1470 என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
இசைஞானி இசையில் இனிமையான மெலோடி பாடல். பாலுஜி நடுவுல வந்தாலும் அசத்தலான ஆலாபனையுடன் ஆரம்பிக்கும் வரிகள் அடடா.. அடடா .... என்னத்தச் சொல்ல வார்த்தைகள் இல்லவே இல்லை.. அந்த இனிமையை கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.
1469 ஆத்த கடக்க வேணும்
பல முறை கேட்ட பாடல் ஏன் பதியாமல் விட்டு போய்விட்டது என்று தெரியவில்லை. ஆஹா.. ஆஹா.. சரிதா கண்கள் போல் கூர்மையான மற்றும் இனிமையான பாடல். பாடல் துவக்கத்திலேயே ஆலாபனையுடன் நம்மையும் பரிசலில் கொண்டு செல்கிறார் பாலுஜியும் சுசிலாம்மாவும். அந்த சுகத்தை நீங்களும் அனுபவியுங்களேன்.
1468 யார் யாரோ நான் பார்த்தேன்
அன்பர்களே, நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ளேன். இந்த படத்தின் பெயர் மட்டும் தான் கேள்விபட்டுருந்தேன் படம் பார்த்த நினைவு இல்லை. இணையத்தில் இருக்கிறது முழுப்படம் பார்க்க நேரம் ஒதுக்க வேண்டும்.