1425 தங்கக்கிளி உந்தன் மொழி
மறைந்த நகைச்சுவை நடிகர் திரு.சுருளிராஜன் அவர்களுக்கு பிரபலமான பல பாடல்களை பாலுஜி பல படங்களில் குரல் மாற்றி பாடியிருக்கிறார். பொதுவாகவே குரல் மாற்றாமல் பாடுவதைத் தான் அவர் பெரிதும் விரும்புவார். திரையிசையில் மிகவும் பிசியாக இருந்த காலத்தில் தயாரிப்பாளர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க பாடியிருக்கிறார்.
11424 பதினெட்டு வயது இளமொட்டு
சூரியன் படம் வந்த புதிதில் இந்த பாடல் மெட்டு பற்றி பல விமர்சனங்கள் வந்ததுண்டு. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. பாடல் காதுக்கு இனிமையா இருக்கா அத பாருங்க சார்..
1423 யாரோ மன்மதன் கோயிலின் மணித் தேரோ
மேலே உள்ள இரண்டு படத்தின் இரண்டு போஸ்டரையும் பாருங்கள் தகவல்கள் எது உண்மை? ஏன் இப்படி எங்களை குழப்புகிறார்கள். அசோக் சார் ரொம்ப சிரமப்பட்டிருப்பார் என்று நன்றாகவே தெரிகிறது. எது உண்மை என்று படத்தின் தயாரிப்பாளர் தான் விளக்க வேண்டும்.
61422 வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி
கால்களில் தாளம் போட வைக்கும் ஒரு முத்தான சந்திர போஸ் பாடல். மிக சாதாரணமாக எடுக்கப்பட்ட படம். தமிழகத்தில் வெற்றி நடைக் கொண்டு ஓடியது எனலாம். இளமையும் இசையும் போட்டியிட்டு வருகிறது.
11421 காலம் எனக்கொரு பாட்டெழுதும்
இந்தத் திரைப் படம் பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். இந்த நிலையில் எங்கே நான் பாடல் காட்சிக்கு அலைவது?
அழகான தங்க வரிகளைக் கொண்ட பாடல்.
1420 என் இடையிலும் மடியிலும்
இது போன்ற பாடல்கள் பாலுஜியின் குரலில் அமர்க்களப்படும் படத்தில் தெலுங்கு நடிகர் சந்திரமோகனுக்காக குரல் கொடுத்திருப்பார் துணைக்குரல் சாய்பாபா அவர்கள் இந்த காலகட்டத்தில் தான் சாய்பாபா அவர்கள் அதிக பாடல்கள் பாலுஜியுடன் சேர்ந்து பாடியுள்ளார் சில நேரங்களில் இருவரின் குரலையும் வித்தியாசம் காணபது
1419 மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
பாலுஜி பிரியர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தித்திப்பான தீபாவளி திருநாளில் ஓர் குலோப்ஜாமுன் பாடல். ஆமாங்க இனிமையான இனிப்புகளை ரசித்து ருசித்து சாப்பிட்டு பளபளக்கும் பட்டாசுகளை பார்க்கும் போது ”மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ”...