Friday, February 25, 2011

1137-நண்பனே எனதுஉயிர் நண்பனே




படம் :   சட்டம் ( Sattam )
பாடல் :  
நண்பனே எனதுஉயிர் நண்பனே ( Nanbane Enathu Uyir Nanbane )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,திரு.மலேசியா வாசுதேவன்.
இசை :   கங்கை அமரன் 
வருடம் :
1983

இயக்குநர் : K.விஜயன்
நடிகர்கள் :
கமல் ஹாசன், மாதவி, சரத்பாபு மற்றும் பலர்




Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Nanbane_Enathu_Uyir.mp3


”என்ன சொல்லுவேன் என் உள்ளம் தாங்கல....”

என்று பாடிய உள்ளம் இன்று நிரந்தரமாக உறங்கிவிட்டது... இதை சொல்வதற்கு நமது உள்ளமும் தான் தாங்கவில்லை...

“தோழி மெல்லத்தான் சேதி சொல்லத்தான் தோன்றினேன் அவதாரமா
கல்லாலே அணை போட்டு.. ஹோய் இந்த காவேரி அடங்காது “

உண்மைதான் சொல்ல வந்த சேதியை தன் குரலால், இசையின் மூலமாய் சொல்லத் தோன்றிய உமக்கு கல் மட்டுமின்றி எதன் மூலமும்
அணை போட முடியாது என்பதற்கு உமது ஆயிரக்கணக்கான பாடலே சாட்சி...


மறைந்த பின்னனி பாடகர் திரு.மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பலபேர் நெஞ்சில்
நீங்கா இடம் பிடித்திருக்கும் என்றால் அது மிகை அல்ல....


தமிழ் இசை வரலாற்றில் தன்னுடைய குரலால் அணைவரது நெஞ்சத்தையும் நெகிழ வைத்த மாபெரும் பின்னனி பாடகர் திரு.மலேசியா வாசுதேவன்
அவர்களின் உடல் இந்த மன்னுலகை விட்டு சென்றிருந்தாலும், அவரது குரல் என்றும் இந்த காற்றலைகளில் உலாவிக் கொண்டு தான் இருக்கும்.

திரு.மலேசியா வாசுதேவன் அவர்கள் ஒரு பேட்டியில் ஒரு சில பாடல்களாவது நான் பாட வேண்டும் என்ற கனவோடு தான் மலேசியாவில் இருந்து
இந்தியா வந்ததாகவும் நினைத்ததை விட பல பாடல்கள் வெற்றிப் பாடல்களாக பாடியதும், திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு பல வெற்றிப்பாடல்கள்
பாடியதாகவும் அதற்கு தமிழ் மக்களுக்கும் இசைஅமைப்பாளர்களுக்கும் அவர் நன்றிக்கடன் பாட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
(தகவலுக்கு மிக்க நன்றி:ரேடியோ மிர்சி FM)

திரு.மலேசியா வாசுதேவன்  அவர்களுக்காக இந்த பாமாலை :

அந்த ”ஆகாய கங்கை ” இந்த “அள்ளி தந்த பூமி” தந்த எங்களது திரு.மலேசியா வாசுதேவன் அவர்களே ”ஒரு தங்க ரதத்தில்” மலேசியாவில் இருந்து இந்தியா வந்து “டெல்லி to மெட்ராஸ்” என்ற படத்தின் மூலம் பின்னனி பாடகராய் அறிமுகமாகி
”பொதுவாக என்மனசு தங்கம்” என்று வந்த ”(வா வா) வசந்தமே..சுகம் தரும் சுகந்தமே.. “  “சிங்கம் ஒன்று புறப்பட்டதே...” என்று புயலாய் எழுந்து
”தென் கிழக்கு சீமை” வரை தனது குரலால் ”பூ பூக்கும் ஓசை”யையும் கேட்க வைத்த ”செவ்வந்தி பூ முடிச்ச சின்னையா“ எங்களுக்காக மீண்டும் அந்த
“பூங்காற்று திரும்புமா.. “ ??? மீண்டும் உனது குரலில்... ???



