Thursday, June 30, 2011

1185 வாழ்க்கை என்றொரு பாடல்




//பக்தியில் கல்யாணி பரவச வசந்தா .. அது பக்தியில் கல்யாணி பரவச வசந்தா
பந்துவராளியின் மெண்மை .. யாருக்கும் கற்பனை பொருந்தும் .. அதை சொன்னால் வேறொன்று வருந்தும் ஹஹ .. யாருக்கும் கற்பனை பொருந்தும் .. அதை சொன்னால் வேறொன்று வருந்தும்//


படம்:உறவுகள் என்றும் வாழ்க
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இயக்குனர்: எச். எஸ். வேணு
தயாரிப்பாளர்: எஸ். வசந்தா, ராஜம் எண்டர்பிரைஸெஸ்
நடிப்பு: முத்துராமன், ஸ்ரீவித்யா
இசையமைப்பு: சங்கர் கணேஷ்
வருடம்: 1978

Get this widget | Track details | eSnips Social DNA


வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு பாடம்
ஆசை தான் அதன் வேடம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்

சரித்திரம் முழுதும் படித்தால் தெரியும்
பணத்தால் உயர்ந்தவர் இல்லை
நம் தலைமுறைக்கென்று ஒரு
பண்பாடு உண்டு தர்மம் தான் அது எல்லை
சட்டத்தின் நிறமோ சிவப்பு
அதை சாதிக்கும் நிறமோ கருப்பு
சட்டத்தின் நிறமோ சிவப்பு
அதை சாதிக்கும் நிறமோ கருப்பு

வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு பாடம்
ஆசை தான் அதன் வேடம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்

காலை மாலை வெயிலின் நிறத்தை
கன்ணத்தில் பூசிய மங்கை
காலை மாலை வெயிலின் நிறத்தை
கன்ணத்தில் பூசிய மங்கை

அவள் கால்களைப் பார்த்து நடக்கின்ற போது
காட்சியில் காமனின் தங்கை
அவள் கால்களைப் பார்த்து நடக்கின்ற போது
காட்சியில் காமனின் தங்கை

தாயிடம் வாங்கிய நாணம்
குல தர்மத்தில் ஓங்கிய மாணம்
தாயிடம் வாங்கிய நாணம்
குல தர்மத்தில் ஓங்கிய மாணம்

வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு பாடம்
ஆசை தான் அதன் வேடம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்

பார்வையில் மோஹனமும் ஆனந்த பைரவி
நான் விரும்பும் ஒரு பெண்ணை
பார்வையில் மோஹனமும் ஆனந்த பைரவி
நான் விரும்பும் ஒரு பெண்ணை

அது பக்தியில் கல்யாணி பரவச வ்சந்தா
அது பக்தியில் கல்யாணி பரவச வ்சந்தா
பந்துவராளியின் மெண்மை
யாருக்கும் கற்பனை பொருந்தும்
அதை சொன்னால் வேறொன்று வருந்தும் ஹஹ
யாருக்கும் கற்பனை பொருந்தும்
அதை சொன்னால் வேறொன்று வருந்தும்

வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு பாடம்
ஆசை தான் அதன் வேடம்
இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்

Wednesday, June 29, 2011

1184 வெண்பனித்துளி பூவில் விழும் நாள்



//கள்ளி என்னை கிள்ளி நீ தந்த முத்தமே .. உயிர் வரை பாய்ந்து காதில் என் காதில் ..நீ சொல்லும் வார்த்தையே காதலின் வேகமே//

படம்:மனதில் ஓர் மார்கழி
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, தீபா மரியம்
நடிகர்கள்:சந்தோஷ், ஷர்மிலா
இசை:அனுராஜ்
தயாரிப்பு:அபிதா
இயக்குநர்: சதிஷ் தரியன்
வருடம்:2010


Get this widget | Track details | eSnips Social DNA


வெண்பனித்துளி பூவில் விழும் நாள் ஓஒ காதல்

உன் வெயில் பார்வை என்னை சுடும் நாள் ஓஒ சுகமே

இறகாய் நானும் தென்றலாய் நீயும்
இணையும் இந்நாள் பாடுமோஓஒ புது காதல் கீதம்

வெண்பனித்துளி பூவில் விழும் நாள் ஓஒ காதல்

உன் வெயில் பார்வை என்னை சுடும் நாள் ஓஒ சுகமே

அவள் தீயை வளர்த்தவளே
அணைத்ததை என்னை அணைத்தாளே
கண்ணசைத்தாளே என்னை அசைத்தாளே
கண்ணால் ஈர்ப்போள் இவள் தானே

கள்ளி என்னை கிள்ளி நீ தந்த முத்தமே
உயிர் வரை பாய்ந்து காதில் என் காதில்
நீ சொல்லும் வார்த்தையே காதலின் வேகமே

உன் விழியிலே கண் விழித்திடு வேண்டும்
அதுவே எனது தவமாகும்
உன் மடியிலே உயிர் பிரிந்திட வேண்டும்
அதுவே எனது வரமாகும்

