கையில் ஏதாவது உறுத்துகிறதா? எவ்வளவு இனிமையாக இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் எல்கேஜிப் பள்ளிகள் பட்டிதொட்டியெங்கும் முளைத்திருந்தன - ஆண்டுவிழா ஒன்று நடத்துவார்கள். குட்டீஸ்களெல்லாம் பிரபல பாடல்களுக்கு அட்டகாசமாக ஆடும். அப்போது மன்மதராசாவோ சின்ன வீடா வரட்டுமாவோ வந்திருக்கவில்லை. அதற்காக நேத்து ராத்திரி யம்மாவுக்கெல்லாம் குழந்தைகளை ஆடவைக்கவில்லை. இசைஞானி தமிழ்த்திரையுலகை ஆண்டகாலத்தில் வந்த பாடல்கள் - எவ்வளவு கேட்டாலும் சலிக்காத பாடல்கள் - அவற்றைத்தான் தேர்ந்தெடுத்து பள்ளி கல்லூரிகளிலெல்லாம் கொண்டாடினார்கள். அவற்றில் இந்தப் பாடலும் ஒன்று. கேட்டு மகிழுங்கள்.


முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
 

கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
 


கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம் 

பாவை உன் மேனி காதல் வீணை
காளை என் கைகள் மீட்டும் வேளை
 
என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய்
அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய்
 
ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம்
அது தாங்காமல் உன் மேனி போராடலாம்
 
சந்தோஷம் தாங்காமல் தள்ளாடும் நேரத்தில்
என் மேனி சாயாமல் நீ தாங்கலாம்
அன்பே...லால்ல லா லா லா
 

முத்தாடுதே முத்தாடுதே ராகம் 
பித்தானதே பித்தானதே தேகம் 

தேகம் தண்ணீரில் நீந்தும் போது
நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு
 
மீன் போல நான் மாறி விளையாடவா
அலை நீர் போல உன்மீது நான் மோதவா
 
என் மேனி நோகாமல் விளையாடலாம்
இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம்
 
தாளங்கள் நான் போட நாணங்கள் பறந்தோட
தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம்
அமுதே...ராப்ப பா பா பா
 

முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
 
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
 
கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்






1078. ஒரு ஆணும் பெண்ணும்


முந்தைய பாடலின் இசையைவிட இது கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் பாடல் வரிகளின் இம்சைதான் தாங்கமுடியவில்லை. அதிலும் சிலவற்றில் தொனிக்கும் அர்த்தத்தைப் பார்த்தால்  சின்னகுழந்தைகள் இரவில் வீறிட்டு அழும் என்று பயமாக இருக்கிறது. என்னவோ போங்கள்.

ஜானகியும் பாலுவும் வழக்கம்போல இனிமையாகப் பாடியிருக்கிறார்கள். இம்மாதிரிப் பாடல்வரிகளைக் கேட்டு எழுவதுதான் கொடுமையாக இருக்கிறது.

ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக்கொள்ளும் முத்தம்
இது பூவும் பூவும் மோதிக்கொள்ளும் சத்தம்
இது பட்டுப் போன்ற தேகம்
பிறர் தொட்டுப் பார்க்க நோகும்
இவள் சிரித்ததும் சிவந்துவிடும்


ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக்கொள்ளும் முத்தம்
இது பூவும் பூவும் மோதிக்கொள்ளும் சத்தம்
இவன் மஞ்சம் போடும் மன்னன்
எனைக் கொஞ்சும் போது கண்ணன்
என் உயிர்வரை பருகியவன்

உன்னை எண்ணித்தானே என் வீட்டில்
நந்தவனம் இன்று செடி நட்டு வைக்கிறேன்
உன்னை எண்ணித்தானே கண்ணாளா
படுக்கையில் பாதியிடம் விட்டுவைக்கிறேன்
என்னை உனக்குள் தொலைத்துவிட்டேன்
இந்தக் கன்னியே எண்ணி எண்ணியே இளைத்துவிட்டேன்

