Tuesday, November 30, 2010

1111 எங்கே எங்கே மனிதன் எங்கே



இந்த பாடலுக்காகவே பார்க்க வேண்டும் என்று காத்திருந்தேன். என் துரதிர்ஷ்டம் இந்த படம் வந்த வேகத்துலயே பொட்டிக்கு போய்டிச்சு ஆகையால் எதுவுமே எழுதமுடியவில்லை. கலக்கலான பாட்டை கேட்டு மகிழுங்கள்.

படம்: அசல்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி மற்றும் குழுவினர்
நடிகர்:அஜித்

Get this widget | Track details | eSnips Social DNA


எங்கே எங்கே மனிதன் எங்கே
மனிதன் உடலில் மிருகம் இங்கே
ஓநாய் கூட்டம் நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த உலகம் எங்கே
வலிகளா அந்த வரங்களா
வாழ்க்கை ஞானம் கொண்டேன்
காதல் என்றால் கண்ணில் நித்தம்
கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம்
உறவு மட்டும் பிம்பம் பிம்பம்
உள்ளம் எங்கே நம்பும் நம்பும்
பொய்களின் கரைக்கு நடுவிலே
போவதேன் வாழ்க்கை நதி

ஜனனம் உண்மை மரணம் உண்மை
தந்தானே கடவுள் தந்தானே
அந்த ரெண்டை தவிர எல்லாம் பொய்யா
செய்தானே மனிதன் செய்தானே
கடுகை பிளந்து காணும் போது
வாணம் இருந்திட கண்டேன், நாம்
உறவை திறந்து காணும் போது
உலகம் தெரிந்திட கண்டேன்
என் உடலைத் தொட்டால்
நான் மனிதன் ஆணேன்
என் உயிரைத் தொட்டால்
நான் கடவுள் ஆணேன்

இங்கே இங்கே மனிதன் இங்கே
இமயம் தாண்டும் இதயம் இங்கே
காடும் மரமும் என் காலில் பூக்கள்
குன்றும் மலையும் கூழாங்கற்கள்
சாகும் வாழ்வில்?? உயிர்க்கும் பறவை போல்
சாதிக்கவே பறக்கின்றேன்
சாதிக்கவே பறக்கின்றேன்

Monday, November 29, 2010

1110 அம்மன் கண்ணு ஆட்டு மேலே



//பெண்ணுக்கு இங்கே மீசை இல்லை.. புலி புல்லை தின்பதில்லை.. அம்பு ஆட்டம் போலே நம்ம வாழ்வு.. மேடு பள்ளம் போல இங்கே ஏற்ற தாழ்வு.. போடு போடு சேர்த்திடும் சோறு தானே வயித்துக்கு.. செத்த பின்னே மண்ணு தானே//

படம்: ”அ” (மொழி மாற்றம் படம்)
நடிகர்:உபேந்திரா (கன்னட நடிகர்)
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி குழுவினர்



அம்மன் கண்ணு ஆட்டுமேலே
கள்ளன் கண்ணு நோட்டுமேலே

அம்மன் கண்ணு ஆட்டுமேலே
கள்ளன் கண்ணு நோட்டுமேலே

அம்மன் கண்ணு ஆட்டுமேலே
கள்ளன் கண்ணு நோட்டுமேலே

அவனின் கண்ணு இவளின் மேலே
இவனின் கண்ணு அவளின் மேலே
ஊரார் கண்ணு இவங்க மேலே

அம்மன் கண்ணு ஆட்டுமேலே
கள்ளன் கண்ணு நோட்டுமேலே
அம்மன் கண்ணு ஆட்டுமேலே
கள்ளன் கண்ணு நோட்டுமேலே
அவளின் கண்ணு இவனின் மேலே
இவனின் கண்ணு அவளின் மேலே
ஊரார் கண்ணு இவங்க மேலே

சூர்ப்பனகை பிறந்தாளே
அந்த ராவணன் இறந்தானே

எப்படியெல்லாம் .இருந்தவங்க இன்று இங்கே
டில்லிதனில் மின்னியதெல்லாம் ஜெயிலில் இங்கே??