”தத்து தந்த கன்னே உன்ன தப்பு சொல்லக் கூடாது... மனம் தாங்காது... (அடி ஆத்தாடி..)”
”தேவதை போல் ஒரு பெண் இங்கு வந்தது நம்பி”
”பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்”
”தென்மதுரை வைகை நதி” பாலுஜியுடன் இணைந்து பாடிய பாடல்...
”பட்டுக்கோட்டை நம் ஆளு...” பாலுஜியுடன் இணைந்து பாடிய பாடல்...
”எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம்...”
“ஆசை நூறு வகை.. வாழ்வில் நூறு சுவை வா..”
“காதல் வைபோகமே... கானும் நன்னாளிலே...”
“காதல் வந்திடுச்சு... ஆசையில் ஓடி வந்தேன்..”
   
என்று அவர் பாடிய பல பாடல்கள் என்றும் அழியாதவை...

நம் பாலுஜி பாடிய “கல்யான மாலை கொண்டாடும் பெண்னே” என்ற பாடலை மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலிலும் சிறிய பாடலாக
புது புது அர்த்தங்கள் படத்திற்காக பதியப்பட்டது..


”என்னம்மா கன்னு செளக்கியமா... ஆமாம்மா கன்னு செளக்கியந்தான்...”

இந்த பாடலை பல மேடைக் கச்சேரிகளில் நமது பாலுஜியும், மலேசியா வாசுதேவன் அவர்களும் பாடியிருக்கிறார்கள்..
ஆனால் இந்த வரிகளுக்குப் பதிலாக

மலேசியா வாசுதேவன் அவர்கள்...

”என்னம்மா பாலு செளக்கியமா...”

 நம் பாலுஜி அதற்கு...

”ஆமாம்மா வாசு செளக்கியந்தான்...”

என்று பாடி அசத்திய நிகழ்வுகள் அருமையான தருணங்கள்...


தமிழ் இசை வரலாற்றில் தன்னுடைய குரலடி தடத்தை மிகச் சிறப்பாக பதித்து விட்டு மன்னுலகை விட்டு வின்னுலகிற்கு
சென்றிருக்கும் திரு.மலேசியா வாசுதேவன் அவர்கள் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நம் பாலுஜியுடன் இணைந்து
அவர் பாடிய ஒரு அருமையான மெலோடி பாடல்.....

நம் பாலுஜி மற்றும் மலேசியா வாசுதேவன் அவர்களின் நட்பை பிரதிபலிக்கும் பாடலுக்கு இது ஒரு நல்ல உதாரணம்.. கங்கை அமரன் இசையில்
1983ம் வருடம் சட்டம் என்ற படத்திற்காக இந்த பாடல் பதியப்பட்டது..

பாடலை எழுதியவர் பெயர் தெரியாவிட்டாலும் வரிகளை இருவரும் இணைந்து எதார்த்தமாகவும் ஒரு ரசனையுடனும் பாடியுருப்பது அவர்களது நட்பின்
ஆழத்தின் பிரதிபலிப்பு... இதோ அந்த பாடல்  நம் செவிக்காக இங்கே...இப்பொழுது...


Get Your Own Hindi Songs Player at Music Plugin


பாடல் வரிகள்



SPB    :    நண்பனே எனதுஉயிர் நண்பனே
                நீண்ட நாள் உறவிது...
                இன்று போல் என்றுமே தொடர்வது...ஆ
M.Vasudevan : நண்பனே எனதுஉயிர் நண்பனே
                        நீண்ட நாள் உறவிது...
                        இன்று போல் என்றுமே தொடர்வது...ஆ


சரணம் 1

SPB    :    ஒரு கிளையில் ஊஞ்சலாடும்
                இரு மலர்கள் மேனியாம்...
                பிரியாமல் நாம் உறவாடலாம்...
M.Vasudevan : ஒரு விழியில் காயம் என்றால்
                        மறு விழியும் கண்ணீர் சிந்தும்
                        உனக்காக நான்... எனக்காக நீ...
SPB    :     இரண்டு கைகள் இணைந்து வழங்கும் இனிய ஓசை


M.Vasudevan : இன்றும் என்றும் கேட்க வேண்டும் எனது ஆசை... ஹே...ஹே...
SPB    :      நண்பனே எனதுஉயிர் நண்பனே
                 நீண்ட நாள் உறவிது...
                 இன்று போல் என்றுமே தொடர்வது...



