Friday, August 26, 2011

1211 மண்ணின் மைந்தன் நீயடா ..




//மண்ணின் மைந்தன் நீயடா .. மண்ணே உந்தன் தாயடா. தாயை வளர்த்த மண் இல்லாமல்
தாய் பால் உனக்கு ஏதடா//

படம்: சிவசக்தி
பாடியவர்: டாக்டர்.எஸ்.பி.பி
நடிப்பு:சத்யராஜ், பிரபு, ரம்பா, சுஜாதா, மகேஷ் ஆனந்த், நிழல்கள் ரவி, ராகசுதா, கே.எஸ்.ஜெயலட்சுமி, கிரீஷ் கர்னாட், ஆர்.என்.கே.பிரசாத், சிட்டிபாபு, வின்சென்ட், ஜெயபிரகாஷ், மோகன்ராம், ராம்லட்சுமணன், ஜோசெப், ரவிராஜ், டாக்டர் ஜாய்
இயக்குனர் :சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்பாளர் : எம்.ஜி.சேகர், எஸ்.சந்தானம்
கதை :பாலகுமாரன்
இசையமைப்பு :தேவா

மண்ணின் மைந்தன் நீயடா
மண்ணே உந்தன் தாயடா

மண்ணின் மைந்தன் நீயடா
மண்ணே உந்தன் தாயடா

மண்ணின் மைந்தன் நீயடா
மண்ணே உந்தன் தாயடா
தாயை வளர்த்த மண் இல்லாமல்
தாய் பால் உனக்கு ஏதடா
தாயை வளர்த்த மண் இல்லாமல்
தாய் பால் உனக்கு ஏதடா

மண்ணின் மைந்தன் நீயடா
மண்ணே உந்தன் தாயடா

Get this widget | Track details | eSnips Social DNA


சோகம்

மண்ணின்.. மைந்தன்... நீயடா
மண்ணே.... உந்தன்... தாயடா

தாயை.. வளர்த்த.. மண்... இல்லாமல்
தாய்.. பால்.. உனக்கு... ஏதடா

Get this widget | Track details | eSnips Social DNA


ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்

1210 காதல் ஒரு கோயில் போலே



//ஆஆஆஆ பூவைப்போலே பெண்மை தானே .. பூவைப்போலே பெண்மை தானே வாடிப் போகின்றாள் .. முல்லைப்போலே மேகம் பார்த்து மாறிப்போகின்றாள் .. காலம் எல்லாம் உன் மனைவி .. காத்திருந்து அடைவதென்பாள் .. நாளை வரும் பிறவியிலும்.. ம்ஹ்ஹ நானே உன் மனைவி என்பாள் .. நானே உன் மனைவி என்பாள் .. நாள் இன்று போலே நேற்று இல்லை நாளை வேறம்மா .. உன் ஆசை போலே பாதை இல்லை அறிவது யாரம்மா//


படம்: மல்லிகை மோகினி
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர் எஸ்.ஜானகி
இயக்குனர் : துரை
தயாரிப்பாளர் : பல்லவி புரொடக்ஷன்ஸ்
நடிப்பு விக்ரம் : லதா
இசையமைப்பு ஜி. கே. வெங்கடேஷ்
வருடம்: 1979

Get this widget | Track details | eSnips Social DNA


நவரசம் பிறந்த இடம்
நான்கு குணம் வளர்ந்த இடம்
சுகங்களெல்லாம் நிறைந்த இடம்
எந்நாளூம் பெண்ணிடமே

காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்

காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள்
கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள்

காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்
கல்யாணம் மோகம் கொண்ட பொம்மைகள் ஆண்கள்

காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்

ஆசையெனும் சோலையிலே
ஆடுகின்ற பொன்வண்டு
ஆண் என்று அவன் படைத்தான்
வண்டு எனவே குணம் படைத்தான்

காதல் ஒரு காவியம் என்றால்
எந்நாளும் கற்பனை செய்வார்கள்
கண்ணாலே கவிதையும் சொல்வார்கள்
தன்னாலதான் யாரை மறப்பார்கள்?

