Thursday, May 26, 2011

1168 எண்ணிய முடிதல் வேண்டும்




இந்த பாடல் எப்போது கேட்டாலும் கோவை வானொலி அறிவிப்பாளர் திரு.கா.சுந்தரராஜன் அவர்களின் நினைவை வருதை என்னாலும் தடுக்க முடியாது. ஏனென்றால் அவர் எப்போது மயிலிறகு நிகழ்ச்சி வழங்கினாலும் துவக்கத்தில் இந்த பாடல் தலைப்பை சொல்லாமல் சொல்லமாட்டார். அந்த வரிகளுக்கு அவ்வளவு சக்தி. பாடல் அருமை கேட்டு பாருங்கள் அன்பர்களே.

படம்: மூனாறு
பாடல்: எண்ணிய முடிதல் வேண்டும்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி, குழுவினர்

Get this widget | Track details | eSnips Social DNA


எண்ணிய முடிதல் வேண்டும்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்

ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கா
ஸ்ரீரங்க நாதனை பாடுவோம்
ஸ்ரீரங்கம் சென்றாலே சேராதோ பேரின்பம்
ஸ்ரீரங்க நாதனை போற்றுவோம்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்
எண்ணிய முடிதல் வேண்டும் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்

வேதாந்த கண்ணன் நீ வில்லில் ராமன் நீ
கேசவனே மாதவனே
வேங்கட மலை வாழும் நாத வடிவம் நீ
மாதவனே யாதவனே
ஏகாந்த விட்டலனே ஆடும் கோகுலனே
ஏகாந்த விட்டலனே ஆடும் கோகுலனே
பாடுவோம் கோவிந்தனே காக்க வருவாய்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்
எண்ணிய முடிதல் வேண்டும் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்

ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கா
ஸ்ரீரங்க நாதனை பாடுவோம்

கேட்காமல் செல்வம் தரும் கேட்ட யாவும் தரும்
ரங்கன் ஜபம் என்றும் ஜெயம்
யாருக்கும் இன்பம் தரும் பேரும் பெற்று தரும்
ரங்கன் மனம் நந்தவனம்
காவேரி தந்த வரம் ஸ்ரீரங்கன் அன்பின் வரம்
காவேரி தந்த வரம் ஸ்ரீரங்கன் அன்பின் வரம்
தஞ்சைக்கு நெல்லின் வரம் போற்று அழகா

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும் வேண்டும்

ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கா
ஸ்ரீரங்க நாதனை பாடுவோம்

1167 வாடா கண்ணா ஹரி ஹரி



//ராஜகோபாலன் குழலோசை கேட்டு... ராதை திருமேனி வாடாதோ.. காதல் ரீங்காரம் கலையாத வீணை .. கண்ணன் விரல் மீட்ட வாராதோ .. காதல் ரீங்காரம் கலையாத வீணை .. கண்ணன் விரல் மீட்ட வாராதோ .. இந்த ராதா வந்ததும் ராகம் வந்தது
நாதா என்றதும் நாதம் வந்தது .. ஒரே சங்கீதம் //


பாடல்:வாடா கண்ணா ஹரி ஹரி கோகுல கிருஷ்ணா
படம்:தம்பதிகள்
நடிகர்கள்:சிவக்குமார், பூர்னிமா
பாடியவர்கள்: டாக்டர்:எஸ்.பி.பி, பாம்பே ஜெயஸ்ரீ

Get this widget | Track details | eSnips Social DNA


வாடா கண்ணா ஹரி ஹரி கோகுல கிருஷ்ணா
வாடா கண்ணா ஹரி ஹரி கோகுல கிருஷ்ணா
உன் மங்கை உள்ளம்தான் புது கங்கை வெள்ளம்தான்
உன் மங்கை உள்ளம்தான் புது கங்கை வெள்ளம்தான்
நீ நீந்த வந்தாயோ என்னை ஏந்த வந்தாயோ
நீ நீந்த வந்தாயோ என்னை ஏந்த வந்தாயோ
சிறு பூவா வந்தது பொன்னா மின்னுது
வா வா என்றது வந்தா நல்லது
ஒரே சந்தோஷம்

வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா
வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா
உன் கண்ணன் நெஞ்சம்தான் மலர் கொஞ்சும் மஞ்சம்தான்
உன் கண்ணன் நெஞ்சம்தான் மலர் கொஞ்சும் மஞ்சம்தான்
நீ நாடி வந்தாயோ நிழல் தேடி வந்தாயோ
நீ நாடி வந்தாயோ நிழல் தேடி வந்தாயோ
இளம் மானா வந்தது மீனா துள்ளுது
தானா வந்தது தேனா பொங்குது
ஒரே சல்லாபம்

வாடா கண்ணா ஹரி ஹரி கோகுல கிருஷ்ணா ...