சரணம் 2

M.Vasudevan :யாரும் உண்னை சொந்தம் கொண்டால்
                       இடையில் வந்த உரிமை என்றால்
                      அதற்காக நான் வழக்காடுவேன்...
 
SPB    :           யாரும் உன்னை திருடிச் செல்ல...
                       பார்த்து நிற்கும் தோழன் அல்ல...
                       உனக்காக நான்... காவல் நிற்பேன்...
 
M.Vasudevan :எனது மனமும் எனது நினைவும் உனது வசமே... 
SPB    :            நமக்கு ஏது பிரித்து பார்க்க இரண்டு மனமே... ஹே...ஹே...

நண்பனே எனதுஉயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது...
இன்று போல் என்றுமே தொடர்வது...

லால லா லால லா... லாலலா.....


Thursday, February 24, 2011

1136 ஜூட்டுதான் ஜூட்டுதான் ஜூட்டுதான்



//பாத கொலுசு ம்ணி காதல் இசைப் படிக்க.. பாதம் செவந்து வந்த தேரே//

படம்: வைதேகி கல்யாணம்
பாடியவர்கள்:எஸ்.பி.பி, சித்ரா
பாடலாசிரியர்: காளிதாசன்
இசை: தேவா
வருடம்:1991

படத்தகவல்கள் உதவி கோவை கோபாலகிருஷ்னன் அவருக்கு நன்றி.



ஜூட்டுதான் ஜூட்டுதான் ஜூட்டுதான்
ஜோடியும் சேர்ந்ததே பாட்டுதான்

ஜூட்டுதான் ஜூட்டுதான் ஜூட்டுதான்
ஜோடியும் சேர்ந்ததே பாட்டுதான்
ஆனந்த தொட்டில் கட்டி உள்ளம் ரெண்டும் பாடுதான்
ஆகாயம் தோட்டம் ஒன்னு பூக்கள் அள்ளி போடுதான்
ஆனந்த தொட்டில் கட்டி உள்ளம் ரெண்டும் பாடுதான்
ஆகாயம் தோட்டம் ஒன்னு பூக்கள் அள்ளி போடுதான்
அடியே கிளியே ம்ஹ்ஹா அறியாத சின்னப்பொன்னே

ஜூட்டுதான் ஜூட்டுதான் ஜூட்டுதான்
ஜோடியும் சேர்ந்ததே பாட்டுதான்

தாகம் எடுத்த மனம் காலை அரிசிருச்சு??
தாங்கி அணைச்சிக்கிட வா வா
மோக உரசிலிலே மூச்சு பொறி பறக்கும்
வேகம் பொறந்திடுச்சு ராசா

ஆரம்ப சொந்தம் இது சுகமானது
ஆனந்த வெள்ளி நிலவு முகமானது
என் மானே என் ஆசை என்னத்தில் தித்திக்குது

ஜூட்டுதான் ஜூட்டுதான் ஜூட்டுதான்...
ஆஆஆஆ
ஜோடியும் சேர்ந்ததே பாட்டுதான்

ஜூட்டுதான் ஜூட்டுதான் ஜூட்டுதான்
ஜோடியும் சேர்ந்ததே பாட்டுதான்

பாத கொலுசு ம்ணி காதல் இசைப் படிக்க
பாதம் செவந்து வந்த தேரே
ஆழ கிணத்துக்குள்ளே நீளக்கயிறு விட்டு
அள்ளி எடுத்த குளிர் நீரே ஹா

சோலைக்கிளிகள் இரண்டு உறவாடுது
ஜோடிகள் இரண்டும் ஒரு சுகம் தேடுது
ஆஹா என் நெஞ்சில் ஆயிரம் சொர்க்கம் வருது