வானம் ஒரு வில்லைக் கண்டால் வண்ணங்கள் ஒரு ஆண்கள்
மாறாத எண்ணம் கொண்ட தீபங்கள் பெண்கள்
மாறாத எண்ணம் கொண்ட தீபங்கள் பெண்கள்

காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்

என்ன காதல் என்ன எண்ணம்
ஹ்ஹ என்ன காதல் என்ன எண்ணம் உங்கள் எண்ணங்கள்
இன்று நாளை மாறிப்போகும் ஆசை கிண்ணங்கள்

நஞ்சு விழி என்றதனால் நீல விழி என்றார்
வஞ்சகமே செய்வதனால் வஞ்சியர்கள் என்றார்
உங்கள் உள்ள்ம் ஒன்று எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால் எங்கள் பேர் என்ன
ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால் எங்கள் பேர் என்ன
உங்கள் உள்ள்ம் ஒன்று எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
உங்கள் உள்ள்ம் ஒன்று எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன
ஓ உங்கள் பேரை தெய்வம் என்றால் எங்கள் பேர் என்ன
உங்கள் உள்ள்ம் ஒன்று எண்ணம் ரெண்டு சொல்லும் சொல் என்ன

தன்னை மறப்பதுண்டு
தடம் மாறி போவதுண்டு
கண்ணை இழப்பதுண்டு
கல்லாக ஆவதுண்டு

ஆடுவது நாடக கோலங்கள்
பேசுவது ஆயிரம் ஜாலங்கள்
தன்னாலே மாறிடும் மேகங்கள்
உள்ளங்கள் தவறிய கோலங்கள்

காலங்கள் மாறும் போதும் மாறாத பெண்மை
காலங்கள் மாறும் போதும் மாறாத பெண்மை
கண்ணாடி போன்ற உள்ளம் பூப்போன்ற மென்மை
கண்ணாடி போன்ற உள்ளம் பூப்போன்ற மென்மை

காதல் ஒரு கோயில் போலே தெய்வங்கள் பெண்கள்

ஆஆஆஆ பூவைப்போலே பெண்மை தானே
பூவைப்போலே பெண்மை தானே வாடிப் போகின்றாள்
முல்லைப்போலே மேகம் பார்த்து மாறிப்போகின்றாள்
காலம் எல்லாம் உன் மனைவி
காத்திருந்து அடைவதென்பாள்
நாளை வரும் பிறவியிலும்
ம்ஹ்ஹ நானே உன் மனைவி என்பாள்
நானே உன் மனைவி என்பாள்
நாள் இன்று போலே நேற்று இல்லை நாளை வேறம்மா
உன் ஆசை போலே பாதை இல்லை அறிவது யாரம்மா
உன் ஆசை போலே பாதை இல்லை அறிவது யாரம்மா
நாள் இன்று போலே நேற்று இல்லை நாளை வேறம்மா
நாள் இன்று போலே நேற்று இல்லை நாளை வேறம்மா
உன் ஆசை போலே பாதை இல்லை அறிவது யாரம்மா

நாள் இன்று போலே நேற்று இல்லை நாளை வேறம்மா
உன் ஆசை போலே பாதை இல்லை அறிவது யாரம்மா

Wednesday, August 24, 2011

1209 நீங்காத ஞாபகம் நெஞ்சிலே



//காலம் முழுவதும் உன் கண்கள் சிரிக்கட்டும் .. காதல் தலைவனும் உன் பக்கம் .. இருக்கட்டும் நான் .. உன்னை...ஆஆஆஆஆஆ..ஆஆஆஆஆஆ//

படம்: சாவி
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, பி.சுசீலா

Get this widget | Track details | eSnips Social DNA


நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓஓ என்றும் வாழ்க
நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓஓ என்றும் வாழ்க

மாலை சுமந்தது மன்னன் உறவிலே
மஞ்சள் மலர் இது கொஞ்சும் பொழுதிலே
நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓஓ என்றும் வாழ்க

கோலக்கிளி ஒன்று என் கண்ணில் நடந்ததே
பாதச்சுவடுகள் என் நென்ஞ்சில் பதிந்ததே
நானும்.. நீ....ஆஆஆஆஆ..ஆஆஆஆஆ..

