Friday, December 31, 2010

1117 ஊர் ஊரா போகிற மேகக் கூட்டமே

,,

//ஊர் ஊரா போகிற மேகக் கூட்டமே.. என் பங்கிளி போக கண்டீரோ.. ஊருக்கே விளக்கேற்றும் சூரியரே. என் தாமரைப் பூவை கண்டீரோ.. போன திசைப் புரியலையே
பொசுங்குதடி என் மனசு.. புங்கமர கிளைத் தொங்க.. தூண்டுதடி என் உசிரு.. நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயே நீ// இனிமையான இதமான இதயத்தையே அதிரவைக்கும் சீரான தாளத்துடன் அடெங்கப்பா என்னவொரு சோகம் என்னவொரு சோகம். கேளூங்கள் இந்த பாட்டை நம் மனதில் இந்த வருடத்தில் மண்டிகிடந்த எல்லா சோகங்களும் தோண்டி எடுத்துக்கொண்டு போய்விடும். இனி வரும் புத்தாண்டில் மகிழ்ச்சியாக வாழ்வோம் என்று மனதார புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

படம்:சொக்கத்தங்கம்
பாடியவர்ள் டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்கள்: விஜயகாந்த்,சவுந்தர்யா
இசை:தேவா

Get this widget | Track details | eSnips Social DNA


ஊர் ஊரா போகிற மேகக் கூட்டமே
என் பங்கிளி போக கண்டீரோ
ஊருக்கே விளக்கேற்றும் சூரியரே
என் தாமரைப் பூவை கண்டீரோ
போன திசைப் புரியலையே
பொசுங்குதடி என் மனசு
புங்கமர கிளைத் தொங்க
தூண்டுதடி என் உசிரு
நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயே நீ

ஊர் ஊரா போகிற மேகக் கூட்டமே
என் பங்கிளி போக கண்டீரோ

பட்டாப் போட்டு என்னைத் தானே
பதிவாக்கி வெச்சாலே
பாதியிலே வீதி நிறுத்தவா
சிக்கி முக்கி கண்ணால் தானே
தீயைப் பத்த வெச்சாலே
தீயில் என்னை வாட்டி எடுக்கவா ...ஆஆ..ஆஆஆ
அவ நாகப்பாம்பா பாய்ஞ்சிருஞ்சா
நினைவு தப்பி சாய்ஞ்சிருப்பேன்
அவ காதல் பாம்பா பாய்ஞ்சதினால்
சிறுக சிறுக சாகிறேனே
கண்ணம்மா மனம் கல்லாமா
பதில் நீ கூறமா

செக்கு இழுக்கும் மாட்டைப் போலே
என்னைச் சுத்தி வந்தாயே
செக்கில் என்னை ஆட்டிப்பார்ப்பதேன்
ஈ எறும்ப கொன்னாக்கூட பாவம் என்று சொன்னாயே
என்னைக் கொன்னு மண்ணில் புதைப்பதேன்..ஏஏஏஏ
என் நெஞ்சினில் வாளை வீசியிருந்தால்
வீர மரணம் கிடைச்சிருக்கும்.. நீ
முதுகில வாளை வீசியதால்
மானம் இழந்து சாகிறனே
நியாயமா இந்த காயம் தான்.. ஆஆஆறாதமா

ஊர் ஊரா போகிற மேகக் கூட்டமே
என் பங்கிளி போக கண்டீரோ
ஊருக்கே விளக்கேற்றும் சூரியரே
என் தாமரைப் பூவை கண்டீரோ
போன திசைப் புரியலையே
பொசுங்குதடி என் மனசு
புங்கமர கிளைத் தொங்க
தூண்டுதடி என் உசிரு
நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயே நீ

Thursday, December 30, 2010

1116 திறவாய் நீ கண்ணே திறவாய்



//திறவாய் நீ கன்னே திறவாய் நீ.. ஆஆஆஆ எதை...? ஹெ.. திறவாய் நீ கதவை திறவாய் நீ.. திறவாய் நீ கன்னே திறவாய் நீ.. திருப்பதி கொடையே என் திருத்தனி மலையே
திருப்பதி கொடையே//

இந்த கலக்கலான பாடலை ரொம்ப நாள் முன்னாடியே கோவை கோபாலகிருஷ்னன் சார் விரும்பி கேட்ட பாடல் அவருடன் நாமும் கேட்டு மகிழ்வோம்.