ஜூட்டுதான் ஜூட்டுதான் ஜூட்டுதான்...
ஆஆஆஆ
ஜோடியும் சேர்ந்ததே பாட்டுதான்

ஜூட்டுதான் ஜூட்டுதான் ஜூட்டுதான்
ஜோடியும் சேர்ந்ததே பாட்டுதான்

ஆனந்த தொட்டில் கட்டி உள்ளம் ரெண்டும் பாடுதான்
ஆகாயம் தோட்டம் ஒன்னு பூக்கள் அள்ளி போடுதான்
ஆனந்த தொட்டில் கட்டி உள்ளம் ரெண்டும் பாடுதான்
ஆகாயம் தோட்டம் ஒன்னு பூக்கள் அள்ளி போடுதான்
அடடா உன் கிளிதான் அறியாத சின்னப்பொன்னு

ஜூட்டுதான் ஜூட்டுதான் ஜூட்டுதான்
ஜோடியும் சேர்ந்ததே பாட்டுதான்
ஜூட்டுதான் ஜூட்டுதான் ஜூட்டுதான்
ஜோடியும் சேர்ந்ததே பாட்டுதான்

Tuesday, February 22, 2011

1135 மேல மாசி வீதியிலே



கோவை பாலுஜி ரசிகர் கோவை கோபாலகிருஷ்னன் சார் நீண்ட நாட்களூக்கு முன் வேண்டி விரும்பி கேட்ட பாடல் இப்போது தான் பதிவிற்க்கு வந்துள்ளது. கலக்கலான பாடல் கேட்டு மழுங்கள்.

படம்:நன்றியுள்ள மனிதன்
பாடகர்கள்: பத்மபூஷன் பாலு, டாக்டர் எஸ்.ஜானகி
இசை:சங்கர் கனேஷ்

Get this widget | Track details | eSnips Social DNA


மேலமாசி வீதியிலே ஏஏஏஏ....ஏஏஏஏ
அடி செல்லக்குட்டி அச்சு வெல்லக்கட்டி
அடி செல்லக்குட்டி அச்சு வெல்லக்கட்டி

மேலமாசி வீதியிலே தேரு பார்க்க போகையிலே
ஆள ஆள பார்த்ததென்னடி அடி கன்னாட்டி
காலை நிலத்தில் தேய்ச்சதென்னடி

மேலமாசி வீதியிலே தேரு பார்க்க போகையிலே
கள்ளழ்கர் வந்து நின்னாரா அடி யம்மாடி
கண்ணழ்கை பார்க்கச் சொன்னாரா அடி யம்மாடி
கண்ணழ்கை பார்க்கச் சொன்னாரா

சின்னாளப்பட்டி சேலையக் கட்டி
செந்தூரப்பொட்டு நெத்தியில் இட்டு
சின்னாளப்பட்டி சேலையக் கட்டி
செந்தூரப்பொட்டு நெத்தியில் இட்டு
வைகைக் கரைக்கு வந்து நின்னு
வாடை அடிக்குதுன்னு கேட்டா மூடி மறைச்சதென்ன

மீனா சிட்டு வளைச்சிக்கிட்டு??
மேலாடை கொஞ்சம் நனைச்சுக்கிட்டு
மீனா சிட்டு வளைச்சிக்கிட்டு??
மேலாடை கொஞ்சம் நனைச்சுக்கிட்டு
மாலை பக்கம் வந்து நின்னேன் உன்னை நினைச்சுகிட்டு
வாடை என்னை புடிச்சுகிச்சு
வாடை என்னை புடிச்சுகிச்சு

மேலமாசி வீதியிலே தேரு பார்க்க போகையிலே

கள்ளழ்கர் வந்து நின்னாரா அடி யம்மாடி
கண்ணழ்கை பார்க்கச் சொன்னாரா

எல்லோரு கைய புடிச்சிருப்போம்
உன்னோட என் மயக்கம் இப்போ
எல்லோரு கைய புடிச்சிருப்போம்
உன்னோட என் மயக்கம் இப்போ
ஏற இறங்க பார்த்துக்கிட்டு
மூச்சு விடுறதென்ன யப்பா மேனி சுடுறதென்ன

