அன்பர்களே..

சில ஆடியோ அப்லோட் பிரச்சனைகளால் ”பாடும் நிலா பாலு ” வாட்ஸப்  தளத்தில் பாடல்கள் மற்றும் வானொலித் தொகுப்புகள் வரும்.  இணையதள இசைப்பிரியர்கள் மற்றும் வானொலி தொகுப்பாளர்கள் அனைவரும்  இணைய விரும்பினால்  எனது முகநூலில் தங்களின் வாட்ஸப்   எண் வைத்திருப்பவர்கள் குறிப்பிடலாம்.

இந்த பாடல் முழுதும் கொஞ்சுகிறது  SPB குரல் (ENNA ORU KATHAL ANBU ASAI  - KURALIL ) WOOOOW.   (Last line la Hoy Hoy Hoy  hoy  வரிகளில் செல்லம் கொஞ்சுகிறது spb  குரல். கடவுளே இந்த இனிய தேவாமிருத குரலை எங்களுக்கு அருளியதற்கு நன்றிகள் கோடி ஏழேழு பிறவியிலும் இவரை இதே பாலு ஸார் ஆக தந்து விடு.

தேன் குரல் தென்றல் பாலுஜி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்த வயதில்லை ஆகையால் அவரை வணங்குகிறோம்.

இப்படி நாங்களும் ரோடு சைட் ப்ளக்ஸ் பேனர் வைப்போம்ல.. ஹி..ஹி..ஹி.

3

பாலுஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பாலுஜி உங்கள் குரல் என்றென்றுமே  தென்றல் நீ....தென்றல்..நீ !

(எல்லோருக்கும் உடலில் ரத்தமும் எலும்பும் சதையும் வைத்து படைத்த கடவுள்  நம்ம பாலு சாருக்கு மட்டும் இசையும் இனிமையும் ராகமும் தாளமும் (ba) பாவமும் சேர்த்து படைத்தான் போல இருக்கிறது.

இசைஞானி இசையில்  இனிமையான மெலோடி பாடல். பாலுஜி நடுவுல வந்தாலும்  அசத்தலான ஆலாபனையுடன் ஆரம்பிக்கும் வரிகள்  அடடா.. அடடா ....  என்னத்தச் சொல்ல  வார்த்தைகள்  இல்லவே இல்லை..  அந்த இனிமையை கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

பல முறை கேட்ட பாடல் ஏன் பதியாமல் விட்டு போய்விட்டது என்று தெரியவில்லை. ஆஹா.. ஆஹா.. சரிதா கண்கள் போல்  கூர்மையான மற்றும் இனிமையான பாடல்.  பாடல் துவக்கத்திலேயே ஆலாபனையுடன் நம்மையும்  பரிசலில் கொண்டு செல்கிறார் பாலுஜியும்  சுசிலாம்மாவும்.  அந்த சுகத்தை நீங்களும் அனுபவியுங்களேன்.

அன்பர்களே, நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ளேன். இந்த படத்தின் பெயர் மட்டும் தான் கேள்விபட்டுருந்தேன் படம் பார்த்த நினைவு இல்லை. இணையத்தில் இருக்கிறது  முழுப்படம் பார்க்க நேரம் ஒதுக்க வேண்டும்.

மலர்களிலே  உருவாகும் தேன் துளிகள் போல பாலுஜியின்  அற்புத முக பாவங்களுடன் அவரின் இனிமையான குரல் வானொலித்தொகுப்பை மீண்டும் மீண்டும் கேட்டு மகிழுங்கள்.  தித்திக்கும் தெவிட்டாத கானங்கள்.

பாலுஜியின் வானொலித்தொகுப்பு கூகுள் ட்ரைவிலே கேட்கலாம்.

நாளை  கிரிக்கெட் அரை இறுதி போட்டியில்  பாரத அணி  ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள்  பாலுஜியின் பாடல்களை விரும்பி கேட்பவர்கள் அதிகம் இருப்பார்கள்.  ஏன் பாலுஜியே எந்த வேளையும் வைத்துக்கொள்ளாமல்  போட்டியை விரும்பி பார்ப்பவர்.  இதோ அவரே தன் ரசிகர்களுடன் சேர்ந்து  பாடுகிறார்.

பாலுஜியுடன் இணைந்து  பி.எஸ்.சசிரேகா குறைந்த பாடல்களே பாடியிருந்தாலும் அணைத்து அற்புதமான   பாடல்கள்  டி.ஆர் அதிகம் வாய்ப்புகள் வழங்கியிருப்பார்.  நீண்ட நாட்கள் கழித்து இந்த பாடலை கேட்பதால்  கிணற்றுக்குள் இருந்து கேட்கும் பிரமை  உங்களூக்கும்  ஏற்படுமே ?  எப்படி இருந்தாலும் பாடலை ரசியுங்கள்.

பாடல் நான் பாட என் பார்வை

மோகன் ரேகா அமலா கவுண்டமணி செந்தில்

பாடல், இசை: கங்கை அமரன் 

இயக்கம்: அனுமோகன்

படம்: இது ஒரு தொடர்கதை

ஓகேவா..? அமலா கேட்கவில்லை  நான் கேட்கிறேன் சுந்தர் சார்.. இந்த பாடலை 2008ல் பதிய முயற்சி செய்துள்ளீர்கள்.

டப்பிங் பாடல் தான்  இது போன்ற கிளுகிளூப்பான பாடல் கேட்டு பல வருடங்கள் ஆயிற்று. இதோ உங்களுக்காக ஒலியும் ஒளியிலும்.

”வஞ்சி இளம் மாமன் பொண்ணு ”என்று அமர்க்களமாக ஆரம்பிக்கும் அறிவிப்பாளினி திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களின் வானொலித்தொகுப்பு.  வானொலி நேயர்கள் வேண்டி விரும்பி கேட்ட பாடல் பட்டியல். அனைத்து அமர்க்களமான ஹிட் பாடல்கள். தனித்தனியாக எத்தனை தடவை இந்த வலைப்பூவில் கேட்டாலும்.

1

//மதுரச இதழ்களைத் திறந்துவிடு.. தேனை எடு விருந்து கொடு.. ஏங்கும் ஏக்கம் இதுதான் வேறென்ன//

நீண்ட நாட்கள் பிறகு வ்ருகை தந்துள்ளேன் ஒரு இனிமையான மெலோடி பாடலுடன். பாலுஜியும் வாணியம்மாவும் சேர்ந்து வழக்காமாக பாடியிருக்கும் இந்த பாடல் ஒரு வித சுவையான சுகம்.

1

படம்: மூனே மூனு வார்த்தை

எஸ்.பி.பி.சரண் தனது கேப்பிடல் நிறுவனம் சார்பில் தயாரித்து வரும் படம், மூணே மூணு வார்த்தை. மதுமிதா இயக்கும் இந்தப் படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், லட்சுமியும் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.

இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading