//மதுரச இதழ்களைத் திறந்துவிடு.. தேனை எடு விருந்து கொடு.. ஏங்கும் ஏக்கம் இதுதான் வேறென்ன//
திரைப்படம்: புதிய மனிதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்
வைகாசி மாதம் கல்யாண தேதி
ஜானகி ஸ்ரீ ராமனின் காதல் நாயகி அல்லவோ
நான் கேட்டுக் கொண்டேன் நலமான சேதி
நான் கண்டு கொண்டேன் நீ எந்தன் பாதி
வருகையிலே தருகையிலே
மன்னன் தேவை இன்னும் என்னென்ன
மதுரச இதழ்களைத் திறந்துவிடு
தேனை எடு விருந்து கொடு
ஏங்கும் ஏக்கம் இதுதான் வேறென்ன
காலங்கள் கூடட்டும் கல்யாணம் ஆகட்டும்
கண்ணா உன் ஏக்கங்கள் அந்நாளில் தீரட்டும்
நான் கேட்டுக் கொண்டேன் நலமான சேதி
நான் கண்டு கொண்டேன் நீ எந்தன் பாதி
இடையழகும் சடையழகும்
தேவன் கோவில் தேரைப்போல் ஆட
பரவச கனியென பறிப்பதென்ன
ரசிப்பதென்ன ருசிப்பதென்ன
போதும் போதும் என்றே போராட
தேன் கொண்ட கிண்ணங்கள் நீ கொண்ட கன்னங்கள்
நேர் வந்து நின்றாலே வேறேன்ன எண்ணங்கள்
நான் சொல்ல வந்தேன் நலமான சேதி
வைகாசி மாதம் கல்யாண தேதி
இந்தப் பாடலுக்கான காட்சியில் நடித்தவர்கள் ஜெய்சங்கர் மற்றும் ஜெயசுதா.
ReplyDelete