கோடாளி கொண்டை சரியவிட்டு
கொத்தோடு முல்லை சொருகி வெச்சு
கோடாளி கொண்டை சரியவிட்டு
கொத்தோடு முல்லை சொருகி வெச்சு
தாடிய ?? நீயும் கொண்டு வந்து
காமன் களையவிட்ட அதுல மாமன் விழுந்து விட்டேன்
அதுல மாமன் விழுந்து விட்டேன்

மேலமாசி வீதியிலே தேரு பார்க்க போகையிலே
ஆள ஆள பார்த்ததென்னடி அடி கன்னாட்டி
காலை நிலத்தில் தேய்ச்சதென்னடி

Monday, February 21, 2011

1134 பட்டுக்கோட்டை அம்மாளு



//பாசம் உள்ள தமிபியை போல....நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே// இது போன்று பிரியத்துடன் உரையாடாடும் அன்பு நண்பர்கள்.


20.02.2011 அன்று இறைவனடி சேர்ந்த பிரபல பின்ணணி பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

இப்படிக்கு
எஸ்.பி.பி ரசிகர்கள்
பா.நி.பா தளம் பதிவாளர்கள்

படம்:ரங்கா
பாடியவர்கள்: எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன்
நடிகர்: ரஜினிகாந்த்,கராத்தே மணி
இசை: சங்கர் கனேஷ்

பட்டுக்கோட்டை அம்மாளு
பார்த்துப்புட்டான் நம்மாளு
கண்ணால சிரிச்சான்
தன்னாலஅணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்

பட்டுக்கோட்டை அம்மாளு
உள்ளுக்குள்ளே என்னாளு
பொல்லாத சிரிக்கி
பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பழம் பறிப்பா

பட்டுக்கோட்டை அம்மாளு
பார்த்துப்புட்டான் நம்மாளு
கண்ணால சிரிச்சான்
தன்னாலஅணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்

பட்டுக்கோட்டை அம்மாளு
உள்ளுக்குள்ளே என்னாளு
பொல்லாத சிரிக்கி
பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பழம் பறிப்பா

கேடிப்பய நாடகம் போட்டான்
ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்
கேடிப்பய நாடகம் போட்டான்
ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்
அம்மாளு வந்தாளே நம்பி
அந்தாளு விட்டாளே தம்பி

ஆம்பளைக்கு காதுகுத்த பார்த்தா
ஆம்பளைக்கு காதுகுத்த பார்த்தா
நாடறிஞ்ச போக்கிரி தான்
நானறிஞ்ச அம்மாளு
கட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா
உனக்கென்ன சும்மாயிரு

பட்டுக்கோட்டை அம்மாளு
பார்த்துப்புட்டான் நம்மாளு
கண்ணால சிரிச்சான்
தன்னாலஅணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்

பட்டுக்கோட்டை அம்மாளு
உள்ளுக்குள்ளே என்னாளு
பொல்லாத சிரிக்கி
பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பழம் பறிப்பா

பாசம் உள்ள தமிபியை போல
பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள
பாசம் உள்ள தமிபியை போல
பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள
அப்போதும் இப்போதும் ஏய்ச்சா
எப்போதும் செல்லாது பாச்சா

நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே
நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே
உன் கதையும் என் கதையும்
ஊர் அறிஞ்சா என்னாகும்
பாம்புக்கு ஒரு கால் இருந்தா
பாம்பறியும் என்னாளும்

பட்டுக்கோட்டை அம்மாளு
பார்த்துப்புட்டான் நம்மாளு
கண்ணால சிரிச்சான்
தன்னாலஅணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்

பட்டுக்கோட்டை அம்மாளு
உள்ளுக்குள்ளே என்னாளு
பொல்லாத சிரிக்கி
பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பழம் பறிப்பா

Get this widget | Track details | eSnips Social DNA


ஒளிக்கோப்பு

Tuesday, February 15, 2011

1133 தாய் தானே உயிர்களுக்கெல்லாம்




பத்மபூஷன் பாலுஜி சந்தோசமாக இருக்கும் இந்த நேரத்தில் கூட பாலு அண்ணா மனசுல எப்படி இது போன்று சோகப்பாடல்கள் பாட முடிகிறது? அருமை.. அருமை...