ஆஆஆஆஆ நீ என்னை வாழ்த்திட
வாழ்க்கையும் பூத்திட
நன்றி கூறும் நேரந்தான்
விழியோரம் ஈரம் தான்

நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓஓ என்றும் வாழ்க

காலம் முழுவதும் உன் கண்கள் சிரிக்கட்டும்
காதல் தலைவனும் உன் பக்கம் இருக்கட்டும்
நான் .. உன்னை...ஆஆஆஆஆஆ..ஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆ நீ என்னை தேற்றினாய்
பாதையை மாற்றினாய்
மாலை மஞ்சள் குங்குமம்
மனைவி காணும் மங்களம்

நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓஓ என்றும் வாழ்க

மாலை சுமந்தது மன்னன் உறவிலே
மஞ்சள் மலர் இது கொஞ்சும் பொழுதிலே
நீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க
ஓஓ என்றும் வாழ்க


1208 ஒரு பாடலை பல ராகத்தில்





//எந்தன் பாதையை இந்த தேவதை .. குரல் ஓசையை கேட்கின்றேன் .. உந்தன் ஞாபகம் வரும் போதெல்லாம் .. நான் வானில் பறக்கின்றேன் .. விழி மோகனம் தரும் மந்திரம்
விழி மோகனம் தரும் மந்திரம் .. அது மோக காவியம்//

படம்: மல்லிகை மோகினி
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்: விக்ரம் (பாம்பே??) லதா
இசை:ஜி.கே.வெங்கடேஷ்
இயக்குநர்: துரை
வருடம்:1979

Get this widget | Track details | eSnips Social DNA


ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உன்னை தேடினேன்
இன்று ஏறி தாண்டினேன்
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்

எந்தன் பாதையை இந்த தேவதை
குரல் ஓசையை கேட்கின்றேன்
உந்தன் ஞாபகம் வரும் போதெல்லாம்
நான் வானில் பறக்கின்றேன்
விழி மோகனம் தரும் மந்திரம்
விழி மோகனம் தரும் மந்திரம்
அது மோக காவியம்
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்

பனிமல்லிகை மணமோகினி உன்னை மறக்க முடியுமோ
ஓராயிரம் கவி பாடினும் இதை ஈடு செய்யுமோ...
ஏழு உலகமும் சென்று தேடினும்
ஏழு உலகமும் சென்று தேடினும் இதைக் காண கூடுமோ

ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்

மழைக் காலங்கள் வரும் வேளையில் உனை மேகமாக்குவேன்
இளம் கோடையில் எந்தன் ஜாடையில் உனைத் தென்றலாக்குவேன்..
என் நெஞ்சமே ஓரு ஆலயம்
என் நெஞ்சமே ஓரு ஆலயம்
உன்னை தெய்வம் ஆக்குவேன்

ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உன்னை தேடினேன்
இன்று ஏறி தாண்டினேன்
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்

Tuesday, August 23, 2011

1207 என்ன சொல்ல ஓஓஓஓ




//காதல் எனும் இன்பங்களை .. கையில் பெரும் வண்ணங்களை .. ஏங்கும் இளம் எண்ணங்களை .. இன்பம் தரும் கண்ணங்களை //

படம்: ஆனந்த ஆராதனை
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்:மைக் மோகன், ஸ்ரீவிதயா,

ஒலிகோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்

Get this widget | Track details | eSnips Social DNA


என்ன சொல்ல ஓஓஓஓ
என்ன சொல்ல ஓஓஓஓ
ஆசைகள் தொடர்கதை
அது தினம் வளர்பிறை
அன்பின் கதைகளை

