படம் : இரு மேதைகள்
நடிகர்கள்: பிரபு, ராதா
நீ ஒரு கடிதம் உன்னை தினமும்
மனம் எழுதும் அன்பே ரெண்டு
அன்பில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
நீ ஒரு கடிதம் உன்னை தினமும்
மனம் எழுதும் அன்பே ரெண்டு
அன்பில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
வானத்தில் நீர் வந்து
வார்க்கின்ற கார் மேகம்
வாராமல் நான் வாடினேன்
வரும் நாளை நான் தேடினேன்
வானத்தில் நீர் வந்து
வார்க்கின்ற கார் மேகம்
வாராமல் நான் வாடினேன்
வரும் நாளை நான் தேடினேன்
பாராட்டும் ஆசை நீ கேட்டு பாரு
நான் பாடும் பாடல் நீயன்றி யாரு
நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை
தங்கம் இன்னும் தஞ்சம்?? வந்து என்றும் பண்பாட
என்றும் உள்ள தென்றல் இன்று நெஞ்சில் நின்றாட
பூ வைத்த பூவை நீ
பால் வண்ண பாவை நீ
பூமாலை நான் சூடவா
பாமாலை நான் பாடவா
பூ வைத்த பூவை நீ
பால் வண்ண பாவை நீ
பூமாலை நான் சூடவா
பாமாலை நான் பாடவா
மார்போடு அள்ளி மெதுவாக கிள்ளி
சீராட்டும் போது தோளாடும் மெதுவாக துள்ளி
நீ ஒரு கடிதம் உன்னை தினமும்
மனம் எழுதும் அன்பே ரெண்டு
அன்பில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
நான் வாங்கும் மூச்செல்லாம்
நான் பேசும் எல்லாம்
நீ என்று நான் சொல்லவோ
நீங்காத நிழல் அல்லவோ
தேயாத நிலவு தெய்வீக உறவு
விதி என்ற ஒன்றை அறியாத மனது
நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை
அன்பில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
Add a comment