யானைக்கொரு காலம் தான்
பூனைக்கொரு காலம் தான்
நமக்கு நல்ல காலம் வந்தது ஹோய்

அம்மன் கண்ணு ஆட்டுமேலே
கள்ளன் கண்ணு நோட்டுமேலே
அம்மன் கண்ணு ஆட்டுமேலே
கள்ளன் கண்ணு நோட்டுமேலே
அவளின் கண்ணு இவனின் மேலே
இவனின் கண்ணு அவளின் மேலே
ஊரார் கண்ணு இவங்க மேலே யே ஹெ ஹெ ஹெ

பெண்ணுக்கு இங்கே மீசை இல்லை
புலி புல்லை தின்பதில்லை
அம்பு ஆட்டம் போலே நம்ம வாழ்வு
மேடு பள்ளம் போல இங்கே ஏற்ற தாழ்வு

போடு போடு சேர்த்திடும் சோறு தானே வயித்துக்கு
செத்த பின்னே மண்ணு தானே

அம்மன் கண்ணு ஆட்டுமேலே
கள்ளன் கண்ணு நோட்டுமேலே
அம்மன் கண்ணு ஆட்டுமேலே
கள்ளன் கண்ணு நோட்டுமேலே
அவளின் கண்ணு இவனின் மேலே
இவனின் கண்ணு அவளின் மேலே
ஊரார் கண்ணு இவங்க மேலே ஹோய்

அம்மன் கண்ணு ஆட்டுமேலே
கள்ளன் கண்ணு நோட்டுமேலே
அவளின் கண்ணு இவனின் மேலே
இவனின் கண்ணு அவளின் மேலே
ஊரார் கண்ணு இவங்க மேலே ஹோய்

Friday, November 26, 2010

1109 பொன்னுல பொன்னுல பண்ணுண



//அரசாணி அல்லியம்மா அர்ஜுனன் மேல் ஆத்திரமா.. ஆண் வாட வேண்டான்னா ஆசையும் விடுமா.. அரசாணி அல்லியம்மா அர்ஜுனன் மேல் ஆத்திரமா.. ஆண் வாட வேண்டான்னா ஆசையும் விடுமா .. இந்தா புள்ளே நெஞ்சுக்குள்ளே நேசம் இருக்குது நேரம் கடக்குது.. பல்லாக்குப்போல் உள்ளம் ரெண்டும் தள்ளாடுது //

படம்: சிட்டுக்குருவி
நடிகர்: சிவக்குமார்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, பி.சுசிலா, கோவை பாபு
படாலாசிரியர்: வாலி
இசை:இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA


காவேரி கர(ரை) ஓரத்துல
ஏலாலம்பர லேலா
கன்னிப்பொண்ணு வர நேரத்துல
ஏலாலம்பர லேலா
கூவாத குயில் கூவுதடி
ஏலாலம்பா ஏலாலம்பா
மயிலும் குலுங்கி ஆடுதடி
ஏலாலம்பர லேலா

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. ஆஆஆஆஹ்

பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம்

பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம்

வேந்தம்பட்டி வேங்க குட்டி வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி பந்தயந்தாண்டி
வேந்தம்பட்டி வேங்க குட்டி வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி பந்தயந்தாண்டி
சின்னச்சிட்டு சிக்கிக்கிட்டு பாவம் தவிக்கிது
கோவம் பொறக்குது பக்கம் வர வெக்கம் வந்து போராடுது

பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம்

கொட்டடி சேல கட்டிய பொண்ணு ஏலாலம்பர லேலா
கொட்டடி மேளம் தட்டடி தாளம் ஏலாலம்பர லேலா
முத்திர போட்ட சித்திர பொண்ணே ஏலாலம்பர லேலா
ஏலாலம்பர ஏலாலம்பர ஏலாலம்பர ஏலாலம்பர
மெல்ல சிரிக்கிர கள்ளச்சிரிப்பென்ன
ஏலாலம்பர ஏலாலம்பர ஏலாலம்பர ஏலாலம்பர ஏலா

அரசாணி அல்லியம்மா அர்ஜுனன் மேல் ஆத்திரமா
ஆண் வாட வேண்டான்னா ஆசையும் விடுமா
அரசாணி அல்லியம்மா அர்ஜுனன் மேல் ஆத்திரமா
ஆண் வாட வேண்டான்னா ஆசையும் விடுமா
இந்தா புள்ளே நெஞ்சுக்குள்ளே நேசம் இருக்குது நேரம் கடக்குது
பல்லாக்குப்போல் உள்ளம் ரெண்டும் தள்ளாடுது

பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம்

காவேரி கர(ரை) ஓரத்துல
ஏலாலம்பர லேலா
கன்னிப்பொண்ணு வர நேரத்துல
ஏலாலம்பர லேலா
கூவாத குயில் கூவுதடி
ஏலாலம்பா ஏலாலம்பா
மயிலும் குலுங்கி ஆடுதடி
ஏலாலம்பர ஏலாலம்பர
ஏலாலம்பர ஏலாலம்பர ஏலா
ஏலாலம்பர ஏலாலம்பர
ஏலாலம்பர ஏலாலம்பர ஏலா

Thursday, November 25, 2010

1108 அதிகாலை நான் பாடும் பூபாளமே





//அதிகாலை நான் பாடும் பூபாளமே.. அது கேட்டு உன் நெஞ்சம் சுதி போடுமே.. சுகம் ராகம் தினம் பாடும்.. செவிக்கூட தேனாகா பாயும்// பாடல் பல்லவியைப் போலேயே அமலா படமும். இந்த பாடல் சரணங்களில் சறுக்கி விழாத இதயங்களும் உண்டோ?? அமர்க்க்ளமான மெட்டு... கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.


படம்:புதுப்பாடகன்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா
நடிகர்கள்:விஜயகாந்த், சரத்குமார்.. (அய்ய்ய்ய்ய்...அமலா >> சுந்தர் சாருக்கு இந்த பாடல் சமர்ப்பணம்)
இசை மற்றும் தயாரிப்பு:எஸ்.தாணு

Get this widget | Track details | eSnips Social DNA



அதிகாலை நான் பாடும் பூபாளமே
அது கேட்டு உன் நெஞ்சம் சுதி போடுமே

அதிகாலை நான் பாடும் பூபாளமே
அது கேட்டு உன் நெஞ்சம் சுதி போடுமே
சுகம் ராகம் தினம் பாடும்
செவிக்கூட தேனாகா பாயும்

அதிகாலை நான் பாடும் பூபாளமே
அது கேட்டு உன் நெஞ்சம் சுதி போடுமே

வான்மேகம் யாவும் வாழ்த்துக்கள் கூறும்

தனியாக நானே பரிமாறக்கூடும் ??

வான்மேகம் யாவும் வாழ்த்துக்கள் கூறும்

தனியாக நானே பரிமாறக்கூடும் ??

இளமங்கை பொன்மேனி நீராடி மகிழும்
இளமங்கை பொன்மேனி நீராடி மகிழும்

இதுபோல நாளும் இனிதாக வேண்டும்

அதிகாலை நீ பாடும் பூபாளமே
அது கேட்டு என் நெஞ்சம் சுதி போடுமே
சுகம் ராகம் தினம் பாடும்
செவிக்கூட தேனாகா பாயும்
அதிகாலை நீ பாடும் பூபாளமே
அது கேட்டு என் நெஞ்சம் சுதி போடுமே

மஹராணி எந்தன் மடி சாயும் நேரம்
மணிமாலை பார்வை மலர் அம்பு பாயும்??
மஹராணி எந்தன் மடி சாயும் நேரம்
மணிமாலை பார்வை மலர் அம்பு பாயும்??

பூவிறித்த மஞ்சம் வஞ்சி இவள் நெஞ்சம்
பூவிறித்த மஞ்சம் வஞ்சி இவள் நெஞ்சம்

ஏழேழு ஜன்மம் இது மாறாத சொந்தம்

அதிகாலை நான் பாடும் பூபாளமே
அது கேட்டு உன் நெஞ்சம் சுதி போடுமே
சுகம் ராகம் தினம் பாடும்
செவிக்கூட தேனாகா பாயும்

அதிகாலை நான் பாடும் பூபாளமே
அது கேட்டு நம் நெஞ்சம் சுதி போடுமே

Tuesday, November 23, 2010

1107 ஏனோ என்னை அழைக்களானாய்..



//வெள்ளி கொழுசு கட்டி.. தந்தன தந்தன தந்தன தந்தன.. துள்ளி நடக்கும் சுட்டி.. தந்தன தந்தன தந்தன தந்தன.. வெள்ளி கொழுசு கட்டி.. துள்ளி நடக்கும் சுட்டி.. விடிகாலை பனிபோல வந்த என் தங்ககட்டி.//

படம்: தூதுபோ செல்லக்கிளியே
இசை:தேனிசை தென்றல் தேவா
பாடலாசிரியர்: காளிதாஸ்

Get this widget | Track details | eSnips Social DNA


ஏனோ என்னை அழைக்களானாய் மடமானே..
மடமானே..
இன்று எனக்கு நீ உரைத்தால் இசைவு கேட்டேன் நானே.. நானே
ஏனோ என்னை அழைக்க..
ஏனோ என்னை அழைக்க..
ஏனோ என்னை அழைக்க