என்ன சொல்ல ஓஓஓஓ
என்ன சொல்ல ஹாஆஆஆ
ஆசைகள் தொடர்கதை
அது தினம் வளர்பிறை
அன்பின் கதைகளை

என்ன சொல்ல ஓஓஓஓ என்ன சொல்ல

கைகளைச் சேர்க்கும் மணவறை கோலம்
கனவுகள் ஊறும் தனியறைப் பாடம்
கைகளைச் சேர்க்கும் மணவறை கோலம்
கனவுகள் ஊறும் தனியறைப் பாடம்

காதல் எனும் இன்பங்களை
கையில் பெரும் வண்ணங்களை
ஏங்கும் இளம் எண்ணங்களை
இன்பம் தரும் கண்ணங்களை

என்ன சொல்ல ம்ம்ம்ம் என்ன சொல்ல
ஹஹாஆஆ ஆசைகள் தொடர்கதை
அது தினம் வளர்பிறை
அன்பின் கதைகளை
என்ன சொல்ல ஓ..ஓ..ஹோ என்ன சொல்ல

காதலன் கைகள் சோதனை போட
காதலி உள்ளம் காமனைப் பாடா ஹோ
காதலன் கைகள் சோதனை போட
காதலி உள்ளம் காமனைப் பாடா

காலைவரை கலந்தாலென்ன
ம்ஹ காலங்களை மறந்தாலென்னா
வானில் மனம் பறந்தாலென்ன
நாளும் சுகம் பிறந்தாலென்ன

என்ன சொல்ல ம்ம்ம்ம் என்ன சொல்ல
ஓஓஓஓ ஆசைகள் தொடர்கதை
அது தினம் வளர்பிறை
அன்பின் கதைகளை

என்ன சொல்ல ஓஓஓஹோ என்ன சொல்ல
ஆசைகள் தொடர்கதை
அது தினம் வளர்பிறை
அன்பின் கதைகளை

என்ன சொல்ல ஹ்ஹஹ என்ன சொல்ல


Friday, August 19, 2011

1206 அடி நேற்றிரவு நடந்ததென்ன



//அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ// ஏன் அறியாம? இன்னிசை மழைதான்...




//அந்தபுர சந்தோசங்கள் .. அர்த்தஜாம சங்கீதங்கள் .. ஆஹா ஓஹோ ஹேஏ நாள் வந்ததே.. தென்பொதிகை சாரல் என .. சின்ன மணி தூரல் என .. ம்..ஆஹா...ஓஹோ இன்பம் தந்ததே//

எப்பவோ என்னிடம் விரும்பி கேட்ட திரு விஜயகிருஷ்னன் சென்னை அவர்களூக்கு சமர்ப்பணம்.

படம்: இன்னிசை மழை
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர் எஸ்.ஜானகி
இயக்குநர்: சோபா சந்திரசேகர்

Get this widget | Track details | eSnips Social DNA


அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ

இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ

தித்தித்தது நெஞ்சம்.. சம்.. சம்..
தென்பட்டது கொஞ்சம்.. சம்.. சம்...

உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே
சொல்லியது பத்த்தாதோ

அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ

இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ

பத்து விரல் பட்டால் என்ன
முத்த மழை இட்டால் என்ன

ஆஹா ஆஹா ஆஹா பொன்னே மணியே

பட்டு உடல் சுட்டால் என்ன
ஹஹ வெட்கம் அதை விட்டால் என்ன

ஆஹா ஆஹா ஆஹா அன்பே அமுதே

கங்கை நதி நீராட கன்னன் வரத்தான்

மங்கை மடி சீராட மன்னன் வரத்தான்

ஒரு புதிய மயக்கம் உனக்கும் எனக்கும்
பூவிதழும் மாறுது??

அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ

இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ

தித்தித்தது நெஞ்சம்.. சம்.. சம்..
தென்பட்டது கொஞ்சம்.. சம்.. சம்...

உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே
சொல்லியது பத்த்தாதோ

அடி நேற்றிரவு ஹஹ நடந்ததென்ன நீ அறிவாயோ

இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ

அந்தபுர சந்தோசங்கள்
அர்த்தஜாம சங்கீதங்கள்

ஆஹா ஓஹோ ஹேஏ நாள் வந்ததே

தென்பொதிகை சாரல் என
சின்ன மணி தூரல் என

ம்ம்..ஆஹா...ஓஹோ இன்பம் தந்ததே

முன்பின் காணாத அன்பில் விளக்கம்

முற்றுப்புள்ளி இல்லாமல் இங்கே கிடைக்கும்

இனி முதுமை வரையில் நமது உறவு
ஓடி வரும் கூடுமே

அடி நேற்றிரவு ஹஹ
அடி நேற்றிரவுநடந்ததென்ன நீ அறிவாயோ

இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ

தித்தித்தது நெஞ்சம்.. சம்.. சம்..
தென்பட்டது கொஞ்சம்.. சம்.. சம்...

உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே
சொல்லியது பத்த்தாதோ

அடி நேற்றிரவு நடந்ததென்ன.. ஹஹ்ஹாஹோஒ

இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ

Thursday, August 18, 2011

1205 உன்னை நான் பார்க்கையில்




//ஆவாரம் பூவுக்கு மேலாடை ஏன் இங்கு .. ஆடைக்கும் மேலாடை நீ உண்டு வா இங்கு
உன் கூந்தலில் பார்க்கிறேஎன் தொங்கும் தோட்டங்கள் .. பொன் மாலையில் மல்லிகை பூவை சூட்டுங்கள் .. என் மார்பிலே ஆடும் பொன்னாரமே .. செந்தூரமே உந்தன் கண் ஓரமே
நீ கொஞ்சினால் அஞ்சுகம் கெஞ்சுமே //

படம்: கண்ணுகொரு வண்ணக்கிளி
பாடகர்: டாக்டர் எஸ்.பி.பி, ஆஷா போன்ஸ்லே
இசை: இளையராஜா

உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
வார்த்தை தேடும் காதல் ராகம்
எங்கெங்குமே போகின்றதே

உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்

ஆவாரம் பூவுக்கு மேலாடை ஏன் இங்கு
ஆடைக்கும் மேலாடை நீ உண்டு வா இங்கு
உன் கூந்தலில் பார்க்கிறேஎன் தொங்கும் தோட்டங்கள்
பொன் மாலையில் மல்லிகை பூவை சூட்டுங்கள்
என் மார்பிலே ஆடும் பொன்னாரமே
செந்தூரமே உந்தன் கண் ஓரமே
நீ கொஞ்சினால் அஞ்சுகம் கெஞ்சுமே

மை வைத்த கண்ணோரம் பொய் வைக்க கூடாது
மாதங்கமோ தங்கம் கை வைக்க கூடாது
நீ பார்த்திடும் பார்வையில் முள்ளும் பூ பூக்கும்
நீ பேசிடும் சொல்லிலே கல்லும் தேனூறும்
பிருந்தாவனம் எங்கே போகின்றது
என் கண்ணை தேடி போகின்றது
நீ கண்ணானா என்னுயிர் கள்வனா

உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
வார்த்தை தேடும் காதல் ராகம்
எங்கெங்குமே போகின்றதே

உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
லலலல லாலாலாலா லாஆஆஆஆ

Get this widget | Track details | eSnips Social DNA

1204 வந்தாரு தலைவரு நம் தலைவரு



//சைக்கிள் செயின் சோடா புட்டி சுருள் கத்தி பிளேடு .. எல்லாமே ஐயா தந்த செல்வங்கள் பாரு//

படம்:ஒரு கைப் பார்ப்போம்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன்

Get this widget | Track details | eSnips Social DNA


வந்தாரு வந்தாரு
வந்தாரு தலைவரு நம் தலைவரு
பார் வீராதி வீரரு ஹோய் சூராதி சூரரு
வந்தாரு தலைவரு நம் தலைவரு
பார் வீராதி வீரரு ஹோய் சூராதி சூரரு

