1133 தாய் தானே உயிர்களுக்கெல்லாம்
பத்மபூஷன் பாலுஜி சந்தோசமாக இருக்கும் இந்த நேரத்தில் கூட பாலு அண்ணா மனசுல எப்படி இது போன்று சோகப்பாடல்கள் பாட முடிகிறது? அருமை.. அருமை...
படம்:பாலு தம்பி மனசிலே
பாடியவர்கள்:பத்மபூஷன் பாலுஜி
நடித்தவரகள்:நிர்மல்ஷா, ஸ்த்ரிகா,வினிதா
இசை: தேவேந்திரன்
வருடம்:2010
|
ஆரிராரோ ஆரிராரோ ஆராரிரோ
தாய் தானே உயிர்களுக்கெல்லாம்
உயர்வை சொல்லும் ஆதாரம்
கருவறையே கலங்கம் என்றால்
வாழ்க்கை எல்லாம் சேதாரம்
பேரோடு வாழ இங்கு
பாதை ஏதும் தடையில்லை
மற்றவையும் குறையாய் போனால்
பேரைச்சொல்ல வழியில்லை
ஊரோடு சேர்ந்தால் தேரோடும் வாழ்க்கை
வேரோடு சாய்ந்தால் தெருவோரம் சேர்க்கை
ஒரு துளிப் பாவம் உருமாறிப் போகும்
ஒரு துளிப் பாவம் உருமாறிப் போகும்
தெய்வங்கள் உண்டு என்றால்
இப்போது எங்கே போனார்கள்
ஹஹ இது என்ன நியாயம் என்று
தீர்ப்பு எழுதி வைத்தார்கள்
ஆகாயம் புனிதம் என்றால்
மண்ணுலகம் ஏனம்மா
மறைந்தாளே நம்மை விட்டு
மனித ஜென்மம் வீணம்மா
ஏனிந்த சோகம்..
தாய் மீது கோபம்..
உன் பாதை போனால்
இனி என்னவாகும்..
நீ இல்லை என்றால்
விடிந்து என்ன லாபம்
ஹ நீ இல்லை என்றால்
விடிந்து என்ன லாபம்
ஆரிராரோ ஆரிராரோ ஆராரிரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆராரிரோ
அண்ணன் என்பது.. அண்ணன் ஆனது
தங்கை மடி சாய தாயானது
மண்ணோடு வாழும் வேதங்கள் யாவும்
வேதங்கள் இன்றி போதிக்கும் ஞானம்
ஒன்றாக இங்கே உலகை ஆளும்
ஒன்றாக இங்கே உலகை ஆளும்

1 comments:
இப் புதிய பாடலை இந்த வயதிலும் பத்மப்பூஷன் S. P. பாலசுப்ரமனியம் அவர்கள் அருமையாக பாடியுள்ளார். பல மொழிகளில் பாடி சாதணைப் படைதுள்ள .இவர் ஒரு உலக சாதணைப் பாடகன்
-- Nawash, Srilanka
Post a Comment