ஏனோ என்னை அழைக்களானாய் அழகு மடமானே..
மடமானே..
ஏதோ ரகசியத்தை காதில் உரைக்க வந்த தேனே
அடி தேனே
வெள்ளி கொழுசு கட்டி
தந்தன தந்தன தந்தன தந்தன
துள்ளி நடக்கும் சுட்டி
தந்தன தந்தன தந்தன தந்தன
வெள்ளி கொழுசு கட்டி
துள்ளி நடக்கும் சுட்டி
விடிகாலை பனிபோல வந்த என் தங்ககட்டி

ஏனோ உன்னை அழைக்களானாய் அழகு மடமானே..
மடமானே
காதல் ரகசியத்தை காதில் உரைப்பதற்கு தானே
அடி தேனே

சொக்கு பொடியை எடுத்து முக்கத்தில் தெளிச்சு
அட மனசை கெடுத்தாயே
செக்கு உலக்கை போல வளைச்சு வளைச்சு
என்னை நீ தேடிப் பிடிச்சாயே

சின்னப்பொண்ணு கண்ணுக்குள்ள வெட்கம் வழிய
சிமிட்டுது சிமிட்டுது மேல் முழியே
சந்தனப்பூ கண்ணம் இரண்டும் செவத்திருக்க
சம்மதத்தை தந்திடுச்சு கட்டிப்புடிக்க
அடி தாவி நடக்கும் தாழம் குளையே

ஏனோ உன்னை அழைக்களானாய் அழகு மடமானே..
மடமானே
காதல் ரகசியத்தை காதில் உரைப்பதற்கு தானே
அடி தேனே

மஞ்சள் குளிச்ச முகமே மலர்ந்த சுகமே
மணம் கமழும் மலர் சரமே
கொஞ்சிக் குலவும் குயிலே குலுங்கும் மணியே
குலுங்கி வந்த மாலை பொன்விழியே

ஹோ கரும்புக்குள் இனிக்க வளர்த்து வெச்சேன்
எரும்புக்குள் அதனால் எடுத்து வெச்சேன்
அரும்புக்குள் மணக்க அடக்கி வெச்சேன்
ஹே அதனால் உனக்கும் கொடுத்து வெச்சேன்
நீ வாரி அணைச்சா வாசம் கொடுப்பேன்

ஏனோ என்னை அழைக்களானாய் அழகு மடமானே..
மடமானே..
காதல் ரகசியத்தை காதில் உரைப்பதற்கு தானே
அடி தேனே

வெள்ளி கொழுசு கட்டி
தந்தன தந்தன தந்தன தந்தன
துள்ளி நடக்கும் சுட்டி
தந்தன தந்தன தந்தன தந்தன
வெள்ளி கொழுசு கட்டி
துள்ளி நடக்கும் சுட்டி
விடிகாலை பனிபோல வந்த என் தங்ககட்டி

ஏனோ உன்னை அழைக்களானாய் அழகு மடமானே..
மடமானே
ஏதோ ரகசியத்தை காதில் உரைக்க வந்த தேனே
அடி தேனே

Tuesday, November 16, 2010

1106 ஊரோரம் கம்மாக் கரை




//நாத்து நட போகையிலே ஆத்தங்கரை ஓரம் நின்னு.. பார்த்து பார்த்து மெல்ல சிரிச்சே
சிரிச்சு ஏக்கத்துல கிறங்க வெச்சே அம்மாடி..//

படம்:சோலையம்மா
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்பி.பி, டாக்டர் எஸ்.ஜானகி
இசை:தேனிசை தென்றல் தேவா
இயக்குநர்:கஸ்தூரி ராஜா

Get this widget | Track details | eSnips Social DNA


ஊரோரம் கம்மாக் கரை
வேறு யாரும் பார்க்கவில்ல

ஊரோரம் கம்மாக் கரை
வேறு யாரும் பார்க்கவைல்ல
மாந்தோப்பு பக்கத்திலே
பொன்னிருக்கா வெட்கத்திலே

கூட்டாஞ்சோறு ஆக்கித்த்ர வா
உன்னோட கூடச் சேர்ந்து பாட்டு சொல்லவா
கூட்டாஞ்சோறு ஆக்கித்த்ர வா
உன்னோட கூடச் சேர்ந்து பாட்டு சொல்லவா வா வா