என் கொம்புத்தேனே உனை நம்பித்தானே
என் தங்கக்கூண்டைத் தாண்டி வந்தேனே

ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக்கொள்ளும் முத்தம்
இது பூவும் பூவும் மோதிக்கொள்ளும் சத்தம்
இவன் மஞ்சம் போடும் மன்னன்
எனைக் கொஞ்சும் போது கண்ணன்
என் உயிர்வரை பருகியவன்

உந்தன் பேரைச் சொன்னால் எந்நாளும்
உள்ளுக்குள்ளே தேன் சுரக்கும் உச்சரிக்கிறேன்
தந்த முத்தம் என்ன இப்போதே 
வட்டியிட்டுத் தந்துவிடு எச்சரிக்கிறேன்
இன்பக் கடலில் இறங்கிவிட்டேன்
நனைந்துவிட்டேன் முத்துக்குளிக்க மறந்துவிட்டேன்
என் கன்னித் தேனே உனை மன்னித்தேனே
என் கட்டில் மீது கப்பம் கட்ட வா


ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக்கொள்ளும் முத்தம்
இது பூவும் பூவும் மோதிக்கொள்ளும் சத்தம்
இது பட்டுப் போன்ற தேகம்
பிறர் தொட்டுப் பார்க்க நோகும்
இவள் சிரித்ததும் சிவந்துவிடும்


1077. கிளிகளே ராகம் கேளுங்களேன்

பருவராகம் படத்திலிருந்து ஏற்கெனவே ஒரு அருமையான பாடலைப் பதிவு செய்திருக்கிறோம். அந்தப் படத்தில் இன்னும் சில அருமையான பாடல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை இங்கு பார்ப்போம்.

இந்தப் பாடல் வரிகளைப் படித்தாலேயே புரிந்து போகும். கல்லூரி என்றாலே படிக்காமல் தறுதலையாகச் சுற்றுவது, சக மாணவிகளைக் கிண்டல் செய்வது, அல்லது ஸ்ட்ரைக் நடத்துவது, பேருந்தில் கேரளாவுக்கு லாரியில் ஏற்றிச்செல்லப்படும் அடிமாடுகளைப் போல மந்தையாக ஏறி வண்டியின் திறந்த பாகங்கள் வழியாக கரம்சிரம்புறம் நீட்டிக்கொண்டு வருவது, அல்லது Roof Top Restaurant மாதிரி Bus Top-இல் நின்றுகொண்டு அல்லது நடனமாடிக்கொண்டு வருவது என்று மட்டுமே காட்டுவது என்ற தமிழ்ப்படக் கலாச்சாரத்தின் இலக்கணத்தின் அடியொற்றி வந்த பாடல் என்று புரிந்துபோகும். தோளின் மீது பாரம் இல்லை என்று இன்னும் எத்தனை பாடல்களில் மறுபடி மறுபடி எழுதுவார்களோ என்று தெரியவில்லை - மகா கற்பனை வறட்சி போல - மாணவர்களுக்கு அந்த வயதில் தோளின் மீதிருக்கும் ஒரே பாரம் தேனடை போல படர்ந்திருக்கும் பங்க் கட் முடிதான்.  மற்றபடி விரலிடுக்கில் ஒரே ஒரு நோட்டை (எழுதாதது) வைத்துக்கொண்டு கல்லூரிக்குச் செல்லும் கும்பலைத்தான் படங்களில் பார்க்கிறோம்.

கீழே இந்தப் படத்தின் ஸ்டில்லில் நாயகன் ரவிச்சந்திரனின் போஸைப் பாருங்கள். தமிழ் ரசிகர்கள் கோயான்கள் என்று உறுதியாக நம்பும் பல திரையுலகப் புள்ளிகளில் இவரும் ஒருவர் போலிருக்கிறது. தோளில் ஆட்டுக்குட்டி, போட்டிருப்பதோ விலையுயர்ந்த ஷோரூம் ஆடைகள். போதாக்குறைக்கு துருவப்பகுதியில் இருப்பதைப் போன்று முழங்கால் வரை தோலால் செய்த காலணி வேறு. அதைப் போட்டுக்கொண்டு சென்னைப் பாலைவனத்தில் திரிவதைப் போன்ற கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது.