திரைப்படம்: பாரு பாரு பட்டணம் பாரு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்
இசை: இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA


திறவாய் நீ கன்னே திறவாய் நீ
ஆஆஆஆ எதை...? ஹெ
திறவாய் நீ கதவை திறவாய் நீ
திறவாய் நீ கன்னே திறவாய் நீ
திருப்பதி கொடையே என் திருத்தனி மலையே
திருப்பதி கொடையே
என்
திருத்தனி மலையே
ஒரு சந்தன காவடி தூக்கறேன் பூங்கொடியே

திறவாய் நீ கன்னே திறவாய் நீ
திறவாய் நீ கன்னே திறவாய் நீ

ஆசை வந்தாச்ச்சு அப்பன் சொல்ல தள்ளூ
தள்ளு
அடியே ஆண் பாவம் வேண்டாம்னு சொல்லு

வாழ்க்கை வேணுமின்னு பொம்பளதான் கேட்பா
புருஷன் நான் கேட்டா போடுறயே தாழ்பா

யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி
யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி

உன்னைப் புடிச்சேன் கட்டி அணைப்பேன்
சொர்க்க கதவை தட்டி திறப்பேன்
ரொக்க பணத்தில் பணத்தில் துள்ளி குதிப்பேன்
றெக்கை இன்றி வானத்தில் பறப்பேன்

திறவாய் நீ கன்னே திறவாய் நீ
திறவாய் நீ கன்னே திறவாய் நீ
திருப்பதி கொடையே என் திருத்தனி மலையே
திருப்பதி கொடையே
என் திருத்தனி மலையே ஏஏ
ஒரு சந்தன காவடி தூக்கறேன் பூங்கொடியே

திறவாய் நீ கன்னே திறவாய் நீ
திறவாய் நீ கன்னே திறவாய் நீ

மாங்கா மடையனுக்கு மாரிக்கண்னு குழந்தை??
ஆமா
பழனி தடியனுக்கு நீயும் இப்ப உடந்தை
குருவும் சுக்கிரனும் கூடி வரும் போது
ஆமா
குறுக்கே நிற்குது கூறு கெட்ட ஆளு
தாலி கட்டி சன்யாசி ஆக்கியதும் ஏனோ
தாலி கட்டி சன்யாசி ஆக்கியதும் ஏனோ

பொன்ன விளக்கி வீட்டை விளக்கும்?? அத்தை எதுக்கு??
உன்னை தவிற வேறு கதியே இல்லை எனக்கு
ஆசைகள் உன்னிடம் இருக்கு

திறவாய் நீ கதவை திறவாய் நீ
திறவாய் நீ கன்னே திறவாய் நீ
திருப்பதி கொடையே என் திருத்தனி மலையே
திருப்பதி கொடையே
என்
திருத்தனி மலையே
ஒரு சந்தன காவடி தூக்கறேன் பூங்கொடியே

திறவாய் நீ கதவை திறவாய் நீ
திறவாய் நீ கன்னே திறவாய் நீ

திறவாய் நீ கதவை திறவாய் நீ
திறவாய் நீ கன்னே திறவாய் நீ

Tuesday, December 14, 2010

1115 ஆப்பத்துக்கு தேங்கா பாலு



..ஒரப்பு சட்டினியே வா..வா..வா.. உன் உதட்ட உரசிக்க தா..தா..தா.. கிச்சலி சம்பாச் சோறு.. என் நெத்திலி கருவாடு.. கிச்சலி சம்பாச் சோறு.. என் நெத்திலி கருவாடு
உருளைக்கிழங்கு குருமா.. உன்னைப்போல வருமா.. உன் உடம்ப இதமா தாம்மா//

சபாஷ் பாபு, லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் நடித்த ‌இந்த படத்தை குழந்தைகள் பட லிஸ்டில் சேர்த்திருந்தார்களாம் என்று இணையதளங்கள் சொல்லுகின்றன (அட..ங்கொக்கமக்கா…) இந்த பாடலில் வருகிற வரிகள் தான் மேலே பாலுஜி அவர் பணியை அமர்க்களமாக செய்திருக்கிறார். ஏதோ சிச்சுவேசன் சாங் போல இருக்குப்பா...