ராஜகோபாலன் குழலோசை கேட்டு
ராதை திருமேனி வாடாதோ
ராஜகோபாலன் குழலோசை கேட்டு
ராதை திருமேனி வாடாதோ
காதல் ரீங்காரம் கலையாத வீணை
கண்ணன் விரல் மீட்ட வாராதோ
காதல் ரீங்காரம் கலையாத வீணை
கண்ணன் விரல் மீட்ட வாராதோ
இந்த ராதா வந்ததும் ராகம் வந்தது
நாதா என்றதும் நாதம் வந்தது
ஒரே சங்கீதம்

வாடா கண்ணா ஹரி ஹரி கோகுல கிருஷ்ணா
உன் மங்கை உள்ளம்தான் புது கங்கை வெள்ளம்தான்
நீ நீந்த வந்தாயோ என்னை ஏந்த வந்தாயோ
சிறு பூவா வந்தது பொன்னா மின்னுது
வா வா என்றது வந்தா நல்லது
ஒரே சந்தோஷம்
வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா..ஹா..ஹா ..ஹா

பக்த மீராவின் பாமாலை போலே
பாடும் திருப்பாவை நீதானோ
பக்த மீராவின் பாமாலை போலே
பாடும் திருப்பாவை நீதானோ
நாளும் காதோடு நான் கேட்கும் கீதை
எப்போதும் பரந்தாமன் நீதானோ
நாளும் காதோடு நான் கேட்கும் கீதை
எப்போதும் பரந்தாமன் நீதானோ
ஒரு கோதை வந்தது கோயில் கொண்டது
போதை மந்திரம் கண்ணில் சொன்னது
ஒரே உற்சாகம்

வாடி பாமா ஹரே ஹரே சத்தியபாமா
உன் கண்ணன் நெஞ்சம்தான் மலர் கொஞ்சும் மஞ்சம்தான்
நீ நாடி வந்தாயோ நிழல் தேடி வந்தாயோ
இளம் மானா வந்தது மீனா துள்ளுது
தானா வந்தது தேனா பொங்குது
ஒரே சல்லாபம் .

Tuesday, May 24, 2011

1166 மை நேம் இஸ் மிஸ்டர் சக்தி





இந்த கலக்கல் பாட்டுல எல்லாத்தையும் சுற்றி வளைச்சு ஒரு ரவுண்டு வந்துட்டாங்கப்பா.

நடிப்பு சத்யராஜ், பிரபு, ரம்பா, சுஜாதா, மகேஷ் ஆனந்த், நிழல்கள் ரவி, ராகசுதா, கே.எஸ்.ஜெயலட்சுமி, கிரீஷ் கர்னாட், ஆர்.என்.கே.பிரசாத், சிட்டிபாபு, வின்சென்ட், ஜெயபிரகாஷ், மோகன்ராம், ராம்லட்சுமணன், ஜோசெப், ரவிராஜ், டாக்டர் ஜாய்
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்பாளர் எம்.ஜி.சேகர், எஸ்.சந்தானம்
கதை பாலகுமாரன்
இசையமைப்பு தேவா

மை நேம் இஸ் மிஸ்டர் சக்தி
என் ஊரு கோவில் பட்டி
எனக்கில்ல வேலை வெட்டி
ஊர்மிலா ஊர்மிலா
கடி ஜோக்கு சொல்வது என் பார்முலா பார்முலா

மாதுரி மனீஷா ஊர்மிலா எல்லாம்
என்னோட காலேஜ் மெட்டு

மாதுரி மனீஷா ஊர்மிலா எல்லாம்
என்னோட காலேஜ் மெட்டு
ஐஸ்வராயும் சுஸ்மிதாசென்னும்
எனக்கு ரொம்ப மீட்டு
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்க்கு
சொல்லி கொடுத்தேன் பைட்டு
நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில்
நான் சொல்லி கொடுப்பேன் ரூட்டு
அமிதாபச்சன் இருக்கற பாட்டு
நான் தான் கொடுப்பேன் கிப்ட்டு
உலக வங்கி பணம் கிணம் கேட்டால்
நான் தொறப்பேன் கட்டு??

மை நேம் இஸ் மிஸ்டர் சக்தி
என் ஊரு கோவில் பட்டி
எனக்கில்ல வேலை வெட்டி
ஊர்மிலா ஊர்மிலா
கடி ஜோக்கு சொல்வது என் பார்முலா பார்முலா லா லா

மைக்கேல் ஜாக்சன் பாடுவதெல்லாம்
நான் போட்டு தந்த பாட்டு

மைக்கேல் ஜாக்சன் பாடுவதெல்லாம்
நான் போட்டு தந்த பாட்டு
டெண்டுல்கர் ஆடுவதெல்லாம்
நான் வாங்கி தந்த பேட்டு
தேவா போடும் பாடல்களெல்லாம்
நான் சொல்லி தந்த மெட்டு
வைரமுத்து எழுதுவதெல்லாம்
செல்போனில் என்னை கேட்டு
ஷாருக்கானு காரு ரிப்பேரு
நான் தான் எடுப்பேன் ரிஸ்கு
ஜுராஸிக் பார்க்கு படத்துக்கு மட்டும்
நான் தான் போட்டேன் பட்ஜெட்டு

மை நேம் இஸ் மிஸ்டர் சக்தி
என் ஊரு கோவில் பட்டி
எனக்கில்ல வேலை வெட்டி
ஊர்மிலா ஊர்மிலா
கடி ஜோக்கு சொல்வது என் பார்முலா பார்முலா

Get this widget | Track details | eSnips Social DNA

1165 அன்புக்கு உருவமில்லை



//தலைசாய்க்க இடமாயில்லை.. தலை கோத விரலாயில்லை.. இளங்காற்று வரவாயில்லை
இளைப்பாறு பரவாயில்லை//

அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாடலை இசையமைத்தது டாக்டர் எஸ்.பி.பி என்று எல்லோருக்கும் தெரிந்த விசயம். மேலும், இந்த பாடலை கானகந்தர்வன் டாக்டர் கே.தாஸண்ணா பாடித்தான் கேட்டிருப்பீர்கள். இதோ இந்த பாடலை பாலுஜி ஒரு பாரட்டு விழா மேடையில் பின்ணணி இசையில்லாமல் சில வரிகளை மட்டும் பாடி கலக்கியிருக்கிறார். ஆஹா சூப்பர் இந்த குரலுக்கு அடிமையாகாதவர்களூம் உண்டோ?