ஹம்சலேகா நன்றாகத்தான் மெட்டு போட்டிருக்கிறார். ஆனால் இருக்கும் இசைக்கருவிகளையெல்லாம் உபயோகித்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இசையமைத்தமாதிரி இருக்கிறது. என்னன்னவோ சத்தங்கள். வயலின்களை அநியாயத்திற்கு அலறவிட்டிருப்பது ரம்பத்தால் அறுக்கப்படும் உணர்வைத் தருகிறது. பாடல்வரிகளின் கொடுமை வேறு. என்னவோ தொலையட்டும். பாலுவின் குரலுக்காக எல்லா இம்சைகளையும் பொறுத்துத் தொலைப்போம். பதிவு எழுத உட்கார்ந்த நேரமே சரியில்லை போலிருக்கிறது (எனக்கில்லை) :-)


பாடும் இளங்குயில்களே
பாடல் ஒன்று கேளுங்களேன்

கிளிகளே ராகம் கேளுங்களேன் ஆ..
கிளிகளே ராகம் கேளுங்களேன்
பாதையோ பதமானது
பயணமோ சுகமானது
இளமையோ இதமானது
என் பாடல் இனியது
கிளிகளே ராகம் கேளுங்களேன்
கிளிகளே ராகம் கேளுங்களேன்

பாதையோ பதமானது
பயணமோ சுகமானது
இளமையோ இதமானது
என் பாடல் இனியது
கிளிகளே ராகம் கேளுங்களேன்
கிளிகளே ராகம் கேளுங்களேன்
பூக்களின் ஜாதி என்னவோ
பாட்டனி கற்று வைக்கலாம்
பாக்களில் பற்கள் எத்தனை
ஹிஸ்டரியைக் கேட்டுவைக்கலாம்
தவளைக்குத் தாடி உள்ளதா
ஜூவாலஜியில் சொல்லி வைக்கலாம்
கூந்தலுக்கு வாசமுள்ளதா
இலக்கியம் கேட்டு வைக்கலாம்

இரவில் உறக்கமில்லை
ஏதோ மயக்கம் வரும்
பரீட்சைக்குப் படிக்கையிலே
சுகமாய் உறக்கம் வரும்
பாட்டுப்பாட நேரமில்லை
பாடநூலில் பாட்டு இல்லை
தோளின் மீது பாரமில்லை
தூக்கிவைக்க யாருமில்லை
வசந்தமெங்கள் பையில் வந்து கிடக்குது
வானம் மீது தோட்டம் போடும் வயதிது (Bang? Bang??)

பாதையோ பதமானது
பயணமோ சுகமானது
இளமையோ இதமானது
என் பாடல் இனியது
கிளிகளே ராகம் கேளுங்களேன்
கிளிகளே ராகம் கேளுங்களேன் ஹேஹேஹேஹே

பொதுக்கூட்டம் போடவேண்டுமா?
வகுப்பறை வசதியானது
ரகசியம் பேசவேண்டுமா?
லைப்ரரி இங்கிருக்குது
தேர்வுக்கு நாளிருக்குது
தேவையைச் சொல்லிவிடுங்கள்
வாலிபம் தீருமுன்னரே
வாழ்க்கையை அள்ளியெடுங்கள்
வாழ்க்கை ஒருமுறைதான்
வாழ்வது ஒருமுறைதான்
எங்கள் வகுப்பறையில்
என்றும் விடுமுறைதான்
தேடியோட யாருமில்லை
வாழ்க்கையிங்கு தூரமில்லை
காலமிங்கு போதவில்லை
காத்திருக்க நேரமில்லை
வானம் எங்கள் கையில் வந்து அடங்குது
பூமி இன்று புதிய வாழ்க்கை தொடங்குது...Bang Bang..Bang Bang..

