1126 காதல் தேடி வந்த காளை
//இதயக்கதவை தட்டிப்பார்த்தான் பூட்டிக்கொண்டாளே.. இறக்க அவளூம் நினைத்த போது திகைத்து நின்றாளே.. நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா
நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா.. ஓவியம் எழுதும் முன்னே தூரிகை உடைந்தது ஹஹ அதுதான் மாயமா.. நிலவோ உதித்திட வந்ததம்மா.. பொழுதோ விடிந்திட போகுதும்மா//
திரைப்படம்: மோனிஷா என் மோனலிசா
நடிகர்கள்: மும்தாஜ், ராமன் காந்த
இசை: விஜய T. ராஜேந்தர்
வருடம்: 1999
இயக்குனர்: விஜய T. ராஜேந்தர்
|
காதல் தேடி வந்த காளை
கையில் கூடி வந்த வேளை
காதல் தேடி வாழ்ந்ததாலே
கையில் கூடி வந்த வேளை
பார்க்க வந்தால் ரோஜா மாலை
அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
காதல் செடி வளர்த்தானம்மா
பூ பூப்பதையே பார்க்கனுமா
காதல் தேடி வந்த காளை
கையில் கூடி வந்த வேளை
பார்க்க வந்தால் ரோஜா மாலை
அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
காதல் வரத்தை கேட்டுப்பார்த்தான் கொடுக்கவே இல்லை
காளை முகத்தை கடைசி வரை பார்க்கவே இல்லை
இருந்த போது ஏற்க மறுத்தால் அதுதான் பிடிவாதம்
இருந்த போது ஏற்க மறுத்தால் அதுதான் பிடிவாதம்
அவன் பிரிந்த போது பார்க்கத் துடித்தால் அந்தோ பரிதாபம்
பிரிவே காதல் தண்டனையா
காதல் தோல்வியில் வேதனையா
காதல் தேடி வந்த காளை
கையில் கூடி வந்த வேளை
பார்க்க வந்தால் ரோஜா மாலை
அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
இதயக்கதவை தட்டிப்பார்த்தான் பூட்டிக்கொண்டாளே
இறக்க அவளூம் நினைத்த போது திகைத்து நின்றாளே
நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா
நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா
ஓவியம் எழுதும் முன்னே தூரிகை உடைந்தது ஹஹ அதுதான் மாயமா
நிலவோ உதித்திட வந்ததம்மா
பொழுதோ விடிந்திட போகுதும்மா
காதல் தேடி வந்த காளை
கையில் கூடி வந்த வேளை
பார்க்க வந்தால் ரோஜா மாலை
அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
ஹோஓஓஓஓஒ..ஓஓஓஓஓஓஓஓஒ
ஹோஓஓஓஓஒ..ஓஓஓஓஓஓஓஓஒ

0 comments:
Post a Comment