அன்பர்களே.. இந்த பாடலை சுதந்திர தினத்தில் பதியலாம் என்றிருந்தேன் வேலை அதிகம் காரணமாக பாடல் வரிகளை எழுத முடியவில்லை. சென்னையில் இருந்து பாலுஜியின் தீவிர ரசிகை திருமதி யோகாம்பாள் மேடம் அவர்கள் எனக்கு பாடல் வரிகள் சிரமப்பட்டு கேட்டு எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால்,இந்த பாடலில் ஒரு வித்தியாசத்தை என்னால் கேட்க முடிந்தது. பொதுவாகவே அனைத்து பாடல்களிலும் பல்லவி மூன்று நான்கு வரை வரும் அவை தான் பாடலுக்கு உயிரோட்டம் தரும்.
இந்த பாடலில் துவக்கத்தில் ஒரு முறை தான் பல்லவி வருகிறது அது பல்லவி என்று சொல்வதா ? எப்படி சொல்வது ? பல்லவி என்றும் குறிப்பிட முடியாது பாடலாசிரியர் தான் சொல்லவேண்டும். பாலுஜி குரலில் உணர்ச்சியமான ஒரு நீள கட்டுரை பாடலாக கேட்பது போது போல் வித்தியாசமாக உள்ளது மிகவும் அற்புதமாக பாடியுள்ளார் சுதந்திரத்தினத்தன்று பதியாதது மிகவும் வருத்தமாக உள்ளது. மேலும், இந்த பாடலைப் பற்றி ரத்தின சுருக்கமாக திருமதி யோகாம்பாள் பார்வையில்..
நம்ம பாலுஜி ஸார் இந்த பாடலை அட்டகாசமாக பாடி இருக்கிறார். தேசப் பற்று இல்லாதவருக்கு கூட வந்து விடும். அவ்வளவு அர்ப்பணிப்பு குரலில். வாழ்க பல்லாண்டு.
வந்தார்கள் வென்றார்கள் அலைகள் தவழும் மதராசின் கரையிலே
பண்பாடு எல்லாமே மாறிப்போச்சு நம்ம வாழ்க்கை முறையிலே
வெள்ளையோ வெள்ளையே கொள்ளையோ கொள்ளையே !
இன்பத்தை யாருமே சொல்லவே இல்லையே !
புதுச் சாலை வசதிகள் அடைந்தோம் தண்டவாள ரயில்களை அடைந்தோம்
மின்சார வழித்தடம் அடைந்தோம்.......... அடைந்தோம்
எம் கோட்டைக் கொடி மரம் இழந்தோம்
எம் கொள்கை மனமதை இழந்தோம்
பொன் கோடி செல்வங்கள் இழந்தோம்.......... இழந்தோம்
என் வானும் மண்ணும் வணிகமாய்ப் போனதே
எங்கள் அருமையும் பெருமையும் அரசியல் ஆனதே
ஏழை தேசம் என்றார்களே கோழை தேசம் என்றானதே
வேலும் வாளும் ஏந்தி வாழ்ந்த இனம் விரையாகப் போனதே
சிந்து வேர்வை இங்கே இங்கே செல்வம் எல்லாம் அங்கே அங்கே
கிழக்கின் மார்பில் குருதி குடித்துக் கொண்டு மேற்கு வளர்கிறதே –அட
வெள்ளை நரி சிங்கங்களை ஆண்டதேன்னவோ – சிறு
விட்டில் கூட்டம் எங்கள் காட்டை மேய்ந்ததென்னவோ
பாருக்கும் ஊருக்கும் தங்கத்தைக் கொடுத்த இனம்
பருக்கைக்கு அலைவதென்ன !
கடல்களின் மீனை மட்டும் நாம் பிடித்தோம்
கடலையும் கரையையும் அவன் பிடித்தான்
கரைகளில் மனிதர்க்கு வலை விரித்தான்
சென்னையில் மதராஸ் சிட்டியை அமைத்தான்
எம் தேசம் மீண்டும் தீவிரம் காணுமா ?
எங்கள் அடிமையின் தழும்புகள் முழுமையாய் மாறுமா ?
பாலும் தேனும் ஆறாகுமா ? பாழும் கண்ணீர் ஆறாகுமா ?
நம்மை நாமே ஆளும் தேசமிது இன்று உயிர் பெறுமா ?
ஊரான் ஆட்சி ஊர் போனதும் ஊழல் ஊழல் ஊர் ஆளுதே !
நம்மை நாமே ஆளும் தேசமிது நாளை வளம் பெறுமா ?
வஞ்சகமும் பொய்மைகளும் போகட்டுமே
வாய்மை எனும் தூய்மை மண்ணை ஆளட்டுமே
இந்தியா இந்தியா எழுந்து நிமிர்ந்ததென்று இவ்வுலகம் வாழ்த்தட்டுமே !
ஜன கண மன எனும் தேசக்குரலே ஜனங்களின் குரல் என்று ஒலிக்கட்டுமே !
சரித்திரம் பெருமைகள் திரும்பட்டுமே !
பிரிட்டன்னும் நமது பெருமை பேசுமே !
இந்தியா இந்தியா இந்தியா இந்தியா
பாடல் வரிகளையும் பாடலையும் அனுப்பி வைத்த திருமதி.யோகாம்பாள் அவர்களுக்கு உங்கள் சார்பாக நன்றி.
Add a comment