Get this widget | Track details | eSnips Social DNA


ஊசிக்குறிப்பு: இந்த பாடலை எனக்கு அனுப்பிவைத்து பதியுங்கள் என்று அன்பு வேண்டுகோள்விடுத்த கோவை கோபாலகிருஷ்னன் சார் அவர்களூக்கு நன்றி. சார் இது போன்று மற்ற ஏதாவது பாடல்கள் இருந்தாலும் அனுப்புங்கள்.

படம்: சிகரம்
பாடல்: கே.ஜே.ஜேசுதாஸ் >> எஸ்.பி.பி பின்ணணி இசையில்லாமல்
இசை: எஸ்.பி.பி


அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

(அகரம் இப்போ...)

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

(அகரம் இப்போ...)

கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும்
கரை இரண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய் அன்பு போகும்
மெய்யன்பு வாழும்

அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை

இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே

(அகரம் இப்போ...)

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே?
பசியாற பார்வைபோதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்

தலைசாய்க்க இடமாயில்லை
தலை கோத விரலாயில்லை
இளங்காற்று வரவாயில்லை
இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

(அகரம் இப்போ...)

Sunday, May 22, 2011

1164 உருகினேன் உருகினேன் கண்ணனே



//பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ.. பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ.. மானோ மீனோ கண்விழி இந்த பெண்விழி
ஏதோ எதுவோ சொல்லுதே என்னைக் கொல்லுதே.. உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்.. உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்.. மடி மேல் நிறுத்தி உனைத் தாலாட்டவா//

படம் : அண்ணே அண்ணே
பாடல் : உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , S.ஜானகி
இசை : இளையராஜா
வருடம் : 1983
இயக்குநர் : மௌளி
நடிகர்கள் : மௌளி,சுமித்ரா

Get this widget | Track details | eSnips Social DNA


உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
ஓ...உருகினேன்
உருகினேன்

சரணம் 1

காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ
காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ
ஏட்டு எழுத்தோ இது போல் ஏது
உயிரில் உயிராய் இருப்பாள் மாது
உனையே கோடி கோடி ஜென்மம் சேருவேன்
உருகினேன்
உருகினேன்
உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
ஓ...

சரணம் 2

பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
பாவை வடிவிலோர் பட்டுப் பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
மானோ மீனோ கண்விழி இந்த பெண்விழி
ஏதோ எதுவோ சொல்லுதே என்னைக் கொல்லுதே
உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்
உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்
மடி மேல் நிறுத்தி உனைத் தாலாட்டவா

உருகினேன்
உருகினேன்
உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே
உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே என்னியே ஏங்கினேன் தினமே

வரிகள் நன்றி:மதுரை அருண்குமார் மதுரை பாடும் நிலா பாலு தளம்

Thursday, May 19, 2011

1163 ஐயாம் சாரி சோ சாரி




//காதலும் பிரேமையும் உசந்ததடா ஆஆஆஆஅ.. ஆசையோஓஓஓ யாரையும் அசத்துதடா ஆஆஆஆஆ.. ஆடிடும் நாள் மட்டும் அது விடுடா ஆடுவோம் ஆடேண்டா //

பாடல்:ஐயாம் சாரி சோ சாரி
படம்:அன்புசின்னம்
பாடியவர்கள்:எஸ்.பி.பி
இசை:இளையராஜா

ஊசிக்குறிப்பு: இந்த பாடலை நான் கேட்டு உடனே அனுப்பிய கோவை கோபலகிருஷ்னன் சாருக்கு நன்றி நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA


வாத்தியத்தை வாசி என்றாலே கன்னா கோபாலா
சுதி சேர்த்துகொள்வேண்டா ஆஆஆஆ
பூமாலை மாற்று என்றாலே அப்பா கோபாலா
ஒரு அழகு பொன்னு தேவையடா ஆஆஆஆ
டீச்சர் வந்து ஒரு பொம்மை வரையும் போது
பாவம் கோபாலா அது குரங்கு போல ஆவாதா ஆஆஆஆ

கமான்...
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி
பிள்ளையாரை நினைச்சு நான் தான்
பிடிச்ச போதும் குரங்கு ஆச்சே
கோபாலா ராமா ராமா
புத்தி போச்சே கோபால ராமா
கோபாலா ராமா ராமா
புத்தி போச்சே கோபால ராமா
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி

பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே
பெண் மேல் மோகம் உண்டு
ஹ பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே
பெண் மேல் மோகம் உண்டு
கன்னன் போல் யாருக்குண்டோ பாவை சபலம்
கன்னி பூங்கொடியை கண்டால் பாதி சரசம்
கன்னன் போல் யாருக்குண்டோ பாவை சபலம்
கன்னி பூங்கொடியை கண்டால் பாதி சரசம்
மனசுக்குள் ஏதோ பேச்சு பேசு??
மரணம் தான் எப்பவோ காசு நோட்டு
ஆளுக்கொரு ஆசை நெஞ்சு அலையடிச்சு அழும் போது
தண்ணியடா ஹ்ஹஹாஆஆஆ
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி ஹெ... ஹெ..