சொல்லு காதல் நிஜமென்று

வெண்பனித்துளி பூவில் விழும் நாள் ஓஒ காதல்

உன் வெயில் பார்வை என்னை சுடும் நாள் ஓஒ சுகமே

இறகாய் நானும் தென்றலாய் நீயும்
இணையும் இந்நாள் பாடுமோஓஒ புது காதல் கீதம்

வெண்பனித்துளி பூவில் விழும் நாள் ஓஒ காதல்

உன் வெயில் பார்வை என்னை சுடும் நாள் ஓஒ சுகமே

கைகள் உன் கைகள் என்னை தாங்கும் போதெல்லாம்
உலகமே என் காலடியில்
தோளில் உன் தோளில் நான் சாயும் போதெல்லாம்
என்னை நான் மறந்தேனே

உன் ஸ்வாசத்தில் நான் வாழ்ந்திடவேண்டும்
அதுவே எனது மூச்சாகும்
உன் கருவிலே என் கவிதைகள் வேண்டும்
அதுவே நமது உயிராகும்

சொல்லு காதல் நிஜமென்று

வெண்பனித்துளி பூவில் விழும் நாள் ஓஒ காதல்

உன் வெயில் பார்வை என்னை சுடும் நாள் ஓஒ சுகமே

இறகாய் நானும் தென்றலாய் நீயும்
இணையும் இந்நாள் பாடுமோஓஒ புது காதல் கீதம்

வெண்பனித்துளி பூவில் விழும் நாள் ஓஒ காதல்

உன் வெயில் பார்வை என்னை சுடும் நாள் ஓஒ சுகமே

Tuesday, June 28, 2011

1183 இளம் மஞ்சள் வண்ணம்



//அலைகள் நதியின் மடியில் தவழ்ந்து தினம் துள்ளாதோ.. அசையும் நகரும் படகின் இடையை அது கிள்ளாதோ .. அலைகள் நதியின் மடியில் தவழ்ந்து தினம் துள்ளாதோ
அசையும் நகரும் படகின் இடையை அது கிள்ளாதோ .. நடனம் புரியும் அழகோ...நளினம் கலையின் ரசமோ .. விழிகளின் ஓரம் வரைகின்ற கோலம் .. கவிதைகள் பாடும் தென்றலோ
சுவை மிகும் தாகம் அல்லவோ//

பாடல்: இளம் மஞ்சள் வண்ணம்
திரைப்படம்: அக்கரைக்கு வாரீங்களா
இசை: ஷ்யாம்*
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: தண்டாயுதபாணி

Get this widget | Track details | eSnips Social DNA


இளம் மஞ்சள் வண்ணம் கொஞ்சுகின்ற செந்தூரம்
இது மாலை நேர வானம் பாடும் சங்கீதம்
பூங்காற்றிலே...பொன்னூஞ்சலோ
தேனோடையில்...நீராடலோ
பூவின் வாசம் இவ்வேளையில் தீண்டும் மேனி
ஆனந்தம் காணும் அல்லவோ
இளம் மஞ்சள் வண்ணம் கொஞ்சுகின்ற செந்தூரம்
இது மாலை நேர வானம் பாடும் சங்கீதம்

அலைகள் நதியின் மடியில் தவழ்ந்து தினம் துள்ளாதோ
அசையும் நகரும் படகின் இடையை அது கிள்ளாதோ
அலைகள் நதியின் மடியில் தவழ்ந்து தினம் துள்ளாதோ
அசையும் நகரும் படகின் இடையை அது கிள்ளாதோ
நடனம் புரியும் அழகோ...நளினம் கலையின் ரசமோ
விழிகளின் ஓரம் வரைகின்ற கோலம்
கவிதைகள் பாடும் தென்றலோ
சுவை மிகும் தாகம் அல்லவோ

இளம் மஞ்சள் வண்ணம் கொஞ்சுகின்ற செந்தூரம்
இது மாலை நேர வானம் பாடும் சங்கீதம்

உதிரும் மலரின் இனிய மணமும் மனம் அள்ளாதோ
உணர்வும் நினைவும் உலகைக் கடந்த நிலை கொள்ளாதோ
உதிரும் மலரின் இனிய மணமும் மனம் அள்ளாதோ
உணர்வும் நினைவும் உலகைக் கடந்த நிலை கொள்ளாதோ
இசையில் பெருகும் நிறைவோ...இளமை பருகும் உறவே
மழை தரும் மேகம் தொடுவதைப்போலே
அனுபவம் தேடும் நெஞ்சமே
சுகம் பெறும் வேகம் அல்லவோ

இளம் மஞ்சள் வண்ணம் கொஞ்சுகின்ற செந்தூரம்
இது மாலை நேர வானம் பாடும் சங்கீதம்
பூங்காற்றிலே...பொன்னூஞ்சலோ
தேனோடையில்...நீராடலோ
பூவின் வாசம் இவ்வேளையில் தீண்டும் மேனி
ஆனந்தம் காணும் அல்லவோ
இளம் மஞ்சள் வண்ணம் கொஞ்சுகின்ற செந்தூரம்
இது மாலை நேர வானம் பாடும் சங்கீதம்

பாடல் வரிகள் உதவி நன்றி: ப்ரியா,தூள்.காம்

1182 அலைகளே வா அவருடன் வா





//என்னை விட அழகா இது ஒரு உறவா.. கண்ணாலே ஜாடை போதுமே கிளியே//

படம்: கவிதை மலர்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, உமா ரமணன்
இசை: இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA


அலைகளே வா அவருடன் வா
உறவுக்கரையினிலே ஒரே காதல் என் நெஞ்சிலே
குலமகள் அலைக்கிறேன் நான்

அலைகளே வா அவருடன் வா
உறவுக்கரையினிலே ஒரே கீதம் நம் வாழ்விலே
ஏங்கும் பிரிவில்லை வா

அலைகளே வா அவருடன் வா

நாள் தோறும் இங்கே வந்தாய் கண்ணே
வேறென்ன எனையே தான் எண்ணி
கிடைத்தவன் விடமாட்டான்
எவருக்கும் தரமாட்டான்
அருகினினில் நெருங்குவேன்
அவள் அதில் மயங்குவாள்
மழையே பனியே அலைகளின் முறையே??
மனந்தாள் சுகமே இறைவோம் முறையே வா வா
அலை நீரில் ஆடும்?? காதல் இது
அலையாத என்ன காதல்
என்னை விட அழகா இது ஒரு உறவா
கண்ணாலே ஜாடை போதுமே கிளியே

அலைகளே வா அமைதியாய் வா
உறவுக்கலந்ததே ஒரே பாதை நம் வாழ்விலே
உலகமே என்னிடம் வா

அலைகளே வா அமைதியாய் வா

Monday, June 27, 2011

1181 ஒருவன் ஒருத்தி புது காதல்




//அடி கண்ணால் மந்திரம் சொன்னால் என் மனம்.. பின்னால் வாராதோ//

படம்:தம்பதிகள்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, ஜெயஸ்ரீ
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

Get this widget | Track details | eSnips Social DNA


ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக

ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட

இவள் கேரளத்தில் காண வேண்டும் கார்த்திகை மண நாள்
இவள் மேனி வண்ணம் பாட வேண்டும் ஸ்வாதி திரு நாள்
இவள் கேரளத்தில் காண வேண்டும் கார்த்திகை மண நாள்
இவள் மேனி வண்ணம் பாட வேண்டும் ஸ்வாதி திரு நாள்
நாடு என்ன பாஷை என்ன நெஞ்சோடு நான் கொஞ்ச
நாடு என்ன பாஷை என்ன நெஞ்சோடு நான் கொஞ்ச
நாணம் என்ன கண்ணே தோள் மீது துஞ்ச
நாணம் என்ன கண்ணே தோள் மீது துஞ்ச
விரல் பட்டால் பொங்குது தொட்டால் துள்ளுது
எல்லாம் உன்னாலே
விரல் பட்டால் பொங்குது தொட்டால் துள்ளுது
எல்லாம் உன்னாலே

ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட

ஒரு ஓடமென்று நானும் நீந்த ஓடையும் நீயோ
வளை ஓசை மெல்ல கேட்க்கும்போது உருகிடுவாயோ
ஒரு ஓடமென்று நானும் நீந்த ஓடையும் நீயோ
வளை ஓசை மெல்ல கேட்க்கும்போது உருகிடுவாயோ
மோகமென்ன தாகமென்ன முந்தானை நீ போட
மோகமென்ன தாகமென்ன முந்தானை நீ போட
ஆசை என்னும் வெள்ளம் ஆறாக ஓட
ஆசை என்னும் வெள்ளம் ஆறாக ஓட
அடி கண்ணால் மந்திரம் சொன்னால் என் மனம்
பின்னால் வாராதோ
அடி கண்ணால் மந்திரம் சொன்னால் என் மனம்
பின்னால் வாராதோ

ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்ட
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட

பாடல் வரிகள் உதவி நன்றி: ஸ்ரீ. தூள்.காம்

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்

Saturday, June 25, 2011

1180 இதயம் இதயம் முழுதும்



//முத்தங்களின் ராகங்கள் சத்தமின்றி கேளுங்கள்.. வியர்வை நதியில் நீராடுங்கள்.. உன் இதழின் ஓரங்கள் இன்ப மதுச்சாரல்கள்.. இரவை நனைக்கும் தேன் மேகங்கள்.. குமுத வண்டுகள் அமுதம் குடிக்கும் சுக ராத்திரி.. விடி விளக்குகள் தூங்குமோ என் காதலி
இரவே போகாதே...லல லல லா.. பகலே வாராதே...லல லல லா.. இதயம்...இதயம்...இதயம்//

பாடல்: இதயம் இதயம் முழுதும்
திரைப்படம்: இதயம் பேசுகிறது
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: ஷ்யாம்


Get this widget | Track details | eSnips Social DNA


இதயம் இதயம் முழுதும் மோகங்கள்
விடியும் வரையில் எரியும் தீபங்கள்
பூமேனி அஞ்சுமோ மயிலிறகில் மஞ்சமோ
சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ

இதயம் இதயம் முழுதும் மோகங்கள்
விடியும் வரையில் எரியும் தீபங்கள்
பூமேனி அஞ்சுமோ மயிலிறகில் மஞ்சமோ
சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ

தொட்டவுடன் தோள்களில் சுற்றுகின்ற பூங்கொடி
தேகம் முழுதும் தேமாங்கனி
பத்து விரல் போதுமா பத்து கைகள் வேணுமோ
கரும்பு துரும்பை ருசி பார்க்குமோ
நெருக்கம் இருந்து இருட்டில் கிடந்து விளையாடுமே
சுக நினைவினில் பஞ்சணை சூடாகுமே
கனவே தீண்டாதே...லல லல லா
கதையை தூண்டாதே...ஆஆ ஆஆ ஆ
இதயம்...இதயம்...இதயம்

