பாடும் நிலா பாலு வலைப்பூ நண்பர்கள் பெப் சுந்தர், கோவை ரவி மற்றும் ரசிகர்கள்.
இது ஒரு சீரியல் டைட்டில் பாடல்... சீரியஸாக கேட்காமல் .. ரிலாக்ஸா கேளுங்க சார். அற்புதமாக உள்ளது.
பாடல் : வைரமுத்து
இசை : தினா
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வாழப்பிறந்தேன்... வாழப்பிறந்தேன்... வாழ்ந்துகாட்டுகிறேன்...
வாழ்க்கைஎன்னைகேலி செய்தாலும்... வாழ்ந்துகாட்டுகிறேன்...

மழையோ... வெயிலோ... தென்றலோ... புயலோ...
இரவோ... பகலோ... உறவோ... பகையோ...
வாழ்ந்துகாட்டுகிறேன்... நான்... வாழ்ந்துகாட்டுகிறேன்...

வாழ்க்கைஎன்பது சோலைவனமா... மலர்ந்து காட்டுகிறேன்...
வாழ்க்கைஎன்பது பாலைவனமா... கடந்துகாட்டுகிறேன்...
வாழ்க்கைஎன்பது கண்ணிர் என்றால்... துடைத்துக்காட்டுகிறேன்...
வழ்க்கைஎன்பது பந்தயம் என்றால்... ஜெயித்துக்காட்டுகிறேன்...
கரையும் சேர்ந்தே... நிலம் என்பது...
காம்பும் சேர்ந்தே... மலர் என்பது...
இரவும் சேர்ந்தே... நாள் என்பது...
துயரம் சேர்ந்தே... வாழ்வென்பது...
துன்பத்தைஎல்லாம்... எருவாக்கி...
இன்பத்தைவாழ்வில்... உருவாக்கி...
துன்பத்தைஎல்லாம்... எருவாக்கி...
இன்பத்தைவாழ்வில்... உருவாக்கி...
வாழ்ந்துகாட்டுகிறேன்... நான்... வாழ்ந்துகாட்டுகிறேன்...
வாழ்ந்துகாட்டுகிறேன்... நான்... வாழ்ந்துகாட்டுகிறேன்...
வாழப்பிறந்தேன்... வாழப்பிறந்தேன்... வாழ்ந்துகாட்டுகிறேன்...
வாழ்க்கைஎன்னைகேலி செய்தாலும்... வாழ்ந்துகாட்டுகிறேன்...
மழையோ... வெயிலோ... தென்றலோ... புயலோ...
இரவோ... பகலோ... உறவோ... பகையோ...
வாழ்ந்துகாட்டுகிறேன்... நான்... வாழ்ந்துகாட்டுகிறேன்...
வாழ்ந்துகாட்டுகிறேன்... நான்... வாழ்ந்துகாட்டுகிறேன்...
வீடியோ பாடல் பாடல் கேட்க இங்கே அழுத்தவும். நன்றி யூட்யூப் தளம்
இன்று காலை (4.6.2014) பாலுஜியின் மின்னஞ்சல் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியடைந்தேன் தங்களிடமும் பகிர்வதன் மூலம் அவரின் அன்பை நினைத்து பெருமைப்படுகிறேன் அன்பர்களே.
View comments