காதலும் பிரேமையும் உசந்ததடா ஆஆஆஆஅ
ஆசையோஓஓஓ யாரையும் அசத்துதடா ஆஆஆஆஆ
ஆடிடும் நாள் மட்டும் அது விடுடா ஆடுவோம் ஆடேண்டா
ஆடிடும் நாள் மட்டும் அது விடுடா ஆடுவோம் ஆடேண்டா
ஓர் நாளூம் இதுக்கு ஒரு எல்லை உண்டு
தண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டு
ஓர் நாளூம் இதுக்கு ஒரு எல்லை உண்டு
தண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டு
மது உண்ண சட்டம் யார் போட்டது
வாழ்வுக்கு அர்த்தம் யார் சொன்னது
ஆளுக்கொரு அர்த்தம் ஆட்டம் என்ன கிடைக்கும் போது தண்ணியடிடா
கமான்...
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி

பிள்ளையாரை நினைச்சு நான் தான்
பிடிச்ச போதும் குரங்கு ஆச்சே
கோபாலா ராமா ராமா
புத்தி போச்சே கோபால ராமா
கோபாலா ராமா ராமா
தாளாம் போயாச்சே கோபால ராமா
ஐயாம் சாரி சோ சாரி
ஐயாம் சாரி சோ சாரி உஹ்ஹஹஹஹ

Wednesday, May 18, 2011

1162 மன்னாதி மன்னன்கள் கதை



ஒரே சீரான தபேலாவின் இனிமையான தாளத்தில் ஓர் அற்புதமான தாலாட்டு போன்ற சோகப்பாடல் தான் இது. நம்பிக்கையூட்டும் அருமையான வரிகள் பதிவிற்க்காக ரொம்ப நாட்கள் காத்திருந்த பாடலும் கூட இது போன்ற சோகப்பாடல்களை பாடுவதென்றால் பாலுஜிக்கு நிகர் பாலுஜியே அவரின் அபரிமிதமான குரல் சோகக்கடலில் மூழ்கி மூழ்கி முத்துக்குளிக்கும் குரல். பாடலை கேட்டு நீங்களூம் சோக மழையில் நனையுங்களேன்.

படம்:சூரியன்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி
இசை:தேவா

Get this widget | Track details | eSnips Social DNA



மன்னாதி மன்னன்கள் கதை கேட்டுப் பாரு
சூராதி சூரன் நீ உன்னை வெல்ல யாரு
தலை மீது கிரீடம் தானாய் வந்து சேரும்
எங்கே போகும் வீரம்
மன்னாதி மன்னன்கள் கதை கேட்டுப் பாரு

வெள்ளை உள்ளம் வாய்த்த பிள்ளை பாடும் நேரம்
அன்னை போல தாலாட்ட தெய்வம் வந்து சேரும்
சூறைக் காற்றில் சாயும் கூறை வீடா ஹஹ வாழ்க்கை
குன்றை போல நின்று தொட்டுப் பாரு வானை
இதோ இங்கே ஆரம்பம் புதிய புரட்சி தான்

எங்கே போகும் வீரம்
மன்னாதி மன்னன்கள் கதை கேட்டுப் பாரு

பெத்துப் போட்ட பிள்ளை பேரும் வைக்கவில்லை
தெய்வம் போல வந்தாள் தெய்வம் போல சென்றாள்
அன்பால் வந்த பாவம் வேறென்ன சொல்ல
ஈன்ற தாயும் கூட இவள் போல அல்ல
பிள்ளைப் போல சொல்லி வைக்கhttp://www.blogger.com/img/blank.gif
இல்லை யோகம் தான்

எங்கே போச்சு வீரம்
ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்...

பாடலை இங்கேயும் கேட்டு மகிழலாம் நன்றி:திரைபாடல்கள் தளம்

Tuesday, May 17, 2011

1161 அடியே அன்னக்கிளி பைய பைய







//காக்கைக்கும் குருவிக்கும்.. கழுதைக்கும் குதிரைக்கும்.. கச்சேரி பாடினேன்.. எப்போதும் என் பாடல் .. கேட்காத குயிலுக்கு .. இப்போது பாடினேன் .. சத்தத்தில் எல்லாமே கீதம்
மொத்தத்தில் எல்லாமே ராகம் .. மன்னித்து கொள்ளூங்கள் ... சந்தத்தை கேளுங்கள்//

கலக்கல் பாடல் நீண்ட இடைவெளிக்கு பிறகு கேட்ட பாடல். ஒலிக்கோப்ப வழங்கி உதவிய கோவை கோபலகிருஷ்னன் சார் அவர்களூக்கு நன்றி. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

படம்:பட்டிக்காட்டு தம்பி
பாடியவர்: பத்மபூஷன் எஸ்.பி.பி
நடிகர்: அர்ஜூன்,நிரோஷ,எஸ்.எஸ்,சந்திரன், செந்தில்


Get this widget | Track details | eSnips Social DNA


அடியே அன்னக்கிளி பைய பைய
பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக
தெய்வம் வந்து கேட்டதால்
பக்தன் இங்கு பாடினேன்
தொண்டை கட்டிப் போனதால்
சுதி கொஞ்சம் மாறினேன் உந்தன்
சந்தோச சிரிப்பினில் சங்கீதம் கற்றுக் கொண்டேன்
ஏய் அடியே அன்னக்கிளி பைய பைய
பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக

காக்கைக்கும் குருவிக்கும்
கழுதைக்கும் குதிரைக்கும்
கச்சேரி பாடினேன்
எப்போதும் என் பாடல்
கேட்காத குயிலுக்கு
இப்போது பாடினேன்
சத்தத்தில் எல்லாமே கீதம்
மொத்தத்தில் எல்லாமே ராகம்
மன்னித்து கொள்ளூங்கள்
சந்தத்தை கேளுங்கள்