ஊரோரம் கம்மாக் கரை
வேறு யாரும் பார்க்கவில்ல

வைகை ஓரத்துல பைய பைய என்னைத் தொட்டு
மையலுக்கு பாய விரிச்சே ஹோய்
கைப்பொட்டு மையலுக்கு பாயவிரிச்சே
வைகை ஓரத்துல பைய பைய என்னைத்தொட்டு
மையலுக்கு பாய விரிச்சே ஹோய்
கைப்பொட்டு மையலுக்கு பாயவிரிச்சே

வெயிலுக்கு தாகமின்னு நிழலுக்கு வந்த என்னை
செய்யிலுகுள் அடைச்சு வெச்சே
கண்ணால செயிலுக்குள் அடைச்சு வெச்சே
அம்மாடி
சொக்குப் பொடி போடப் பாக்குற
ஆத்தாடி எக்குத் தப்பா ஏதோ கேக்குற மாமாயோய்

ஊரோரம் கம்மாக் கரை
வேறு யாரும் பார்க்கவில்ல

சாலைமலைக் காட்டுக்குள்ள
சாரை மழை கூடுதுன்னு சாத்தச் சொல்லி கையப்புடிச்சே
பொல்லாத நோக்கத்துல என்னை அணைச்சே ஹோய்
சாலைமலைக் காட்டுக்குள்ள
சாரை மழை கூடுதுன்னு சாத்தச் சொல்லி கையப்புடிச்சே
பொல்லாத நோக்கத்துல என்னை அணைச்சே ஹஹ

நாத்து நட போகையிலே ஆத்தங்கரை ஓரம் நின்னு
பார்த்து பார்த்து மெல்ல சிரிச்சே
சிரிச்சு ஏக்கத்துல கிறங்க வெச்சே அம்மாடி

ஓடத் தண்ணி போலப் பாயுற
ஆத்தாடி வாடைக் காத்து போல வீசுற மாமோய்

ஊரோரம் கம்மாக் கரை ஓஓஓஒ
வேறு யாரும் பார்க்கவில்ல ஓஓஓஒ
மாந்தோப்பு பக்கத்திலே
பொன்னிருக்கா வெட்கத்திலே

கூட்டாஞ்சோறு ஆக்கித்த்ர வா
உன்னோட கூடச் சேர்ந்து பாட்டு சொல்லவா வா வா

ஊரோரம் கம்மாக் கரை ம்ம்ம்ம்ம்
வேறு யாரும் பார்க்கவில்ல ஹஹஹஹ

1105 மாலை நேரம் தேவன் போட்ட



//மாலை நேரம் தேவன் போட்ட கோலம் என்னம்மா.. மாறன் வந்து நெஞ்சில் போட்ட தாளம் என்னம்மா.. அதுதானே இன்ப ராகம்.. இனி என்னாளூம் இன்ப மாகும்.//

படம்: அண்ணி என் தெய்வம்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, எஸ்.பி.எஸ்

Get this widget | Track details | eSnips Social DNA


மாலை நேரம் தேவன் போட்ட கோலம் என்னம்மா
மாறன் வந்து நெஞ்சில் போட்ட தாளம் என்னம்மா

அதுதானே இன்ப ராகம்
இனி என்னாளூம் இன்ப மாகும்

நடந்ததை நினைக்கையில் மனசுக்குள் இனித்திடும் சும்மா
அடிக்கடி அதை இனி தவிக்குது மனம் இது காலம் என்னம்மா

இதுதானே பருவ காலம்
இது ரதி தேவன் கொடுத்த தாகம்

உள்ளே பூமலர் உன் நெஞ்சம்
என்றும் அதில் தாயின் நெஞ்சம்
எந்தன் நெஞ்சிலும் ஓர் எண்ணம்
அங்கே மின்னும் உன் வண்ணம்
கண்ணா நானும் உன்னை சேரும்
நன்னாள் ஏனும் என் மன்னா
கங்கை வெள்ளம் பொங்கும் நேரம்
இன்பம் வேண்டும் என் கண்ணா
இன்பம் வேண்டும் என் கண்ணா

மாலை நேரம் தேவன் போட்ட கோலம் என்னம்மா
மாறன் வந்து நெஞ்சில் போட்ட தாளம் என்னம்மா

அதுதானே இன்ப ராகம்
இனி என்னாளூம் இன்ப மாகும்

முத்துக்கள் தெளிக்கிற வண்ணச்சிரிப்பு
மோகத்தை கொடுக்குது உந்தன் அழைப்பு
தொட்டதும் வந்தது வெட்கம் எனக்கு
சொர்ர்க்கத்தை காட்டுது உந்தன் அழைப்பு
ஏதோ ஒரு தாகம் தினம் வந்தாடுது
எங்கோ என்னை கைதந்து கொண்டோடுது

