1228 மாலையில் பூத்த மல்லிகை

//நானும் நல்ல ரசிகன் இன்பக் கலைஞன் அல்லவோ .. நயனம் கொண்ட நளினம் முழுதும் கண்டு ரசித்தேன் //
இந்த பாடலும் நீண்ட நாட்கள் கழித்து கேட்கும் பாடல் நெகமத்தில் இருந்து ஒரு தீவிர வானொலி ரசிகை ஆனந்தி அவர்கள் விரும்பி கேட்ட பாடல் இது. இனிமையான பாடல் வழங்கியவர் அறிவிப்பாளர் திருமதி தேவகி ஸ்ரீனிவாசன். கேட்டு மகிழுங்கள்.
படம்: எங்கம்மா மஹாராணி
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, வாணிஜெயராம்
இசை: சங்கர் கனேஷ்
மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
இது தென்றல் தேரோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே
மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
இது தென்றல் தேரோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே
நானும் நல்ல ரசிகன் இன்பக் கலைஞன் அல்லவோ
நானும் நல்ல ரசிகன் இன்பக் கலைஞன் அல்லவோ
நயனம் கொண்ட நளினம் முழுதும் கண்டு ரசித்தேன்
எதுவரை கண்கள் ரசிக்குமோ அதுவரை நாணம் பொறுக்குமோ
எதுவரை கண்கள் ரசிக்குமோ அதுவரை நாணம் பொறுக்குமோ
ஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ...ஆஆ ஆ
மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
இது தென்றல் தேரோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே
மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
போதும் போதும் எனவே பெண்மை துடிக்கும் வேளையில்
போதும் போதும் எனவே பெண்மை துடிக்கும் வேளையில்
சிரித்தாய் என்ன நினைத்தாய் எடுத்தாய் மீண்டும் அணைத்தாய்
மொழிகளோ என்னை தடுத்தன விழிகளோ மெல்ல அழைத்தன
மொழிகளோ என்னை தடுத்தன விழிகளோ மெல்ல அழைத்தன
ஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ...ஆஆ ஆ
மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
இது தென்றல் தேரோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே
லாலலா லாலா லாலல லாலலா
லாலலா லாலா லாலல லாலலா
லாலலா லாலா லாலல லாலலா
பாடல் பதிவிறக்கம் இங்கே
வரிகள் உதவி நன்றி: ப்ரியா, தூள்.காம்