இதயம் இதயம் முழுதும் மோகங்கள்
விடியும் வரையில் எரியும் தீபங்கள்
பூமேனி அஞ்சுமோ மயிலிறகில் மஞ்சமோ
சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ

முத்தங்களின் ராகங்கள் சத்தமின்றி கேளுங்கள்
வியர்வை நதியில் நீராடுங்கள்
உன் இதழின் ஓரங்கள் இன்ப மதுச்சாரல்கள்
இரவை நனைக்கும் தேன் மேகங்கள்
குமுத வண்டுகள் அமுதம் குடிக்கும் சுக ராத்திரி
விடி விளக்குகள் தூங்குமோ என் காதலி
இரவே போகாதே...லல லல லா
பகலே வாராதே...லல லல லா
இதயம்...இதயம்...இதயம்

இதயம் இதயம் முழுதும் மோகங்கள்
விடியும் வரையில் எரியும் தீபங்கள்
பூமேனி அஞ்சுமோ மயிலிறகில் மஞ்சமோ
சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ

Thursday, June 23, 2011

1179 ராமன் போல தோற்றம்




//புருசன் ஓர் அரசானான்.. மனைவி தான் மந்திரி.. தவறுகள் நேரும் போது.. திருத்துவாள் பெண்மணி.. குலமகள் இவளிடம்.. பொங்கும் வீரம் உண்டு.. பகை கண்டு பாயும் வேங்கை போல்.. இவள் வாழ்கிறாள்.. பகை கண்டு பாயும் வேங்கை போல்.. இவள் வாழ்கிறாள்//

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்ணன்

படம்: தொட்டால் சுடும்
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி
இசை:சங்கர் கனேஷ்
இயக்குநர்: ராஜ்பரத்
வருடம்:1982.

Get this widget | Track details | eSnips Social DNA


ராமன் போல தோற்றம்
காமன் போல ஆட்டம்
ராஜ போகமோ என்றும்
லீலா வினோதமோ

பரந்தாமனின் ஏன் இல்லை
பாஞ்சாலி மாணம் காக்க
பிறர் தாரம் பார்க்கும் பேரை
அவதாரம் செய்தே தீர்க்க

ராமன் போல தோற்றம்
காமன் போல ஆட்டம்
ராஜ போகமோ என்றும்
லீலா வினோதமோ

கணவன் தான் பேசும் தெய்வம்
குடும்பம் தான் கோயிலே
இலக்கணம் போல வாழும்
இவளும் ஓர் சீதையே
மலையருளும் இவள் வசம்??
மஞ்சள் மாலை கொண்டாள்
குறள் சொன்ன வாழ்க்கை வேதம் போல்
இவள் வாழ்கிறாள்
குறள் சொன்ன வாழ்க்கை வேதம் போல்
இவள் வாழ்கிறாள்

ராமன் போல தோற்றம்
காமன் போல ஆட்டம்
ராஜ போகமோ என்றும்
லீலா வினோதமோ

புருசன் ஓர் அரசானான்
மனைவி தான் மந்திரி
தவறுகள் நேரும் போது
திருத்துவாள் பெண்மணி
குலமகள் இவளிடம்
பொங்கும் வீரம் உண்டு
பகை கண்டு பாயும் வேங்கை போல்
இவள் வாழ்கிறாள்
பகை கண்டு பாயும் வேங்கை போல்
இவள் வாழ்கிறாள்

ராமன் போல தோற்றம்
காமன் போல ஹஹ ஆட்டம்
ராஜ போகமோ என்றும்
லீலா வினோதமோ

எவரையும் காதல்கொள்ளும்
இவள் மனம் வண்டு போல்
நிதம் ஒரு வண்டு வந்து
குலவிடும் செண்டு போல்
மனிதரில் பலவிதம்
இங்கும் நாய்கள் உண்டு
இறை தேடும் காக்கை கூட்டம் போல்
இவர் வாழ்கிறார்
இறை தேடும் காக்கை கூட்டம் போல்
இவர் வாழ்கிறார்

ராமன் போல தோற்றம்
காமன் போல ஆட்டம்
ராஜ போகமோ என்றும்
லீலா வினோதமோ

பரந்தாமனின் ஏன் இல்லை
பாஞ்சாலி மாணம் காக்க
பிறர் தாரம் பார்க்கும் பேரை
அவதாரம் செய்தே தீர்க்க..

