1237 காதலெனும் நதியின் மேலே

//ஊமை கண்ட கனவை இன்று .. எங்கு சென்று சொல்வாளோ இடம் இல்லையே .. மெழுகு வாழ்க்கை வாழும் பிள்ளை .. அழுது என்ன செய்வாளோ அவள் இல்லையே//
மனதை பிழியும் சோகப்பாடல் கேட்டு அழுங்கள்....அன்பர்களே..
படம்: காதல் என்னும் நதியினிலே
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்:சங்கர், சீதா, பாண்டியன்
இசை:மனோஷ் கியான்
இயக்குனர்: எம்.கே.சுகுமாரன்
தயாரிப்பு:பி.வர்கீஸ் மேத்யூஸ்
வருடம்:1989
காதலெனும் நதியின் மேலே
இவர்கள் மூன்று ஓடங்கள் திசை இல்லையே
காதல் கொண்ட ஓடம் ஒன்று
கண்ணீர் நதியில் போகிறதே கரை இல்லையே
பூமாலையாய் இல்லை பொய் மாலை என்றாள்
கரை சேர்ந்த பின்னாலும்
கண்ணீரோடு நின்றாள் நின்றாள்
வானில் அல்ல போலி என்றாள் ஓஓஓஓ??
ஊமை கண்ட கனவை இன்று
எங்கு சென்று சொல்வாளோ இடம் இல்லையே
மெழுகு வாழ்க்கை வாழும் பிள்ளை
அழுது என்ன செய்வாளோ அவள் இல்லையே
இந்த ஏழையா கோழை
என்ன சொல்லுவாளோ
பாவம் இந்த பெண் உள்ளம்
தூண்டில் முள்ளில் மீனோ மீனோ
காதலின் கீதம், கண்ணீர் கானம் ஓஓஓஓ
ஓஓஓஓ...ஓஓஓஓ....ஓஓஓஓ
காதலெனும் நதியினிலே
ஒலிக்கோப்பு உதவி: நன்றி கோவை கோபாலகிருஷ்னன்

0 comments:
Post a Comment