அடியே அன்னக்கிளி பைய பைய
பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக
தெய்வம் வந்து கேட்டதால்
பக்தன் இங்கு பாடினேன்
தொண்டை கட்டிப் போனதால்
சுதி கொஞ்சம் மாறினேன் உந்தன்
சந்தோச சிரிப்பினில் சங்கீதம் கற்றுக் கொண்டேன்
ஏய் ஏய் அடியே அன்னக்கிளி பைய பைய
பாட்டு வரும் ஹ உனக்காக ஹோய் உனக்காக

ஆணுக்கும் பெண்ணுக்கும்
உண்டான சொந்தங்கள்
இன்னிக்கு நேத்தல்ல
கோழிக்கு சேவலை
கொண்டாட சொன்னது
காலத்தின் கூத்தல்ல
பந்திக்கு நிக்குது கோழி
பக்கத்தில் என்னடி தோழி
காதுக்குள் கச்சேரி
பாடட்டா ரீங்காரி

அடியே அன்னக்கிளி பைய பைய
பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக
தெய்வம் வந்து கேட்டதால்
பக்தன் இங்கு பாடினேன்
தொண்டை கட்டிப் போ.......னதால்
சுதி கொஞ்சம் மாறினேன் உந்தன்
சந்தோச சிரிப்பினில் சங்கீதம் கற்றுக் கொண்டேன்
ஏய் அடியே அன்னக்கிளி பைய பைய
பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக

Monday, May 16, 2011

1160 அன்புள்ள தமிழ்செல்வியே



//பொன் மோதிரம் தான் உன் விரலினிலே.. ஓர் நாயகனின் கை இடும் போது,, முழங்கும் ஆலய மணியோசை.. குலுங்கும் கூடவே வளையோசை.. பூத்தூவும் ஆகாயமே பனித்தூவும் நீர் மேகமே//

நிச்சயமா இது சிச்சுவேசன் சாங்க் இல்லீங்க இனிமையான அண்ணன் தங்கை பாசப் பாடல் கேட்டுபாருங்கள். இந்த பாடலை வழங்கி பதியுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொண்ட கோவை கோபாலகிருஷ்னன் அவர்களுக்கு நன்றி.

படம்:உங்கள் அன்பு தங்கச்சி
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்: ராஜா ரவீந்தர்,

Get this widget | Track details | eSnips Social DNA



அன்புள்ள தமிழ செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே
பன்புள்ள தமிழச்சியே
அண்ணன் எந்நாளும் உன் கட்சியே
வேளாங்கன்னி மாதாவை என்னி
நான் வேண்டுவேன் நீ வாழவே
கல்யாணம் கொண்டாடும் கஸ்தூரி மானே
அன்புள்ள தமிழ செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே

பொன் மோதிரம் தான் உன் விரலினிலே
ஓர் நாயகனின் கை இடும் போது
முழங்கும் ஆலய மணியோசை
குலுங்கும் கூடவே வளையோசை
பூத்தூவும் ஆகாயமே பனித்தூவும் நீர் மேகமே

அன்புள்ள தமிழ செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே
பன்புள்ள தமிழச்சியே
அண்ணன் எந்நாளும் உன் கட்சியே
வேளாங்கன்னி மாதாவை என்னி
நான் வேண்டுவேன் நீ வாழவே
கல்யாணம் கொண்டாடும் கஸ்தூரி மானே
அன்புள்ள தமிழ செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே

நீ ஈன்றெடுக்கும் ஓர் மகன் தானே
தாய் மாமனுக்கு தேன் தருவானே
பெறுவேன் நான் அவன் முதல் முத்தம்
இனிக்கும் நாளெல்லாம் என் சித்தம்
தோள் மீது தாலாட்டுவேன்
தாய் போல சீராட்டுவேன்

அன்புள்ள தமிழ செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே
பன்புள்ள தமிழச்சியே
அண்ணன் எந்நாளும் உன் கட்சியே
வேளாங்கன்னி மாதாவை என்னி
நான் வேண்டுவேன் நீ வாழவே
கல்யாணம் கொண்டாடும் கஸ்தூரி மானே
அன்புள்ள தமிழ செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே

Friday, May 13, 2011

1159 நிலா.... காயும் வானம்



இந்த பாடலில் ஓவ்வொரு வரியிலும் கொப்பளிக்கும் மெலோடி மனதை ஆக்ரமிக்குது. கேட்டு மகிழுங்கள் பாலுஜி பிரியர்களே.

படம்:நிலம் பார்க்கும் நிலவு
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..

நிலா.... காயும் வானம்
அலை பாயவே மனம்
வசந்தமே இளமை கோலம்
கசந்தாலே கண்ணீர் ஆகும்
ம்ம்...ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்..