Sunday, June 19, 2011

1178 கல்யாண ராமன் கோலம்



//நவரச நாடகம் கண்ணோடு கொஞ்சம்.. நடந்தது ஒரு கணமே.. ஆஆ கனிரசமானவள் நெஞ்சோடு நெஞ்சம்.. கலந்தது மறு கணமே..அம்மம்மா என்றால் அன்னம் தான் அதுவே
ஆரம்ப காலம் அல்லவோ//

இயக்குனர் :பட்டு
தயாரிப்பாளர் : ஜி. சுப்ரமணிய ரெட்டியார், ஸ்ரீ நவனீஹா பிலிம்ஸ்
நடிப்பு : ஏ. வி. எம். ராஜன், சாவித்திரி
இசையமைப்பு : சங்கர் கணேஷ்
வருடம்: 1972

Get this widget |align="center"> Track details | eSnips Social DNA


படம்:தாய்க்கு ஒரு பிள்ளை
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி,பி.சுசிலா

கல்யாணா ராமன் கோலம் கொண்டான்
கண்ணான சீதை காதல் கொண்டாள்

கல்யாணா ராமன் கோலம் கொண்டான்
கண்ணான சீதை காதல் கொண்டாள்

கல்யாணா ராமன் கோலம் கொண்டான்

நவரச நாடகம் கண்ணோடு கொஞ்சம்
நடந்தது ஒரு கணமே

ஆஆ கனிரசமானவள் நெஞ்சோடு நெஞ்சம்
கலந்தது மறு கணமே

அம்மம்மா என்றால் அன்னம் தான் அதுவே
ஆரம்ப காலம் அல்லவோ

அம்மம்மா என்றால் அன்னம் தான் அதுவே
ஆரம்ப காலம் அல்லவோ

கல்யாணா ராமன் கோலம் கொண்டான்
கண்ணான சீதை காதல் கொண்டாள்

கல்யாணா ராமன் கோலம் கொண்டான்

அறிமுகமானவள் என்றாலும் நாணம்
அவளுக்கும் வருமல்லவா

ஆஆ அனுபவமான பின் உண்டாகும் இன்பம்
இருவருக்கும் சமம் அல்லவா

அள்ளிக்கொள் என்றே சொல்லித்தான் தந்தான்
ஆசைக்கும் பஞ்சம் என்னவோ
அள்ளிக்கொள் என்றே சொல்லித்தான் தந்தான்
ஆசைக்கும் பஞ்சம் என்னவோ

கல்யாணா ராமன் கோலம் கொண்டான்
கண்ணான சீதை காதல் கொண்டாள்

கல்யாணா ராமன் கோலம் கொண்டான்

Friday, June 17, 2011

1177 கடலில் அலைகள் பொங்கும்



//என்னை மட்டும் புரிந்து கொண்டால்.. அத்தனையும் தேன் துளிகள்.. தேன் துளியை தேக்கி வைக்கும்.. தாமரையில் இதயமம்மா//

படம்:மகரந்தம்
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA


கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ

கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ

என்னுடலில் உணர்வு தங்கும்
இன்பம் உருவை தாண்டுமோ
வெறும் உறவை தீண்டுமோ

சின்னச் சின்ன காரணத்தால்
கன்னமதில் நீர்த் துளிகள்
சின்னச் சின்ன காரணத்தால்
கன்னமதில் நீர்த் துளிகள்

என்னை மட்டும் புரிந்து கொண்டால்
அத்தனையும் தேன் துளிகள்
என்னை மட்டும் புரிந்து கொண்டால்
அத்தனையும் தேன் துளிகள்

தேன் துளியை தேக்கி வைக்கும்
தாமரையில் இதயமம்மா
தேன் துளியை தேக்கி வைக்கும்
தாமரையில் இதயமம்மா

தாமரையை மலரவைக்கும்
ஆதவனின் உதயமம்மா

கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ

கண்கள் சொன்ன கவிதை எல்லாம்
கல் எழுத்து போன்றதம்மா
கண்கள் சொன்ன கவிதை எல்லாம்
கல் எழுத்து போன்றதம்மா

கல் எழுத்து என்றிருந்தால்
காலம் என்ன செய்யுமம்மா
கல் எழுத்து என்றிருந்தால்
காலம் என்ன செய்யுமம்மா

நீர் இடித்து நீர் விலகி
பார்த்ததில்லை பூமியிலே
நீர் இடித்து நீர் விலகி
பார்த்ததில்லை பூமியிலே

நீ பிரிந்து நான் இருந்தால்
வாழ்க்கையில்லை பொன் மகளே

கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ

என்னுடலில் உணர்வு தங்கும்
இன்பம் உருவை தாண்டுமோ
வெறும் உறவை தீண்டுமோ

Thursday, June 16, 2011

1176 மாங்கனி.. செம்மாங்கனி



//கதை சொல்லும் கொடியிடை ஜாடை.. அதை பாடும் கவிஞர்கள் மேடை//

படம்: காலடி ஓசை
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி,கௌசல்யா

Get this widget | Track details | eSnips Social DNA


மாங்கனி.. செம்மாங்கனி
மாங்கனி.. செம்மாங்கனி

மாங்கனி.. செம்மாங்கனி
இது மாதுளம் கனி
ஊஞ்சாலாடும் வென்னிலா
ஊர்வலம் போகுது வென்னிலா??
அது ஏன் ஆடுது மனம் போல் ஆடுது??

அது ஏன் ஆடுது மனம் போல் ஆடுது??