படம்:பாலு தம்பி மனசிலே
பாடியவர்கள்:பத்மபூஷன் பாலுஜி
நடித்தவரகள்:நிர்மல்ஷா, ஸ்த்ரிகா,வினிதா
இசை: தேவேந்திரன்
வருடம்:2010

Get this widget | Track details | eSnips Social DNA


ஆரிராரோ ஆரிராரோ ஆராரிரோ
தாய் தானே உயிர்களுக்கெல்லாம்
உயர்வை சொல்லும் ஆதாரம்
கருவறையே கலங்கம் என்றால்
வாழ்க்கை எல்லாம் சேதாரம்

பேரோடு வாழ இங்கு
பாதை ஏதும் தடையில்லை
மற்றவையும் குறையாய் போனால்
பேரைச்சொல்ல வழியில்லை

ஊரோடு சேர்ந்தால் தேரோடும் வாழ்க்கை
வேரோடு சாய்ந்தால் தெருவோரம் சேர்க்கை
ஒரு துளிப் பாவம் உருமாறிப் போகும்
ஒரு துளிப் பாவம் உருமாறிப் போகும்

தெய்வங்கள் உண்டு என்றால்
இப்போது எங்கே போனார்கள்
ஹஹ இது என்ன நியாயம் என்று
தீர்ப்பு எழுதி வைத்தார்கள்

ஆகாயம் புனிதம் என்றால்
மண்ணுலகம் ஏனம்மா
மறைந்தாளே நம்மை விட்டு
மனித ஜென்மம் வீணம்மா

ஏனிந்த சோகம்..

தாய் மீது கோபம்..

உன் பாதை போனால்

இனி என்னவாகும்..
நீ இல்லை என்றால்
விடிந்து என்ன லாபம்
ஹ நீ இல்லை என்றால்
விடிந்து என்ன லாபம்

ஆரிராரோ ஆரிராரோ ஆராரிரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆராரிரோ
அண்ணன் என்பது.. அண்ணன் ஆனது
தங்கை மடி சாய தாயானது

மண்ணோடு வாழும் வேதங்கள் யாவும்
வேதங்கள் இன்றி போதிக்கும் ஞானம்
ஒன்றாக இங்கே உலகை ஆளும்
ஒன்றாக இங்கே உலகை ஆளும்

Sunday, February 13, 2011

1132 ஆஹா வீணையில் எழுவது



அமர்க்களமான இனிமையான பாடல் கேட்டு மகிழுங்கள்.

படம்:பெண்சிங்கம்
பாடியவர்கள்: பாலு, சைந்தவி?? சித்ரா??
இசை:தேவா
பாடலசிரியர்:எம்.கருனாநிதி

Get this widget | Track details | eSnips Social DNA


ஆஹா வீணையில் எழுவது வேனு கானமா
திருவாடுதுறையின் தோடி ராகமா
வீணையில் எழுவது வேனு கானமா
திருவாடுதுறையின் தோடி ராகமா
திருவெங்காட்டு மகுடி நாதமா
திருவெங்காட்டு மகுடி நாதமா
இசைவதாலே இணையும் ஈர் உயிர்கள்
இணைந்த பின்பும் இரண்டும் ஓர் உயிர் தானே

இசைவதாலே இணையும் ஈர் உயிர்கள்
இணைந்த பின்பும் இரண்டும் ஓர் உயிர் தானே

ஆஹா வீணையில் எழுவது வேனு கானமா
திருவாடுதுறையின் தோடி ராகமா

காலை அரும்பி மாலை மலரும்
காதல் நோயால் நானும் உருகினேன் ஆஹாஆஆஆ

காலை அரும்பி மாலை மலரும்
காதல் நோயால் நானும் உருகினேன் ஆஹாஆஆஆ

கோகில வாணி நீயே கொடுமுடி கோகிலம் தானே
கொள்ளை கொண்டாடு நெஞ்சிதனை கொடுத்துவிடு
எடுத்தபடியே..ஏஏஏஏஏ.....ஏஏஏஏ
கொடுத்துவிடு..எடுத்தபடியே..