இந்த பாடலை பதியுங்கள் என்று எனக்கு அனுப்பிவைத்த கோவை கோபாலகிருஷ்னன் சாருடன் சேர்ந்து நாமும் கேட்போம். பாடலை அனுப்பிவைத்த அன்பருக்கு நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: சபாஷ் பாபு
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, டி.ராஜேந்தர்
நடிகர்: சிலம்பரசன்
இசை:டி.ராஜேந்தர்
வருடம்:1993

யம்மாலே யம்மாலே
என் ஆசை உம்மேலே
யம்மாலே யம்மாலே
என் ஆசை உம்மேலே

ஆப்பத்துக்கு தேங்கா பாலு
அய்யவுக்கு நீதான் ஆளு
ஐசாலா....என் ஐசாலா..
மல்லிகைப்பூ இட்டிலியும்
மாமனும் தான் பட்டு நீயும்
மையாலா....ஒய் மையாலா
ஒரப்பு சட்டினியே வா
உன் உதட்ட உரசிக்க தா..ஏய்
ஒரப்பு சட்டினியே வா..வா..வா
உன் உதட்ட உரசிக்க தா..தா..தா
கிச்சலி சம்பாச் சோறு
என் நெத்திலி கருவாடு
கிச்சலி சம்பாச் சோறு
என் நெத்திலி கருவாடு
உருளைக்கிழங்கு குருமா
உன்னைப்போல வருமா
உன் உடம்ப இதமா தாம்மா

ஆப்பத்துக்கு தேங்காய் பாலு
அய்யவுக்கு நீதான் ஆளு
ஐசாலா....என் ஐசாலா.. ஹ..ஹ

இடையை பார்த்துதான் ஐலேசா
என் இதயம் துடிக்குது அது லேசா
நடையை பார்த்துதான் ஐலேசா
நாடி நரம்பு துடிக்குது அது லேசா
உதட்டப்பார்த்து தான் ஐலேசா
என் உதிரம் கொதிக்குது ஹஹ அது லேசா
உரசப்பாக்குதான் ஐலேசா
என் உதிரம் கொதிக்குது ஹஹ அது லேசா
ஹரஹர ஹர சம்போ சம்போ
உன்னைப்பார்த்தா உள்ளுக்குள்ளே வம்போ வம்போ

ஆப்பத்துக்கு தேங்காய் பாலு
அய்யவுக்கு நீதான் ஆளு
ஐசாலா....என் ஐசாலா.. ஹ..ஹ

யம்மா யம்மா லேசா லேசா
யம்மா யம்மா லேசா லேசா

துடுப்பு போடத்தான் பழகோனும் உன்
இடுப்ப பார்த்துதான் மனசாரும்
கடலைப் பார்த்தாலே அலையடிக்கும் உன்
உடலைப் பார்த்தாலே புல்லரிக்கும்
வலையைப் போட்டாலே மீன் மாட்டும்
விழி மீனே வலைப் போட்டா என்னாகும்
வலையைப் போட்டாலே மீன் மாட்டும்
விழி மீனே வலைப் போட்டா என்னாகும்
காத்தோடு மனம் நிறைந்த கறம் மசாலா
என் கச்சேரிக்கு நீதானடி ஏத்த தபேலா
ததிகனத்தோம் காத்தோடு மனம் நிறைந்த கறம் மசாலா
என் கச்சேரிக்கு நீதானடி ஏத்த தபேலா
காத்தோடு மனம் நிறைந்த கறம் மசாலா
என் கச்சேரிக்கு நீதானடி ஏத்த தபேலா