மாங்கனி.. செம்மாங்கனி

திரைப் போட்ட குங்கும கலசம்
சதிராடுதே குடம் சரசம்??
திரைப் போட்ட குங்கும கலசம்
சதிராடுதே குடம் சரசம்??
விஸ்வாமித்திரர் மயங்க ஒரு மேனகை

இது எல்லோர் மயங்க ஒரு புன்னகை
அந்த கலையின் விலை என்ன

மாங்கனி.. செம்மாங்கனி

கதை சொல்லும் கொடியிடை ஜாடை
அதை பாடும் கவிஞர்கள் மேடை
கதை சொல்லும் கொடியிடை ஜாடை
அதை பாடும் கவிஞர்கள் மேடை
தம்பி பார்வை?? மயங்க தவறானது

அனைவரும் இங்கே மயங்க ஒரு ஜீவ நதி

அந்த மோகத்தின் வேகம் என்ன

மாங்கனி.. செம்மாங்கனி
இது மாதுளம் கனி
ஊஞ்சாலாடும் வென்னிலா
ஊர்வலம் போகுது வென்னிலா??
அது ஏன் ஆடுது மனம் போல் ஆடுது??

அது ஏன் ஆடுது மனம் போல் ஆடுது??

மாங்கனி.. செம்மாங்கனி
மாங்கனி.. செம்மாங்கனி

ஒலிக்கோப்பு உதவி:கனேஷ்,சென்னை

Wednesday, June 15, 2011

1175 ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல



படம்:நான் சூடிய மலர்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, எஸ்.பி.சைலஜா

Get this widget | Track details | eSnips Social DNA


ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாய்ங்காலமா வீசுற காத்துல
நெருப்பு நீரில் குளிச்சது போல் இருக்குதா
நெருங்கி பழக ஆண் துணை இனிக்குதா
ஹோய் இனிக்குதா இனிக்குதா

ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாய்ங்காலமா வீசுற காத்துல
நெருப்பு நீரில் குளிச்சது போல் இருக்குதா
நெருங்கி பழக பெண் துணையும் இனிக்குதா
இனிக்குதா இனிக்குதா

ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாய்ங்காலமா வீசுற காத்துல

ஏமாந்தா எல்லையை மீறினே
கரை புறண்டு ஓடும் போதிலே
ஏமாந்தா எல்லையை மீறினே
கரை புறண்டு ஓடும் போதிலே

?? அடைக்குது போல் இருக்குதா
இறங்கி பழக பெண் துணையே இனிக்குதா
?? அடைக்குது போல் இருக்குதா
இறங்கி பழக பெண் துணையே இனிக்குதா இனிக்குதா

ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாய்ங்காலமா வீசுற காத்துல
நெருப்பு நீரில் குளிச்சது போல் இருக்குதா
நெருங்கி பழக பெண் துணையும் இனிக்குதா
இனிக்குதா இனிக்குதா இனிக்குதா

நிலவு வெறிக்கும் வானாக நீயாகனும்
நானொரு நிலவாக இணைந்தாகனும்
நிலவு வெறிக்கும் வானாக நீயாகனும்
நானொரு நிலவாக இணைந்தாகனும்

நாரெல்லாம் கனியேந்தும் கொன்றிலே
நான் சாய்ஞ்சாடவா உன்னுடைய நெஞ்சிலே
ஆஹாஹா நாரெல்லாம் கனியேந்தும் கொன்றிலே
நான் சாய்ஞ்சாடவா உன்னுடைய நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே

ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாய்ங்காலமா வீசுற காத்துல
நெருப்பு நீரில் குளிச்சது போல் இருக்குதாhttp://www.blogger.com/img/blank.gif
நெருங்கி பழக ஆண் துணை இனிக்குதா
ஹோய் இனிக்குதா இனிக்குதா

ஒய்யாரமா கொய்யாக்கா தோப்புல
சாய்ங்காலமா வீசுற காத்துல
நெருப்பு நீரில் குளிச்சது போல் இருக்குதா
நெருங்கி பழக பெண் துணையும் இனிக்குதா
இனிக்குதா இனிக்குதா இனிக்குதா

நன்றி: கனேஷ்,கனேஷ் சென்னை, தேனிசை தளம்

Tuesday, June 14, 2011

1174 அசைந்தாடும் ஓவியம்



//மனம் பொங்கும் சந்தனம்.. உன் மேனி பூக்குடம்.. நிலவேனில் பால்குடம்.. என் இதய வார்ப்படம்//

படம்: புது யுகம் பிறக்குது
பாடியவர்: டாக்டர்.எஸ்.பி.பி & ஸ்வர்னா

Get this widget | Track details | eSnips Social DNA


அசைந்தாடும் ஓவியம்
அழகான காவியம்

அசைந்தாடும் ஓவியம்
அழகான காவியம்
சுகமான ராகமோ
புது வீணையோ

அசைந்தாடும் ஓவியம் அழகான காவியம்
சுகமான ராகமோ புது வீணையோ

இளம் தென்றல் காற்றிலே
மழை கூந்தல் ஆடுதே
நீ பார்க்கும் பார்வையில்
புது மோகம் தோணுதே

இளம் தென்றல் காற்றிலே
மழை கூந்தல் ஆடுதே
நீ பார்க்கும் பார்வையில்
புது மோகம் தோணுதே
ஆசைகள் ஆயிரம் கோடி
ஆனந்த கங்கைகள் தோழி
நீராட வந்த தேவி
நீ எந்தன் ஆவி

அசைந்தாடும் ஓவியம்
அழகான காவியம்
சுகமான ராகமோ
புது வீணையோ

மனம் பொங்கும் சந்தனம்
உன் மேனி பூக்குடம்
நிலவேனில் பால்குடம்
என் இதய வார்ப்படம்

மனம் பொங்கும் சந்தனம்
உன் மேனி பூக்குடம்
நிலவேனில் பால்குடம்
என் இதய வார்ப்படம்
வானம் மேகம் பார்க்க
மாலையும் மஞ்சளும் சேர்க்க
இது தானே யோக வேளை
சுகம் தானே நாளை

