”வஞ்சி இளம் மாமன் பொண்ணு ”என்று அமர்க்களமாக ஆரம்பிக்கும் அறிவிப்பாளினி திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களின் வானொலித்தொகுப்பு. வானொலி நேயர்கள் வேண்டி விரும்பி கேட்ட பாடல் பட்டியல். அனைத்து அமர்க்களமான ஹிட் பாடல்கள். தனித்தனியாக எத்தனை தடவை இந்த வலைப்பூவில் கேட்டாலும். ஒரு தொகுப்பாக கேட்கும் போது அதில் ஒரு அலாதி சுகம் தான். கேட்டு மகிழுங்கள் நேயர்களே.
1.ஆசிரியர் பழனிசாமி அய்யா, தாராபுரம் அவர்கள் விரும்பிய பாடல் தகிட தத்துமி தகிட தத்துமி தந்தானா
2.வந்தனம் வந்தனம்.. என்று தன் வணக்கங்களுடன் சொல்லிக்கொள்ளும் திரு.துரைசாமி தாராபுரம் நேயரின் விருப்பப்பாடல்.
3. வாசமில்ல மலரிது என்று பாலுஜி பாடினாலும் எனக்கு அவரின் குரல் என்றுமே வாசமுள்ள மலரிது என்று சொல்லுகிறார் தாராபுரம் நாடார் வீதி குண்டு காளிமுத்து அவர்கள்.
4.நான் பாடும் மௌன ராகம் பாலுஜியின் குரல் என்று தான் சொல்லுகிறார் தாராபுரம் நாடார் தெரு திரு.ஜோதிமுத்து அவர்களிள்.
5.கோவை பிரஸ் சீனிவாசன் அவர்களின் மனதை கவர்ந்தது மட்டுமல்ல பாலுஜியின் மீது அன்பு கொண்ட அனைவரையும் கவர்ந்த் பாடல் மலரே என்னென்ன கோபம்.
6.மல்ரே மௌனமா என்ற பாடல் விரும்பிய நேயர் கோவை ஜெயந்தி.
7.மலயோரம் வீசிய காற்றை நுகர்ந்த நேயர் நெல்லை பத்தமடை கந்தசாமி
8.இதயம் ஒரு கோவிலினுள் பாலுஜி என்ற தெய்வத்தை காண பக்தியுடன் நுழைந்த நேயர் ஹி..ஹி. கோவை ரவி
9.இது குழந்தை பாடும் தாலாட்டில் மயங்கிய நேயர் நெல்லை ஏபிஎஸ் ரவீந்திரன்.
10.நானும் உந்த உறவை விரும்பினேன் என்று பாலுஜியின் பாடலை விரும்பிய நேயர் வேலூர் நந்தகுமார் அவர்கள்.
11.இதயமே இதயமே
nandri ravi
ReplyDelete