மல்லிகைப்பூ இட்டிலியும்
மாமனும்தான் பட்டு நீயும்
மையாலா....ஒய் மையாலா
ஒரப்பு சட்டினியே வா
உன் உதட்ட உரசிக்க தா..
ஒரப்பு சட்டினியே வா..வா..வா
உன் உதட்ட உரசிக்க தா..தா..தா
கிச்சலி சம்பாச் சோறு
என் நெத்திலி கருவாடு
கிச்சலி சம்பாச் சோறு
என் நெத்திலி கருவாடு
உருளைக்கிழங்கு குருமா
உன்னைப்போல வருமா
உன் உடம்ப இதமா தாம்மா

ஆப்பத்துக்கு தேங்காய் பாலு
அய்யவுக்கு நீதான் ஆளு
ஐசாலா....என் ஐசாலா..
ஐசாலா..ஐசாலா..ஐசாலா..

Wednesday, December 08, 2010

1114 தேன் சுமந்த முல்லை தானா




//உந்தன் கண்களில் சூரியன் சந்திரன் உள்ளது.. அந்த கண்களை மூடினால் என்ன தான் செய்வது.. கூந்தல் என்னும் கூரைக்குள்ளே .. சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே
கூந்தல் என்னும் கூரைக்குள்ளே .. சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே.. காதல் என்னும் சண்டை இன்று பற்ற கூடுமா.. வின்னை விட்டு பூமி இங்கே சுற்றக்கூடுமா ..குற்றம் என்ற ஒன்னே தானா//

இதுவும் ஒரு கலக்கல் பாட்டு ரொம்ப நாள் கழித்து கேட்கிறேன்.


படம்:கைராசிக்காரன்
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி & குழுவினர்
இசை:இளையராஜா
வருடம்:1984

Get this widget | Track details | eSnips Social DNA


தேன் சுமந்த முல்லை தானா
வானவில்லின் பிள்ளை தானா
வண்ண வண்ண வைரம் எல்லாம்
கண்ணில் கொண்டு வைத்தாளே
கண்கள் என்றும் அம்பைக் கொண்டு
நெஞ்சில் இன்று தைத்தாளே

தேன் சுமந்த முல்லை தானா
வானவில்லின் பிள்ளை தானா

பூக்கள் மொத்தமாய் வீழ்ந்ததால் பூமியும் வந்தது??
பாவை பாதமே பட்டதால் ஆறுதல் தந்தது??
தீண்ட வந்த தென்றல் இன்று
தாண்டவில்லை பெண்ணைக்கண்டு
தீண்ட வந்த தென்றல் இன்று
தாண்டவில்லை பெண்ணைக்கண்டு
அந்த சொர்க்கம் பெண்ணும் கண்ணும் வாழ வந்தது
இந்த பெண்மை என்னை மட்டும் ஆள வந்தது
தப்பி செல்ல எண்ணம் ஏது

தேன் சுமந்த முல்லை தானா
வானவில்லின் பிள்ளை தானா
வண்ண வண்ண வைரம் எல்லாம்
கண்ணில் கொண்டு வைத்தாளே
கண்கள் என்றும் அம்பைக் கொண்டு
நெஞ்சில் இன்று தைத்தாளே

தேன் சுமந்த முல்லை தானா
ஹஹ.. வானவில்லின் பிள்ளை தானா

உந்தன் கண்களில் சூரியன் சந்திரன் உள்ளது
அந்த கண்களை மூடினால் என்ன தான் செய்வது
கூந்தல் என்னும் கூரைக்குள்ளே
சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே
கூந்தல் என்னும் கூரைக்குள்ளே
சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே
காதல் என்னும் சண்டை இன்று பற்ற கூடுமா
வின்னை விட்டு பூமி இங்கே சுற்றக்கூடுமா
குற்றம் என்ற ஒன்னே தானா

தேன் சுமந்த முல்லை தானா
வானவில்லின் பிள்ளை தானா
வண்ண வண்ண வைரம் எல்லாம்
கண்ணில் கொண்டு வைத்தாளே
கண்கள் என்றும் அம்பைக் கொண்டு
நெஞ்சில் இன்று தைத்தாளே