மேலத்தான்?? பட்டிதான் அவதார பூமிதான்
கிராமத்தான் யாருமில்லை கைகூப்பும் சாமிதான்
வந்தாரு தலைவரு நம் தலைவரு
பார் வீராதி வீரரு ஹோய் சூராதி சூரரு

சைக்கிள் செயின் சோடா புட்டி சுருள் கத்தி பிளேடு
எல்லாமே ஐயா தந்த செல்வங்கள் பாரு
சைக்கிள் செயின் சோடா புட்டி சுருள் கத்தி பிளேடு
எல்லாமே ஐயா தந்த செல்வங்கள் பாரு

வலிசண்டை புடிக்கின்ற வசங்கொண்ட பசங்கள தடிக் கொண்டு அடிப்பாரு
அதிரடி அதிரடி சதிரடி பதிலடி கொடுப்பதில் இவர் இணையாரு

ஹொய்..வந்தாரு தலைவரு நம் தலைவரு
பார் வீராதி வீரரு ஹோய் சூராதி சூரரு

மேலத்தான்?? பட்டிதான் அவதார பூமிதான்
கிராமத்தான் யாருமில்லை கைகூப்பும் சாமிதான்

குருசாமி பேரைச் சொல்லி கோட்டைக்குள் நுழைஞ்சோம்
கோட்டைக்குள் நானும் நீயும் கொடிகட்டி பறந்தோம்
குருசாமி பேரைச் சொல்லி கோட்டைக்குள் நுழைஞ்சோம்
கோட்டைக்குள் நானும் நீயும் கொடிகட்டி பறந்தோம்

அருமையும் பெருமையும் அனுபவதிறமையும் உன்னைவிட எனக்குண்டு தெரியாதா
நினைச்சத முடிப்பவன் குறிவெச்சு அடிப்பவன் நானென்று உனக்கென தெரியாதா

மேலத்தான்?? பட்டிதான் அவதார பூமிதான்
கிராமத்தான் யாருமில்லை கைகூப்பும் சாமிதான்

அனுபவமும் பெருமையும் அனுபவ - உன்னைவிட எனக்குன்டு தெரியாதா
நினைச்சத முடிப்பவன் குறிவெச்சு அடிப்பவன் நானென்று உனக்கு தெரியாதா

Friday, August 05, 2011

1203 வாழ்க்கையிலே கஷ்டம் வந்து




//போனால் போகட்டும் போடா என்று .. பாட நான் ஒரு கவிஞனுமில்ல .. ரகுபதி ராகவ ராஜாராம் .. பாட நான் ஒரு காந்தியும் இல்ல .. என் கட்சி தான் அன்று ஆட்சியில .. இப்ப எதிர்கட்சி நான் இன்று வீட்டினில .. என் கட்சியில் இன்று யாருமில்ல .. அந்த தங்கச்சியின் என் பக்கம் ஞாயமில்ல .. குடும்பம் இங்கே கட்சியாச்சு .. நடக்கும் ராஜாங்கம் நலமாக வாழட்டுமே //

படம்:அண்ணன் வீட்டு சீதனம்
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA


நேத்து பெய்ஞ்ச மழையிலே
இன்னிக்கு முளைச்ச காளான்
என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாளே...ச்.ச்.ச்ச்.
நான் வளர்த்த செடியிலே
மூணு இலை துளிர்க்கல
என்னைப் பார்த்து ஒரு பாட்டு சொன்னாளே

வாழ்க்கையிலே கஷ்டம் வந்து நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சமது இந்த இடம் தான்
போதையிலே ஏறி நின்னு பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா
பாடாதவனையும் பாடவைக்கும்
ஆடாதவனையும் ஆடவைக்கும்
பாடாதவனையும் பாடவைக்கும்
ஆடாதவனையும் ஆடவைக்கும்
ஆடி ஆடி அடியும் விழுந்தா
அதுதான் வலிக்காது வலிச்சாலும் தெரியாது

வாழ்க்கையிலே கஷ்டம் வந்து நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சமது இந்த இடம் தான்