அது தானே தேவன் லீலை
இனி என்னாளும் இன்ப வேளை

Monday, November 15, 2010

1104 மெல்ல மெல்ல விடிந்ததே



பெண்கள் படத்தில் இந்த இனிமையான பாடல் வருகிறது இப்படத்தின் தகவல்களை தேடிப் பிடித்து ஒலிக்கோப்புடன் அனுப்பி வைத்த திரு.கோபாலகிருஷ்னன் சார் அவர்களூக்கு பாலுஜி பிரியர்கள் சார்பாக நன்றி. இதோ அவருடன் நாமும் சேர்ந்து கேட்டு மகிழ்வோம்.

படம்: பெண்கள்
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்:ஆகாஷ், திவ்யாஸ்ரீ, மணிவண்ணன், அஷ்வினி, ஷர்மிலி
தயாரிப்பு:ஸ்ரீநாத்
இசை:பரத்வாஜ்
வருடம்:2001

Get this widget | Track details | eSnips Social DNA


மெல்ல மெல்ல விடிந்ததே
வண்ண வண்ண விடியலே
மெல்ல மெல்ல விடிந்ததே
வண்ண வண்ண விடியலே

சூரியனை ஒரு கையில் சந்திரனை மறு கையில்
தாங்கி விடும் சக்தி ஒன்று உனர்ந்திடுவாய்
நட்சத்திர கூட்டங்களை அச்சுறுத்தும் உன் விழிகள்
கண்ணீர் விட மட்டும் இல்லை துடைத்திடுவாய்
புயலும் மழையும் ஓய்ந்தது கண்ணே
பூக்கள் வளர்க்க வருவாயோஓஓஓஒ
புதிய வாழ்க்கை பிற்ந்ததா பெண்ணே
இருளை சலவை செய்வாயோ
விடியலை அள்ள வா வா ஓடி வா
கணவெங்கும் இங்கே நிஜமாகும் கண்ணெதிரே
கலைந்தடும் விண்ணும் சுகமாகும் வாழ்வதிலே

மெல்ல மெல்ல விடிந்ததே
வண்ண வண்ண விடியலே

மெல்ல மெல்ல விடிந்ததே
வண்ண வண்ண விடியலே

சின்ன பெண்ணே கண் வைத்து பாரு
துண்பம் இல்லை என்றே பாடு
அந்த விண்ணும் உனக்கே
இந்த மண்ணும் உனக்கே
சொந்தம் விண்ணில் இருக்கே
தடைகளை கடந்து வா வா ஓடி வா

திறந்தாச்சு எட்டு திசைகளை இன்று உனக்காகவே
நீ வந்து ஒட்டு உரசொலி முன் சுகம் தருமே
திறந்தாச்சு எட்டு திசைகளை இன்று உனக்காகவே
நீ வந்து ஒட்டு உரசொலி முன் சுகம் தருமே

மெல்ல மெல்ல விடிந்ததே
வண்ண வண்ண விடியலே

தன்னை தானே சுற்றும் பூமி
உன்னை சுற்றி கும்மி கொட்டும்
விண்ணை முட்டும் வேகத்தோடு புறப்படுவாய்
உந்தன் வழி பாதையாகும்
உந்தன் மொழி வேதமாகும்
சொந்தம் கொண்டு வாழ்வுதனை உயர்த்திடுவாய்
வசந்தம் வந்து வாழ்துக்கள் சொல்லும்
வாசல் திறந்தே வைப்பாயோஓஓஓஒ
வளரும் பிறையின் வளமாய் உனக்கும்
நீயும் நிலவாய் ஜொலிப்பாயோ
சிறகினை விரித்து வா வா பறந்து வா
வழி எங்கும் உன்னை வரவேற்கும் ஊர்வலமே
விழி போல உன்னை தினம் பார்கும் என் முகமே

