பல முறை கேட்ட பாடல் ஏன் பதியாமல் விட்டு போய்விட்டது என்று தெரியவில்லை. ஆஹா.. ஆஹா.. சரிதா கண்கள் போல் கூர்மையான மற்றும் இனிமையான பாடல். பாடல் துவக்கத்திலேயே ஆலாபனையுடன் நம்மையும் பரிசலில் கொண்டு செல்கிறார் பாலுஜியும் சுசிலாம்மாவும். அந்த சுகத்தை நீங்களும் அனுபவியுங்களேன்.
பாடல் வரிகள் உதவி : நன்றி பாலுஜியின் அதிதீவிர ரசிகை திருமதி. யோகாம்பாள் வெங்கட்ராமன். சென்னை
ஹே ஹே தய்யார தய்யார.. ஹோ..
ஹே ஹே தய்யார தய்யார.. யஹாஆஆ
ஆத்த கடக்க வேணும்
அக்கரைக்கு போக வேணும்
ஆத்த கடக்க வேணும்
அக்கரைக்கு போக வேணும்
ஓடக்கார ராமசாமி மாமோய்
நீ ஓடம் போல முந்தி போடலாமா
ஆத்த க்டந்த பின்னே
அக்கரைக்கு போன பின்னே
ஆத்த க்டந்த பின்னே
அக்கரைக்கு போன பின்னே
பொஞ்சாதியா ஆகப்போற புள்ளே
இத ஊர்றரிய சொன்னா குத்தம் இல்லே
மஞ்ச குளிச்சு வந்தேன்
மருதாணி பூசி வந்தேன்
மஞ்ச குளிச்சு வந்தேன்
மருதாணி போட்டு வந்தேன்
மாமனுக்கு பாகுரப்போ ஏக்கம்
அது மம்முதனின் பானத்தைப்போல் தாக்கும்
பாய விரிச்சு வெச்சு
பசும்பால காய்ச்சுவெச்சு
பாய விரிச்சு வெச்சு
பசும்பால காய்ச்சுவெச்சு
ஊத்தி தர வேணுமடி நீதான்
அட ஊதி ஊதி குடிச்சிருப்பேன் நாந்தான்
பாய விரிச்சு வெச்சு
பசும்பால காய்ச்சுவெச்சு
ஊத்தி தர வேணுமடி நீதான்
அட ஊதி ஊதி குடிச்சிருப்பேன் நாந்தான்
வாழ குருத்தா கையா
வடக்கால காத்தடிக்க
வாழ குருத்தா கையா
வடக்கால காத்தடிக்க
ஊராரும் வெளக்ணைக்கும் நேரம்
என் உள்ளஹ்ட்துல உன் நினைப்பு ஊரும்
நாளு கிழமை என்ன
நாதஸ்வரம் மேளம் என்ன
நாளு கிழமை என்ன
நாதஸ்வரம் மேளம் என்ன
ஆண் மனசு சோசியமா பாக்கும்
அது ஆள் கெடச்சா சம்மதத்தையா கேக்கும்
ஆத்த கடக்க வேணும்
அக்கரைக்கு போக வேணும்
அக்கரைக்கு போக வேணும்
ஓடக்கார ராமசாமி மாமோய்
நீ ஓடம் போல முந்தி போடலாமா
ஆத்த கடக்க வேணும்
அக்கரைக்கு போக வேணும்
அக்கரைக்கு போக வேணும்
ஓடக்கார ராமசாமி மாமோய்
நீ ஓடம் போல முந்தி போடலாமா
ஆத்த கடக்க வேணும் பாடல் இதிலே
Add a comment