தாவனி போட்ட என் தங்கச்சிக்கு
சேலையை உடுத்திவிட்டேன்
லாவணி பாடிய என் தங்கத்துக்கு
தங்க காப்பையும் போட்டு விட்டேன்
அந்த கையாலே என்னை அடிச்சாலும்
இது உரைக்காது அது வலிக்காது
ஒரு சொல்லாலே என்னை அடிச்சாளே
வடு மாறாது அது மறையாது
பாசம் நேசம் ஹஹ வேஷம் வேஷம்
பாடம் கிடைச்சாசு பந்தங்கள் போயாச்சு

வாழ்க்கையிலே கஷ்டம் வந்து நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சமது இந்த இடம் தான்
போதையிலே ஏறி நின்னு பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா
பாடாதவனையும் பாடவைக்கும்
ஆடாதவனையும் ஆடவைக்கும்
ஆடி ஆடி அடியும் விழுந்தா
அதுதான் வலிக்காது வலிச்சாலும் தெரியாது

வாழ்க்கையிலே கஷ்டம் வந்து நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சமது இந்த இடம் தான்.... டோய்

போனால் போகட்டும் போடா என்று
பாட நான் ஒரு கவிஞனுமில்ல
ரகுபதி ராகவ ராஜாராம்
பாட நான் ஒரு காந்தியும் இல்ல
என் கட்சி தான் அன்று ஆட்சியில
இப்ப எதிர்கட்சி நான் இன்று வீட்டினில
என் கட்சியில் இன்று யாருமில்ல
அந்த தங்கச்சியின் என் பக்கம் ஞாயமில்ல
குடும்பம் இங்கே கட்சியாச்சு
நடக்கும் ராஜாங்கம் நலமாக வாழட்டுமே

வாழ்க்கையிலே கஷ்டம் வந்து நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சமது இந்த இடம் தான்
போதையிலே ஏறி நின்னு பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா
பாடாதவனையும் பாடவைக்கும்
ஆடாதவனையும் ஆடவைக்கும்.... தத்திக்கினத்தோம்
பாடாதவனையும் பாடவைக்கும்
ஆடாதவனையும் ஆடவைக்கும்
ஆடி ஆடி அடியும் விழுந்தா
அதுதான் வலிக்காது வலிச்சாலும் தெரியாது

வாழ்க்கையிலே கஷ்டம் வந்து நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சமது இந்த இடம் தான்
போதையிலே ஏறி நின்னு பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா

Wednesday, August 03, 2011

1202 நள்ளிரவில் பள்ளியறை நாடகம்




//அன்புச் சின்னம் பதிக்கவோ .. இன்பத் தேனில் குளிக்கவோ .. இதைவிட ஏகாந்தம் ஏது
எல்லாம் இன்று புரிந்தது .. சொர்க்கம் ஒன்று தெரிந்தது .. மேலும் நான் கூற வேண்டுமா
கட்டிக்கொண்டும் ஒட்டிக்கொண்டும் .. கற்றுக் கொண்ட பாடங்கள் .. கன்னிப்பெண்ணின் நெஞ்சில் நிற்கும் .. காதல் தேவன் வேதங்கள்//

இனிமையான சூப்பர் பாடல் ரொம்ப வருடங்கள் கழித்து கேட்டேன். படத்தை யாரு பார்த்தாங்க சார்? காட்சியை விவரிக்க...

பாடல்: நள்ளிரவில் பள்ளியறை நாடகம்
திரைப்படம்: ஒரு கை பார்ப்போம்
இசை: விஜயபாஸ்கர்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

Get this widget | Track details | eSnips Social DNA


நள்ளிரவில் பள்ளியறை நாடகம் தான் சரசம்
கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம் சரணம்
சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா
அம்மாடியோ நான் சின்னப்பொண்ணு அல்லவா

நள்ளிரவில் பள்ளியறை நாடகம் தான் சரசம்
கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம் சரணம்
சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா
அம்மாடியோ நான் சின்னப்பொண்ணு அல்லவா