தேனும் பாலும் கலந்த பின்னே
தனியே சுவையை பிறிக்கலாகுமோ ஆஆஆஆ
இனிக்கும் தேனாய் நீயும்
துடிக்கும் ஆண்பாலாய் நானும்
திருமணமான பின்னால்
தேனும் பாலும் ஆகலாம்

ஆயிரம் இரவுகள் உன்னுயிர்?? போதும்
ஆயிரம் பாடினால் போதும் இப்போது

செம்புலத்தேனே கூறு
அன்புடை நெஞ்சால் நாம் கலந்தோமே
செம்புலத்தேனே எப்போலே
அன்புடை நெஞ்சால் நாம் கலந்தோமே

ஆஹா வீணையில் எழுவது வேனு கானமா
திருவாடுதுறையின் தோடி ராகமா
திருவெங்காட்டு மகுடி நாதமா
திருவெங்காட்டு மகுடி நாதமா
இசைவதாலே இணையும் ஈர் உயிர்கள்
இணைந்த பின்பும் இரண்டும் ஓர் உயிர் தானே

இசைவதாலே இணையும் ஈர் உயிர்கள்
இணைந்த பின்பும் இரண்டும் ஓர் உயிர் தானே

Thursday, February 10, 2011

1131 பூங்கிளி நீயோ மரக்கிளை நானோ




//சர்ர்ர்தான் போடி... ஹொய் ஹொய்... இடத்தான் தேடி.. ஏய் மாமோய்.. இடுப்ப ஆட்ட.. ம்ஹஹா.. மயக்கம் வாட்ட... நினைக்கும் தோறும் நடுக்கம் தானே
எதுக்கு மோகம்..ஹே..ஹே.. ஒதுங்கிப் போறேன்.. ஹஹஹஹ//

வடமாநிலத்தில் இருந்து இறக்குமதி மெட்டானாலும் எப்போது கேட்டாலும் மனது துள்ளிக்குதிகின்றதை நான் உணரலாம்.


படம்:காதல் ஒரு கவிதை
பாடியவர்கள்:பத்மபூஷன் டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா

Get this widget | Track details | eSnips Social DNA


பூங்கிளி நீயோ மரக்கிளை நானோ
ஓடை நீயோ நீரலை நானோ
கைகள் கூடும் தோழி நீதான் என்
கைகள் கூடும் தோழி நீதான்

மரக்கிளை நீயோ பூங்கிளி நானோ
ஓடையில் நீரோ செம்மீன் தானோ
கைகள் கூடும் தோழன் நீதான் என்
கைகள் கூடும் தோழன் நீதான்

ஏதேதோ எண்ணங்கள் மனதில் உண்டாக
பனிக்காற்று விளையாடுதே
ஏதேதோ எண்ணங்கள் மனதில் உண்டாக
பனிக்காற்று விளையாடுதே

கும்மாளம் கலந்த கொண்டாட்டம் தானோ
பூமேனி சதிராடுதே

அடியே தோழி.. பார்த்தால் போதும்...
ஆடிடும் செம்மான்... அஞ்சி ஓடும்

கைகள் கூடும் தோழி நீதான் என்
கைகள் கூடும் தோழி நீதான்
கைகள் கூடும் தோழன் நீதான் என்
கைகள் கூடும் தோழன் நீதான்

பாலாடை போல் நின்றாடும் பூவை நீ பார்
கை தழுவாமல் நிற்கின்ற இளம் தென்றல் யார்
பாலாடை போல் நின்றாடும் பூவை நீ பார்
கை தழுவாமல் நிற்கின்ற இளம் தென்றல் யார்

சர்ர்ர்தான் போடி... ஹொய் ஹொய்
இடத்தான் தேடி.. ஏய் மாமோய்
இடுப்ப ஆட்ட.. ம்ஹஹா
மயக்கம் வாட்ட...
நினைக்கும் தோறும் நடுக்கம் தானே
எதுக்கு மோகம்..ஹே..ஹே
ஒதுங்கிப் போறேன்.. ஹஹஹஹ

தரரூரூரூரூரு தரரூ
ஹெஹெஹெஹேஏஏஏஹோஹோ

நான் என்ன சொல்ல சொந்தங்கள் அல்ல
நேசங்கள் உண்டானதே
நான் என்ன சொல்ல சொந்தங்கள் அல்ல
நேசங்கள் உண்டானதே