பாதையோ பதமானது
பயணமோ சுகமானது
இளமையோ இதமானது
என் பாடல் இனியது
கிளிகளே ராகம் கேளுங்களேன்
கிளிகளே ராகம் கேளுங்களேன்
பாதையோ பதமானது
பயணமோ சுகமானது
இளமையோ இதமானது
என் பாடல் இனியது
கிளிகளே ராகம் கேளுங்களேன்
கிளிகளே ராகம் கேளுங்களேன்



Friday, August 20, 2010

1076 ஹே தன்னானானே தாமரைப்பூ மாமா




//கொட்டுற பனியிலே நானும் உனக்கு... குடையா மாறட்டுமா.. உன் வெட்டுற விழியிலே ஊத்துற நெருப்புல.. குளிரும் காயட்டுமா//

படம்: பெரியண்ணா
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, கே.எஸ்.சித்ரா
நடிகர்:விஜயகாந்த்

பச்சோலை சேத்துக்குள்ளே
பதுங்கியிருக்கிற பசங்களூக்கு
மறைஞ்சிருக்கிற பருவம் வந்திருச்சு
மாமனுக்கு செய்யும் சீரும் செலவு வந்திருச்சு

ஹே தன்னானானே தாமரைப்பூ மாமா
தள்ளாடும் தண்ணியிலே
ஹே தாமரை பூத்திருச்சே மாமா
தாவணி வாங்கி வாங்க
ஊரெல்லாம் கூட்டிக்கிட்டு
வந்திடுங்க மேளம் கொட்டி

ஹே தன்னானானே தாமரைப்பூ மாமா
தள்ளாடும் தண்ணியிலே
ஹே தாமரை பூத்திடுச்சு புள்ளே
தாவணி வாங்கி வாறேன்

கொட்டுற பனியிலே நானும் உனக்கு
குடையா மாறட்டுமா
உன் வெட்டுற விழியிலே ஊத்துற நெருப்புல
குளிரும் காயட்டுமா

உனக்கும் எனக்கும் மனசு இப்ப
வெக்கப் பிறியாச்சு
ஒழிவும் மறவா பேசி சிரிச்சு
ஓடை துணையாச்சு

கையில அணைக்கிற போது நீ
துள்ளிக் குதிக்கிற மாது

ஆத்துல குளிக்கிற போது நீ
ஆள கடிக்கிற மீனு

உன் இடுப்பு சேல நழுவ
நான் எடுத்து எடுத்து தழுவ

ஹே தன்னானானே தாமரைப்பூ மாமா
தள்ளாடும் தண்ணியிலே

ஹே தாமரை பூத்திருச்சே புள்ளே
தாவணி வாங்கி வாறேன்

தினமும் என்னை துரத்துதய்யா
உங்க பெருமூச்சு
அத்திபூத்த மாயம் போல
காயம் ஆறிடுச்சு??

கண்ணே உனக்கு மின்மினி புடிச்சு
கணக்கா ஏத்தட்டுமா
விடியிற வரைக்கும் மடியில சாய்ஞ்சு
விஷயம் சொல்லட்டுமா

மாமன் தரும் சேதி??
ரெண்டு தாங்கா தட்டு காடு??

நீ சிரிக்கிற தங்கத் தேரு
உன் தேவை என்னக் கூறு

விடலைப் புள்ள நானும்
ஒரு விவரம் கேட்க வேணும்

ஹே தன்னானானே தாமரைப்பூ புள்ளே
தள்ளாடும் தண்ணியிலே
ஹே தாமரை பூத்திருச்சே மாமா
தாவணி வாங்கி வாங்க
ஊரெல்லாம் கூட்டிக்கிட்டு
ஹ வந்தேனே மேளம் கொட்டி

ஹே தன்னானானே தாமரைப்பூ மாமா
தள்ளாடும் தண்ணியிலே
ஹே தாமரை பூத்திருச்சே புள்ளே
தாவணி வாங்கி வாங்க

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, August 19, 2010

1075. வருது வருது விலகு விலகு


கமல் தவிர யாருக்காவது பாலு கரகரவென்று சிம்மம் கர்ஜிப்பது மாதிரி பாடலின் நடுவே குரல் கொடுத்துப் பாடியிருக்கிறாரா என்று தெரியவில்லை. இந்தப் பாடலிலும் குரலால் வித்தை காட்டியிருப்பார் பாலு.. கமல்.. இல்லை பாலு... நோ..கமல்... அட பாலுதான் பாடியிருக்கிறார். என்னய்யா இவங்களோட வம்பாப் போச்சு. ரெண்டு பேரும் இப்படி அநியாயத்துக்கு நடிச்சா என்னதான் பண்றது?

