பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் சிறகடிப்பேன் என்ற இசையில் உருவான இசை ஆல்பத்தில் நமது பாலுஜியின் இனிமையான குரலில் அபாரமான மெலோடி பாடல். அருமையான இசை நம் மனதை ஏதோ ஒரு உலகத்திற்க்கு கொண்டு செல்லும் அந்த அனுபத்தை நான் உணர்ந்தேன். பொதுவாகவே ஸ்ரீனிவாச் அவர்களின் பாடும் அழகை நான் வெகுவாக ரசிப்பேன். பாலுஜிபோல் மிகவும் அனுபவித்து பாடுவார் அந்த அழகு என்னை மிகவும் கவர்ந்தது என்றால் மிகையில்லை. அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்களாக இந்த பாடலை கேளூங்கள் கேளூங்கள் என்று சென்னையில் வசிக்கும் அதி தீவிர ரசிகை திருமதி யோகாம்பாள் வெங்கட்ராமன் அவர்கள் கேட்டு கொண்டார். இந்த தீபாவளி திருநாளில் தமிழகம் முழுவதும் கொட்டோ கொட்டென்று கொட்டிய மழையால் வீட்டில் இருந்து எங்கும் செல்ல முடியாமல் மழையின் உபயத்தால் இந்த பாடலை கேட்க முடிந்தது. இந்த பாடலை வெகு நாட்கள் கழித்து இதை பதிவு செய்து கொடுத்தார் என்று கேள்விப்பட்டேன். ஆயா பாலுஜியுடன் பாடிய ஸ்ரீஷாவின் குரலும் இனிமை.. இனிமை... நீங்களும் கேட்டு தான் பாருங்களேன்.

பாடலையும் வரிகளையும் சிரமப்பட்டு அனுப்பிவைத்த திருமதி யோகாம்பாள் வெங்கட்ராமன் அவர்களூக்கு உங்கள் சார்பாக நன்றிகள் பல.
பாடல்: மழை பேசும் வானம் நீயா
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, ஸ்ரீஷா
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
இசை:ஸ்ரீனிவாஸ்
Add a comment