தேன் சுமந்த முல்லை தானா
வானவில்லின் பிள்ளை தானா

Monday, December 06, 2010

1113 கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ



படம்: வாட்ச்மேன் வடிவேல்
பாடகர்:பாலு, சித்ரா



கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
பெண்ணெல்லாம் பெண்ணல்ல
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

வானத்தை விட்டு நிலவெங்கு விலகும்
வாசத்தை விட்டு மலரெங்கு விரியும்
உனக்காக நான் எனக்காக நீ
உயிர் வாழும் காலம் வரையும்
மோகத்தை மனமெங்கு திரியும்
மேகத்தை விட்டு மழையெங்கு விளையும்
கொடி போல நான் மடிமீது தான்
விழும் போது காதல் மலரும்
உன்னைத்தொடும் தென்றல் வந்து என்னைத்தொடுது
உச்சி முதல் பாதம் வரை மெல்ல சுடுது
சந்தித்தேன் அப்போது சிந்தித்தேன் இப்போது
சொந்தங்கள் தப்பாது...வா

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

ஆடைக்குள் வைத்த அழகினை எடுத்தேன்
ஆசைக்குள் வைத்து உனக்கென கொடுத்தேன்
இதமாகத்தான் பதமாகத்தான்
எனை தீண்டு தாகம் தணியும்
ஓடைக்குள் வந்த மலரினை பறித்தேன்
ஓசைகளின்றி மணிமுத்தம் பதித்தேன்
பழச்சாறையும் இளநீரையும்
பரிமாற வேண்டும் தினமும்
அந்திப்பகல் வந்ததொரு இன்ப மயக்கம்
அஞ்சுவிரல் பட்ட இடம் மெல்ல சிலிர்க்கும்
எங்கெங்கே தொட்டாலும் அம்மம்மா உற்சாகம்
அங்கங்கே உண்டாகும்...வா

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
பெண்ணெல்லாம் பெண்ணல்ல
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல

கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ

Friday, December 03, 2010

1112 ஆடிடும் ஓடமாய் காணவே காதலே



//கார்கால மேகம் ஒன்று.. கண் மீது தேங்கி நின்று.. எழுதுதுதேஏஏஏஏஏஏஏஏஏ.. கண்ணீரில் கவிதை இன்று//

இனிமையான சோகப்பாடல் இந்த மழைக்காலத்திலும் நம் கண்களிலும் கொட்டுதே கண்ணீர் மழை. கேட்டு மகிழுங்கள்.

படம்:சுவர் இல்லாத சித்திரங்கள்
பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி. எஸ்.பி.சைலஜா
நடிகர்: கே.பாக்யராஜ்

Get this widget | Track details | eSnips Social DNA


ஆடிடும் ஓடமாய் காணவே காதலே

ஆறுதல் தேடியே யாரிடம் போவதோ

சோதனை வேதனை சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ

ஆடிடும் ஓடமாய் காணவே காதலே

கார்கால மேகம் ஒன்று
கண் மீது தேங்கி நின்று
எழுதுதுதேஏஏஏஏஏஏஏஏஏ
கண்ணீரில் கவிதை இன்று

விடுகதை சிறுகதை
பலர் கதை தொடர் கதை
இறைவனின் விடுகதை
விடைகளை யாரே கூறுவார்

ஆடிடும் ஓடமாய் காணவே காதலே

பாய்ந்தோடும் கங்கை இங்கே
பசித்து ஏங்கும் வயிறும் இங்கே
சுகங்களேஏஏஏஏஏஏஏஏஏ
அரசாளும் பூமி எங்கே

மேடையே மாலையே
கூட்டமே கொடிகளே
தோழனே கூறலாம்
வாழ்த்துவோர் இங்கே யாரடா

ஆடிடும் ஓடமாய் காணவே காதலே

ஆறுதல் தேடியே யாரிடம் போவதோ

சோதனை வேதனை சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ

ஆடிடும் ஓடமாய் காணவே காதலே

Followers

பகிர்க