இதற்கென்ன பேரோ யார் சொல்லுவாரோ
எண்ணங்கள் ஒன்றானதே

ஓடும் காலம்... ரபபபபாஆஆஆ
பதில் சொல்லக்கூடும்... ரபபபபாஆஆஆ
நெஞ்சின் நெருக்கம்... ரபபபபா பரரரரூ
நலம் வாழ பாடும்..
காலம் தோறும் தோழன் நீதான்

நம் நெஞ்சில் ஊறும் அன்பு தேன் தான்

Friday, February 04, 2011

1130 பாடவா தேன் என கம்பனின்



பெங்களூரில் பாலுஜி ரசிகர்களை சந்திக்கிறார். எஸ்.பி.பி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் சார்ப்பில் நடக்கவிருக்கும் வருடாந்திர சந்திப்பு வருகின்ற 06.02.2011 அன்று நடைபெற உள்ளது இந்த சந்திப்புக்கு வருகை தரும் அனைத்து அன்பு உள்ளங்களையும் வரவேற்கிறோம்.

இப்படிக்கு, பா.நி.பா வலைப்பூ பதிவாளர்கள்

//என் பாடலாய் உலகே இன்றே மூழ்கத்தான் போகிறதே.. பாடவா தேன் என கம்பனின் ஒரு பாடல்.. உங்களை வீணையாய் மீட்டிடும் ஒரு பாடல்//

அழகான இனிமையான புதிய பாடல் கேட்டு மகிழுங்கள் அன்பர்கள.

குறிப்பு: ஒரு வார காலம் பாடல் வரிகளுக்கு பதிலாக வேறுஒரு புதிய பாடல் சேக்கப்பட்டது. தற்ப்போது சரியான பாடல் ஒலிக்கோப்பு. இதை எனக்கு நினைவு படுத்திய கோவை கோபாலகிருஷ்னன் அவர்களுக்கு மிக்க நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA


படம்:வெற்றி

பாடவா தேன் என கம்பனின் ஒரு பாடல்
உங்களை வீணையாய் மீட்டிடும் ஒரு பாடல்
நேசிப்பதே நெஞ்சின் மழையாய் நினைக்கின்றேன்
ஆனாலும் ஏன் நஞ்சின் நதியில் குளிக்கின்றேன்
என் பாடலாய் உலகே இன்றே மூழ்கத்தான் போகிறதே
பாடவா தேன் என கம்பனின் ஒரு பாடல்
உங்களை வீணையாய் மீட்டிடும் ஒரு பாடல்

நெஞ்சுக்குள் மேகங்கள்
நெஞ்சுக்குள் மேகங்கள் நகர்கின்ற மேகங்கஃள்
விழியோரம் வருகின்றாள்
உயிரெல்லாம் நினைகின்றாள்
பல ஜென்மம் படகேதான்
உடலெங்கும் உயிரில்லை?
ஒரு பூஞ்சோலை சூழ்ந்த தீவினில் மழையோடும்
தினம் வாழ்வு என்றாக ஞாபகம் இழையோடும்
ஒரு மனிதனை முழுதாய் மாற்றும் காதல் தான்
ஒரு மனிதனை முழுதாய் மாற்றும் காதல் தான்

பாடவா தேன் என கம்பனின் ஒரு பாடல்
உங்களை வீணையாய் மீட்டிடும் ஒரு பாடல்

ஆகாயம் தீண்டவே..ஓஓஓஓஓ..
ஆகாயம் தீண்டவே ஆவேசம் வந்ததே
இளம் தென்றல் இசை கொடுக்க
இளமங்கை கனி கொடுக்க
கனவெல்லாம் நிஜமாக
கண் எதிரே பழுதானேன்
நிலவுக்கு மலர்களும் தூரம் ஓர் நேரம்
மலர்ந்திட கைகளை நீட்டும் ஆனாலும்
என் வெற்றியின் முதுகாய் உள்ளவள் நீதானே
என் வெற்றியின் முதுகாய் உள்ளவள் நீதானே

Followers

பகிர்க