மெல்ல மெல்ல விடிந்ததே
வண்ண வண்ண விடியலே
மெல்ல மெல்ல விடிந்ததே
வண்ண வண்ண விடியலே

சூரியனை ஒரு கையில் சந்திரனை மறு கையில்
தாங்கி விடும் சக்தி ஒன்று உனர்ந்திடுவாய்
நட்சத்திர கூட்டங்களை அச்சுறுத்தும் உன் விழிகள்
கண்ணீர் விட மட்டும் இல்லை துடைத்திடுவாய்
புயலும் மழையும் ஓய்ந்தது கண்ணே
பூக்கள் வளர்க்க வருவாயோஓஓஓஒ
புதிய வாழ்க்கை பிற்ந்ததா பெண்ணே
இருளை சலவை செய்வாயோ
விடியலை அள்ள வா வா ஓடி வா
கணவெங்கும் இங்கே நிஜமாகும் கண்ணெதிரே
கலைந்தடும் விண்ணும் சுகமாகும் வாழ்வதிலே

Friday, November 12, 2010

1103 கையாலே உன்னைத்தொட்டால்




//அழகான பெண்கள் ஏசும் போதும் இன்பம்.. அடிக்கின்ற போதோ கோடிக்கோடி இன்பம்
பெண்ணே என்னை இன்னும் கொஞ்சம்.. நீயும் வைதால் என்ன//

அடடே.. அடடே இது போன்ற கலக்கல் பாடல் கேட்டு எவ்வ்வ்வ்ளோ நாளாயிற்று?.... இதோ உங்களூக்காக.

படம்:உயிரே உனக்காக
பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகி
நடிகர்: மோகன்,நதியா
இசை: லக்‌ஷ்மிகாந்த் பியாரிலால்
வருடம்:1986

Get this widget | Track details | eSnips Social DNA


யூ... யூ... சீட்.... என்னையே ஏமாத்திட்டீங்களா?

ஹே..ஏஏஏஏ.... உமா.. ஹா..

கையாலே உன்னைத் தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
கையாலே உன்னைத் தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

உன் சொல்லை கேட்டு நான் ஓடி வந்து பார்த்து
உன் சொல்லை கேட்டு நான் ஓடி வந்து பார்த்து
உன்னை நம்பி இங்கே வந்தால் தொல்லைதானோ சொல்லு

கையாலே உன்னைத் தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
கையாலே உன்னைத் தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

உன் சொல்லை கேட்டு நான் ஓடி வந்து பார்த்து
உன் சொல்லை கேட்டு நான் ஓடி வந்து பார்த்து
உன்னை நம்பி இங்கே வந்தால் தொல்லைதானோ சொல்லு

ஹேஏஏஏ கையாலே உன்னைத் தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
கையாலே உன்னைத் தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

உயிரே உனக்காக எதையும் செய்வேனே
ஙெ..ஹஹா
உயிரை கேட்டாலும் அதையும் தருவேனே

ஏகாந்த நெஞ்சில் ஏக்கம் தோன்றும் போது
ஏதேதோ பேச ஆண்கள் உள்ள போது

இதழே உன்னோடு.. இனிமை காணாது
இளமை தூங்காது.. இதயம் ஸ்ஸ்தாங்காது

நீ சொல்லும் வார்த்தை உண்மையாகும் என்றால்
நான் சொல்லும் ஒன்றை நீயும் கேட்க வேண்டும்
மங்கை எந்தன் பின்னால் சுற்றும் வேலை வேண்டாம் போய்வா..

ஹஹ
கையாலே உன்னைத் தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
கையாலே உன்னைத் தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

வழியை மறிக்காதே கனியை ரசிக்காதே
திருடும் மனத்தோடு இனிமேல் பார்க்காதே.. ஹ

பழத்தோட்டம் தன்னை பார்க்கும் இந்த வேளை
பறிக்காமல் இங்கே போவதேது காளை

வழக்கம் மாற்றாதே.. பழக்கம் தொடுத்தேனே
முதுகு புண்ணாக ஹஹ முடிவை எடுக்காதே

அழகான பெண்கள் ஏசும் போதும் இன்பம்
அடிக்கின்ற போதோ கோடிக்கோடி இன்பம்
பெண்ணே என்னை இன்னும் கொஞ்சம்
நீயும் வைதால் என்ன

ஹேஏஏஏ
கையாலே உன்னைத் தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
கைய்ய்ய்யாலே உன்னைத் தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

உன் சொல்லை கேட்டு நான் ஓடி வந்து பார்த்து
உன் சொல்லை கேட்டு நான் ஓடி வந்து பார்த்து
உன்னை நம்பி இங்கே வந்தால் தொல்லைதானோ சொல்லு
ஹெஹே
கையாலே உன்னைத் தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
ஹஹஹா
கையாலே உன்னைத் தொட்டால் போதும்
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

