Thursday, December 15, 2011

1250 முத்து முத்து புன்னகையே

காலஞ்சென்ற நடிகர் எல்.ஐ.சி.நரசிம்மன்.

திரைப் படம்: ஒரு கோவில் இரு தீபங்கள் (1979)
நடிப்பு: விஜய், சரோஜா (யாரோ புதியவர்கள்)
இசை: M தக்ஷினாமூர்த்தி.
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: S P முத்துராமன்

முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்

முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்
கன்னி பெண்னை சுற்றுவதேன் காதலராட்டம்
பாடம் கற்றுதரும் முன்னே நீ எடுத்திடு ஓட்டம்
முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்

கையால் தொட்டாலே
கன்னம் புண்ணாகும்
ஆசை என்னாகும்
அச்சம் உண்டாகும்
ஆடல் இன்பம்
தேடவில்லை
ஆனந்தமே
தேவை இல்லை
செவ்விதழ் மலரட்டுமே
தேன் மழை பொழியட்டுமே
பொன்னுடல் சாய்ந்தாலென்ன
புதிய சுகம் கண்டாலென்ன
கல்லூரி படிப்பில் சீரோ
காதல் நடிப்பில் ஹீரோ
கற்பனை ஒண்ணா ரெண்டா
கனவெல்லாமே நடப்பதுண்டா
முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்

பருவம் வந்தாலே
பார்த்து பழகனும்
பழக வந்தாலே
பாசம் மலரனும்
தேன் மதுவோ
போதை தரும்
மான் விழியோ
மையல் தரும்
ஊடல் இரவு வரை
கூடல் விடியும் வரை
இரவே வந்தால் இன்பம் பொங்கும் அறை பள்ளியறை
நானும் படித்தவள்தான்
நாலும் தெரிந்தவள்தான்
அச்சத்தால் ஆசைகளை
அடக்கி வாழும் பெண்மகள்தான்

முத்து முத்து புன்னகையே முக்கனித் தோட்டம்
உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்
கன்னி என்னை கை பிடித்தாய் காதலனாட்டம்
பாடம் கற்று கொள்ளும் ஆட்டம்தானே காதல் கொண்டாட்டம்
லா ல ல ல லா ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல ல ல

ஒலிக்கோப்பு மற்றும் வரிகள் உதவி நன்றி: கிணற்றுதவளை தளம்

0 comments:

Followers

பகிர்க