இராக்கால பூக்கள் பெண்கள்
உறவைச் சொல்லி உருகும் கண்கள்
அரும்பும் பார்வையில் ஆயிரம் குறும்பு
நெருங்கிச் சென்றால் அவளே அரும்பு

நிலா.... காயும் வானம்

நான்கு விழிகள் எழுதிய கவிதை
எட்டுத் திக்கிலும் இதுதான் காதல்
நான்கு விழிகள் எழுதிய கவிதை
எட்டுத் திக்கிலும் இதுதான் காதல்

பூவிலும் மெல்லிய பூவுக்கு சோதனை
பருவத்திலும் வளரும் ஆசையில் வேதனை

நிலா.... காயும் வானம்

உயிர்கள் எல்லாம் காதலில் தொடக்கம்
காதல் எல்லாம் துண்பத்தில் மிதக்கும்
உயிர்கள் எல்லாம் காதலில் தொடக்கம்
காதல் எல்லாம் துண்பத்தில் மிதக்கும்

உறவும் பிரிவும் உலகில் தொல்லை
இரவும் பகலும் உருத்தல் இல்லை

நிலா.... காயும் வானம்
அலை பாயவே மனம்
வசந்தமே இளமை கோலம்
கசந்தாலே கண்ணீர் ஆகும்
நிலா.... காயும் வானம்

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, May 09, 2011

1158 கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே



//அம்மாவாசை இரவினிலே.. நிலவது உதிப்பதில்லை.. அழகற்ற என் முகத்தை
அன்றொருத்தி ஏற்க்கவில்லை.. அழகை வைத்து காதலிக்க.. அவளை போல பலர் உண்டு
அன்பை வைத்து காதலிக்க.. என்னை போல சிலர் உண்டு.. பாலைவனத்தில் சோலை எதற்கு//

ஆஹா.. ஆஹா.,, அருமை அருமையான் சோகவரிகள் அமலாவை பார்த்துமா? கேட்டு மகிழுங்கள்.


திரைப்படம்: மைதிலி என்னை காதலி
பாடகர்கள்: S.P.பாலசுப்பிரமணியம்,S. ஜானகி,
இசை: விஜய T. ராஜேந்தர்
பாடல் ஆசிரியர்: விஜய T. ராஜேந்தர்

Get this widget | Track details | eSnips Social DNA


கன்னீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
கன்னீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
என்னை நீ வெறுத்தால்
என்னாகும் என்று
நினைத்துதான் பாரு
நெஞ்சத்தை கேளு
முல்லில் ஆடும் பறவை நான் தானே
பறவை நானே...

(கன்னீரில்)

அம்மாவாசை இரவினிலே
நிலவது உதிப்பதில்லை
அழகற்ற என் முகத்தை
அன்றொருத்தி ஏற்க்கவில்லை

அழகை வைத்து காதலிக்க
அவளை போல பலர் உண்டு
அன்பை வைத்து காதலிக்க
என்னை போல சிலர் உண்டு

பாலைவனத்தில் சோலை எதற்கு

காளை மனதில் சோகம் எதற்கு

திரிந்திட்ட பால் குடத்தில்
வென்னை அதில் தேடாதே

ஒரு தலை ராகத்திலே
காலந்தன்னை கழிக்காதே

அழகிய மயிலே என்னை நெருங்காதே
நெருங்காதே...

உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே

காம்பை விட்டு பூ உதிர்ந்தால்
மீண்டும் அங்கே பூப்பதில்லை
காதலித்து தோல்வியென்றால்
மீண்டும் அங்கே காதல் இல்லை

காளை உன்னை காம்பு என்றால்
பெண் அவளை பூ என்பேன்
காம்பில் அவள் பூக்கவில்லை
காதல் அவள் ஏற்கவில்லை

நினைத்தது நான் நினைத்தது தான்

மறந்து விட்டால் மாற்றம் வரும்

நினைத்ததை மறப்பதற்கு
நெஞ்சத்துக்கு தெரியாதே

கண்களை மூடிக்கொண்டு
இருட்டென்று சொல்லாதே
முல்லில் ஆடும் பறவை நான் தானே
பறவை நானே

உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
தரை மீது ஓடம் ஓடாது மானே
நதி மீது தேரும் போகாது தேனே
மானே தேனே என்னை நெருங்காதே
நெருங்காதே...

உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே

1157 கல்யாணம் தான் சொர்க்கத்திலே




//அம்மி மிதிச்சுதான் சடங்கு நடக்குது.. அன்பை மிதிச்சு தான் விதீயும் சிரிக்குது.. அக்ணியும் எறியுதுங்க.. காதல் அத்தனையும் கருகுதுங்க.. அக்ணியும் எறியுதுங்க
காதல் அத்தனையும் கருகுதுங்க.. பொருந்தாத உறவே ஊரும் தான் வாழ்த்துதுங்க
முன்னூறு மனசு ஊமையாக வாழுதுங்க//

ஓஹோ ஓஹோ சோகமான பாடல் ரொம்ப சரிதாங்க...

படம்:ஒரு தாயின் சபதம்
பாடியவர்: டாக்டர்.எஸ்.பி.பி
இசை:விஜய் டி.ராஜேந்தர்

Get this widget | Track details | eSnips Social DNA


திருமணம்தான் நடக்குதுங்க
ஊருசனம் மகிழுதுங்க
ஏதோ சில மணங்கள் தோற்குதுங்க
அதுமட்டும் அன்று அழுவுதுங்க..அழுவுதுங்க..அழுவுதுங்க

அட காதலிச்சா போதாது
அத மூடிவைக்க கூடாது
அட காதலிச்சா போதாது
அத மூடிவைக்க கூடாது
கல்யாணம் தான் சொர்க்கத்திலே நிச்சயக்கப்படுதா
பத்திரிக்கை மட்டும் இங்கே அச்சடிக்கப்படுதா
சம்மதம் கேட்காமலே சிலர் சம்மந்தம் பேசுறாங்க
மனங்களை பார்க்காமலே திருமணங்களை செய்யுறாங்க
கல்யாணம் தான் சொர்க்கத்திலே நிச்சயக்கப்படுதா
பத்திரிக்கை மட்டும் இங்கே அச்சடிக்கப்படுதா

பொல்லாத விதியே.... செய்யாத சதியே..