கமல் சிறந்த நடிகர் என்று இன்றுவரை சொல்கிறோம். ஐம்பதாண்டுகள் திரையுலகில் முத்திரை பதித்து இன்னும் பயணத்தில் (முன்னணியில்) இருக்கும் மகா கலைஞன் அவர். ஆனாலும் சூப்பர் ஹிட் மசாலாப் படங்களையும் கொடுக்காமலில்லை. சகலகலாவல்லவனின் வெற்றி எல்லாருக்கும் தெரிந்ததே. தமிழ்நாடு இன்றுவரை அப்படத்தில் பாலு பாடியிருக்கும் Hello Everybody. Wish you Happy New Year என்ற பாடலைப் போட்டுத்தான் புத்தாண்டை இந்த வருஷம் வரை ஆரம்பித்துக்கொண்டிருக்கிறது. கமல் செய்த பெருவெற்றிபெற்ற பொழுதுபோக்குப் படங்களில் இன்னொன்று தூங்காதே தம்பி தூங்காதே படம். இதில் பல பாடல்கள் அருமையானவை. ஏற்கெனவே சில பாடல்களை இத்தளத்தில் பதிவு செய்திருக்கிறோம். நானாக நானில்லை தாயே எனக்கு இன்றுவரை தாலாட்டுப் பாடல் (என் குழந்தைகளுக்கும்). 

சிங்கம் வருவதைப் போன்று கர்ஜிக்கும் இந்தப் பாடல் இன்னும் பதியவில்லை என்று நினைக்கிறேன். படத்தில் வரும் டீக்கடை முன்னான பெஞ்ச் சண்டை அப்போது பெரிய ஹிட். கீழே பாடலின் ஒளிக்கொத்தைக் கொடுத்திருக்கிறேன்.  டைட்ஸ் பேண்ட் போடும் பேஷன் இருந்த காலத்தில் வந்த படம். அவ்வளவு டைட்டாக பேண்ட்டை போட்டுக்கொண்டு மனுஷன் எப்படித்தான் நடனம் ஆடுகிறாரோ? இதில் பின்பக்கமாக பல்டி வேறு அடிக்கிறார். இனி கமலும் பாலுவும் அடிக்கும் லூட்டி. போதாக்குறைக்கு ஜானகியம்மா வேறு.

படம்: தூங்காதே தம்பி தூங்காதே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பாலு, ஜானகி



வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது
வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது
வேங்கை நான் தான் சீறும் நாள்தான்
வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது

வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை
வாலாட்டிப் பார்த்தானாம் சீமைத்துரை
வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை
வாலாட்டிப் பார்த்தானாம் சீமைத்துரை
அதுதான் கதையாச்சு என் கதையும் அதுவாச்சு
வாதும் சூதும் வம்புகள் செய்தால் 
வருவேன் அடியேன் அங்கேதான்
உனைப்போல ஒருவன் துணிந்தால் போதும்
தர்மம் ஜெயிக்கும் இங்கேதான்
வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது

கண்ணான கண்ணா உன் சூரத்தனம் 
கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம்
கண்ணான கண்ணா உன் சூரத்தனம் 
கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம்
சும்மாத் தொடமாட்டேன் 
நான் தொட்டா விடமாட்டேன் 
புடிச்சா நான் தான் உடும்பாப் புடிப்பேன்
அதுலே நான் தான் கில்லாடி
உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு
நிழலாய் வருவேன் பின்னாடி
வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது
வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது

1074- அன்பிருக்கும் உள்ளங்களே... என்னருமைச் செல்வங்களே


படம் :   வாழ்க்கை ( Vaazhkai )
பாடல் :   
அன்பிருக்கும் உள்ளங்களே..... ( Anbirukkum ullangale )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் , S.P.ஷைலஜா
இசை :  இசைஞானி இளையராஜா 
வருடம் : 1984
இயக்குநர் : C.V. ராஜேந்திரன்
நடிகர்கள் :
சிவாஜி கனேஷன் , அம்பிகா



”வாழ்க்கை”  என்னும் திரைப்படத்திற்காக நம் பாலுஜியும், S.P.ஷைலஜாவும் இணைந்து இப்பாடலை பாடியிருக்கிறார்கள்
இசைஞானியின் இசையில் 1984ம் வருடம் வெளியான இப்படத்தில் சிவாஜி கனேஷன் மற்றும் அம்பிகா நடித்திருக்கிறார்கள்.. C.V. ராஜேந்திரன் படத்தை  இயக்கியிள்ளார்...