Wednesday, November 03, 2010

1102 வண்ணத்துப்பூச்சி சிரிக்குது


PunjabiDil.com | Butterfly | Forward this Graphic



//துல்லியமா நெய்த சேலை கண்ணைப்பறிக்குது.. நல்லா தொட்டுப் பார்த்தாதான் தெரியும் சேலை இருப்பது//


படம்:குருவிக்கூடு
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, வாணிஜெயராம்
இயக்குனர்: பி. மாதவன்
தயாரிப்பாளர்: ஆர். எம். கந்தசாமி
மணிமேகலை பிக்சர்ஸ்
நடிப்பு: சுதாகர், ரீனா
இசையமைப்பு: கே. வி. மகாதேவன்
வருடம்:1980

Get this widget | Track details | eSnips Social DNA



வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது
இது உழைக்கும் கரத்தில் உருவமான உயர்ந்த நூலாடை
இது பளபளவென உடலில் ஜொலிக்கும் அழகு மேலாடை

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது
இது உழைக்கும் கரத்தில் உருவமாகும் உயர்ந்த நூலாடை
இது பளபளவென உடலில் ஜொலிக்கும் அழகு மேலாடை

சிவப்பு பொண்ணுக்கு கட்டிப்பாரு சீனத்து பட்டு அது
சித்திரம் போலே இருக்கும் சிங்காரச் சிட்டு
சிவப்பு பொண்ணுக்கு கட்டிப்பாரு சீனத்து பட்டு அது
சித்திரம் போலே இருக்கும் சிங்காரச் சிட்டு

பச்சை படவை தான் புருசன் இச்சைக்குகந்த்து
பாதி மஞ்சல் பாதி சுகத்தை பருவம் கொடுத்த்து

வண்ணத்துப்பூச்சி
சிரிக்குது
பல வடிவம் காட்டி
இழுக்குது
இது உழைக்கும் கரத்தில் உருவமான
உயர்ந்த நூலாடை
இது பளபளவென உடலில் ஜொலிக்கும்
அழகு மேலாடை

துல்லியமா நெய்த சேலை கண்ணைப்பறிக்குது
நல்லா தொட்டுப் பார்த்தாதான் தெரியும் சேலை இருப்பது
துல்லியமா நெய்த சேலை கண்ணைப்பறிக்குது
நல்லா தொட்டுப் பார்த்தாதான் தெரியும் சேலை இருப்பது
வெள்ளை என்பது நல்ல வேட்டி நெய்வது
சன்னமான மனிதன் பட்டு சட்டை ஆவது
வண்ணத்துப்பூச்சி
சிரிக்குது
பல வடிவம் காட்டி
இழுக்குது
இது உழைக்கும் கரத்தில் உருவமாகும்
உயர்ந்த நூலாடை
இது பளபளவென உடலில் ஜொலிக்கும்
அழகு மேலாடை

கச்சிதமா பாவு போட்டு தறிக்கு போகுது
அங்கே கை இரண்டும் கால் இரண்டும் வேலை செய்யுது
கச்சிதமா பாவு போட்டு தறிக்கு போகுது
அங்கே கை இரண்டும் கால் இரண்டும் வேலை செய்யுது
வெள்ளை கருக்குது இதில் கலையும் இருக்குது
வீட்டுக்கு ஒரு தறியிருந்தா ஆடை கொடுக்குது

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது
இது உழைக்கும் கரத்தில் உருவமாகும் உயர்ந்த நூலாடை
இது பளபளவென உடலில் ஜொலிக்கும் அழகு மேலாடை

ஏண்டி கண்ணே உனக்கு தேவை இருபது முழமா

அட என் உடம்பு உன் கண்ணுக்கு அத்தனை கணமா

ஏண்டி கண்ணே உனக்கு தேவை இருபது முழமா

அட என் உடம்பு உன் கண்ணுக்கு அத்தனை கணமா

கையில் எடுக்கவா எடையை கணக்கு பார்க்கவா

காசுகூட செலவில்லாம கதையை முடிக்கவா

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது
இது உழைக்கும் கரத்தில் உருவமாகும் உயர்ந்த நூலாடை
இது பளபளவென உடலில் ஜொலிக்கும் அழகு மேலாடை

வண்ணத்துப்பூச்சி சிரிக்குது பல வடிவம் காட்டி இழுக்குது
இது உழைக்கும் கரத்தில் உருவமாகும் உயர்ந்த நூலாடை
இது பளபளவென உடலில் ஜொலிக்கும் அழகு மேலாடை

Followers

பகிர்க