ஊரையும் தான் கூட்டுறாங்க
ஊர்வலம் தாம் நடத்துறாங்க
காதலிப்போர் தவிக்கிறாங்க
காயத்தைத்தான் மறக்கிறாங்க
வாணவேடிக்கை வேட்டு வெடிக்குது
காதல் மாளிகை கேட்டு நொறுங்குது
மேளங்கள் முழங்குதுங்க
ரத்தநாளங்கள் துடிக்குதுங்க
மேளங்கள் முழங்குதுங்க
ரத்தநாளங்கள் துடிக்குதுங்க
பன்னீரை தெளிச்சு வரவேற்பு நடக்குதுங்க
கண்ணீரில் குளிச்சு நெஞ்சங்கள் கரையுதுங்க
கல்யாணம் தான் சொர்க்கத்திலே நிச்சயக்கப்படுதா
பத்திரிக்கை மட்டும் இங்கே அச்சடிக்கப்படுதா

நாதஸ்வரம் ஊதுறாங்க
மந்திரங்கள் ஓதுறாங்க
மாலையைத்தான் மாத்துறாங்க
தாலியைத் தான் கட்டுறாங்க

அம்மி மிதிச்சுதான் சடங்கு நடக்குது
அன்பை மிதிச்சு தான் விதீயும் சிரிக்குது
அக்ணியும் எறியுதுங்க
காதல் அத்தனையும் கருகுதுங்க
அக்ணியும் எறியுதுங்க
காதல் அத்தனையும் கருகுதுங்க
பொருந்தாத உறவே ஊரும் தான் வாழ்த்துதுங்க
முன்னூறு மனசு ஊமையாக வாழுதுங்க

அட காதலிச்சா போதாது
அத மூடிவைக்க கூடாது
அட காதலிச்சா போதாது
அத மூடிவைக்க கூடாது
கல்யாணம் தான் சொர்க்கத்திலே நிச்சயக்கப்படுதா
பத்திரிக்கை மட்டும் இங்கே அச்சடிக்கப்படுதா
சம்மதம் கேட்காமலே சிலர் சம்மந்தம் பேசுறாங்க
மனங்களை பார்க்காமலே திருமணங்களை செய்யுறாங்க

Wednesday, May 04, 2011

1156 சாய்ஞ்சாடு சாய்ஞ்சாடு கண்ணே





//தாயின் இரு பிள்ளை இரு கண்களே..ஒன்று வலித்தாலுமே அவள் மனம் வாடுமே
உண்மை புரியாத ஒரு பிள்ளையே.. தன் அறியாமையால் தினம் தடுமாறுமே.. பாயும் அன்பு பொய்யாகுமா.. தாய்பால் என்றும் விஷமாகுமா.. சுகமான உலகம் கருவறையில் ஆகும்.. ஆரி ஆரி ஆராரோ //

உயிரிலே கலந்தது சரிதான்... பொருத்தமான படப்பெயர் செமி சோகப்பாடலை கேட்டுத்தான் பாருங்களேன்.

படம்:உயிரிலே கலந்தது
நடிகர்கள்:சூர்யா,ஜோதிகா, சிவகுமார், ராதிகா, ரகுவரன்
பாடலாசிரியர்:வைரமுத்து
இசை:தேவா
வருடம்:2000

Get this widget | Track details | eSnips Social DNA


சாய்ஞ்சாடு சாய்ஞ்சாடு சாய்ஞ்சாடு கண்ணே
தோளோடு தோள் சேர்த்து சாய்ஞ்சாடு கண்ணே
உதிரம் ஈராமாக்கி பாலாக்கினாள்??
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாள்
ஆரி ஆரி ஆராரோ ஆரி ஆரி ஆராரோ
சாய்ஞ்சாடு சாய்ஞ்சாடு சாய்ஞ்சாடு கண்ணே
தோளோடு தோள் சேர்த்து சாய்ஞ்சாடு கண்ணே

கருவில் நம்மை தாங்க வரம் கேட்கிறாள்
தான் தாயகவே அவள் தவம் செய்கிறாள்
மரணம் அதை பார்த்து சேய் காண்கிறாள்
மண்ணில் இரண்டாம் முறை நம் கால் திறக்கிறாள்??
பிள்ளை கொஞ்சி விளையாடவே
பொம்மை வழியில் அவள் மாறினாள்
இமை மேலே இமையாய் நமக்காக சுமந்தாள்
ஆரி ஆரி ஆராரோ
சாய்ஞ்சாடு சாய்ஞ்சாடு சாய்ஞ்சாடு கண்ணே
தோளோடு தோள் சேர்த்து சாய்ஞ்சாடு கண்ணே

தாயின் இரு பிள்ளை இரு கண்களே
ஒன்று வலித்தாலுமே அவள் மனம் வாடுமே
உண்மை புரியாத ஒரு பிள்ளையே
தன் அறியாமையால் தினம் தடுமாறுமே
பாயும் அன்பு பொய்யாகுமா
தாய்பால் என்றும் விஷமாகுமா
சுகமான உலகம் கருவறையில் ஆகும்
ஆரி ஆரி ஆராரோ
சாய்ஞ்சாடு சாய்ஞ்சாடு சாய்ஞ்சாடு கண்ணே
தோளோடு தோள் சேர்த்து சாய்ஞ்சாடு கண்ணே
உதிரம் ஈராமாக்கி பாலாக்கினாள்??
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாள்
ஆரி ஆரி ஆராரோ ஆரி ஆரி ஆராரோ
ஆஆ...ம்ம்ம்.ம்..ஆஆ...ம்ம்ம்ம்