பாடலை நம் பாலுஜி ஒரு கலக்கு கலக்கியிருப்பார்... S.P.ஷைலஜா பாடியதை கேட்கும் போது ஓட்டப்பந்தயத்தில் பாலுஜி முன்னே ஓட அவரை விரட்டிப் பிடிக்க இவர் வேக்கமாக ஓடுகிறாரோ என்று என்ன வைக்கும்.. அப்படியொரு வேகம் அவரது குரலில்...

இதே ”வாழ்க்கை”  என்னும் திரைப்படத்தில் இடம் பெற்ற இன்னொரு பாடலான ”காலம் மாறலாம் நம் காதல் மாறுமா” ஏற்கனவே இத்தளத்தில் பதியப்பட்டு விட்டது.

இதோ இப்பொழுது இந்த பாடலை கேட்போம்





பாடல் வரிகள்


அன்பிருக்கும் உள்ளங்களே
என்னருமைச் செல்வங்களே
இன்பச் சுமை எந்தன் தோழிலே
என்ன குறை எந்தன் வாழ்விலே
பாசத்தில் மாலை கட்டி போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்
பாசத்தில் மாலை கட்டி போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

அன்பிருக்கும் உள்ளங்களே .... செல்வங்களே


சரணம் 1

மாலையில் தென்றல் வரும் வாசலைக் கூட்டி விடும்..
மல்லிகை பூக்கள் விடும் வாசனைக் கோலம் இடும்...
மாலையில் தென்றல் வரும் வாசலைக் கூட்டி விடும்..
மல்லிகை பூக்கள் விடும் வாசனைக் கோலம் இடும்...

ஆகயம் ஏவல் செய்யும்
எங்கும் ஆனந்த சாரல் விழும்
பொன்நாள் என்பது.... இன்நாள் வந்தது......

என் வானத்திலும் பொன் மீன் வந்தது
என் கண்ணில் இன்ப ஈரம்
என் நெஞ்சில் அன்பு பாரம்
என்னிடங்கும் நாள் தோறும் சந்தோஷ சங்கீதமே.....

அன்பிருக்கும் உள்ளங்களே .... செல்வங்களே....ஏஏஏஏ....


சரணம் 2

கைகளும் தாழ்ந்ததில்லை... கால்களும் சோர்ந்ததில்லை...
யாசகம் கேட்பதில்லை... பூமியை பார்த்ததில்லை...
கைகளும் தாழ்ந்ததில்லை... கால்களும் சோர்ந்ததில்லை...
யாசகம் கேட்பதில்லை... பூமியை பார்த்ததில்லை...

வானத்தில் மானானவன்....
தலை யாருக்கும் சாயாதவன்...
என் ஆசைகளை..... என் தேவைகளை....
என் வேர்வைகளால் நான் தீர்க்கின்றவன்
என் நெஞ்சில் உண்டு தங்கம்
என் கண்ணில் உண்டு வைரம்.....
என் ராஜாங்கம் என் வீடு.. இங்குண்டு பூ வாசனை...
அன்பிருக்கும் உள்ளங்களே
என்னருமைச் செல்வங்களே
இன்பச் சுமை எந்தன் தோழிலே
என்ன குறை எந்தன் வாழ்விலே
பாசத்தில் மாலை கட்டி போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்
ஆஆ...பாசத்தில் மாலை கட்டி போடுங்கள்
பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

அன்பிருக்கும் உள்ளங்களே .... செல்வங்களே....ஏஏஏஏ....


Followers

பகிர்க