அசைந்தாடும் ஓவியம்
அழகான காவியம்
சுகமான ராகமோ
புது வீணையோ

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கனேஷ்,சென்னை

Monday, June 13, 2011

1173 சொர்க்கத்தை பார்க்கிறேன் உன்னிடம்




//சொர்க்கத்தை பார்க்கிறேன் உன்னிடம்.. இன்பத்தை கொண்டுவா என்னிடம்.. மாணிக்கத்தேரே நீ மெதுவாகச் செல்லு... காணிக்கை எது வேண்டும் காதோட சொல்லு//

படம்:அவள் ஒரு அதிசயம்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்,பி.பி வாணிஜெயராம்
இயக்குனர்: பி. வி. ஸ்ரீநிவாஸ்
தயாரிப்பாளர்: பி. வி. ஸ்ரீநிவாஸ்
சுசித்ரா பிலிம்ஸ்
நடிப்பு: ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா
இசையமைப்பு: விஜய் பாஸ்கர்

Get this widget | Track details | eSnips Social DNA


சொர்க்கத்தை பார்க்கிறேன் உன்னிடம்
இன்பத்தை கொண்டுவா என்னிடம்
மாணிக்கத்தேரே நீ மெதுவாகச் செல்லு
காணிக்கை எது வேண்டும் காதோட சொல்லு

சொர்க்கத்தை பார்க்கலாம் என்னிடம்
சொல்லாமல் சொல்லவா உன்னிடம்
பூம்மேனி வாடாமல் மெதுவாக தழுவு
நீ கொண்ட எண்ணத்தை கன்னத்தில் எழுது
சொர்க்கத்தை பார்க்கலாம் என்னிடம்
சொல்லாமல் சொல்லவா உன்னிடம்

பச்சைக்கிளி கொத்தாமல் பழம் எதற்கு
இச்சைப்படி கொஞ்சாமல் அழகு எதற்கு
ஆஆஆஆஆஆ...ஏஏஏஏஏஏஎ.........

உத்தரவு இல்லாமல் தொடுவதென்ன??
பத்து விரல் நீ போட படுவதென்ன

ஆசை வேகம்...

காலை தீரும்..

அதற்குள் அவசரம் வா வா வா

சொர்க்கத்தை பார்க்கலாம் என்னிடம்
சொல்லாமல் சொல்லவா உன்னிடம்

தக்கபடி கல்யாணம் நடக்கட்டுமே
அந்தபுரம் சந்தோசம் கிடைக்கட்டுமே

லலலலலலலா..லலலல
லலலலலலலா..லலலல

ஒத்திகை இந்நேரம் நடக்கட்டுமே
ஒன்றை ஒன்று முன்னாடி விளங்கட்டுமே

மயங்கும் போது...

மௌனம் ஏது...

எனக்கு புரிந்த்து நீ...நீ...நீ

சொர்க்கத்தை பார்க்கிறேன் உன்னிடம்
இன்பத்தை கொண்டுவா என்னிடம்
மாணிக்கத்தேரே நீ மெதுவாகச் செல்லு
காணிக்கை எது வேண்டும் காதோட சொல்லு

சொர்க்கத்தை பார்க்கலாம் என்னிடம்
சொல்லாமல் சொல்லவா உன்னிடம்

Thursday, June 09, 2011

1172 தேவாரப் பாட்டு தேனூறும்



//என்ன மாயங்களோ என்ன ஜாலங்களோ? ...தினம் மங்கைக்கும் என் கைக்கும் தேவையன்றோ//

படம்:தாளம் தவறிய ராகம்
பாடகர்கள்:டாக்டர் எஸ்.பி.பி,வாணிஜெயராம்

Get this widget | Track details | eSnips Social DNA



தேவாரப் பாட்டு தேனூறும் இசையே
பூந்தென்றல் காற்றும் பாடும் இங்கே
தேவாரப் பாட்டு தேனூறும் இசையே
பூந்தென்றல் காற்றும் பாடும் இங்கே

இசை மேளங்களும் சுக நாதங்களும்
இனி நாள் தோறும் நான் கேட்க வேண்டும் இங்கே
தேவாரப் பாட்டு தேனூறும் இசையே
பூந்தென்றல் காற்றும் பாடும் இங்கே

ஒரு கண்ணின் நாணம் மறு கண்ணில் போகும்??
போராட வந்தால் என்ன சொல்ல

இருள் நேரத்திலே இதழ் ஓரத்திலே
இனி சங்கீதம் ஒன்றாக கேட்டதம்மா

மாடத்து தென்றல் வாடிக்கை படலாய்??
உன் கைகள் தீண்டும் நியாயம் என்ன

என்ன மாயங்களோ என்ன ஜாலங்களோ
தினம் மங்கைக்கும் என் கைக்கும் தேவையன்றோ

தேவாரப் பாட்டு தேனூறும் இசையே
பூந்தென்றல் காற்றும் பாடும் இங்கே

தேனாறு பொங்கும் பூமேனி எங்கும்
ஆனந்த தீர்த்தம் காண வந்தேன்

சொர்ர்க்கலோகங்களே இன்று வாருங்களே
என்று நாள் தோறும் நான் இங்கு பாடவந்தேன்

இளமாலை நேரம் அழகான கேசம்
எங்கெங்கும் கோலம் போட வந்தேன்??

