1185 வாழ்க்கை என்றொரு பாடல்

//பக்தியில் கல்யாணி பரவச வசந்தா .. அது பக்தியில் கல்யாணி பரவச வசந்தா
பந்துவராளியின் மெண்மை .. யாருக்கும் கற்பனை பொருந்தும் .. அதை சொன்னால் வேறொன்று வருந்தும் ஹஹ .. யாருக்கும் கற்பனை பொருந்தும் .. அதை சொன்னால் வேறொன்று வருந்தும்//
படம்:உறவுகள் என்றும் வாழ்க
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இயக்குனர்: எச். எஸ். வேணு
தயாரிப்பாளர்: எஸ். வசந்தா, ராஜம் எண்டர்பிரைஸெஸ்
நடிப்பு: முத்துராமன், ஸ்ரீவித்யா
இசையமைப்பு: சங்கர் கணேஷ்
வருடம்: 1978
|
வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு பாடம்
ஆசை தான் அதன் வேடம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்
சரித்திரம் முழுதும் படித்தால் தெரியும்
பணத்தால் உயர்ந்தவர் இல்லை
நம் தலைமுறைக்கென்று ஒரு
பண்பாடு உண்டு தர்மம் தான் அது எல்லை
சட்டத்தின் நிறமோ சிவப்பு
அதை சாதிக்கும் நிறமோ கருப்பு
சட்டத்தின் நிறமோ சிவப்பு
அதை சாதிக்கும் நிறமோ கருப்பு
வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு பாடம்
ஆசை தான் அதன் வேடம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்
காலை மாலை வெயிலின் நிறத்தை
கன்ணத்தில் பூசிய மங்கை
காலை மாலை வெயிலின் நிறத்தை
கன்ணத்தில் பூசிய மங்கை
அவள் கால்களைப் பார்த்து நடக்கின்ற போது
காட்சியில் காமனின் தங்கை
அவள் கால்களைப் பார்த்து நடக்கின்ற போது
காட்சியில் காமனின் தங்கை
தாயிடம் வாங்கிய நாணம்
குல தர்மத்தில் ஓங்கிய மாணம்
தாயிடம் வாங்கிய நாணம்
குல தர்மத்தில் ஓங்கிய மாணம்
வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு பாடம்
ஆசை தான் அதன் வேடம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்
பார்வையில் மோஹனமும் ஆனந்த பைரவி
நான் விரும்பும் ஒரு பெண்ணை
பார்வையில் மோஹனமும் ஆனந்த பைரவி
நான் விரும்பும் ஒரு பெண்ணை
அது பக்தியில் கல்யாணி பரவச வ்சந்தா
அது பக்தியில் கல்யாணி பரவச வ்சந்தா
பந்துவராளியின் மெண்மை
யாருக்கும் கற்பனை பொருந்தும்
அதை சொன்னால் வேறொன்று வருந்தும் ஹஹ
யாருக்கும் கற்பனை பொருந்தும்
அதை சொன்னால் வேறொன்று வருந்தும்
வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு பாடம்
ஆசை தான் அதன் வேடம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்

0 comments:
Post a Comment