அங்கங்கே நான் தொடத்தொட
அங்கங்கள் தான் சுடச்சுட
அணைக்கையில் பூமேனி வாட
அம்மம்மா ஓ சிலிர்க்குது
எங்கெங்கேயோ இனிக்குது
ஆசை தேனாறு ஊறுமோ
அன்னம் கொஞ்சம் பக்கம் வந்தால்
இன்னும் இன்னும் தித்திக்கும்
மன்னன் இன்னும் சொல்லித் தந்தால்
இன்பம் எல்லாம் சந்திக்கும்

நள்ளிரவில் பள்ளியறை நாடகம் தான் சரசம்
கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம் சரணம்
சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா
அம்மாடியோ நான் சின்னப்பொண்ணு அல்லவா

அன்புச் சின்னம் பதிக்கவோ
இன்பத் தேனில் குளிக்கவோ
இதைவிட ஏகாந்தம் ஏது
எல்லாம் இன்று புரிந்தது
சொர்க்கம் ஒன்று தெரிந்தது
மேலும் நான் கூற வேண்டுமா
கட்டிக்கொண்டும் ஒட்டிக்கொண்டும்
கற்றுக் கொண்ட பாடங்கள்
கன்னிப்பெண்ணின் நெஞ்சில் நிற்கும்
காதல் தேவன் வேதங்கள்

நள்ளிரவில் பள்ளியறை நாடகம் தான் சரசம்
கன்னி மனம் உன்னிடத்தில் காலமெல்லாம் சரணம்
சொல்லாததை நான் மெல்ல மெல்ல சொல்லவா
அம்மாடியோ நான் சின்னப்பொண்ணு அல்லவா
சொல்லாததை நான்...அம்மாடியோ நான்

பாடல்கள் உதவி நன்றி: பிரியா32 >> தூள்.காம்
ஒலிக்கோப்பு உதவி நன்றி:மாமன், திரைப்பாடல்கள்.காம்

Monday, August 01, 2011

1201 பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே



//அணைக்கையில் மணக்கின்ற அமுதெனும் உன் மேனி .. அழகினை கண்களால் அளந்திடவா .. இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று .. இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று .. எழுதிட சம்மதம் தருவாயா.. தருவாயா..//

திரைப்படம்: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே (1980)
குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்
நடிப்பு: பாக்யராஜ், ராதிகா
இயக்கம்: ரா சங்கரன்

Get this widget | Track details | eSnips Social DNA


பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு

கண்ணில் ஆடிடும் காவிய பாவை நீ
கண்ணில் ஆடிடும் காவிய பாவை நீ
கையில் மயங்கும் மல்லிகை செண்டு
கையில் மயங்கும் மல்லிகை செண்டு

பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு

அணைக்கையில் மணக்கின்ற அமுதெனும் உன் மேனி
அழகினை கண்களால் அளந்திடவா
இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று
இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று
எழுதிட சம்மதம் தருவாயா.. தருவாயா..

மணவறை மாலைகள் சூடிய பின்னாலே
மலர் மகள் என்னை நீ தொட வரலாம்
உனக்கென்று சிவந்துள்ள பழுத்த பலா என்னை
பறித்திட வேகமா அவசரமா.. அவசரமா

தனிமையில் இருக்கையில் தாமதம் செய்யாதே
என்னிடம் வெட்கமேன் இளம்குயிலே
சிரிக்கின்ற மலர்க்கொடி பெண்கள் எல்லோருக்கும்
சிரிக்கின்ற மலர்க்கொடி பெண்கள் எல்லோருக்கும்
சீதனம் வெட்கம்தான் தெரியாதா..தெரியாதா..

பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
கண்ணில் ஆடிடும் காவிய பாவை நான்
கையில் மயங்கும் மல்லிகை செண்டு
உன் கையில் மயங்கும் மல்லிகை செண்டு

Courtesy: Thanq very much KIINATTRU THAVALAI BLOG

Followers

பகிர்க