Tuesday, May 03, 2011

1155 காதலுக்கு கண்களில்லே மானே





//என் ராகம் எல்லாம் இங்கே நீ தானே..உன்னை எண்ணாத நாளேது பூ மானே..அடி உன்னோடு நானும் வந்து சேராது..என் தேகம் மண்ணில் இங்கே சாயாது..கங்கைக்கு ஒரு கரைக் கட்டலாம்..காவிரிக்கும் அணை கட்டலாம்..காதலுக்கு வேலி கட்டலாமா..ஏ மண்ணில் வெச்சு மூடும் விதை யாவும் பயிராகும்..மழை மேகம் நெருப்பாகி போகாதம்மா//

ஆஹா ஆஹா என்ன மாதிரியான சோகவரிகள் கேட்டு மகிழுங்கள்

படம்: நாடோடி பாட்டுக்காரன்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி. ஸ்வரணலதா
இசை:இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA


காதலுக்கு கண்களில்லே மானே

காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே
காதல் ஒரு துன்பக் கதையோ
காலம் தந்த மாயவலையோ
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே
காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே

என் ராகம் எல்லாம் இங்கே நீ தானே
உன்னை எண்ணாத நாளேது பூ மானே
அடி உன்னோடு நானும் வந்து சேராது
என் தேகம் மண்ணில் இங்கே சாயாது
கங்கைக்கு ஒரு கரைக் கட்டலாம்
காவிரிக்கும் அணை கட்டலாம்
காதலுக்கு வேலி கட்டலாமா
ஏ மண்ணில் வெச்சு மூடும் விதை யாவும் பயிராகும்
மழை மேகம் நெருப்பாகி போகாதம்மா

காதலுக்கு கண்கள் இல்லை ராசா
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் ரோசா
காதலுக்கு கண்கள் இல்லை ராசா

தண்ணீரில் நீந்திச் செல்லும் மீன் ஒன்று
சுடு வெண்ணீரில் விழுந்தாலே என்னாகும்
இளம்?? தண்ணீரில் ஆடும் இந்த ரோஜாப்பு
அது முள் மீது விழுந்தாலே பொல்லாப்பு
எப்பவுமே மனசில் ஒன்னு
எண்ணி எண்ணி நிறுத்தும் என்னை
கவிதை?? செய்வார் இங்கு யாரு
நல்ல துள்ளி வரும் காற்று தடைக் காற்று தயங்காது
எந்நாளூம் என் நேசம் மாறாதய்யா

காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே
காதல் ஒரு துன்பக் கதையோ
காலம் தந்த மாயவலையோ
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே
காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே
காதலுக்கு கண்களில்லே மானே

1154 அம்மாடி உன் பேச்சை



//அண்ணன் தங்கை சீர் என்ன ஊர் கேட்குது.. மன்னிப்பு நான் கேட்க நா கூசுது.. தண்ணீரு வத்த வத்த மீனு வரும்.. கண்ணீரு வத்த வத்த ஞானம் வரும்.. உன் பாதத்திலே கண்ணீர் விட்டா பாவம் தீரும்.. அம்மாடி உன் பேச்சை எப்போ கேட்பேன்.. பூவோட பொட்டோட ஹ எப்போ பார்ப்பேன்//

அழகான சோக வரிகளை கொண்ட பாடல் பாலுஜியின் குரலில் இது கேட்டு மகிழுங்கள்.

படம்:நாளெல்லாம் பௌர்னமி
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
இசை:கங்கை அமரன்

Get this widget | Track details | eSnips Social DNA


அம்மாடி உன் பேச்சை எப்போ கேட்பேன்
பூவோட பொட்டோட எப்போ பார்ப்பேன்
எம்மேல சாமி இட்ட சாபம்
ஆத்தாடி எப்போ இது தீரும் மாறும்
அம்மாடி உன் பேச்சை எப்போ கேட்பேன்
பூவோட பொட்டோட எப்போ பார்ப்பேன்

அண்ணன் தங்கை சீர் என்ன ஊர் கேட்குது
மன்னிப்பு நான் கேட்க நா கூசுது
தண்ணீரு வத்த வத்த மீனு வரும்
கண்ணீரு வத்த வத்த ஞானம் வரும்
உன் பாதத்திலே கண்ணீர் விட்டா பாவம் தீரும்
அம்மாடி உன் பேச்சை எப்போ கேட்பேன்
பூவோட பொட்டோட ஹ எப்போ பார்ப்பேன்

வெட்டிப்பயல் ஊரோட சேராதம்மா
என் வாழ்க்கை தெய்வங்கள் கேட்காதம்மா
தாய்ப்பாலை கேட்டுகூட அழுதுதும் இல்ல
இப்போது உன்னை எண்ணி அழுதேன் மெல்ல
எம்போல அண்ணன் இங்கே யாரும் இல்ல
அம்மாடி உன் பேச்சை எப்போ கேட்பேன்
பூவோட பொட்டோட எப்போ பார்ப்பேன்
எம்மேல சாமி இட்ட சாபம்
ஆத்தாடி எப்போ இது தீரும் மாறும்

அம்மாடி உன் பேச்சை எப்போ கேட்பேன்
பூவோட பொட்டோட எப்போ பார்ப்பேன்

Followers

பகிர்க