1239 சிங்கார குயிலே பொன்னான

// சேலை கட்டி ... செங்கரும்பு ஆடுது குக்கூ .. சொக்கிப்போய் ஜொல்லு விட்டு .. சிற்றெரும்பு வாடுது குக்கூ //
|
படம்: மறவன்
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா
நடிகர்: பிரபு, குஷ்பு
குக்கூ குக்கூ கூவென பாடும் குயிலும் பாடுது
கிக்கீ கிக்கீ கீவென பேசும் கிளியும் பேசுது
சேலையை வாங்கிக்கோ சீக்கிரம் கட்டிக்கோ
குக்கூ குக்கூ குக்கூ குக்கூ
சிங்கார குயிலே பொன்னான மயிலே
சேல ஒன்னு கட்டிக்கடி மானே
சிங்கார குயிலே பொன்னான மயிலே
சேல ஒன்னு கட்டிக்கடி மானே
மாராப்பு விலகையிலே
மாமா நீ பார்க்கலாமா
மாராப்பு விலகையிலே
மானே நான் பார்க்கவில்லை
அட தொட்டா சினுங்கறே செம்பருத்திப்பூவே
சிங்கார குயிலே பொன்னான மயிலே
சேல ஒன்னு கட்டிக்கடி மானே
சிங்கார குயிலு பொன்னான மயிலு
சேல ஒன்னு கட்டிக்கிச்சு பாரு
தூக்கனாங் குருவி தான்
துள்ளாட்டம் போடுது குக்கூ
மூக்கானங் கயிறுதான்
இல்லாம ஓடுது குக்கூ
தாமரை பூவிது
தண்ணீரை தேடுது குக்கூ
தனிச்சுதான் தனிச்சுதான்
தாளாம ஆடுது குக்கூ
சுங்கிடிச் சேலை கட்டி
செங்கரும்பு ஆடுது குக்கூ
சொக்கிப்போய் ஜொல்லு விட்டு
சிற்றெரும்பு வாடுது குக்கூ
நெத்திலி மீனு ரெண்டு
கண்ணுக்குள்ள ஓடுது குக்கூ
நித்தமும் உன்னை என்னி
சிந்து மனம் பாடுது குக்கூ
ஓ மானே மனசு ஒன்னு துடிக்குது
ம்ஹ் ஏங்காதோ றெக்கை கட்டி பறக்குது
சிங்கார குயிலே பொன்னான மயிலே
சேல ஒன்னு கட்டிக்கடி மானே
சிங்கார குயிலு பொன்னான மயிலு
சேல ஒன்னு கட்டிக்கிச்சு பாரு
புதுச்சேல ஒன்னு கட்டிக்கிச்சு பாரு
பூவும் தான் பொட்டும் தான்
உன்கையால் வாங்கனும் குக்கூ
பொழுது தான் போனதும்
உன் நெஞ்சில் தூங்கனும் குக்கூ
காத்திரு காரியம்
கைகூடும் சீக்கிரம் குக்கூ
எனக்கும் தான் இருக்குது
உன்னாட்டம் பாத்திரம் குக்கூ
பங்குனி மாசம் ஒரு
பத்திரிக்கை அச்சடி
சித்திரை மாசத்துல
சித்திரத்தை கைப்பிடி
அத்தனை நாள் வரையில்
ஒத்திப் போட ஆகுமா
பஞ்சாங்கம் பார்த்துக்கிட்டு
பாயப்போட வேணுமா
நாள் பார்த்து நடக்கனும் திருமனம்
நடுச்சாமம் கலக்கனும் இருமனம்
சிங்கார குயிலே பொன்னான மயிலே
சேல ஒன்னு கட்டிக்கடி மானே
சிங்கார குயிலே பொன்னான மயிலே
சேல ஒன்னு கட்டிக்கடி மானே
மாராப்பு விலகையிலே
மாமா நீ பார்க்கலாமா
மாராப்பு விலகையிலே
மானே நான் பார்க்கவில்லை
ஹ்ஹா தொட்டா சினுங்கறே செம்பருத்திப்பூவே
சிங்கார குயிலே பொன்னான மயிலே
சேல ஒன்னு கட்டிக்கடி மானே
சிங்கார குயிலு பொன்னான மயிலு
சேல ஒன்னு கட்டிக்கிச்சு பாரு

0 comments:
Post a Comment