உடல் ஒன்றாகவும் உயிர் ஒன்றாகவும்
இரு விண்ணோடு நான் இங்கு கூற வந்தேன்

தேவாரப் பாட்டு தேனூறும் இசையே
பூந்தென்றல் காற்றும் பாடும் இங்கே

இசை மேளங்களும் சுக நாதங்களும்
இனி நாள் தோறும் நான் கேட்க வேண்டும் இங்கே

Wednesday, June 08, 2011

1171 யாரிது தேவதை ஓராயிரம் பூமழை



//மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ.. தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ.. ஆஆ மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ.. தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ.. இதழ் ஓசைகள் புது ஆசைகள் பரிபாஷைகள் ஆஆஆ.. பூமுகமோ பால் நிலவோ பார்த்ததும் போற்றிடும் யாத்திரை இரவினில்//

இனிமையான பாடல் ரொம்ப வருடங்களுக்கு பின் கேட்ட பாடல் உங்களூக்காக.

படம்:என் பிரியமே
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA


அர்ச்சனா போடி உள்ள..

யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
ஹ்ஹ யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
ஸ்வரம் தரும் நிலா வரும் திருவிழா
இதோ என் காதல் தேசம் எங்கே
யாரிது தேவதை ஓராயிரம் பூமழை

காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ தான்
ஆஆகாலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ
பொன் வீணையே புதுப்பாடகன் தொடும் நேரமோஓஓஓ
கண்மணியே என் உயிரே
பூவிழி பைங்கிளி தேன் மொழி பொழிந்திட
யாரிது தேவதை ஓராயிரம் பூமழை

மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ
ஆஆமேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ
இதழ் ஓசைகள் புது ஆசைகள் பரிபாஷைகள் ஆஆஆ
பூமுகமோ பால் நிலவோ
பார்த்ததும் போற்றிடும் யாத்திரை இரவினில்

யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
ஸ்வரம் தரும் நிலா வரும் திருவிழா
இதோ என் காதல் தேசம் எங்கே
யாரிது தேவதை ஓராயிரம் பூமழை

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கனேஷ் தேனிசை ப்ளாக், சென்னை

Saturday, June 04, 2011

1170 இனிய பிறந்த நாள சிறப்பு ஒலித்தொகுப்பு



இன்று தான் இனிய பிறந்த நாள கொண்டாடும் பத்மபூஷன் டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களூக்கு சமர்பணமாகவும் அவருடன் இணைந்த பாடிய ஜாம்பவங்களின் குரல்களுடன் சிறப்பு ஒலித்தொகுப்பு ஐரோப்பிய தமிழ் வானொலீயில் இன்று உலா வந்தது. இனிமையியான குரலில் தொகுத்து வழங்கியவர் கொஞ்சும் குரல் யாளினி திருமதி ராகினி பாஸ்கரன். ரசித்து உங்கள வாழ்த்துக்களையும் அனுப்புங்கள் அன்பர்களே.

1.நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம்
2.நான் ஒரு மேடைப்பாடகன் - நாளை நமதே
3.பாடல்:நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக்கனா - கூட்டுப்புழுக்கள்
4.பாடல்: நடப்பது சுகமென நடத்து - டி.எம்.சௌந்தரராஜன், டாக்டர் எஸ்.பி.பி
5.இது சாவி புதிய சாவி - வைரம்,
6.எனக்கொரு காதலி இருக்கின்றாள், எம்.எஸ்.விஸ்வநாதன், டாக்டர் எஸ்.பி.பி.
7.என் காதலி யார் சொல்லவா- டாக்டர்.கே,ஜே.யேசுதாஸ், டாக்டர்.எஸ்.பி.பி
8.முத்துமணீயே முத்து மணியே - டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர். கே.ஜே.யேசுதாஸ்
9.உலகில் இரண்டு கிளிகள் உரிமையுடன் - டி..எம்.எஸ்.எஸ்.பி.பி,பி.சுசில்லா, வாணிஜெயராம்
10.நட்பு நட்பு நட்பு, எம்.எஸ்.வி,இளையராஜா,உன்னை சரணடைந்தேன்



என் ஆக்கத்தை தன்னுடைய இனிய குரலால் மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய கொஞ்சும் குரல் யாளினி திருமதி ராகினி பாஸ்கரன் அவரகளூக்கு கோடானு கோடி நன்றிகள்.

Get this widget | Track details | eSnips Social DNA

1169 உன்னைப் போற்றி எழுத



உன்னை போற்றி எழுத ஒரு ஒரு புலவனும் இல்லை......

இன்று தன் 64ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடும் பத்மபூஷன் டாக்டர் பாலுஜி அவர்களுக்கு இணையதள நேயர்கள் சார்பாகவும் அவரின் கோவை ரசிகர்கள் சார்பாகவும் நீடுழி பல்லாண்டு வாழ்க வாழ்க என்று வாழ்த்தி வணங்குகிறோம்.

கோவை ரவி, மற்றும் கோவை பாலுஜி ரசிகர்கள்.

Followers

பகிர்க